ஒரு
ஏழை மகன் ஒரு பணக்காரப் பெண்ணை காதலித்தால் “சோத்துக்கே வழியில்லாதவனுக்கு பணக்காரப்
பொண்ணு கேக்குதா?” என ஏளனம் செய்து காதலை முறிப்பது பணக்காரனின் வர்க்க சிந்தனை. இங்கு
கொலை வெறி குறைவு. இது உலகம் முழுவதற்கும் பொருந்தும்.
ஆனால்
சாதி மாறிக் காதலித்தால், அதிலும் பையன் படிநிலையில் கீழான சாதியாக இருந்தால், அதிலும்
குறிப்பாக பையன் தீண்டத்தகாத சாதியாக இருந்தால் கொலையை மட்டுமே கையிலெடுப்பது சனாதன
பார்ப்பன இந்து ஆதிக்கச் சாதி மனப்பான்மை.
காதலில்
மட்டுமல்ல கோவில் வழிபாட்டு உரிமை, பொதுக்குழாய்-பொதுக்கிணறு-பொதுக்குளம் ஆகியவற்றில்
நீர் உரிமை, உள்ளிட்ட பல்வேறு உரிமைப் பிரச்சனைகளிலும் தீண்டத்தகாதவர்கள் மீது இந்தக்
கொலைவெறித் தாக்குதல் ஈவிரக்கமின்றி தொடுக்கப் படுகிறது. ஆதிகாலச் சமூக அமைப்பு தொடங்கி
இன்றைய நவீன சமூகும் வரை பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் தீண்டாமை மட்டும் விட்டகலாது
ஒரு பெருநோயாய் இந்தியச் சமூகத்தை பீடித்திருக்கிறது. இப்பெருநோயை ஒழித்துக் கட்ட புத்தர்
தொடங்கி மகாத்மா புலே – அம்பேத்கர் - பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் போராடிய
போதும் தீண்டாமை இன்னும் அகலவில்லை.
தீண்டாமை
ஒழிய வேண்டுமானால் சாதி ஒழிய வேண்டும். சாதி ஒழிய வேண்டுமானால் இந்து மதம் ஒழிய வேண்டும்.
இந்து மதம் ஒழிய வேண்டுமெனில் இந்திய சமூக அமைப்பையே மாற்றியாக வேண்டும். இத்தகைய சமூக
மாற்றத்திற்காகப் போராடும் எவரும் மகாத்மா புலே – அம்பேத்கர் – பெரியார் போன்றவர்களின்
கருத்துக்களை புறந்தள்ளிவிட முடியாது.
அந்த
வகையில் தீண்டாமைக்கு எதிராகவும், பார்ப்பன இந்து மதத்திற்கு எதிராகவும் ஓய்வின்றிப்
போராடிய அம்பேத்கர் அவர்களை நினைவுகூறும் வகையில் பெல் இராணிப்பேட்டையில் செயல்படும்
அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் 07.12.2018 அன்று மாலை அம்பேத்கர் அவர்களுக்கு
நினைவஞ்சலிக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தோழர்
துரை.பாலகிருட்டிணன் தலைமையேற்று கூட்டத்தை நெறிப்படுத்தினார். தோழர் செ.விநோதினி வரவேற்புரை
நிகழ்த்த, தோழர்கள் வெ.கோவிந்தசாமி, தோழர்.விமல்குமார், பெல் பிற்பட்டோர் நலச்சங்கத்
தலைவர் கருப்பசாமி, பெல் பட்டியலின/பழங்குடியன மக்கள் தொடர்பு அதிகாரி பெ.சிவப்பிரகாசம்
(AGM) ஆகியோர் அம்பேத்கர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். பெல் அதிகாரி ஜீதேந்திர
கன்வீர் (AGM) அவர்கள் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து கருத்துரை வழங்கினார்.
தோழர் கோ.இளங்கோவன் நன்றி உரை நிகழ்த்தினார். சாதி மதங்களைக் கடந்து பல்வேறு பிரிவு
மக்களும் திரளாகக் கலந்து கொண்டது இக்கூட்டத்தின் சிறப்பு.
06.12.2018 அன்று காலை பெல் வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தவிர பெல் நிர்வாகத் தரப்பிலும் மற்றும் பல்வேறு அமைப்பினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நினைவஞ்சலிக் கூட்டக் காட்சிகள்
|
அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் |
|
துரை பாலகிருட்டிணன் |
|
வினோதினி |
|
கோவிந்தசாமி |
|
மாலை அணிவித்தல்
|
|
ஜிதேந்திர கன்வீர்
|
|
கருப்பசாமி
|
|
சிவப்பிரகாசம்
|
|
விமல்குமார்
|
|
பார்வையாளர்கள்
|
|
பார்வையாளர்கள் |
|
இளங்கோவண் |
|
பதாகை |
தொடர்புடைய
பதிவுகள்:
No comments:
Post a Comment