Showing posts with label two wheeler. Show all posts
Showing posts with label two wheeler. Show all posts

Wednesday, 11 February 2026

காலத்தின் சுவடுகள்: என் பயணத் தோழர்களும்... பிரிய மனமில்லா பிரிவுகளும்!

காலச் சக்கரம் உருண்டோடினாலும், சில நினைவுகள் மட்டும் நெஞ்சில் துருப்பிடிக்காமல் அப்படியே இருக்கின்றன.

பச்சை வண்ண சுசிகி மேக்ஸ் 100... 
சுமார் 25 ஆண்டுகாலம்! 
வெறும் இயந்திரமாக அல்ல, 
என் இன்ப துன்பங்களைச் சுமந்த ஒரு ஜீவனாகவே 
என்னோடு வாழ்ந்தாய். 
என் கால்கள் தளர்ந்த போதெல்லாம் நீ என் வலிமையான கால்களானாய். பிறர் செய்த தவறுகளால் சிறு விபத்துகள் நேர்ந்த போதும், 
ஒரு தாய் தன் சேயைக் காப்பது போல, அந்த அடிகளை 
உன் இரும்புச் சட்டத்திற்குள் உள்வாங்கிக் கொண்டு 
என்னைக் காத்தாய். 
என் உடல் கீறப்படாமல் இருக்க, உன் காயங்களை நீயே சுமந்தாய்.


ஸ்கூட்டி பெப் – 
குடும்பத்தில் ஓர் அங்கம்... 
உன்னோடு கூடவே, எம் குடும்பத்தின் ஒரு அங்கமாகப் பயணித்தது அந்த 'ஸ்கூட்டி பெப்'. பழையதானாலும் பாசம் குறையாத வாகனம் அது. ஆனால், ஒரு நாள் 
தெரு நாய் குறுக்கிட்ட அந்த நொடி... எதிர்பாராத விபத்து. என் முழங்கையில் நேர்ந்த எலும்பு முறிவு, என் உடல் நலனை மட்டுமன்றி, என் மன உறுதியையும் உலுக்கியது.


பிரிய நேர்ந்த கனத்த தருணம்... 
"இனி பழைய வாகனங்கள் வேண்டாம்" என்ற குடும்பத்தினரின் அக்கறையான குரல், 
என் உள்ளுக்குள் ஒரு கட்டளையாக ஒலித்தது. அந்த ஒரு விபத்து, 
உன்னையும் (மேக்ஸ் 100), 
அந்த ஸ்கூட்டியையும் ஒரே நேரத்தில் பிரிய வைத்தது.
இன்று நீ (மேக்ஸ் 100) வேறொருவரின் கைகளில் புதுப்பொலிவுடன் ஜொலிப்பதைக் காணும் போது, என் பழைய காதலுக்கு ஒரு புதிய வாழ்வு கிடைத்ததாக உள்ளம் மகிழ்கிறது. ஆனால், அந்த ஸ்கூட்டி பெப் என்னவானது? எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. அதுவும் எங்காவது ஒரு மூலையில் 
நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதே என் அவா.


இன்று... 
வாகனங்கள் இன்றி 
இரண்டு ஆண்டுகளாய் 
என் பயணங்கள் தொடர்கின்றன. ஆனால், சாலையைக் கடக்கும் போதெல்லாம் உன் எஞ்சின் சத்தம் 
என் காதுகளில் ரீங்காரமிடுகிறது. 
நீ வெறும் இரும்புத் துண்டல்ல... என் பொற்கால நினைவுகளின் நிழற்பயணி.

காதலின் கவன் – 
ஓடினேன் ஓடினேன்… 
மீண்டும் ஒருமுறை நீ என் கால்களாவாயா? அல்லது இந்த நினைவுகளின் கதகதப்பே என் மீதி வாழ்வுக்குப் போதுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஊரான்

குறிப்பு: கவன்-"காலம் கடந்து போனாலும், தீராத காதலால் உந்தப்பட்டு மீண்டும் அந்தப் பழைய நினைவுகளுக்கே திரும்புதல்"