Sunday, 16 August 2015

விழுப்புரம் மாவட்டம், சேஷசமுத்திரத்தில் தீண்டாமையின் கோரதாண்டவம்!

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தையடுத்த, சேஷசமுத்திரம் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடத்துவதற்கு தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 2012ம் ஆண்டு இப்பிரச்சனை எழுந்த போது அரசு நிர்வாகம் இதை முடிவுக்குக் கொண்டு வரவில்லை.

இந்த ஆண்டு 17.08.2015 அன்று மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடத்துவதற்கு தாங்கள் வசிக்கும் பகுதியில் தேர் ஒன்றை தாயார் செய்து வைத்திருந்தனர் தாழ்த்தப்பட்டவர்கள். மாரியம்மனுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் 
தேர்த்திருவிழா நடத்துவதா என வெறி கொண்ட ஆதிக்கச் சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களின் பகுதிக்குள் நுழைந்து அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்ததோடு தாழ்த்தப்பட்டவர்களின் குடிசைகளையும் எரித்து சாம்பலாக்கியுள்ளனர். 

இது ஏதோ ஒரு சிலர் செய்ததல்ல. ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரு பெருங்கூட்டமே இதைச் செய்துள்ளது. 

இந்தியா பல்வேறு மத - இன - சாதி மக்களைக் கொண்ட நாடாம். வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற நாடாம். அய்யங்கார் முதல் அப்துல் கலாம் வரை எல்லோரும் முழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். 

இவர்களின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மைதான்.

தாழ்த்தப்பட்டவர்கள் மீது தீண்டாமையை கடைபிடிப்பதில் உயர்சாதி இந்துக்கள் அனைவரும் ஒன்றுபடுகிறார்கள். இந்தியாவின் தென்கோடி முதல் வடமுனை வரையிலும், வங்கம் முதல் மும்பை வரையிலும் இந்த ஒற்றுமை ஒன்றுதான் நிலவுகிறது. 

வர்ணாசிரிம -  நால்வர்ண - மனுதர்ம - பார்ப்பன இந்து மத நம்பிக்கைகள், நடைமுறைகள் தொடரும் வரை இந்த ஒற்றுமை நீடிக்கவே செய்யும்.

இந்த ஒற்றுமையை சிதைப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டாலொழிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடிவேதுமில்லை.

எரிக்கப்பட்ட குடிசைகள்

பீதியில் பெண்கள்

அச்சத்தில் மக்கள்

கதறி அழும் பெண்கள்

Saturday, 15 August 2015

‘நமஸ்காரம்’ சொல்லத் தடை!

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7

”மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சியின்போது, பேஷ்வாக்களின் தலைநகரமாக இருந்த புனா நகரத்திற்குள் மாலை 3 மணியிலிருந்து காலை 9 மணிவரை தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், ஒன்பதுக்கு முன்பும் மூன்றுக்குப் பிறகும் அவர்களுடைய உடல்கள் நீண்ட நிழல்களை ஏற்படுத்தியதே இதற்குக் கதாரணம். இந்த நீண்ட நிழல்கள் ஒரு பிராமணரின் மீது பட்டுவிட்டால் அவர் குளித்து தனது தீட்டைப் போக்கிய பிறகே உணவு அருந்தவோ, தண்ணீர் குடிக்கவோ முடியும்.

“இதே போன்று மதில் சுவரால் அரண் செய்யப்பட்ட நகரங்களுக்குள், தீண்டப்படாதவர்கள் வசிக்க அனுமதிக்கப்படவில்லை. கன்று காலிகளும், நாய்களும் சுதந்திரமாக நகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டாலும், தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

“மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் சட்டப்படி தீண்டப்படாதவர்கள், தரையில் துப்புவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் எச்சிலை ஓர் இந்து மதித்தால் அவர் தீட்டுக்குள்ளாகக்கூடும். எனவே எச்சிலை துப்புவதற்காக தீண்டப்படாதவர் தன் கழுத்தில் ஒரு பானையை கட்டிச் செல்ல வேண்டுமென்ற விதி இருந்தது.

“தனது காலடித் தடத்தை அழித்துவிட ஒரு புதர்ச் செடியை இழுத்துச் செல்ல வேண்டுமென்றும் இருந்தது.

“ஒரு பிராமணன் வருவது தெரிந்தால் தீண்டப்படாதவன் தரையில் குப்புறப்படுத்து தனது நிழல் பிராமணன் மீது விழுவதைத் தவிர்க்க வேண்டுமென்ற நிலையும் இருந்தது.

“ஒருவன் தாழ்த்தப்பட்டவன் என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அவன் கழுத்தைச் சுற்றியோ, இடுப்பைச் சுற்றியோ கருப்புக் கயிறு அணிய வேண்டுமென்ற விதி மகாராஷ்டிராவில் நிலவி வந்தது.

“குஜராத்தில், தீண்டப்படாதவர்கள் தங்களை வேறுபடுத்திக் காட்டும் சின்னமாக, ஒரு கொம்பை அணிய வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது.

“பஞ்சாபில், ஒரு தெரு கூட்டுபவன் தெருவில் நடந்து செல்லும் போது தான் ஒரு துப்பறவு பணியாளன் என்பதை வெளியார் அறிந்து கொள்ள தனது அக்குளில் ஒரு துடைப்பத்தை வைத்திருக்க வேண்டும்.

“பம்பாயில், தீண்டப்படாதவர்கள் சுத்தமான துணிகளை உடுத்த அனுமதிக்கப்படவில்லை. கந்தல் துணிகளையே உடுத்த வேண்டும். தீண்டப்படாதவர்களுக்குத் துணிகள் விற்கும் போது, அந்தத் துணிகளை கந்தலாக்கியும் அழுக்கடையச் செய்தும் விற்பதில் கடைக்காரர்கள் கவனமாக இருந்தார்கள்.

“மலபாரில், தீண்டப்படாதவர்கள் ஒரு மாடிக்கு அதிகமான மாடிகளுடன் வீடுகள் கட்ட அனுமதிக்கப்படவில்லை.

“குடை எடுத்துச் செல்லவும், காலணிகளை அணியவும், நகைகள் அணியவும், பசுக்களிடமிருந்து பால் கறக்கவும், நாட்டில் சர்வசாதாரணமாக புழங்கும் மொழியை உபயோகிக்கவும் மலபாரிலுள்ள தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

“தென் இந்தியாவில், தீண்டப்படாதவர்கள் இடுப்பிற்கு மேலே எந்தத் துணியும் அணியக்கூடாது என்ற திட்டவட்டமான விதியிருந்தது. திண்டப்படாத பெண்மக்களும் உடலின் மேற்பகுதியை மூட அனுமதிக்கப்படவில்லை.”

இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் மன்னர் ஆட்சிக்காலத்தில் தீண்டப்படாதவர்கள் மீது வரைமுறையின்றி வன்கொடுமைகள் ஏவிவிடப்பட்டன என்பதை மேற்கண்ட விவரங்கள் உணர்த்துகின்றன.

இந்து மதத்தைச் சார்ந்த தங்களுக்குக் கீழானவர்களாக இருந்த பிற சாதிக்காரர்களையும் பார்ப்னர்கள்  விட்டு வைக்கவில்லை.

“பம்பாய் மாகாணத்தில் சோனர்கள் (பொற்கொல்லர்கள்) தங்கள் வேஷ்டியைத் தார்ப்பாய்ச்சி உடுத்திக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

“ஒருவருக்கு வணக்கம் தெரிவிக்கையில் ‘நமஸ்காரம்’ என்ற சொல்லை உபயோகிக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.”

இது குறித்து பம்பாய் மாகாண அரசு 28.07.1779ல் இயற்றிய தீாமானம்.

“வணக்கத்தைத் தெரிவிக்கும் முறைகளில் ஒன்றான, ‘நமஸ்காரம்’ என்பதைப் பொற்கொல்லர்கள் உபயோகப்படுத்துவது தவறு என்று பிராமணர்கள் தெரிவிப்பதுடன், பொற்கொல்லர்களுக்கு இதற்கு உரிமை இல்லை என்றும், இது இந்து மத உரிமைகளின் மீறல் என்றும், இதன்மூலம் அவர்கள் புனிதத் தன்மையை கெடுக்கிறார்கள் என்றும் பிராமணர்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். பொற்கொல்லர்கள் ‘நமஸ்காரம்’ என்று வணக்கம் சொல்லும் முறையைத் தடை செய்ய வேண்டும் என்று பேஷ்வாவும் தலைவருக்கு எழுதியுள்ளார். இந்த இரண்டு சாதிகளுக்கும் இடையேயான தகராறைத் தீர்க்க வேண்டும் என்ற முடிவுடன், பிராமணர்களின் புகாரில் காரணம் இருப்பதாகத் தெரிவதால் பொற்கொல்லர்கள் ‘நமஸ்காரம்’ என்பதை உபயோகிக்கக்கூடாது என்று அறிவிக்கப்படுகிறது.”

அதைத் தொடர்ந்து அரசுச் செயலாளர் பொற்கொல்லர்களின் சாதித்தலைவருக்கு கீழ்கண்டவாறு 09.08.1779ல் உத்தரவு கடிதம் ஒன்றையும் அனுப்புகிறார்.

“பொற்கொல்லர்கள் ‘நமஸ்காரம்’ என்று வணக்கத்தைத் தெரிவிப்பதை தடை செய்ய வேண்டும் என்று மேல் சபையின் மாண்புமிகு தலைவர் கருதுவதால், இந்த உத்தரவையும், தீர்மானத்தையும் அந்தச் சாதியினர் முழுவதுக்கும் அறிவிக்கவும், அது கண்டிப்பாக பின்பற்றப்படுவதை கண்காணிக்கவும் இவ்வாறு உங்களுக்கு உத்தரவிடப்படுகிறது”.

”கிறிஸ்து பிறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்போ அல்லது சில ஆண்டுகளுக்கு பின்போ மனு பிறந்திருந்தாலும் இந்த விவரங்கள் மனு இன்னும் மடிந்து விடவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

”இந்து அரசர்கள் ஆட்சியில் இருந்த போது, இந்துக்களுக்கும் இந்துக்களுக்குமிடையே, தீண்டப்படாதவர்கள் மற்றும் தீண்டத்தக்கவர்களுக்கும் இடையேயான உறவுகள் மனுவின் சட்டப்படி தீர்மானிக்கப்பட்டன. அந்த சட்டம் வெளிப்படையாகவே ஏற்றத்தாழ்வின் அடிப்படையில்தான் அமைந்து இருந்தது.”

(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

குறிப்பு: சத்திரபதி சிவாஜி தனது ஆட்சிக்காலத்தில் (கி.பி:1664-1680) அரசவையில் பேஷ்வா எனும் அமைச்சர் பதவியை முதன் முதலில் உருவாக்கினான். மராட்டிய இராணுவத்தைக் கட்டுப்படுத்திய பேஷ்வாக்கள் பின்னர் வழிவழியாக மராட்டிய பேரரசுக்குத் தலைமை தாங்கி நடத்தினர். சில பேஷ்வாக்கள் மன்னர் தகுதியும் பெற்றனர்.

தொடர்புடைய பதிவுகள்:
வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!


எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

Saturday, 8 August 2015

மூடு டாஸ்மாக்கை!

மதுக்கடைகளை மூடவேண்டும் என்கிற கோரிக்கை பல காலமாக பல்வேறு கட்சிகளால்  - இயக்கங்களால் எழுப்பப்பட்டாலும் அது தற்போது தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கையாக வலுப்பெற்றுள்ளது. சமீப காலத்தில் இந்தப் போராட்டம் ஏன் வலுப்பெற்றுள்ளது? அதற்காக உழைத்தவர்கள் யார்? உமைப்பவர்கள் யார்? என்கிற சுருக்கமான வரலாறு இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

மதுவுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறவேண்டும். இல்லையேல் தமிழகம் நாசமாயப் போவதை யாராலும் தடுக்க முடியாது. போராடிக் கொண்டிருக்கும் போராளிகள் அனைவருக்கும் பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க வேண்டியது மனிதனாயப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.

24.12.2012: சென்னை, குரோம்பேட்டையில் பெண்கள் விடுதலை முன்னணியினர் டாஸ்மாக் சாராயக்கடைகளுக்கு எதிரான போராட்டம்.


15.02.2013: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அழிவிடைதாங்கி கிராமத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் தலைமையில் அக்கிராம மக்கள் டாஸ்மாக் சாராயக்கடையை அடித்து நொறுக்கினர். 9 பேர் கைது செய்யப்பட்டு 19 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு பிணையில் வெளியே வந்தனர். இன்று நடைபெறும் போராட்டங்களுக்கு வித்திட்டது அழிவிடைதாங்கி போராட்டமே!



25.09.2014: திருச்சியில் பெண்கள் விடுதலை முன்னணியினர் டாஸ்மாக் சாராயக்கடைகளுக்கு எதிரான போராட்டம்.


ஜீன் 2015 முதல் மூடு டாஸ்மாக்கை! என்கிற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம் தொடங்கி வைத்த பிரச்சாரம்.


26.06.2015: பதுச்சேரியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர்  சாராயக்கடையை அடித்து நொறுக்கினர்.




15.07.2015: திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் டாஸ்மாக் சாராயக்கடையை அடித்து நொறுக்கினர்.



01.08.2015: மார்த்தாண்டம்,உண்ணாமலைக்கடை டாஸ்மாக் சாராயக்கடையை மூடக்கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்திய வாதி சசிபெருமாளின் மரணம்.



டாஸ்மாக் சாராயக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என் கோரிக்கை மேலும் வலுவடைய சசிபெருமாளின் மரணம் மிக முக்கிய காரணமாக அமைந்தது.

02.08.2015: கலிங்கப்பட்டியில் ம.தி.மு.க தலைமையில் டாஸ்மாக் சாராயக்கடை அடித்து நொறுக்கப்பட்டது. மதுவுக்கு எதிரான போராட்டம் அறவழியில் சாத்தியமில்லை என்பதை கலிங்கப்பட் உணர்த்தியது.



03.08.2015: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் தலைமையில்  டாஸ்மாக் சாராயக்கடை அடித்து நொறுக்கப்பட்டது டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை தமிழகம் முழுவதும் பெருங்காட்டுத்தீயாய் பரவ வித்திட்டது.



முழுமையான மதுவிலக்க கோரிக்கை இன்று தமிழக மக்களின் கொரிக்கையாக வலுப் பெற்றுவிட்டது. எத்தனை அடக்குமறைகளை ஏவிட்டாலும் போராட்டங்கள் தொடரும் என்பதைத்தான் இன்றை போராட்டங்கள் உணர்த்துகின்றன.

தற்போது நடைபெற்று வரும் போரட்டங்களிலிருந்து சில காட்சிகள்.













போராட்டம் தீவிரமடைவதைக் கண்ட தி.மு.க, வி.சி.க, தே.மு.தி.க, CPI, CPM, SDPI, காங்கிரஸ், பா.ஜ.க என பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று போராட்டக் களத்தில் இறங்கியுள்ளன - இதில் பெரும்பாலான கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட முனைந்தாலும் -  இவர்களின் போராட்டங்களும் மதுவிலக்கு கோரிக்கைக்கு வலு சேர்க்கவே செய்யும்.


இதோ! புறப்பட்டுவிட்டது அடுத்தத் தலைமுறை. மதுவற்ற தமிழகம் காண தோள் கொடுப்போம். போராளிகளுக்கு!

Wednesday, 5 August 2015

வாழ்ந்து வரும் கடந்த காலம்!

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

“மனுவின் திட்டப்படி நால்வர்ணத்திற்கு உள்ளே உள்ளவர்கள், நால் வர்ணத்திற்கு வெளியெ உள்ளவர்கள் என இரண்டு முக்கியமான சமூகப் பிரிவுகள் உள்ளன.”

“பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் – இந்த நான்கு பிரிவினர்தான் நால்வர்ணத்திற்கு உள்ளே உள்ளவர்கள்.” 

பள்ளர், பறையர், சக்கிலியர் என அறியப்படுகிற இன்றைய தீண்டப்படாதவர்கள் நான்கு வர்ணத்திற்கு வெளியே உள்ளவர்களின் நகல்கள்தான்.

“சமுதாயச்சிந்தனையைவிட வகுப்பைப் பற்றிய எண்ணமே மேலோங்கி ஆட்சி செலுத்தும் ஓர் அமைப்பு இந்து சமுதாய அமைப்பு. அது, வகுப்பினர்களிடையே சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டது. எனவே தனி நபர்களிடையே ஏற்றத் தாழ்வை அடிப்படையாகக் கொண்டது.”

“தெளிவாகச் சொல்வதென்றால் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் தீண்டப்படாதவர்கள் ஆகிய வகுப்பினர்கள் எல்லோரும் சமநிலையில் அதாவது ஒரே மட்டத்தில் உள்ளவர்களாக இல்லை. அவர்கள் படி நிலையில் அதாவது ஒருவரைவிட ஒருவர் உயர்வான நிலையில் இரக்கிறார்கள். இந்தக் கூற்றை எந்த இந்துவும் மறுக்கமாட்டார். ஒவ்வொரு இந்துவுக்கும் இது நன்கு புரியும்”

பிராமணர் என்பது ஒரு சாதி அல்ல. ஐயர், வடகலை ஐயங்கார், தென்கலை ஐயங்கார் போன்ற பல்வேறு சாதிப்பிரிவினர்களை உள்ளடக்கியதே பிராமணர் என்பது. ஐயர், ஐயங்கார் உள்ளிட்ட சாதியினரிடையே ஏற்றத் தாழ்வுகள் /  கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வர்ணத்தில் ஒரே வர்ணமாக அதாவது பிராமண வர்ணமாக தங்களைக் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் தங்களை பிராமணர்கள் என அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் இந்து சமூக அமைப்பில் மற்றபிற அனைத்து சாதியினருக்கும் மேலானவர்களாக நிலை நிறுத்திக் கொள்கின்றனர். அதனால்தான் ஒரு பிராமணன் மற்ற அனைத்து சாதியினரையும் தனக்கு கீழானவர்களாக கருதுகிறான்.

பார்ப்பனரல்லாத பிற உயர்சாதியினர் (OC), பிற்படுத்தப்பட்டோர் (BC or OBC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலுக்குள் அடங்கும் சாதியினர் தங்களை சத்திரியர்கள், வைசியர்கள் என கூறிக்கொண்டாலும் பிராமணர்களைப் போன்று இவர்கள் ஒரு வர்ணமாக அறியப்படுவதில்லை. யார் சத்திரியன், யார் வைசியன் என்பதில் இவர்களுக்கிடையில் பெரும் சச்சரவு நிலவுகிறது. சூத்திரர்கள் என்று எந்தச் சாதியனரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாததால் எந்தெந்தச் சாதிகள் சூத்திர வர்ணத்துக்குள் அடங்குவர் என்பது ஆய்வுக்குரியதாகவே உள்ளது. 

திராவிட நாட்டை ஆண்ட சத்திரியர்கள் அனைவருமே சூத்திரர்கள்தான் என மனுவே பிரகடனப்படுத்தியிருக்கிறான். (மனு:10:44). எனவே தென்னிந்தியாவைப் பொருத்தவரையில் சத்திரர்கள் என யாரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. கலியுகத்தில் சத்திரர்களே கிடையாது என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இது பற்றி வேறு ஒரு சமயத்தில் விரிவாகப் பார்ப்போம்.  

“மனுஸ்மிருதியில் மனுவால் விதிக்கப்பட்டுள்ள ஏற்றத் தாழ்வு நிலை, வரலாற்று முக்கியத்துவம் மட்டுமே உள்ள ஒரு நிகழ்வு என வாதிடக்கூடும். அது பழைய வரலாறு, மற்றும் இன்றைய இந்துக்களின் வாழ்க்ககை நடைமுறையில் அதற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் கூறலாம். இதைவிடப் பெருந்தவறு வேறு இருக்க முடியாது என நிச்சயமாகக் கருதுகிறேன். மனுநியதி என்பது ஒரு கடந்தகால நடைமுறையல்ல. தற்காலத்தின் இறந்தகாலத்தைவிட அது அதிக மெய்யானது. அது ‘வாழ்ந்து வரும் கடந்த காலம்’. எனவே எந்த நிகழ் காலத்தையும் போலவும் அது ஓர் உண்மையான நிகழ்கால விசயம்தான்.”

(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

மனு நிர்ணயித்திருந்த ஏற்றத்தாழ்வுக் கோட்பாடு பிரிட்டிஷார் இந்தியாவிற்கு வருவதற்கு மன்பே இந்த நாட்டின் சட்டமாக இருந்தது பற்றி இனி பார்ப்போம்.


தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர...