தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11
நிழலிலும்
தீட்டு
மத்தியப் பிரதேசம், சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள கணேஷ்புரா கிராமத்தில் ஜூன் 13, 2015 அன்று, பொதுக் குழாயில் ஒரு தாழ்த்தப்பட்ட சிறுமி தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, அந்த வழியாகச் சென்ற புரான் யாதவ் என்ற ஆதிக்க சாதிவெறியனது டிபன் பாக்ஸ் மீது அந்தச் சிறுமியின் நிழல் விழுந்ததாம். அதனால் அவனது உணவு தீட்டுப்பட்டுவிட்டதாம். அதைத் தொடர்ந்து, அந்த ஆதிக்கசாதி வெறியனின் மனைவியும் குடும்பத்து பெண்களும் திரண்டு அச்சிறுமியை நடுத்தெருவில் இழுத்துப்போட்டு மிருகத்தனமாகத் தாக்கி, இனிமேல் தண்ணீர் எடுக்க பொதுக்குழாய் பக்கம் வந்தால் உன்னைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். (புதிய ஜனநாயகம், ஜூலை 2015 & வினவு 08.07.2015)
தாழ்த்தப்பட்ட மாப்பிள்ளை குதிரையில் வருவதா?
மத்தியப்பிரதேசத்தில்
ஒரு
தாழ்த்தப்பட்ட
மணமகன்
மாப்பிள்ளை
அழைப்பின்
போது
குதிரை
மீது
அழைத்து
வரப்படுகிறார்.
இவர்
குதிரை
மீது
வந்தால்
என்ன?
யானை
மீது
வந்தால்
என்ன?
ஒரு
தாழ்த்தப்பட்டவன்
குதிரை
மீது
வருவதா?
என
கொக்கறிக்கின்றனர்
உயர்சாதி
வெறியர்கள்.
கற்களைக்
கொண்டு
தாக்குகின்றனர்.
பிறகு
குதிரையையே
அபகரித்துச்
செல்கின்றனர்.
(THE HINDU: 13.05.2015)
தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை
உத்தரப்பிரதேச மாநிலம், பதுவான் மாவட்டத்தைச் சேர்ந்த கத்ரா கிராமத்தில் வசித்த 14 மற்றும் 15 வயதுடைய 2 தலித் சகோதரிகள் கடந்த 26.05.2015 அன்று இரவு காணாமல் போய்விட்டனர். அந்தச் சிறுமிகளின் பெற்றோரும் கிராமத்தினரும் அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், 28.05.2015 அன்று காலை அந்த 2 சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்குவதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். காணாமல் போன அந்தச் சகோதரிகளை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது. சிறுமிகளின் உடல்களை மரத்தில் தூக்கு போட்டு தொங்க விட்டுவிட்டு பலாத்கார கும்பல் தப்பிச் சென்றுள்ளது. (தினகரன் 30.05.2014)
தலித் சிறுமி கற்பழிப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சித் தலைவர்
தேக்சந்த்பால் என்பவரின் மகன் ஓமேந்திரபால் மற்றும் அவனது நண்பர்கள் நரேந்திரா
& சுரேந்திரா ஆகியோர் 14 வயது தலித்
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பதுவானில் காதர்சவுக்
பகுதியில் 18.07.2015 அன்று இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. சிறுமி பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்டது மருத்துவ அறிக்கையில் உறுதி செய்ய்ப்பட்டள்ளது. அந்த மூவர்
மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. (THE HINDU: 21.07.2015)
மறைமுகமாக மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவலம்
மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள
பந்தர்பூரில் 2015 ஜூலை கடைசி வாரத்தில் கிருஷ்ணன் கோவிலில் ஏகாதசி விழா
நடைபெற்றது. சுமார் 15 லட்சம் பேர் வருவதாக சொல்லப்படும் இவ்விழாவிற்கு வருவோருக்கு
போதுமான கழிப்பறை வசதிகள் செய்யப்படவில்லை. 2100 மண் குழிகளை வெட்டி அதையே
கழப்பறையாகக் காட்டியுள்ளனர். விழா முடிந்த பிறகு அந்தக் கழிவுகளை ஏதோ ஒரு வகையில்
மனிதக் கழிவை மனிதனே அள்ளும் நிலைக்கு துப்புறவுத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிரந்தரக் கழிவறைகள் கட்டக் கோரியும் துப்புறவுத் தொழிலாளர்கள்
போராடிய போது விழாவை காரணம் காட்டி அவர்களை மிரட்டியுள்ளது மாவட்ட நிர்வாகம்.
மனிதக் கழிவை மனிதனே அள்ளுவதை
சட்டம் தடை செய்தாலும் துப்புறவுத் தொழிலாளர்கள் தீண்டப்படாதவர்கள் என்பதால் அவர்களது
கோரிக்கை நிராகரிக்கப்பட்டே வருகிறது.
மனிதக்கழிவை மனிதனே அள்ளும் அவல நிலை நாட்டின் பலபகுதிகளில் பல வீடுகளில் இன்னமும் தொடரவே செய்கிறது. (THE HINDU: 20.07.2015)
தொடர்புடைய பதிவுகள்:
வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10
தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9
பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்?
தீண்டாமையை
புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
‘நமஸ்காரம்’ சொல்லத் தடை! தீண்டாமையை
புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை
பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6
No comments:
Post a Comment