Friday, September 1, 2017

நீட் தேர்வு: அனிதாவைக் கொன்ற குற்றவாளிகள்!

ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதாவைக் கொன்று விட்டார்கள்.

நீட் தேர்வை கட்டாயமாக்கி அனிதாவை தற்கொலைக்குத் தூண்டிய பிரதமர் உள்ளிட்ட காவிக்கூட்டம் முழுவதும் கொலைக் குற்றவாளிகளே! 

இந்தக் காவிக் குற்றவாளிகளின் குற்றச் செயலுக்கு உதவி செய்த உச்சிக்குடுமி மன்றமும் குற்றவாளியே!

காவிகளின் காலை நக்கிக் கொண்டு குற்றச் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எடப்பாடி, ஓ.பி.எஸ், உயர் கல்வி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்கள் உள்ளிட்ட ஒட்டுண்ணிக் கூட்டத்தைச் சேர்ந்த அனைவரும் குற்றவாளிகளே! 

ஜெயலலிதா என்கிற ஒரு கிரிமினல் குற்றவாளியை கொஞ்சமும் கூச்சமின்றி செத்த பிறகும் 'இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா' என கூப்பாடு போடும் ஒரு கூட்டத்திடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?

பல லட்சக் கணக்கில் தொண்டர்களைக் கொண்ட - அதுவும் சமூக நீதிக்கு பேர் போன தமிழக அரசியல் கட்சிகள் நீட்டுக்குப் பாடை கட்டத் தவறியது நமக்கெல்லாம் தலைகுனிவில்லையா?

காவிக்கூட்டததையும், காவிகளின் அடிவருடிகளான 'அம்மா' கூட்டத்தையும் தமிழகத்திலிருந்து கருவறுக்காமல் அனிதாக்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு ஒரே வழி தமிழகம் மீண்டும் மெரினாவாகவேண்டும்.

2 comments:

  1. காவிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? 2012-ம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு அடிகோலிய காங்கிரஸ் அரசையா? அதனுடன் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.கவையா? :-)

    ReplyDelete
    Replies
    1. காவிகள் என்று பாரதிய ஜனதாவைத்தான கூறுகிறேன். நீட்டை கட்டாயமாக்கி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியது யார் என்பதிலிருந்துதான் அனிதாவின் தற்கொலையை பரிசீலிக்க வேண்டும்.

      Delete