Monday, August 31, 2015

வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

மகாராஷ்டிராவில் - தங்களை வணங்கவில்லை என்பதற்காக தலித் முதியவரை அடித்துக் கொன்ற மராத்தா சாதி வெறியர்கள்!

மகாராஷ்டிரா மாநிலம், சங்கிலி மாவட்டம், பொர்கான் கிராமத்தில், வாமன் நியாநிர்குனி என்ற 62 வயது முதியவர் தனது வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது மராத்தா ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சந்திரகாந்த் பாட்டில், சச்சின் பாட்டில் என்கிற இரு இளைஞர்கள் அங்கே வருகின்றனர். இவர்களை அம்முதியவர் வணங்கவில்லை என்பதற்காக அந்த முதியவரை அந்த இடத்திலேயே அத்துக் கொன்றுள்ளனர். முதலில் பின்பக்கமாக தாக்கி உள்ளனர். “ஏன் அடிக்கிறீர்கள்?” என அவர் கேட்டதற்கு அவரை அடித்தேக் கொன்றுள்ளனர்.

வணங்கவில்லை என்பதற்காக யாராவது அடித்துக் கொள்வார்களா என நீங்கள் வினவக்கூடும். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிறுவர்களைக்கூட தாழ்த்தப்பட்ட முதியவர்கள் “கும்பிடுறன் சாமி!” என்று வணங்குவதுதானே வழக்கமாக இருந்தது; இன்றும் பல இடங்களில் இருந்து வருகிறது.

இம்முதியவர், மும்பைக்குச் சென்று சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து சற்று வசதியுடன் ஊர் திரும்பி, தான் சேர்த்த வாழ்நாள் சம்பாத்தியத்தைக் கொண்டு தனது நிலத்தில் செலவு செய்து நல்ல விவசாயத்தைக் கண்டுள்ளார்.

பங்காளி தன்னைவிட முன்னேறிவிட்டால் அவனையேக் கொலை செய்யும் இந்தியச் சமூகத்தில், ஒரு தாழ்த்தப்பட்டவன் முன்னேறுவதை ஏற்றுக் கொள்வார்களா என்ன? ஒரு தாழ்த்தப்பட்டவன் முன்னேறியதைக் கண்டு பொறாமைப்பட்டு “ஒரு தாழ்த்தப்பட்டவன் எப்படி முன்னேறலாம்?” என்ற ஆத்திரத்தில்தான் அவரைக் கொன்றுள்ளனர்.

அம்முதியவரின் மகன் ரத்ணதீப் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடைச்சட்டத்தின் கீழ் அவ்விளைஞர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“சம்படா கிராமீன் மகிளா சன்ஸ்தா” என்கிற அமைப்பினர் கண்டனக் குரல் எழுப்பிய பிறகே இச்செய்தி வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது.

(செய்தி ஆதாராம் THE HINDU: 20.07.2015)

பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள சத்திரியனையும் தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது. அதில் பிராமணன் தகப்பன் மரியாதையையும், சத்திரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது. (மனு: 2 135)

ஆளும் பரம்பரைக்கே இந்த நிலை என்றால் சேவை செய்யும் சூத்திரனின் நிலையைப் பாருங்கள்.

தொண்ணூறு வயதுக்கு மேல்தான் சூத்திரனுக்கு மரியாதை கிடைக்கும். (மனு: 2.137).

சூத்திரனுக்கும் கீழே தள்ளப்பட்டு ஊருக்கு வெளியே சேரிகளில் வாழும் தாழ்த்தப்பட்டவர்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமானது அல்லவே!

மனு வகுத்து வைத்த சட்டம்தான் ஒரு பண்பாடாக, வாழ்க்கை முறையாக மக்களிடையெ ஊறிப்போயுள்ளது. மரியாதை செய்வதில் கூட ஏற்றத்தாழ்வை உருவாக்கி அதை அன்று சட்டமாக்கினான் மனு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மனுவின் சட்டம் இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தொடர்கிறது என்றால் பார்ப்பனியம்தானே இன்னமும் கோலோச்சுகிறது.

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!

எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

No comments:

Post a Comment