"அறிவிலே புறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்;
நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அறிகிலீர்;
உறியிலே தயிர்இருக்க ஊர்புகுந்து வெண்ணெய்தேடும்
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்கனே? (75)"
ஞானம் என்பது வெறும் படிப்பிலோ, பேச்சிலோ இல்லை; அது செயலில், அனுபவத்தில் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது வீண்; தயிர் உரியிலே இருக்கும்போது வெண்ணெய் தேடி வெளியில் அலைவது போலப் பயனற்றது.
"மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடீர்!
மந்திரங்கள் ஆவதும் மறத்தில் ஊறல் அன்றுகாண்;
மந்திரங்கள் ஆவது மதத்தெழுந்த வாயுவை;
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே!" (92)
புறத்தில் சொல்லப்படும் வெறும் மந்திர வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்கிறார்.
"சாவதான தத்துவச் சடங்குசெய்யும் ஊமைகாள்,
தேவர்கல்லும் ஆவரோ? சிரிப்பதன்றி என் செய்வேன்? மூவராலும் அறியொணாத முக்கணனமுதற் கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே". (129)
கற்களைக் கடவுளாக வணங்கும் இந்தச் செயலை நினைத்து (சிவவாக்கியர்) சிரிக்கிறார்.
"காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே." (130)
காலையிலும் மாலையிலும் புனித நீராடுவது, சடங்குகளில் ஈடுபடுவது போன்ற வெளித்தோற்ற வழிபாடுகளில் ஈடுபடும் மூடர்களே (அறிவில்லாதவர்களே), எப்போதும் நீரில் கிடக்கும் தேரையைப் போல, நீராடுவதால் என்ன பயன்?
எனக் கேட்கிறார் சிவவாக்கியர்.
"எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ?
அங்கும்இங்கு மாய்இரண்டு தேவரே இருப்பரோ?
அங்கும்இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ?
வங்கவாரம் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே." (131)
வெவ்வேறு கடவுள்கள் உண்டு என்று கூறுபவர்கள் வாய் புண்ணாகி இறந்து போவார்கள்" (அதாவது, அவர்கள் சொல்வது தவறு) என்று சிவவாக்கியர் கூறுகிறார்.
இந்தப் பாடலின் மூலம், இறைவனைப் பிரித்துப் பார்ப்பதையும், மதவாதங்களையும், பல கடவுள் கொள்கைகளையும் கண்டிக்கிறார்.
சிவவாக்கியரின் சாட்டை அடி தொடரும்.
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
.jpeg)
மிக மிக அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
ReplyDelete