Sunday, February 27, 2011

சாமியார்கள் அத்துப் போனால் இந்து மதம் இத்துப் போகுமா?

ஆதிசங்கரன் முதல் நித்யானந்தா வரை இந்து மதத்தை தாங்கி நிற்க இம் மண்ணில் தோன்றிய அவதாரப் புருஷர்கள் ஏராளம். அத்வைதம் முதல் ஆத்ம ஞானம் வரை இவர்கள் போதிக்காத தத்துவங்களே கிடையாது. சிலர் தத்துவங்களை உபதேசிக்க மட்டுமே செய்தார்கள். ஆனால் இறந்து போன பிரேமானந்தா முதல் காஞ்சி சங்கரன், நித்தியானந்தா வரை பலர் நடைமுறையில் பல தத்துவங்களை சோதித்தறிந்தவர்கள். அதிலும் குறிப்பாக காமத்துப் பாலை முந்திரி, பாதாம் பருப்புகளை அரைத்துச் சேர்த்து சுண்டக் காய்ச்சி கரைத்துக் குடித்து கரை கண்டவர்கள்.

முற்றும் துரந்த இந்த முனிவர்களுக்கு உல்லாசமாய் உலவ ஆசிரமங்களும், உலவிய பின் ஓய்வெடுக்க ஏ.சி. அறைகளும், ஏ.சி.அறையின் குளிரை சமாளிக்க காமக் களியாட்டங்களும் கட்டாயம். இவற்றில் எது வேண்டுமானாலும் குறையலாம். ஆனால் இரவு நேர லீலைகள் மட்டும் கண்டிப்பாய் நடக்க வேண்டும்.

இந்திய ஜனாதிபதியைக்கூட தீவிரவாதிகள் எளிதில் நெருங்கிவிடுவார்கள். ஆனால் ஒசாமா பின்லேடனே நினைத்தாலும் இந்தச் சாமியார்களை நெருங்க முடியாது. பாதுகாப்பு வளையங்களைத் தாண்டுவது அவ்வளவு எளிதானதல்ல. அதையும் தாண்டி ஒருவன் நித்யானந்தா-இரஞ்சிதாவின் காமக் களியாட்டத்தைச் சுட்டிருக்கிறான் என்றால் அவன் பின் லேடனுக்கேத் தலைவனாகும் தகுதி படைத்தவன்.

போலிச் சாமியார்கள்தான் கேடானவர்கள். நல்ல சாமியார்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் என நீங்கள் முனுமுனுப்பது எனது காதுகளில் விழுகிறது. நேற்று வரை 'ஒரிஜினல்' என்று நம்பியவன்தானே மறுநாள் காலையிலேயே போலி என்று நாறுகிறான். 'ஒரிஜினல்' என்று நம்புவதற்கான உத்தரவாதத்தை யாராவது 'பாண்டு பேப்பரில்' எழுதிக் கொடுக்கத் தயாரா?

எப்வளவுதான் நாறினாலும் சாமியார்கள் செல்வாக்கோடு உலாவுவதற்கான பலம் எங்கிருந்து கிடைக்கிறது? நீண்ட நாட்களாக இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமல் நான் திணறிய போது நித்தியானந்தா சிக்கியதும் எனக்கு விடை கிடைத்து விட்டது. தமிழகத்தின் திருவண்ணாமலை,  வேலூர் மாவட்டங்களிலும், கர்நாடகாவின் மைசூரிலும் இவருக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதற்குக் காரணம் இவர் அகமுடைய முதலியார் சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான். இப்பகுதிகளில் அகமுடைய முதலியார்கள் அதிகமாக வசிப்பது நித்தியானந்தாவின் பலம்.

1980 களில் மேல் மருவத்தூர் 'அம்மா' பிரபலமானபோது இவரை தூக்கி நிறுத்தியவர்கள் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் அவரது சாதியைச் சேர்ந்த வன்னிய சமூகத்தினர்.

சைவ வேளாள முதலியார்கள் வேதாத்திரி மகரிஷியை தூக்கி நிறுத்தினார்கள். அவர் இறந்த பிறகு இவர்களது சாதிப் படிநிலையில் ஒரே 'குரூப்பில்' இருக்கும் நித்தியானந்தாவை ஆதரிக்கத் தொடங்கினார்கள். நித்தியானந்தாவும் அம்பலப்பட்டுப் போன பிறகு வேலூர் ஸ்ரீபுரம் சக்தி 'அம்மாவை' இப்போதைக்குப் பிடித்துக் கொண்டார்கள். எக்காரணத்தைக் கொண்டும் ஒரு முதலியார் பக்தனின் காணிக்கை தங்களது பரம எதிரிகளான வன்னியர்களின் மருவத்தூர் அம்மாவிடம் சென்று விடக்கூடாது.

மைசூரைப் பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கு மொழி பேசும் வைசியா பிரிவில் வரும் ஷெட்டி சாதியைச்  சேர்ந்த ஜக்கி வாசுதேவ், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் வெள்ளாளக் கவுண்டர்களின் ஆதர்ஷ சாமியாராக அவதாரம் எடுத்ததோடு, பிற இடைநிலைச் சாதி மக்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறார்.

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் கள்ளர் சாதி மக்களின் ஏகோபித்த சாமியாராக விளங்கிய அச்சாதியைச் சேர்ந்த பிரேமானந்தா மண்டையைப் போட்டுவிட்டார். இப்பொழுது அங்கே ஒரு 'வேக்கன்சி' ஏற்பட்டுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் முயற்சிக்கலாம்.

தென் மாவட்ட நாடார்களுக்கும், தேவர்களுக்கும் என அந்தந்த சாதிகளைச் சேர்ந்த சாமியார்கள் இருக்கக்கூடும். எனக்குத் தெரியவில்லை. ஆனால் பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்றே கருதுகிறேன். 

பார்ப்பனர்களுக்கு?... சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. நாறிப்போன சங்கராச்சாரி முதல் வாழும் கலை ஸ்ரீ.ஸ்ரீ. இரவிசங்கர் வரை பிரபலங்கள் ஏராளம் உண்டு. மற்ற சாதிக்காரர்களாவது பக்தி பெருக்கெடுக்கும் போது பிற சாதி சாமியாரர்களைக்கூட ஒருசிலர் ஏற்றிப் போற்றுவதுண்டு;  வணங்குவதுண்டு. ஆனால் பார்ப்பனர்கள் பிற சாதி சாமியார்கள் ஒருவரைக்கூட அங்கீகரித்ததில்லை. அங்கீகரிக்கவும் மாட்டார்கள்.

பாவம் தாழ்த்தப்பட்டவர்கள். பக்தியிருந்தும் தங்களுக்கென இதுவரை ஒரு சாமியைரைக்கூட உருவாக்க முடியவில்லை. கோயிலுக்கு நுழையவோ சாமியை வழிபடவோ உரிமை இல்லாத போது சாமியார்களை எங்கே உருவாக்கவது? இதுதான் சாதி இழிநிலைக்கு எடுப்பான ஆதாரம்.

சாமியார்களின் உயிரும் பலமும் சாதியில் ஒளிந்திருக்கிறதேயொழிய பக்தியில் அல்ல. தங்களது சாதிக்காரனின் பணம் பக்தியின் பேரால் மற்றொரு சாதி சாமியாரிடம் சென்றுவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரு சாதியினரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அதுவே சாமியார்களின் பலமாகவும் இருக்கிறது.

சாதி எங்கும் வியாபித்திருக்கிறது. இதுவே இந்து மதத்தின் வேராகவும் இருக்கிறது. வேருக்கு நீர் பாய்ச்சும் சாமியார்கள் இத்துப் போனால் இந்து மதம் அத்துப் போகுமே என்ற கவலை இந்து மதவாதிகளுக்கு. அதனால்தான் சாமியார்களுக்கு பாதிப்புகள் வரும் போதெல்லாம் அர்ஜீன் சம்பத்துக்கள் குரல் கொடுக்கிறார்கள்.

11 comments:

  1. All these guys are none other than F..king as. h.l.s.

    BUT you statement is wrong...

    கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் வெள்ளாளக் கவுண்டர்களின் ஆதர்ஷ சாமியாராக அச்சாதியைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் (கவுண்டர்) திகழ்கிறார்.

    The above statement is wrong...Form this we can understand when you get a knot you put make it ugly anthing....

    If you are good enough (in your words bond paper) do a complete research before your Statement. Otherwise you look like a dummy piece to comment anyone...

    ReplyDelete
    Replies
    1. ஜக்கியின் பூர்வீகம் சாதி குறித்து திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

      Delete
  2. சித்தூர் எஸ்.முருகேசன் அவர்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி!

    ReplyDelete
  3. tamilan அவர்களின் வருகைக்கும் இணைப்பு கொடுத்தமைக்கும் நன்றி!

    ReplyDelete
  4. Anonymous அவர்களுக்கு, கருத்துப் பகிர்வுக்கு முதலில் எனது நன்றி!

    எனக்குத் தெரிந்த, படித்த விவரங்களிலிருந்தே ஜக்கி வாசுதேவ் பற்றி எழுதியுள்ளேன். அது தவறு என்றால் உண்மையை தெளிவு படுத்துங்கள். சரியாக இருக்கும் பட்சத்தில் மாற்றிக் கொள்ளத் தயாராய் இருக்கிறேன்.

    குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த சாமான்ய மக்களை இழிவு படுத்துவது எனது நோக்கம் அல்ல. சாதிய பின்புலத்தில் சாமியார்கள் பெற்றுள்ள செல்வாக்கை வெளிக் கொணர்வதே எனது நோக்கம்.

    வலை உலகில் வலம் வருவது அவதூறுகளை அள்ளி வீசி நேரம் போக்குவதற்கு அல்ல. எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், புதியவற்றை கற்றுக் கொள்ளவுமே இங்கு கருத்துப் பரிமாற்றம் நடத்துகிறோம்.

    ReplyDelete
  5. You have analysed in a different angle. Good. A deep study will expose more truths. To some extent what you are saying is correct. The Rich People who are behind these Fakes belong to the same community. We must establish this in our
    journey against these fakes & beliefs

    ReplyDelete
  6. நான் சொல்ல வந்த சாரத்தை வெளிப்படுத்தியமைக்கு நன்றி இராமன் அவர்களே!விரிவானதொரு பரிசீலனைக்கு இக்கட்டுரை பயன்படுமேனேயானால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என நம்புகிறேன்

    ReplyDelete
  7. பங்காரு அடிகளார் பற்றிய தகவலும் ஆய்வுக்குரியது. காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பதுபோல், சேறு வாரிப் பூசுவது நல்லதல்ல. நீங்கள் படித்ததும், கேள்விப்பட்டதும், தெரிந்ததும் தவறு இல்லை என்பதை உறுதிப்படுத்தும்முன் எழுதவேண்டிய அவசரம் என்ன. அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிக்கவேண்டிய காரணம். யாரைச் சிறுமைப்படுத்துவதில் இந்த முனைப்பு. யோசித்தால் சிறுமைப் படுத்த முடியாது என்ற எண்ணமா. திருப்பராய்த்துறையின் சுவாமி சித்பவானந்தர், வெள்ளிமலையின் சுவாமி மதுரானந்தர், ஆனைகட்டியின் சுவாமி தயானந்தர்... போன்ற நல்லவர்களைப் பற்றி எழுத கை கூசுகிறதா. வக்ர மனத்தின் வெளிப்பாடாக அமைந்த கட்டுரை. நல்ல முன்னுதாரணங்களை ஏற்படுத்த அன்று.

    ReplyDelete
    Replies
    1. ”பங்காரு அடிகளார் பற்றிய தகவலும் ஆய்வுக்குரியது”. அப்படியானால் தங்களுக்கே ஐயம் இருக்கிறது. ஐயம் போக்கிக் கொள்ள ஆய்வு செய்யுங்கள்.

      சேற்றை வாரிப் பூசிக்கொண்ட பிறகு சேறு சேறாகத்தான் நல்ல கண் உள்ளவர்களுக்குத் தெரியும். அது சிலருக்கு சந்தனமாகத் தெரிந்தால் அதற்குக் காரணம் காமாலைக் கண் என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

      யாரையும் சிறுமைப் படுத்துவது எமது நோக்கம் அல்ல. சிறுமைப் பட்டுப் போனவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எழுதுகிறோம். முன்னுதாரணங்களைப் பற்றி அல்ல.

      Delete