கொழுத்த உடல் கட்டமைப்பு, எடுப்பான உடை, மிடுக்கான நடை, பளபளக்கும் கன்னங்கள், கம்பீரமான குரல்,
தற்குறி
ஆனாலும்
எதுகை மோனையோடு அடுக்குமொழியில் ஆரவாரமிட்டு பார்வையாளரை மதிகெடச் செய்யும் வாய்ஜாலம், பயணிக்க, தங்க சொகுசு வாகனங்கள், நட்சத்திர
விடுதிகள், அன்றாட ஆடம்பர வாழ்க்கை, அதற்கான திரள்நிதி என அரசியல் வானில் வலம் வரும் ஒருவனைத் தலைவனாக ஏற்கும் அவலம் தொடரும் இச்சமூகத்தில்தான்,
ஒட்டிய கன்னங்கள், குரலை ஓங்கி ஒலிக்கக்கூட
முடியாத
அளவுக்கு
ஒடுங்கிய
உடல்
வாகு, எளிய மக்களின் உடை, கொள்கையின் அடையாளமாக தோளில் ஒரு கருப்புத் துண்டு, மார்பைத் தழுவும்
வெண்தாடி, சொற்ஜாலம் இல்லா எளிய பேச்சு, பரந்த அறிவு கொண்ட,
வெளியேற்றப்பட்டு,
மத்திய அரசில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பெற, அரசியல் போராட்டக் களம் அமைத்து, உத்தரப்பிரதேசம், பீகார், இராஜஸ்தான், தில்லி, பஞ்சாப் மேற்குவங்கம் போன்ற வட மாநிலங்களில் பயணம் செய்து கொள்கைப் பரப்பி,
அனைத்து வகுப்பினருக்கும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் விகிதாச்சார இடப்பங்கீடு
கோரி இந்திய அளவில் போராடி, மண்டல் கமிஷன் அமைக்கத் தூண்டுகோலாய் இருந்து, 1974
இல் “சிந்தனையாளன்” தமிழ் ஏடு, 1994 இல் “Periyar Era” என்ற ஆங்கில ஏடு நடத்தி,
2006 இல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை நாடுகளில் கொள்கைப் பரப்புரை மேற்கொண்டு,
மார்க்ஸ், பெரியார் அம்பேத்கர் வழியில், இந்தியச் சமூகம் ஒரு சோசலிச சமூகமாக மாற
வேண்டும் என்ற இறுதி மூச்சோடு வாழ்ந்து, 2021 இல் மறைந்து, இன்று நூற்றாண்டு காணும் அந்த மகத்தான தலைவன்தான் தோழர் ஆனைமுத்து அவர்கள்.
பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் இட ஒதுக்கீட்டிற்காக அவர் அப்படி என்னதான் செய்தார்? அடுத்து பார்ப்போம்!
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment