Saturday, March 14, 2015

அரை டிரவுசர்களால் 'லோல்'படும் இந்தியா! - 1

26.05.2014 ல் அரை டிரவுசர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்த பிறகு இந்தியாவே லோல்படுகிறது. இவர்களின் பேச்சும், பேட்டிகளும், அறிக்கைகளும், விவாதங்களும், கொள்கைகளும், நடைமுறையும் இந்தியாவை படுத்தும் பாட்டை எப்படி எடுத்துச் சொல்வது என கடந்த மூன்று மாதங்களாக தொகுக்க முயற்சித்தேன். தொகுக்க தொகுக்க பட்டியல் மட்டும் நீள்கிறது. ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக எழுதலாம். அப்படி சிலவற்றை சற்று விரிவாக எழுதவும் செய்தேன். இவர்களைப் பற்றி எழுதத் தொடங்கினால் வேறு எதைப்பற்றியும் எழுத முடியாது என்பதே உண்மை. ஆகையினாலே இவர்களின் செயல்களை பட்டியலிட்டாலே போதும் எனக் கருதுகிறேன். விளைவுகளை முடிந்தவரை சொல்ல முயற்சித்துள்ளேன். மற்றவைகளை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

 1. காந்தியைக் கொன்ற கோட்சே ஒரு தேசபக்தன்
 2. கோட்சேவுக்கு கோவில்
 3. காந்தியைக் கொன்ற டிசம்பர் 30 ல் கோட்சேவின் திரைப்படம் வெளியீடு
 4. காந்தி பிறந்த நாளில் குப்பை கூட்டுதல் – காந்தியைப் பெருமைப்படுத்தவா?
 5. இந்தியாவை இராமணின் பிள்ளைகள் ஆள வேண்டுமா? இல்லை முறைகேடாகப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா?
 6. பகவத் கீதை தேசிய நூலாக்கப்படும் – பிறப்பால் ஏற்றத்தாழ்வை பாதுகாக்கவா?
 7. அடுத்த கல்வி ஆண்டு (2015-16) முதல் 5ம் வகுப்பிலிருந்து பகவத் கீதை – அரியானா அரசு
 8. கிருஸ்துமஸ் தினத்தில் வாஜ்வாய்க்கு பிறந்தநாள் விழா - பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் – பரிசுகள்: ஏசு பிறந்த நாளை மறக்கடிக்கவா?
 9. இந்திராகாந்தி பிறந்த நாளில் – கக்கூஸ் கட்டுதல்: காங்கிரசை பெருமைப்படுத்தவா?
 10. வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது – இவர்கள் என்னத்தைக் கிழித்தார்கள்?
 11. சமஸ்கிருத வாரம் – பிணத்திற்கு உயிரூட்டும் முயற்சி – உயிரோடு இருக்கும் பிற தேசிய இன மொழிகளை புதை குழிக்கு அனுப்பவா?
 12. சி.பி.எஸ்.சி பள்ளிகளில் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதம் – குருநாதனுக்கே ஆப்பு எனில் நாமெல்லாம் எம்மாத்திரம்?
 13. அரசுசார் நிறுவனங்கள்: சமூக வலைதலங்களில் இந்திப் பயன்பாடு: இந்தி மட்டும் தெரிந்தவன் ஏற்கனவே பானி பூரி விக்கிறான். மற்ற மொழிக்காரனெல்லாம் அவன் கடையில் டம்ளர் கழுவலாம்?
 14. நதிகளும், நகரங்களும் புனிதமாக்கப்படும்: புனிதம் பேசினால்தானே தட்டிலே தட்சணை விழும்.
 15. இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்களை  இந்து மதத்திற்கு மாற்றும் - வீடு திரும்பல் (கர்வாப்சி): அப்படியே அமெரிக்காவில் செட்டில் ஆன அம்பிகளையும் இந்தியாவிற்கு கர்வாப்சி செய்தால் பாரத தேஷம் ஷேமமாக இருக்கும்.
 16. மதமாற்ற தடைச்சட்டம் – குறிப்பாக இந்துக்கள் பிற மதங்களுக்கு மாறுவதைத் தடுக்க: விழுகின்ற தட்சணை குறையக் கூடாதல்லவா?
 17. இந்தியாவில் வாழும் அனைவருமே இந்துக்கள்தான். சிறுபான்மையினர் என்று எவருமே கிடையாது. அம்பிகளைத் தவிர வேறு யாருமே சிறுபான்மையினர் அல்ல.
 18. கச்சத் தீவு - தமிழக மீனவர் பிரச்சனை – மீனவர்கள் எல்லை தாண்டக் கூடாது என பா.ஜ.க வினர் பேச்சு – செயற்கைக் கோள் உதவியுடன் கம்ப்யூட்டரிலேயே மீன் செல்லும் பாதையைக் கண்டறிந்து சிலோன்காரன் கடலில் ஒரு கல்லை தூக்கிப் போட்டு மீன்களை இந்தப்பக்கமாக அச்சமூட்டி வரவைத்து மீன்களை அள்ளிக் கொள்ளலாம் என ஐடியா கொடுத்தவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
 19. காவிரி நீர் / முல்லைப் பெரியார் பிரச்சனைக்கு தீர்வு கேட்டால் நதிகள் தேசிய மயம் என போகாத ஊருக்கு வழி சொல்லுதல்; இல்லை எனில் மௌனம் சாதித்தல்
 20. ராஜபக்சே வெற்றி பெற மோடி வாழ்த்து – பங்காளிகளுக்குள் இதெல்லாம் சகஜமப்பா!
 21. திருக்குறளுக்கு வட இந்தியாவில் விழா – வள்ளுவனையும் மனுவின் மற்றொரு அவதாரமாக்கவா?
 22. மனுதர்மத்தை நிலைநாட்டிய ராஜ ராஜ சோழனுக்கு 1000 மாவது சதய விழா:  உச்சிக் குடுமிகளை வாழவைத்தவனாயிற்றே!
 23. நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி – நிதி ஒதுக்கீடு: அமெரிக்காவுக்கு அடிவருட.
 24. கூடங்குளம் விரிவாக்கம் – அந்நியனின் அணுக் கழிவுகளை நம் தலையில் கொட்டத்தான்!
 25. அணு ஒப்பந்தம் - அமெரிக்கா நிவாரணம் தராது
 26. மீத்தேன் வாயு எடுக்க அனுமதி – கும்பகோணமே கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்த பிறகு தஞ்சையாவது! நஞ்சையாவது!
 27. அம்மா வழக்கு: மேல்முறையீடு - விரைந்து முடிக்க முனைதல்: முக்கிப் பார்த்தார்கள். பரிவாரங்களுக்கு ஸ்ரீரங்கன் கொடுத்ததோ ஆட்டுப் பீக்கைதான். ஆட்டுப் பீக்கை எப்ப விட்டையாவது. இப்போதைக்கு கோமாதாவின் கோமியமே போதும் என நினைத்ததாலோ!
தொடரும்......

தொடர்புடைய பதிவுகள்:

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு! உச்ச கட்ட காட்சிகள்!

கல்யாண மாப்பிள்ளையும் பத்து லட்ச ரூபாய் கோட்டும்!

15 comments:

 1. மிகச் சிறந்த பட்டியல்.. இன்னும் இருக்கிறதல்லவா? அடுத்தப் பதிவுக்கு காத்திருக்கிறோம். அப்பப்போ, இவ்வாறாக பட்டியலிட்டால் தான் நம் மக்கள் மறக்க மாட்டாங்க. இல்லை என்றால் பட்டியல் பெருக்க பெருக்க பலவற்றையும் மறந்தே போய்விடுவார்கள்..

  மேலும் சில இருக்கின்றது .. கன்னியகுமாரியை கேரளாவிடம் இணைப்போம் என்றார் பொன் ராதாகிருஷ்ணன். தமிழ் மொழிக்கு ஆட்சி மொழி தகுதி வேண்டும் எனக் கொண்டு வந்த கோரிக்கையை பாராளமன்றத்தில் விவாதிக்க கூட விடாமல் தூக்கி எறிந்தமை எனப் பல இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. எனக்கு எட்டியவற்றை மட்டும்தான் நான் தொகுத்துள்ளேன். எல்லாவற்றையும் தொகுத்தால் இது ஒரு நெடுந்தொடராகக் கூட அமையலாம். முடிந்தவரை தொகுப்போம் - மக்களிடம் படைக்க! நன்றி!

   Delete
 2. mokka.. nee pottathula pala nalla vishayamum iruku.. kurai sollalam aana ellathaiyum kurai solla kudathu.. thruvallvarayum rajarajanaiyum paratnathula enna thapu?
  a

  ReplyDelete
 3. Few more:
  - fanatic speech by sathvi and subramaniN sany
  - pro corporate budget
  - unethical alliance in Kashmir
  - attempt removal of secular word from constitution
  - hunting of teesta salvid gujarat who is fighting modi
  - attempt to dilution of labor law to make it easy for adani and amani to do business
  - hike in railway fare
  - pumping money on useless ganga cleaning and tax burden on people
  - resisting fdi when it was opposition, and now supporting it
  - lanjam koraikka innum oru steps illamal, UPA idea aadhar ai nambuvathu
  - helping to rise medicine cost and helping Sun pharma become India's richest person
  - backtracking on black money
  And many more......

  ReplyDelete
  Replies
  1. அழகாகச் சொன்னீர்கள். இன்னும் பட்டியல் இருக்கிறது. மொத்தத்தையும் ஒரே நேரத்தில் படித்தால் மூர்ச்சையாக நேரிடும் என்பதால் தவணையில் தருகிறேன். நன்றி!

   Delete
 4. - And importantly, the attacks on many institutions by saffron gang, including the recent violence on Puthiya Thalaimurai, and gang rape of nun in west bengal
  - forced resignation of Nobel laureate amartys Sen from nalandha university
  - Contiunuous release of seriously accused in gujarat riots, using CBI, which is used as caged parrot by govt. No different from cong govt
  - Historically, low spending allocation for health and agriculture
  - All time misgovernance of Swine Flu, with toll voting beyond 2000
  - All time of high number of fisherman boats withheld by srilanka to the tune of 2300+
  - Increased occupation of Arunachal by china, and practicllay notable to handle both politically and diplomatically.

  ReplyDelete
  Replies
  1. கூடுதல் தகவல்களுக்கு நன்றி!

   Delete
 5. பட்டியல் தொடர வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 6. வெகு சிறப்பு. நேர்த்தியாக சுருங்க சொல்லி உள்ளது.
  அம்மா விசயத்தில் கோர்ட் எப்போதும் கனிவுடன் நடந்து கொள்ளும். முதலில் பரபரப்பு கூட்ட தண்டனை எல்லாம் தருவார்கள். பின் செய்ய வேண்டியதை செய்வதால் , திருடியதை கொடுத்துவிட்டு மனசாட்சி படி நீங்களே தண்டனை கொடுத்து கொள்ளுங்கள் என்று கனிவுடன் சொல்லப்படும்.

  எப்படியும் 4,5 ஆம் ஆண்டு நிச்சயம் பலவிதமான இலவசங்களை அள்ளி விட போகிறார்கள்.
  அடுத்த ஐந்து ஆண்டும் அம்பிகளுக்கே வேண்டும் என்று.

  ReplyDelete
 7. Dear Sir,

  I will forward this article via email. Hope you will agree on this.

  Regards,

  ReplyDelete