Showing posts with label பாண்டே. Show all posts
Showing posts with label பாண்டே. Show all posts

Wednesday, 9 October 2019

பார்ப்பனர் என்று சொல்வது "ஜாதி துவேஷமா"?


தொலைக் காட்சி விவாதங்களில் கோலாகல சீனிவாசன், இராமசுப்பிரமணியன், ஷேசாத்திரி போன்றோர் பொருளாதார நிபுணர், வலதசாரி, கல்வியாளர், பத்திரிக்கையாளர் என்கிற போர்வையில் பங்கேற்பதைப் பார்த்திருப்பீர்கள். இவர்கள் எல்லாம் பிறப்பால் பார்ப்பனர்களாக இருந்தாலும் அவர்களே பெருமைப்பட்டுக் கொள்ளும் ‘பிராமணர்’ என்ற பெயரில் பங்கேற்பதில்லை.

திராவிடர் கழக அருள்மொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, சுப.வீரபாண்டியன் போன்றவர்கள் விவாதத்தின் ஊடாக பிராமணர்கள் குறித்து சொல்ல வரும் போது பார்ப்பனர் என்கிற சொல்லை பயன்படுத்துகிறார்கள். அப்பொழுது பார்ப்பன தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு வருகிறது.

“நீங்கள் எப்படி ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவு படுத்திப் பேசலாம்?” எனக் குமுறுவார்கள். பார்ப்பனன் என்ற சொல்லை பயன்படுத்தினாலே ”ஜாதி துவேஷம்” என்பார்கள். இந்த ஜாதி துவேஷத்தை பெரியார் தொடங்கி வைத்து, அதைக் கலைஞர் கருணாநிதி தூபம் போட்டு வளர்த்தார் என அவர்களை கரித்துக் கொட்டுகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்கள் மறந்தும் பிராமணர்களை பார்ப்பனர் என்று விளிக்கமாட்டார்கள். அதனால்தானோ என்னவோ மார்க்சிஸ்டுகள் மீது பார்ப்பனர்களுக்கு ஒரு ‘தோழமைப்’ பார்வை உள்ளது போலும்.

 “அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே” – (ஐங்குறுநூறு – 212),

‘பார்ப்பார் ஓதுக’ (ஐங்குறுநூறு – 4),

‘பார்ப்பனப் பாங்கன் கனவு மணம்’ (குறுந்தொகை – 156),

“மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடக்”  -(சிலப்பதிகாரம்)

‘பிராமணரைக்’ குறிக்க பார்ப்பனர் என்றே சங்க இலக்கிய நூல்களிலே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏன் பார்ப்பனர்கள் போற்றிப் புகழும் ஆண்டாள் புகழ் “நாச்சியார் திருமொழி”யில்கூட

“நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி…. ” திருமொழி (56)

என்றுதானே ஆண்டாளும் பாடியிருக்கிறாள்.

"தண்டச் சோறுண்ணும் பார்ப்பான்" என பாரதியே பாடியிருக்கும் போது தற்காலத் தமிழர்கள் அச்சொல்லை பயன்படுத்தும் போது மட்டும் பார்ப்பனர்களுக்கு ஏன் இத்தனை கடுங்கோபம்?

நிற்க! பார்ப்பனர் என்பது சாதி அல்ல. பிழைப்புக்காக மந்திரம் ஓதுதலையும், யாகம் வளர்த்தலையும் தொழிலாகக் கொண்ட, நான்கு வருணங்களில் மேல் வருணமாகச் சொல்லப்படும் பிராமணர் என்ற வருணத்தைக் குறிக்கும் ஒரு தமிழ்ச் சொல்.

பார்ப்பனர்களில் பல்வேறு உட்பிரிவுகளும், ஒவ்வொரு உட்பிரிவுக்குள்ளும் நூற்றுக்கணக்கான சாதிகள் உள்ளன. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி 10 இல் 1215 பார்ப்பன சாதிகளின் பட்டியலை பதிவு செய்துள்ளார்.

பாகவதர், திரிவேதி, பண்டிட், பட், ஜோஷி, பதக், தத்தா, ஜெட்லி, ஷோரி, மிஸ்ரா, சுக்லா, திவாரி, துபே, பதக், பாண்டே, தீட்சிதர், வாஜ்பேயி இவை 1215 சாதிகளில் உள்ள ஒரு சில. இந்தப் பெயரில் முடியும் காங்கிரஸ், பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களை நமக்குத் தெரியும்தானே. இந்தப் பட்டியலில் ஐயர், ஐயங்கார் பற்றி எதுவும் காணவில்லை. தமிழகத்தில் உள்ள பார்ப்பனர்கள ரிக் வேதிகள், சாமவேதிகள், யஜூர் வேதிகள், அதர்வர்கள் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்படியானால் ஐயர், ஐயங்கார் எல்லாம் யார்?

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்
*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8

Friday, 17 August 2018

இது என்ன புதுசா பார்ப்பன நீதி மன்றம்!


பெண்கள் மீதான துன்புருத்தல்கள், இந்துத் திருமணங்கள், சொத்து மற்றும் பணம் கொடுக்கல் - வாங்கல் உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் இந்துக்களுக்கிடையில் ஏற்படும் சச்சரவுகளைத் தீர்த்து வைக்க 15.08.2018 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் முதலாவது பார்ப்பன நீதி மன்றம் ஒன்று அகில பாரதிய இந்து மகா சபாவினரால் தொடங்கப்பட்டுள்ளது. .

இந்து மகா சபாவின் தேசிய உதவித் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா,
அதனுடைய தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே என்பவரை பார்ப்பன நீதி மன்றத்தின் முதல் நீதிபதியாக நியமனம் செய்துள்ளார்.


பண்டிட் அசோக் ஷர்மா (வெள்ளை தாடி)  பூஜா ஷகுன் பாண்டேவை பார்ப்பன நீதி மன்றத்தின் முதல் நீதிபதியாக நியமனம் செய்கிறார். 

பார்ப்பனர்களால் தொடங்கப்பட்ட இந்த நீதிமன்றத்திற்கு இந்து நீதி மன்றம் (Hindu Court) என்று பெயராம்.

எல்லோருக்கும் ஒரே அரசியல் சாசன சட்டம்தான் இருக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கான தனி ஷரியத் சட்டம் மற்றும் ஷரியத் நீதி மன்றங்கள் இருக்கக்கூடாது என இவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தார்களாம். அரசிடமிருந்து தங்களுக்குச் சாதகமாக முடிவு எதுவும் வராததால் இந்த பார்ப்பன நீதி மன்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார்களாம். அது சரி! இது ஏட்டிக்குப் போட்டியானது எனில் இந்த பார்ப்பன நீதி மன்றங்களால் இஸ்லாமியர்களுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. மாறாக அது இந்துக்களைத்தானே கடித்து குதரப் போகிறது.

இந்த நீதி மன்றத்திற்கான விதிமுறைகளை வரும் அக்டோபர் 2 அன்று வெளியிட உள்ளார்களாம். நவம்பர் 15 ந் தேதி ஐந்து நீதிபதிகளை நியமிக்க போகிறார்களாம்.

தற்போது இந்துக்களை சாதியின் அடிப்படையில் பிளவுபடுத்தி ஆட்சி நடக்கிறதாம். அதனால் பார்ப்பன நீதி மன்றங்கள் மூலம் இந்துக்களை ஒன்றுபடுத்தப் போகிறார்களாம். இவர்கள் தனிச் சிறைச் சாலைகளையும் உருவாக்கப் போகிறார்களாம். இவர்களது நீதி மன்றங்களில் அதிக பட்ச தண்டணை மரண தண்டனையாக இருக்குமாம்.

இந்தியாவில் உள்ள சிவில் நீதி மன்றங்களில் இலட்சக்கணக்கான வழக்குகள் நிலுலையில் உள்ளதால் ஏழைகளால் நீதியைய் பெற முடியவில்லையாம். இந்த பார்ப்பன நீதி மன்றங்கள் விரைவாகவும் மலிவாகவும் நீதியைப் பெற்றுத் தருமாம்.

ஷரியத் சட்டம் குறித்து நமக்கு மாறுபட்ட கருத்து இருந்த போதிலும் இஸ்லாமியர்களுக்கு தனி ஷரியத் சட்டம். இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர்கள் விசாரனை செய்து தீர்ப்பு வழங்குகிறார்கள்.

ஆனால் இங்கு,

கோவில்கள்தானே பார்ப்பனர்களின் உயர் நீதி மன்றங்கள். மனுவின் சாதிச் சட்டங்கள்தானே அங்கு கோலோச்சுகிறது. 

தொடர்புடைய பதிவு: