Thursday, December 31, 2015

எனது புத்தாண்டு கோரிக்கையை ஆதரிப்போர் மட்டும் வாழ்த்து கூறலாம்!

இந்து மதத்தில் நான்கு வர்ணங்களும் பல்வேறு சாதிப்பிரிவுகளும் இருந்தாலும் இந்த மொத்தப்பிரிவு மக்களும் உயர்சாதியினர் தீண்டத்தக்கவர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் இரு பிரிவுகளாகப் பகுப்படுகின்றனர்.

இந்தியாவின் மிகப் பெரிய சாபக்கேடு இந்து மதமும் அதன் உயிர்மூச்சான தீண்டாமையும்தான் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. உயர்சாதியினரால் தாழ்த்தப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் போதெல்லாம் உயர்சாதியினரை ‘சாதி இந்துக்கள்’ என்தான் குறிப்பிடுகின்றனர். 'சாதி இந்துக்கள்' என்றால் அவர்கள் உயர்சாதியினர்; தீண்டத்தக்கவர்கள் என்பதும், தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதுதான் அதன் பொருள்.

தீண்டத்தக்கவர்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை தீண்டிக் கொள்ளலாம். ஆனால் தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தக்க சாதி இந்துக்களை தீண்டிவிடவும் கூடாது; சாதி இந்துக்கள் தங்களை தீண்டாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை.

அதனால்தான் பார்ப்பனப் பெண்ணை படையாச்சி பையன் காதலித்தால் கடுமையாக எதிர்க்கப்படுவதில்லை. ஆனால் படையாச்சிப் பெண்ணை பறையன் காதலித்துவிட்டால் கடித்துக்குதறுகிறார்கள். இந்த நடைமுறைதான் தீண்டாமை நிலவுவதை பறைசாற்றுகிறது.

சாதி ஒழிந்தால் தீண்டாமையும் ஒழிந்துவிடும் என்று எளிமையாகச் சொன்னாலும் அது அவ்வளவு விரைவில் நடந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

தீண்டாமை ஒழிப்பில் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டுமானால் ஐயங்காரை மலம் அள்ளவும் அருந்ததியரை அர்ச்சகராகவும் ஆக்குவதற்கான கோரிக்கை முதலில் வெற்றி பெற வேண்டும்.

சாதிப்படிநிலையில் அருந்ததியருக்கு மேலே உள்ள அனைவரும் மலம் அள்ள வேண்டும். அதேபோல ஐயங்காருக்குக் கீழே உள்ள அனைவரும் அர்ச்சகராக வேண்டும்.

எனது இந்த புத்தாண்டு கோரிக்கையை ஆதரிப்போர் மட்டும் வாழ்த்து கூறலாம்!

தொடர்புடைய பதிவுகள்:
மலத்தால் திருப்பி அடி! துடைப்பத்தைக் கைமாற்று!

Saturday, November 21, 2015

மலத்தால் திருப்பி அடி! துடைப்பத்தைக் கைமாற்று!

"நாமக்கல்லில் உள்ள இராமாபுரம் புதூர் காலனியைச் சேர்ந்த தீண்டத்தகாதவர்கள் 2015 நவம்பர் 13 அன்று நாமக்கல் நகராட்சி நடுநிலையைப் பள்ளியை முற்றுகையிடுகின்றனர் அப்பள்ளியில் பணியாற்றும் சாதி இந்துவான விஜயலட்சுமி என்ற ஆசிரியர் 2-ம் வகுப்பு பயிலும் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த வீராசாமி-ரேவதி ஆகியோரின் மகனான சசிதரன் என்ற மாணவனை மற்றொரு மாணவனின் மலத்தை அள்ள கட்டாயப்படுத்தப்பட்டது அதன்பிறகுதான் தெரிய வந்தது.

வீராசாமி கொடுத்த புகாரின் பேரில் விஜயலட்சுமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கல்வித் துறை அவரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.

மலம் அள்ளியதற்காக சக மாணவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ள சதிதரனை வேறு பள்ளியில் சேர்க்கப் போவதாக வீராசாமி கூறிவருகிறார். காலனியில் வசிக்கும் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது குழந்தைகளை அப்பள்ளிக்கு அனுப்ப அஞ்சுகின்றனர்."

ஊராட்சி - நகராட்சி கக்கூசுகளை சுத்தம் செய்தல், பலரது வீடுகளில் உள்ள கக்கூசை சுத்தம் செய்தல், ‘டிரை லெட்ரின்’ என்று சொல்லக்கூடிய கக்கூசுகளில் உள்ள மலத்தை அள்ளிக் கொட்டிக் கழுவுதல், தெருக்களை கூட்டுதல், சாக்கடை அடைப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட துப்புறவுத் தொழிலில் பெரும்பாலும் அருந்ததியர் சாதியினரே ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மக்கள் ஆரோக்கியமாக வாழுவதற்காக சகிப்புத்தன்மையோடு பிய்க்காட்டை தூய்மைப்படுத்தும் துப்புறவுத் தொழிலாளர்களைத்தான் ‘சக்கிலி’ என இழிவு படுத்தி வருகிறது உயர் சாதி இந்துக்கூட்டம். மலம் அள்ளுவது கேவலமானது என்று கற்பித்து வைத்திருக்கிறது இச்சமூகம். இதனால்தான் சசிதரனை சகமாணவர்களே கேலியும் கிண்டலும் செய்கின்றனர்.

"ஆண்டுவிழாவில் நடனம் ஆடுவதற்கான நடனப் பயிற்சி தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தனியாக கொடுக்க 7 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி முயன்றபோது அதை மறுத்துவிட்டதாக கோபி என்ற முன்னால் மாணவர் தனது அனுபவத்தைக் கூறுகிறார்.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் காலை 7 மணிக்கெல்லாம் பள்ளிக்குச் சென்று பள்ளியில் உள்ள குப்பைகளைக் கூட்டி சுத்தம் செய்ய வேண்டும். அதே போல மாலையில் வகுப்புகள் முடிந்த பிறகு பள்ளியின் கேட்டை மூடுவது உள்ளிட்ட வேலைகளை முடித்த பிறகே தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்." (THE HINDU, 15.11.2015).

இவை எல்லாம் எழுதப்படாத சட்டங்களாகவே நடைமுறையில் இருந்து வருகின்றன.

இது ஏதோ ஒரு பள்ளியில், ஏதோ ஒரு ஆசிரியர் செய்த அரிதிலும் அரிதான நிகழ்வு என ஒதுக்கிவிட முடியாது. இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தாழ்த்தப்பட்டவர்கள் இவ்வாறுதான் பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது அன்றாட நிகழ்வாகவே நடந்தேறி வருகிறது.

தென்மாவட்டங்களில்

"மதுரை மாவட்டம், T- கல்லுப்பட்டி அருகில் உள்ள குரையூர் கிராமத்தில் 1964ல் தொடங்கப்பட்ட பள்ளியில் சாதி இந்துக்கள் எதிர்ப்பதால் 1970 லிருந்து கடந்த 43 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மாணவர்களை அனுமதிப்பதில்லை. இது குறிதது தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சாதிப் பாகுபாடு பார்க்கும் ஆசிரியர்கள்  இருப்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆசியர்களின் வீடுகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஏவல் வேலைக்கு பயன்படுத்துவதும் மிகச் சாதாரணமாக நடந்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், வேடன்குலம் என்ற ஊரில் 2012ம் ஆண்டு பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய தாழ்த்தப்பட்ட மாணவனை கட்டாயப்படுத்திய குற்றத்திற்காக ஒரு தலைமை ஆசிரியருக்கு ரூ.25000 தண்டம் விதிக்கப்பட்டு அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் 2013ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களிடமிருந்து உயர் சாதி இந்து மாணவர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அவர்களுக்கு சாதித்தலைவரின் படம் போட்ட சட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வித் துறையின் தலையீட்டிற்குப் பிறகு அனைவருக்கும் பொதுவான வெள்ளை சட்டை நடைமுறைக்கு வந்தது.

சாதி இந்துக்களால் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கும் கொடுமையை எதிர்க்கும் விதமாக தாழ்த்தப்பட்ட ஒருவர் தனது மகனுக்கு “சாதி ஒழிப்பு வீரன்” என பெயர் வைவைத்தற்காக அவர் தாக்கப்பட்டு உயர் சாதி இந்துக்கள் மீது வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் ஒரு பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை கழிவறையை கழுவச்  செய்ததற்காக 7 ஆசிரியர்கள் (இதில் 6 பேர் பெண்கள்) ஏப்ரல் 2015ல் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் ஒருவர் 2007 குடியரசு தின விழாவில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நடனம் ஆடக்கூடாது என தடுத்துள்ளார்.

தென் மாவட்டத்தைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் உயர் சாதி இந்து மாணவர்களை பிளஸ் எனவும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை மைனஸ் எனவும் வகைப்படுத்தி பாடம் நடத்தியதற்காக அவர் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கன்வாடியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் உயர் சாதி இந்து மாணவர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக இரு தரப்பினருக்கும் வேறு வேறு கலரில் சாப்பாடு தட்டுகள் பயன்படுத்தப்பட்டன." (THE HINDU: 15.11.2015).

தாழ்த்தப்பட்டவர் சமையல் செய்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த சாதி வெறியர்கள் அடாவடித்தனம் செய்வதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

எத்தனை நுற்றாண்டுகளுக்குத்தான் இப்படி ஆதிக்கச் சாதி வெறியர்களின் கொட்டத்தை சகித்துக் கொண்டு வாழ்வாய். துப்புறவுத் தொழிலாளியாய் இருப்பதால்தானே முதுகிலேறி சவாரி செய்கிறான். கூனிக்குருகியது போதும். முதுகை நிமிர்த்து. கக்கூஸ் வேலையைக் கைவிடு. மலக்குழியில் முங்கியது போதும். வெளியெ வா. வாழவா வழியில்லை நாட்டில். எந்த மலத்தைத் தொட்டதால் உன்னை இழிபிறவி என்றானோ அந்த மலத்தால் திருப்பி அடி. துடைப்பத்தைக் கைமாற்று; தூய்மை இந்தியா காணத் துடிக்கும் கனவான்கள் கைகளுக்கு.

தொடர்புடைய பதிவுகள்:

ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கானசட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக்கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*நமஸ்காரம் சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 2

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!


மனு இன்னும் மடியவில்லை!
எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

Monday, November 16, 2015

தோழர் கோவன் விடுதலை!




சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தோழர் கோவனுக்கு பிணை கிடைத்திருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊத்திக் கொடுத்த உத்தமி” பாடலுக்காக கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் கைது செய்யப்பட்டார், கோவன். இதன் பிறகு ஊடகங்களிலும், இந்திய, சர்வதேச அளவில் கோவன் விடுதலைக்காக பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர்.
இடையில் தோழர் கோவனை போலிஸ் விசாரணைக்காக காவலில் எடுத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த உத்தரவிலேயே இந்தக் கைது செல்லாது என்பதற்குரிய விளக்கங்கள் இருந்தன. அதன் நீட்சியாக இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை அளித்திருக்கிறது. அரசுத் தரப்பில் இருந்து அதிகபட்சம் இந்த பாடல் இரட்டை அர்த்தத்தோடு இருக்கிறது என்பதை மட்டுமே வாதிட முடிந்தது. இதில் தேசத்துரோகம் என்ன என்பதற்கு அவர்களிடத்தில் பதில் இல்லை.
தோழர் கோவனுக்காக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதிட்டார். நீதிமன்ற வேலைகளை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஒருங்கிணைத்தனர். தோழர் கோவனை கைது செய்திருப்பதில் சட்ட அடிப்படை ஏதுமில்லை என்பதோடு, பொதுக்கருத்தில் அவரைக் கைது செய்தது தவறு என்பது உருவாகியபடியால் நீதிமன்றம் இத்தகைய பிணையை அளித்திருக்கிறது.
மக்கள் நலனுக்காக போராடுவோரை சர்வாதிகார அரசால் வீழ்த்த முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. பாசிச ஜெயாவின் டாஸ்மாக் கடைகளை மூடும் வரை தோழர் கோவனின் பாடலும் ஓயாது.
செய்தி ஆதாரம்: வினவு
நன்றி!
தொடர்புடைய பதிவுகள்:

Monday, November 9, 2015

பிகார்: ‘பிலிக்கா பொலோனிக்கா’வை என்ன செய்ய?

“இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியைத் தழுவினாலும், கட்சிகள் வாரியாக, பா.ஜ.க அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. அந்தக் கட்சி 24.4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது”

இப்படி தினமணி எழுதுகிறது. 160 தொகுதிகளில் போட்டியிட்டு அத்தொகுதிகளில் பெற்ற மொத்த வாக்குகளை சதவீத அடிப்படையில் கணக்கிடுவதே ஒரு மோசடி. போட்டியிட்ட மொத்த தொகுதிகளிலும் பெற்ற மொத்த வாக்குகளை ஒரு தொகுதிக்கு என கணக்கிட்டு சதவீதத்தை சொல்வதே சரியான சதவீத கணக்கு.

அதன்படி பார்த்தால் பா.ஜ.க பெற்றுள்ள வாக்கு சதவீதம் காங்கிரசைவிடவும் குறைவு என்பதுதான் உண்மை.

கட்சி
போட்டியிட்ட தொகுதிகள்
மொத்த வாக்கு சதவீதம்
ஒரு தொகுதிக்கான வாக்கு சதவீதம்
ராஷ்டீரிய ஜனதா தளம்
101
18.4
0.18
ஐக்கிய ஜனதா தளம்
101
16.8
0.16
காங்கிரஸ்
41
6.7
0.16
பா.ஜ.க
160
24.4
0.15
.
நிதிஷ்-லாலு தலைமையிலான மெகா கூட்டணியின் வெற்றியைக் கொண்டாடுவதைவிட பா.ஜ.க வின் தோல்வியைத்தான் நாடே கொண்டாடுகிறது.

தீபாவளி கொண்டாடுவதற்காவது புதுத்துணி-பலகாரம்-பட்டாசு வேண்டும்; அதற்கு பணமும் வேண்டும். ஆனால் பா.ஜ.க வின் தோல்வியைக் கொண்டாடுவதற்கு “பிகாரில் பா.ஜ.க படுதோல்வி!” என்கிற செய்தி ஒன்று போதுமே.

இந்தக் கொண்டாட்டம் பா.ஜ.க ஆதரவாளர்களின் அடிவயிற்றைக் கலக்கியுள்ளது. அதனால்தான் “முதல்வர் நிதீஷ்குமாருக்கு எந்த அளவுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பும், நிதியுதவியும் கிடைக்கும், வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிட முடியும், நல்ல நிர்வாகத்தைத் தந்துவிட முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறி”  ‘மவனே நீ எப்படி ஆட்சி செய்து விடுவாய் பார்க்கிறோம்!’ என சவால் விடுத்து சங்பரிவாரங்களின் குரலை பிரதிபலிக்கிறது தினமணி தலையங்கம். (09.11.2015)

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். மீசையில் ஒட்டியுள்ள மண்ணை வேண்டுமானால் தட்டி விடலாம். ஆனால் சிக்காகிப் போன ‘பிலிக்கா பொலோனிக்கா’வை என்ன செய்ய?

 (plica polonica-ஜடா முடி)

தொடர்புடைய பதிவுகள்:

Sunday, November 8, 2015

பா.ஜ.க தோல்வி: மகிழ்ச்சியின் எதிர்காலம்!

பிகார் தேர்தல் முடிவுகளுக்கு முன்

பிகார் தேர்தல் முடிவுகளுக்குப் பின்














ஏய் யாருப்பா அங்க அந்த மீடியாக்காரனெல்லாம் போயிட்டானானு பாரு.....




மகிழ்ச்சியின் எதிர்காலம்

படங்கள் உதவி: முகநூல் நண்பர்கள்

தொடர்புடைய பதிவுகள்: