Monday, August 14, 2023

வெட்டிப் பய, சண்டாளப் பாவி என ஒருவரை திட்டலாமா?

ஒரு வாட்ஸ்அப் குழுவில் சமீபத்தில் ஒரு காணொளியைக் கண்டேன். அதில் வெட்டி என்று சொல்லுக்கான அரியதொரு விளக்கத்தைக் கூறுகிறார் ஒருவர். இதைப் பார்த்த வெட்டி என்பதற்கு சரியான விளக்கம் தந்திருப்பதாக ஒருவர் பதில் எழுதுகிறார்.


அவர் கொடுத்த விளக்கம் எப்படித் தவறானது என்பது குறித்தும், வெட்டி என்ற சொல்லுக்கு சரியான பொருள் குறித்தும் அந்த வாட்ஸ்அப் குழுவில் நான் எழுதிய எனது கருத்துக்களை இங்கே உங்களோடு பகிர்கிறேன்.

*****
வெட்டி என்பதற்கு இவர் கொடுக்கின்ற விளக்கம் தவறானது. குளங்களை வெட்டியவர்கள் எல்லா சாதியினரும் அல்ல. மாறாக சேரியிலே வாழ்ந்த ஒரு பிரிவினர். அவர்கள்தான் குளங்களை வெட்டுவது மட்டுமல்லால் ஊரில் இருக்கிற எல்லா எடுபிடி வேலைகளையும் காசு வாங்காமல் வெறும் கஞ்சிக்காக இலவசமாக செய்தவர்கள். 

இன்று ஒரு வேலையை செய்துவிட்டு வெறுங்கையோடு வந்தால் என்ன மதிப்பு இருக்கும் வீட்டில்?  மக்கள் மொழியில் சொன்னால் வெட்டியான் வேலை என்பது தம்பிடிக்கு பிரயோஜனம் இல்லாத வேலை என்று பொருள். அதனால்தான் சும்மா இருப்பவர்களைப் பார்த்து வெட்டிப்பய என்று வசை பாடுகிறார்கள். எனவே, வெட்டி என்ற சொல்லைப் பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்டு சாதியினரை இழிவுபடுத்துகின்ற ஒரு சொல். தயவுசெய்து யாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்பதே எனது கருத்து.

*****

சவக்குழி தோண்டுபவரை / பிணத்தை எரிப்பவரை வெட்டியான் என்று அழைப்பார்கள். இவர்கள் பட்டியல் சாதிப் பிரிவைச் சேர்ந்த சேரி மக்கள்‌. சுருக்கமாகச் சொன்னால் இவர்கள் சுடு / இடுகாட்டைக் காப்பவர்கள். இவர்களை 
அந்தியாவசாயி என்கிறான் மனு.

சண்டாள சாதி ஆணுக்கும், நிஷாத ஜாதி பெண்ணுக்கும் அந்தியாவசாயி பிறக்கிறான். இவனுக்கு சண்டாளன் தொழிலை விட கெட்டதான சுடுகாட்டைக் காப்பது தொழில். (மனு: 10-39)

சூத்திர ஆணுக்கும் பிராமண பெண்ணுக்கும் பிறந்தவன்தான் சண்டாளன். ( மனு-10-44).

இன்று பறையர்கள் என்று அழைக்கப்படுபவர் கள்தான் சண்டாளர்கள் என்கிறது மனுதர்மம்.

பிராமண ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவன்தான் நிஷாதன். (மனு 10-8)

எனவே ஒருவரை வெட்டிப்பய என்றோ, சண்டாளப் பாவி என்றோ வைவதும் திட்டுவதும் சேரி மக்களை இழிவு படுத்துகின்ற சொற்களாகும். சட்டப்படியாகப் பார்த்தால் இச்சொற்களைப் பயன்படுத்துவோரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

பல்வேறு சாதிகளின் தோற்றம் குறித்து மனுதர்மத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. வேறு ஒரு சமயத்தில் அது குறித்துப் பார்க்கலாம்.

நன்றி

ஊரான்

3 comments:

  1. Arasu: ஹைகூ கவிதை போன்ற படைப்பு.

    ReplyDelete
  2. vaithi: வெட்டி என்ற சொல் தனித்திருந்தா இழிவில்லை .
    வார்த்தையா உபயோகிக்கும் போது வேறுபடுகிறது.

    வேண்டாததை வெட்டி விடு...
    மூட எண்ணத்தை வெட்டி விடு...

    வெட்ட வெட்ட துளிர்க்கும்...
    வெட்டிக்கிட்டு வா என்று சொன்னா , கட்டிக்கிட்டு வரனும்...
    வெட்டுக்கத்தி
    தலையை வெட்டு
    முடியை விட்டு
    நகத்தை வெட்டு

    ReplyDelete
    Replies
    1. உங்கள் புரிதலும் விளக்கமும் சரியானதுதான். ஏற்றுக்கொள்கிறேன். அந்த சொல் எந்த இடத்தில் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்துதான் நாம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி.

      Delete