Saturday, 18 July 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

”வரான் பார் திருட்டுப் பய!”

”கொலைகாரப் பய போறான் பாரு!”

”அவன் ஒரு 420 பா!”

திருட்டுப்பய, கொலைகாரன், 420(ஏமாற்றுப் பேர்வழி), இதற்கெல்லாம் விளக்கம் தரத் தேவையில்லை. எல்லாச் சாதிகளிலும், அனைத்து மதங்களிலும் இவர்களைக் காணலாம். இவர்கள் மக்களுக்குத் தீங்கானதையே செய்கிறார்கள் என்பதை இந்தச் சொற்களே புரியவைத்துவிடுகின்றன.

“அந்த சண்டாளப் பசங்க நம்ம பொண்ணுங்கள கடத்துறானுங்க!” 1983-ல் இராமநாராயனனின் இயக்கத்தில் வெளியான "சீறும் சிங்கங்கள்!" திரைப்படத்தில் வி.கே.இராமசாமி பேசும் வசனம் இது.

ஆனால் அது என்ன சண்டாளன்? யார் அது?

இந்தக் கேள்விகளை சில நண்பர்களிடம் கேட்டேன்.

”துரோகி!” என்றார் ஒருவர்.

”தெரியாது!” என்றார் மற்றொருவர்.

”சண்டாளன் என்றால் கீழ் சாதிக்காரன்!” என்றார் மூன்றாமவர். அவரது தொணியே அவர் ஒரு உயர் சாதிக்காரர் என்பதை உணர்த்தியது.

இவர்கள் எல்லாம் ஐம்பதைக் கடந்தவர்கள். அதனால்தானோ என்னவோ சண்டாளன் என்கிற சொல்லை கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஓரளவுக்கு அதன் பொருளையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஒரு ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கிறேன். அப்பொழுதெல்லாம் பிறரை திட்டுவதற்கு சண்டாளன் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார்கள். ஆண்கள் என்றால் சண்டாளன் என்றும் பெண்கள் என்றால் சண்டாளச்சி என்றும் திட்டுவார்கள்.

இதன் பொருள் அப்போழுதெல்லாம் தெரியாது. வி.கே.இராமசாமி வசனம் பேசும்போதுகூட புரியவில்லை.

சண்டாளன் என்றால் கீழ்சாதிக்காரன் என்று ஒரு நண்பர் சொன்னாரே! அது உண்மையாக இருக்கக்கூடும் என்பதை அவரது தொணியே உணர்த்தியதால் இது குறித்த விவரங்களைத் தேடினேன்.

“பிராமணன் சாப்பிடும் போது சண்டாளன் அவன் கண்ணில் பட்டுவிடக்கூடாது!” (மனு: 3-239),

“சண்டாளனுடன் ஒருமித்து வசிக்கக்கூடாது!” (மனு: 4-79),

“ஒரு பிராமணன் உடல் நலமில்லாத போது தனது மனைவி உடனிருக்கையில் வேறு சாதி மனைவியைக் கொண்டு தனக்கு பணிவிடை செய்து கொண்டால் அவன் சண்டாளனாகி விடுகிறான்!” (மனு: 9-87),

”சண்டாளனுக்கு ஊருக்கு வெளியேில் வீடிருக்க வேண்டியது. அவனுக்கு உலோக பாத்திரம் கிடையாது. அவன் தீண்டின பாத்திரங்களை சுத்தி செய்தாலும் பரிசுத்தமாகாது. நாய் மற்றும் குரங்கு மட்டுமே அவனது சொத்து” (மனு:10-51).

”சண்டாளன் பிணத்தின் துணியை உடுத்த வேண்டும். உடைந்த சட்டியில் அண்ணம் புசிக்க வேண்டும். இரும்பு பித்தளை இவைகளால் செய்யப்பட்ட பூஷணங்களை (அணிகலன்கள்) அணிய வேண்டும். அவன் எப்போழுதும் தொழிலுக்காக திரிந்து கொண்டிருக்க வேண்டும்.” (மனு: 10-52).

”தருமகாரியஞ் செய்கிற சமயத்தில் சண்டாளனைப் பார்க்கவும் அவனோடு பேசவும் கூடாது.” (மனு: 10-53).

”சண்டாளர்களுக்கு நேரே உணவு போடக்கூடாது. வேலையாளைவிட்டு உடைந்த பாத்திரங்களில் உணவை போட்டு வைக்க வேண்டும்.” (மனு: 10-54).

“சண்டாளர்கள் பிணங்களை எடுக்க வேண்டும், அவர்கள் அடையாள அட்டையோடுதான் ஊரில் சஞ்சரிக்க வேண்டும்.” (மனு: 10-55),

“பிணங்களின் ஆடைகள் மற்றும் படுக்கை இவைகளை சண்டாளர்கள் உடுத்திக் கொள்ள வேண்டும்.” (மனு: 10-56),

“நல்ல வேடத்தில் இருந்தாலும் இவன் செய்கிற தொழிலால் சண்டாளன் ஈனனென்றே அறியப்படுகிறான்.” (மனு: 10-57).

“யாகம் செய்வதற்காக சூத்திரனின் பொருளை ஒரு பிராமணன் வாங்கினால் அவன் இறந்து மீண்டும் பிறக்கும் போது சண்டாளனாகத்தான் பிறப்பான்.” (மனு: 11-24).

“ஒரு பிராமணன் தெரிந்தே ஒரு சண்டாளப் பெண்ணை புணர்ந்தாலோ, அவள் கொடுத்த உணவை சாப்பிட்டாலோ, அவளிடத்தில் தானம் வாங்கினாலோ அந்தப் பிராமணன் சண்டாளனாகி விடுகிறான்.”(மனு: 11-175).

யார் இந்தச் சண்டாளன்?

”சூத்திரனுக்கும் பிராமண பெண்ணுக்கும் பிறந்தவன்தான் இந்தச் சண்டாளன்.” (மனு: 10-12).

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற நான்கு வர்ணங்களில் முதல் மூன்று வர்ணத்தாருக்கு அடிமை சேவகம் செய்பவனே சூத்திரன். ஒரு மேல்சாதி பிராமணப் பெண்னை ஒரு கீழ்சாதி சூத்திரன் காதலிப்பதா? அவனுக்கு ஒரு வாரிசா? என ஆத்திரமடைந்த மனு அந்த வாரிசுகளை சண்டாளர்கள் என அடையாளப்படுத்தி ஊருக்கு வெளியே விரட்டி அடித்தான்.

மாதவிலக்கில் உள்ள ஒரு பெண்ணையோ அல்லது ஒரு பிணத்தையோ அல்லது ஒரு பறையனையோ – இங்கெ பறையன் என்று குறிப்பிடுவது சண்டாளனைத்தான் - ஒரு பிராமணன் தொட்டுவிட்டால் அவன் தீட்டாகிவிடுகிறான். தெரியாமல் தொட்டுவிட்டால் தலைக்கு முழுகினால் அவனிடமிருந்து தீட்டு நீங்கிவிடுகிறது. (மனு: 5-85).

ஒரு பிராமணன் ஒரு பறையனையோ அல்லது அசுத்தமானவர்களையோ பார்த்துவிட்டால் அப்பொழுதெல்லாம் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். (மனு: 5-86).

இப்படி நீள்கிறது சண்டாளர்கள் அதாவது பறையர்கள் பற்றிய மனுவின் வரையறை.

சண்டாளர்கள் குறித்து – அதாவது பறையர்கள் குறித்து - மனுவால் வரையறுக்கப்பட்டு, பார்ப்பனர்களால் பரப்பப்பட்டு மக்களிடம் ஒரு வாழ்க்கை முறையாக பண்பாடாக நிலை பெற்றுவிட்ட சேரி மக்களின் நிலையை அறிய நீங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டியதில்லை. ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை சற்றே திரும்பிப் பாருங்கள். திண்டாமையின் உண்மை முகம் தெரியும்!

தொடரும்…

குறிப்பு: இந்தக் கட்டுரை ”இந்துவாக இருப்பது பெருமையா? இழிவா?என்பதன் தொடர்ச்சி. இந்தத் தலைப்பை ”தீண்டாமையை புகுத்தியன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!” என மாற்றி அமைத்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர...

Wednesday, 15 July 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

காலம் காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி இந்துக்களால் – இங்கே சாதி இந்துக்கள் எனப்படுபவர்கள் தீண்டாமையை கடைபிடிக்கும் சாதியினர் அனைவரும் இதில் அடங்குவர் - தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு வந்ததால் சுதந்திர இந்தியாவிலாவது இந்த இழிவு நீக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கில் இந்திய அரசியல் சாசனத்தின் 17வது பிரிவில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனாலும் சுதந்திர இந்தியாவில் தீண்டாமை தொடரவே செய்தது. எனவே தீண்டாமை கடைபிடிப்போரை தண்டிப்பதற்காக தீண்டாமை (குற்றங்கள்) சட்டம் 1955ல் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் 1976 திருத்தியமைக்கப்பட்டு சிவில் உரிமை பாதுகாப்புச் சட்டம்-1955 என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால் தீண்டாமை முன்னிலும் மூர்க்கமாக தொடரவே செய்தது. எனவே 1989ல் வன்கொடுமை தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் பின்னரும் தீண்டப்படாதவர்கள் மீதான வன்கொடுமையும் தீண்டாமையும் தொடர்ந்து வருகிறது.

தீண்டாமை கடைபிடிப்பதை கைவிட சாதி இந்துக்கள் தயாராக இல்லை. மாறாக வன்கொடுமை தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என கூப்பாடு போடுகின்றனர். வாக்கு வங்கி அரசியல் நடத்தும் ஒரு சில சாதிய அரசியல் கட்சிகளும் இதற்கு தூபம் போடுகின்றன. இதன் விளைவு தற்பொழுது இச்சட்டத்தை தடுத்திட வேண்டுமெனும் சட்ட வரைவு நாடாளுமன்ற நிலைக்குழு முன் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தீண்டாமை தற்போது நவீன வடிவில் கடைபிடிக்கப்படுவதால் எந்தச் சட்டத்தாலும் அதை ஒழிக்க முடியவில்லை.

இப்போதெல்லாம் தீண்டாமை எங்கே இருக்கிறது? யார் கடைபிடிக்கிறார்கள்? என சாதி இந்துக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இளவரசனும் கோகுல்ராஜீம் மாண்டு போனதற்கு தீண்டாமை காரணம் இல்லையா?

வாடகைக்கு வீடு தரும் போது சாதி கேட்காமல் தருகிறார்களா? தீண்டத்தகாதவன் என்றால் வேறு காரணங்களைக் கூறி மறுத்துவிடலாம். இன்னமும்கூட பொது சுடுகாடு கிடையாது. பொதுக்கிணற்றில் / குழாயில் தீண்டப்படாதவர்கள் தண்ணீர் எடுக்க / பிடிக்க முடியாது? தீண்டத்தகாதவர்கள் கோவில்களுக்குள் சென்று சாதி இந்துக்களைப் போல வழிபட முடியாது.

1947க்கு முன்பு தீண்டாமை எப்படி இருந்தது? அதன்பிறகும் தீண்டாமை தொடர்வதற்கான காரணம் என்ன? இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதி மக்கள் இவ்வாறு நடத்தப்படுவதற்கு யார் காரணம்? சாதி இந்துக்களில் உள்ள ஒருசிலரின் தூண்டுதலினால் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதா? அப்படியானால் அந்த ஒரு சிலர் தவிர பிற சாதாரண சாதி இந்துக்களிடம் தீண்டாமை எண்ணம் இருப்பதில்லையா?

சாதி இந்துக்களிடம் தீண்டாமை என்பது ஒரு வாழ்க்கை முறையாக – ஒரு பண்பாடாக நிலை பெற்றது எப்படி? தீண்டாமையை கடைபிடிப்பது குற்றமா அல்லது பாவமா என்பது பற்றியெல்லாம் ஒரு சாதி இந்து சிந்தித்துப் பார்ப்பதில்லையே.! ஏன்?. தீண்டாமை ஒரு அநிச்சை செயலாகவல்லவா அவனிடம் குடிகொண்டுள்ளது.

தொடரும்… 
தொடர்புடைய பதிவுகள்:

Monday, 13 July 2015

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

ஆவி 1
- விமலாதித்த மாமல்லன் -டாடி எனக்கொரு டவுட்டு. இந்த காலி சீட்டு காமராஜருக்கா டாடி. 
ஆமாம். எலக்சன் வரிக்கும் பாப்போம். வரலேனா காடுவெட்டிக்கு குடுத்துருவோம்.....
ஆவி 2
Top of Form
Bottom of Form
சாதி சண்டைகள் நடத்த தனி மைதானங்கள்உருவாக்கபடும்
ஆண்ட சாதிகள் பேண்டால் தனியாக அள்ளுவதற்கு தனி வாரியம் அமைக்கப்படும்
மாற்றம் 
முன்னேற்றம்
ஆவி 3Top of Form
ஆவி 4
"புதியதோர் தமிழகம் செய்வோம்"னு மோடி மாதிரி முன்னணி பத்திரிக்கையில முழு பக்க விளம்பரம் கொடுத்து இருக்கார் ஆண்ட பரம்பரை அன்புமணி!
காடு வெட்டி குருவை கல்வி அமைச்சர் ஆக்கி, வன்னியர் மெஸ்சுல சாப்பிட்டு, வன்னியர் காப்பீட்டு திட்டத்தில பலனடைந்து , மயக்கமில்லா மாம்பழ மதுபானத்தை அருந்தி, "அடங்காது வீரம், ஷத்ரிய குலம் வாழும்"னு பேருந்துகளில் எழுதி, சொந்த சாதியில கல்யாணம் பண்ணா ஊக்கத்தொகை, வேற சாதியில கல்யாணம் பண்ணா மானியம் ரத்து, வருசத்துக்கு ஒரு முறை தமிழக பழம் வீர விளையாட்டுகளை "கலவர காடு" என்கிற பெயரில் அரசு போட்டிகள், அண்ணா நூலகத்தை தூக்கி விட்டு, "Caste Study Centre" அமைத்தல், கன்னியாகுமரியில் சந்தன வன்னிய போராளி "வீரப்பனாருக்கு" சிலை!
.
"
புதியதோர் குழி தோண்டுவோம், மண் அள்ளி நாமே போட்டு கொள்வோம்"
ஆவி 5
ஆவி 6
Sivakumar Arumugam . 


ஆவி 7

 இந்த அண்ணன் கேரக்டர்,
அமெரிக்க மாப்பிள்ளை
கேரக்டரெல்லாம் வேணாமா..
ஸ்ட்ரைட்டா முதலமைச்சர் தானா?

ஆவி 8
சாதி மத அரசியல் இரண்டுமெ இந்த நாட்டிற்கு கேடுதான் இந்த இரண்டையும் வைத்து அரசியல் செய்லாம் ஆனால் ஆட்சி அமைக்க முடியாது...
பாஜக ஆட்சி..மதநம்பிகையில் அமைந்தது அல்ல காங்கிரஸின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்பித்தியில் அமைந்தது...
ராமதாஸ் போன்ற சாதி மத கட்சிகள் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நினைப்பை மூட்டை கட்டிவிடுவது நல்லது...வேண்டுமென்றால் ஆச்சியை பிடித்துக் கொள்ளுங்கள்..
ஆவி 9 

கதையைக் காப்பியடிக்கறதக் கண்டுபுடிச்சீங்க சரி..
ஏப்பா ஒரு விளம்பரத்த அடிச்சாக்கூடவா
கண்டுபுடிப்பீங்க..
உங்க 007- தனத்துக்கு ஒரு அளவே இல்லையா...
# மாற்றம் முன்னேற்றம்
ஆவி 10


‪#‎ஏமாற்றம்
‪#‎தளர்ச்சி
‪#‎வம்புமணி.
சொக்கா..தமிழ்நாட்டுக்கு
வந்த சோதனையா?
ஆவி 11 
ங்கொய்யால....நம்மளுதும் ஆல் எடிஷன் தாண்டா...இந்தா வச்சிக்கோ...
ஆவி 12
முதல்வர் நோய்வாய்ப்பட்ட நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, மக்களை உளவியல் ரீதியாக அட்டாக் செய்து, தனது 'அடுத்த முதல்வர்' திட்டத்தை தனது 'மேல் நோக்குப் பார்வையில்' நக்கலடித்து கோடிக்கணக்கான பணத்தைக்கொட்டி விளம்பரப்படுத்தி, மக்கள் மனதில் பதியப் பார்க்கிறார் அன்புமணி. திண்ணை எப்போது காலியாகும் என்பதுபோல, வஞ்சகத்தனமான, மனிதாபிமானமற்ற சீப்பான விளம்பரங்கள்!!
ஆவி 13
மாற்றம்
முன்னேற்றம்
அன்புமணி
உண்மையான வரிசை
முன்னேற்றத்தை
மாற்றியது
இவர்கள் தான்
ஆவி 14



ஆவி 15

30ஆண்டுகளுக்கு முன்பு சாதா டாக்டர்
இன்று ஜாதிசங்கத்தை வைத்து
அன்புமணியின் 5ஆண்டு பதவியை வைத்து 5000கோடி சம்பாதித்துள்ளனர்
இவரது தினசரி அரசியல் பணியென்பது 50பைசாவுக்கு வெள்ளைப்பேப்பர் வாங்கி யாராவது ஒரு நிருபரின் அறிக்கையை வாங்கி தினம் வெளியிடுவார்
தனது மிகப்பெரிய குடும்பத்தின் 
மாற்றம், வளர்ச்சி,முன்னேற்றத்தைப் பாருங்கள்.
ஆவி 16

அது ஒன்னுமில்ல...விளம்பர டிசைன மாத்திக்குடுத்திட்டாங்களாம்.இப்பதான் ஒரிஜினல் டிசைன அனுப்பியிருக்காங்க...நல்லாயிருக்கில்ல..
ஆவி 17
ஏற்கனவே வளர்ச்சி வளர்ச்சின்னு சொல்லி ஏமாத்துன குரூப்ல இவரும் ஒரு அங்கம் தானே?
வளர்ச்சின்னு சொன்னா கண்டுபுடிச்சிருவாங்கன்னு
முன்னேற்றம்னு வார்த்தையை மாற்றி போட்டுள்ளார்கள்.
மாற்றப் போறாராம்
அண்ணே சும்மா போங்கண்ணே
மாத்து மாத்துன்னு மாத்திறப் போறாங்க.
ஆவி 18
 வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வந்து பாமக கட்சிக்காக போஸ்டர் ஒட்டும், அயல்நாட்டு "பாமக" விஞ்ஞானிகள்......
நன்றி.
ஆவி 19

இப்பவாவது புரிஞ்சிக்கோங்க...போஸ்டர் ஒட்டுபவரும் கலைஞந்தான்...
•••••
இன்னும் ஏறாளமான ஆவிகள் அன்புமணியைத் துரத்துகின்றன. பிடிக்க முடிந்ததை மட்டும் பிடித்து உங்களுக்குக காட்டி உள்ளேன். 

இதற்கே எனக்கு இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. ஆவிகளைத் தேடித் தேடி கழுத்தும் வலிக்கிறது. 

வலை உலகில் உலா வரும் மற்ற பிற ஆவிகளை நீங்களே தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆவிகளைத் தந்துதவிய நல் உள்ளங்களுக்கு நன்றி!

தொடர்புடைய பதிவுகள்: