ஜல்லிக்கட்டு தடை நீக்கம். இங்கே தமிழர்களுக்குக் கொண்டாட்டம். அங்கே எச்.எம்.டி கடிகாரத் தொழிற்சாலைக்கு மூடுவிழா! தொழிலாளர்கள் திண்டாட்டம். (Govt. approves closure of HMT Watches - The Hindu)
இங்கே தமிழனின் ‘பாரம்பிரியம்’ மீட்கப்பட்டது. அங்கே இந்தியாவின் “பெருமிதம்” புதைக்கப்பட்டது.
கடிகாரத்தின் குரல்வலை நெறிக்கப்பட்ட பிறகு இனி காளைகள் மட்டும் ஓடி என்ன பயன்?
இன்று கடிகாரத்தின் குரல்வலை…..
நாளை துங்கபத்ரா ஸ்டீலுக்கு சம்மட்டியும், இந்துஸ்தான் கேபில்சுக்கு தூக்கும் தயாராக இருக்கின்றன. இவை எல்லாம் உனது கோவில்கள்.
அடித்து நொறுக்கப்படவிருக்கும் கோவில்களின் பட்டியல் தயாராகி விட்டன.
கடப்பாரை கோடறிகளோடு அடித்து நொறுக்குவதற்கு காவிப்படை தயாராகி விட்டது. இந்தக் கோவில்களில் நீ இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் கோவில் பிரசாதம் மட்டும் உன்னைத் தேடி வந்து கொண்டிருப்பதை நீ மறுக்க முடியாது.
அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்தாய். நட்பாய் இருந்தவர்கள் பிணக்காய் மாறியதால் அமைதியை இழந்தோம். இன்று உனது பொதுத்துறை கோவில்கள் ஒவ்வொன்றாக நொறுக்கப்படுவதை நீ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நொறுங்கி விழும் கோவில் இடிபாடுகளில் நீயும் புதைந்து போவாய்.
ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டுவதைவிட உனது புல்லுக்கட்டை உருவும் காக்கிகளுக்கு எதிராய் மல்லுக்கட்டு; உனது வீரம் போற்றப்படும்; வரலாறு நெடுக!
இன்றைய தேவை இதுதான்...தோழரே.......ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டுவதைவிட உனது புல்லுக்கட்டை உருவும் காக்கிகளுக்கு எதிராய் மல்லுக்கட்டு; உனது வீரம் போற்றப்படும்; வரலாறு நெடுக!
ReplyDeleteநன்றி!
ReplyDelete