Wednesday, September 19, 2018

பெரியாருக்கு மரணம் இல்லை!

யதா யதா ஹி தர்மஸ்யஎன்கிறான் கிருஷ்ணன். எப்பொழுதெல்லாம் தர்மத்திற்குத் தீங்கு ஏற்பட்டு, அதர்மம் மேலோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தைக் காக்க கிருஷ்ணன் அவதாரம் எடுப்பானாம்.

பிறப்பின் அடிப்படையில் மக்களை வர்ணங்கள்சாதிகளாக பிளவு படுத்தி, அவர்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வை உருவாக்கி, அதையே மேலான தர்மமென்றார்கள் பார்ப்பனர்கள். அதற்கு சனாதன தர்மம் என நாமகரணம் சூட்டினார்கள். அந்த சனாதன தர்மத்தின் புதிய நாமகரணம்தான் இன்றைய இந்து மதத் தர்மம்.

இங்கே தர்மத்திற்குத் தீங்கு என்பது சாதிய அமைப்பு முறைக்கு எதிராக செயல்படுவதாகும். இத்தகைய முயற்சியை யார் மேற்கொண்டாலும் அப்பொழுது அவர்களை அடக்கி ஒடுக்க தானே அவதாரம் எடுத்து வருவதாகக் கூறுகிறான் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் அவதாரம் எடுத்தானோ இல்லையோ, ஆனால் இந்தச் சாதிய சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட புத்தர், அம்பேத்கர், பெரியார் என என்னற்ற அறிஞர்கள் தோன்றிய வண்ணம் உள்ளனர். இத்தகைய அறிஞர்கள் வாழ்ந்த காலத்தில் பார்ப்பனியம் இவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கி வாலை சுருட்டிக் கொண்டு ஓடி ஒளிந்தது. அப்படி ஓடி ஒளிந்த பார்ப்பனியம் குறுக்கு வழியில் எடுபிடி ஆட்சியாளர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி தங்களது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிற போதெல்லாம் அம்பேத்கரும் பெரியாரும் மீண்டும் மீண்டும் நம் முன்னே வந்து நிற்கின்றார்கள்.

மத்தியில் நேரடி அதிகாரத்திலும், மாநிலத்தில் தங்களது எடுபிடிகளும் ஆட்சியில் இருக்கிறார்கள் என்கிற அகங்காரத்தோடு எச்சில் பொறுக்கிகளைப் போல எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும் மக்களையும், நீதிமன்றங்களையும் மிகக்கேவலமாக இழிவு படுத்தினாலும் அத்தனையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் ருக்கின்றவரை பார்ப்பனிய கொடுக்குகள் மக்களை கொத்திக் கொண்டேதான் இருக்கும்.

இந்தப் பார்ப்பனிய கொடுக்குகளை ஒடிக்க வேண்டுமானால் இன்று நமக்குத் தேவை அம்பேத்கர் அடியும், பெரியார் தடியும்தான். செப்டம்பர் 17, 2018 திங்களன்று பார்ப்பனிய கொடுக்கை ஒடிக்க தமிழக வீதிகளில் பெரியார் தடி சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. சுழலட்டும் எட்டுத் திக்கும். நொறுங்கட்டும் பார்பனியக் கொடுக்குகள்!

இராணிப்பேட்டை, பாரத மிகு மின் நிறுவன வாயிலில் பெரியார் பிறந்த நாள் விழா!



 பிரசுரம்
இராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனத்தில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் தந்தை பெரியாரின் 140 – வது பிறந்த நாள் விழா ஆலை வாயிலில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெரியாரின் கருத்துக்களை உள்ளட்டிக்கிய சுவரொட்டிகள் வாலாஜாப்பேட்டை, இராணிப்பேட்டை, ஆற்காடு, திருவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டன. பெரியார் குறித்த பிரசுரங்கள் ஆலை ஊழியர்களிடம் பரவலாக விநியோகம் செய்யப்பட்டது. மேலோர் என தங்களை பறைசாற்றிக் கொள்ளும் ஆதிக்கச் சாதியினருக்கு பெரியார் ஒரு கசப்பு. ஒடுக்கப்பட்ட மக்களுக்கோ பெரியார் ஒரு இனிப்பு என்பதை உணர்த்தும் வகையில் ஆலை ஊழியர்கள் அனைவருக்கும் லட்டு வழங்கி பெரியார் பிறந்த நாள் விழா மிக்க மகிழ்வோடு கொண்டாடப்பட்டது.

17.09.2018 காலை 07.30 மணிக்கு பெரியாருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் தலைவர் தோழர் இந்திரன் தலைமை ஏற்றார். வாசகர் வட்டத்தைச் சேர்ந்த தோழர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த தோழர் தி..சின்னதுரை பெரியார் படத்துக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்வாசகர் வட்டத்தைச் சேர்ந்த தோழர் வில்சன், தோழர் கிருபாகரன், தோழர் சந்திரசேகர், SC / ST தொழிலாளர் மே்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் தோழர் கி.சேகர், இதர பிற்பட்டோர் நலச்சங்கத்தின் தலைவர் தோழர் கருப்பசாமி மற்றும் பெல் பகுத்தறிவாளர் கழகத் தோழர் மனோகரன் உள்ளிட்டோர் பெரியாருக்கு மரியாதை செலுத்தி கருத்துரை வழங்கினர். இறுதியில் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த தோழர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.

நாடு முழுக்க பார்ப்பனிய நஞ்சு பரவி வரும் வேலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆலை வாயிலில் மிகச் சிறப்பாக பெரியாருக்கு எடுத்த இந்த பிறந்த நாள் விழா ஆலை ஊழியர்களிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

இதர பிற்பட்டோர் நலச்சங்கத்தின் சார்பிலும் ஆலை வாயிலில் தந்தை பெரியாருக்கு விழா எடுத்து சிறப்பு செய்தனர்.

 விழாக் காட்சிகள்

தலைமை தோழர் இந்திரன் 

தோழர் தி.க.சின்னதுரை மாலை அணிவித்தல்


தோழர் தி.க.சின்னதுரை 


தோழர் கருப்பசாமி


தோழர் கி.சேகர்


தோழர் கிருபாகரன்


தோழர் சந்திரசேகர்


தோழர் மனோகரன் 


தோழர் வில்சன்


SC/ST தொழிலாளர் மேம்பாட்டு ஒன்றியம் சார்பில் 
மாலை அணிவித்தல்


பிரசுரம் மற்றும் இனிப்பு வழங்குதல்


பிரசுரம் மற்றும் இனிப்பு வழங்குதல்



                                      பிரசுரம் மற்றும் இனிப்பு வழங்குதல்


ஆலை வாயிலில் பெரியார் 


விழாவில் ஆலை ஊழியர்கள் 

இதர பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம்

செய்தித் தொகுப்பு
ஊரான்