"நாமக்கல்லில்
உள்ள இராமாபுரம் புதூர் காலனியைச் சேர்ந்த தீண்டத்தகாதவர்கள் 2015 நவம்பர் 13 அன்று நாமக்கல் நகராட்சி நடுநிலையைப்
பள்ளியை முற்றுகையிடுகின்றனர் அப்பள்ளியில் பணியாற்றும் சாதி இந்துவான விஜயலட்சுமி
என்ற ஆசிரியர் 2-ம் வகுப்பு பயிலும் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த வீராசாமி-ரேவதி ஆகியோரின்
மகனான சசிதரன் என்ற மாணவனை மற்றொரு மாணவனின் மலத்தை அள்ள கட்டாயப்படுத்தப்பட்டது அதன்பிறகுதான்
தெரிய வந்தது.
வீராசாமி
கொடுத்த புகாரின் பேரில் விஜயலட்சுமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு
பதிவு செய்யப்பட்டு கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கல்வித் துறை
அவரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.
மலம்
அள்ளியதற்காக சக மாணவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ள சதிதரனை வேறு பள்ளியில்
சேர்க்கப் போவதாக வீராசாமி கூறிவருகிறார். காலனியில் வசிக்கும் 100 குடும்பங்களைச்
சேர்ந்தவர்களும் தங்களது குழந்தைகளை அப்பள்ளிக்கு அனுப்ப அஞ்சுகின்றனர்."
ஊராட்சி
- நகராட்சி கக்கூசுகளை சுத்தம் செய்தல், பலரது வீடுகளில் உள்ள கக்கூசை சுத்தம் செய்தல்,
‘டிரை லெட்ரின்’ என்று சொல்லக்கூடிய கக்கூசுகளில் உள்ள மலத்தை அள்ளிக் கொட்டிக் கழுவுதல்,
தெருக்களை கூட்டுதல், சாக்கடை அடைப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட துப்புறவுத் தொழிலில்
பெரும்பாலும் அருந்ததியர் சாதியினரே ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மக்கள்
ஆரோக்கியமாக வாழுவதற்காக சகிப்புத்தன்மையோடு பிய்க்காட்டை தூய்மைப்படுத்தும் துப்புறவுத்
தொழிலாளர்களைத்தான் ‘சக்கிலி’ என இழிவு படுத்தி வருகிறது உயர் சாதி இந்துக்கூட்டம்.
மலம் அள்ளுவது கேவலமானது என்று கற்பித்து வைத்திருக்கிறது இச்சமூகம். இதனால்தான் சசிதரனை
சகமாணவர்களே கேலியும் கிண்டலும் செய்கின்றனர்.
"ஆண்டுவிழாவில்
நடனம் ஆடுவதற்கான நடனப் பயிற்சி தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தனியாக கொடுக்க 7 ஆண்டுகளுக்கு
முன்பு விஜயலட்சுமி முயன்றபோது அதை மறுத்துவிட்டதாக கோபி என்ற முன்னால் மாணவர் தனது
அனுபவத்தைக் கூறுகிறார்.
தாழ்த்தப்பட்ட
மாணவர்கள் காலை 7 மணிக்கெல்லாம் பள்ளிக்குச் சென்று பள்ளியில் உள்ள குப்பைகளைக் கூட்டி
சுத்தம் செய்ய வேண்டும். அதே போல மாலையில் வகுப்புகள் முடிந்த பிறகு பள்ளியின் கேட்டை
மூடுவது உள்ளிட்ட வேலைகளை முடித்த பிறகே தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வீட்டிற்குச் செல்ல
வேண்டும்." (THE HINDU, 15.11.2015).
இவை
எல்லாம் எழுதப்படாத சட்டங்களாகவே நடைமுறையில் இருந்து வருகின்றன.
இது
ஏதோ ஒரு பள்ளியில், ஏதோ ஒரு ஆசிரியர் செய்த அரிதிலும் அரிதான நிகழ்வு என ஒதுக்கிவிட
முடியாது. இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தாழ்த்தப்பட்டவர்கள் இவ்வாறுதான் பல்வேறு
வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது அன்றாட நிகழ்வாகவே நடந்தேறி வருகிறது.
தென்மாவட்டங்களில்
"மதுரை
மாவட்டம், T- கல்லுப்பட்டி அருகில் உள்ள குரையூர் கிராமத்தில் 1964ல் தொடங்கப்பட்ட
பள்ளியில் சாதி இந்துக்கள் எதிர்ப்பதால் 1970 லிருந்து கடந்த 43 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட
மாணவர்களை அனுமதிப்பதில்லை. இது குறிதது தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மனித உரிமைகள்
ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இராமநாதபுரம்,
சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சாதிப்
பாகுபாடு பார்க்கும் ஆசிரியர்கள் இருப்பது
பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆசியர்களின் வீடுகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஏவல் வேலைக்கு
பயன்படுத்துவதும் மிகச் சாதாரணமாக நடந்து வருகிறது.
திருநெல்வேலி
மாவட்டம், வேடன்குலம் என்ற ஊரில் 2012ம் ஆண்டு பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய தாழ்த்தப்பட்ட
மாணவனை கட்டாயப்படுத்திய குற்றத்திற்காக ஒரு தலைமை ஆசிரியருக்கு ரூ.25000 தண்டம் விதிக்கப்பட்டு
அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
விருதுநகர்
மாவட்டத்தில் 2013ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களிடமிருந்து உயர் சாதி இந்து மாணவர்களை
வேறுபடுத்திக் காட்டுவதற்காக அவர்களுக்கு சாதித்தலைவரின் படம் போட்ட சட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
கல்வித் துறையின் தலையீட்டிற்குப் பிறகு அனைவருக்கும் பொதுவான வெள்ளை சட்டை நடைமுறைக்கு
வந்தது.
சாதி
இந்துக்களால் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கும் கொடுமையை எதிர்க்கும் விதமாக தாழ்த்தப்பட்ட
ஒருவர் தனது மகனுக்கு “சாதி ஒழிப்பு வீரன்” என பெயர் வைவைத்தற்காக அவர் தாக்கப்பட்டு
உயர் சாதி இந்துக்கள் மீது வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.
திருநெல்வேலி
மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் ஒரு பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை கழிவறையை
கழுவச் செய்ததற்காக 7 ஆசிரியர்கள் (இதில்
6 பேர் பெண்கள்) ஏப்ரல் 2015ல் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்
மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் ஒருவர் 2007 குடியரசு தின விழாவில்
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நடனம் ஆடக்கூடாது என தடுத்துள்ளார்.
தென்
மாவட்டத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் உயர் சாதி இந்து மாணவர்களை பிளஸ் எனவும்
தாழ்த்தப்பட்ட மாணவர்களை மைனஸ் எனவும் வகைப்படுத்தி பாடம் நடத்தியதற்காக அவர் வேறு
பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கன்வாடியில்
தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் உயர் சாதி இந்து மாணவர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக
இரு தரப்பினருக்கும் வேறு வேறு கலரில் சாப்பாடு தட்டுகள் பயன்படுத்தப்பட்டன." (THE
HINDU: 15.11.2015).
தாழ்த்தப்பட்டவர்
சமையல் செய்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த
சாதி வெறியர்கள் அடாவடித்தனம் செய்வதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
எத்தனை
நுற்றாண்டுகளுக்குத்தான் இப்படி ஆதிக்கச் சாதி வெறியர்களின் கொட்டத்தை சகித்துக் கொண்டு
வாழ்வாய். துப்புறவுத் தொழிலாளியாய் இருப்பதால்தானே முதுகிலேறி சவாரி செய்கிறான். கூனிக்குருகியது
போதும். முதுகை நிமிர்த்து. கக்கூஸ் வேலையைக் கைவிடு. மலக்குழியில் முங்கியது போதும்.
வெளியெ வா. வாழவா வழியில்லை நாட்டில். எந்த மலத்தைத் தொட்டதால் உன்னை இழிபிறவி என்றானோ
அந்த மலத்தால் திருப்பி அடி. துடைப்பத்தைக் கைமாற்று; தூய்மை இந்தியா காணத் துடிக்கும்
கனவான்கள் கைகளுக்கு.
தொடர்புடைய
பதிவுகள்:
தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!
..... தொடர்: 14
தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!
..... தொடர்: 13