பெண்களை மட்டும் வருணிப்பதில் சங்க காலம் முதல் நம்ம காலம் வரை எந்தக் கவிஞனும் விதிவிலக்கு இல்லை.
ஆண்களுக்கு உதடும், மூக்கும், கன்னமும், இமையும், மார்பும், தலை மயிரும் இல்லையா என்ன? பெண் என்றால்தான் கற்பனை ஊற்றெருக்கிறது.
ஏன் எவனும் ஆண்களைப் பாட மறுக்கிறான்? கவிஞனின் பார்வையில் பெண் ஒரு போகப் பொருள். கவிஞர்கள்தான் இதை நம்மிடமும் கடத்துகிறார்கள். காமத்தைத் தூண்டி வன்புணர்வுக்கு வழி காட்டுபவர்களும் இவர்கள்தான்.
கலவிக்கு வகுப்பெடுக்கும் கவிஞர்கள்தான் அதிகம். விலங்குகளின் கலவிக்கு வகுப்பா எடுக்கிறார்கள்? கலவி அது பருவத்தின் வெளிப்பாடு. வகுப்பெடுக்கவில்லை என்றாலும் அது இயல்பாய் நிகழும். இனப் பெருக்கம் மட்டுமே அதன் நோக்கம்.
இதற்கு ஏன் ஓராயிரம் ஒப்பனைகள் கற்பனைகள்?
கவிஞர்களின் சொற்கலவி இல்லை என்றால் குடும்ப வாழ்வு இயல்பாய் நகரும். இடர் செய்து தடம்மாற வழிவகுப்போரும் கவிஞர்களே!
மாறாக, இப்படியும் வருணிக்கிறான் ஒருவன்,
"வாய்நாறும் ஊழல் மயிர்ச்சிக்கு நாறிடும் மையிடுங்கண்
பீ நாறும் அங்கம் பிணவெடி நாறும் பெருங்குழி வாய்ச்
சீ நாறும் யோனி அழல்நாறும் இந்திரியப் பேறு சிந்திப்
பாய்நாறும் மங்கையர்க் கோஇங்ஙனே மனம் பற்றியதே?"- பட்டினத்தார்-119,
சித்தர் பாடல்கள்: பதிப்பாசிரியர் டாக்டர் சா.மெய்யப்பன், மணிவாசகர் பதிப்பகம், 1993.
காமத்தை விதைப்பதில் சிற்பங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், நாவல்கள், திரைப்படங்கள் எதுவும் விதிவிலக்கல்ல.
ஊரான்
No comments:
Post a Comment