Monday, September 11, 2017

பார்ப்பனர்கள் சிறந்த நிர்வாகிகளா? – அம்பேத்கரின் அதிரடி கேள்வி!

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகப் பொதுமறையை ஒரு தமிழனால் படைக்க முடிந்தது. தமிழனின் பண்பாட்டை பறை சாற்றும் சங்க இலக்கியங்களை வடிக்க முடிந்தது. அதன் பிறகு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக சொல்லிக் கொள்ளும்படியான இலக்கியங்கள் தமிழனால் ஏன் படைக்க முடியவில்லை?

இடைப்பட்ட காலத்தில் குறிப்பாக ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் ஆட்சி காலத்தில், தமிழனை, கடவுளின் பித்தனாக்கிய பக்தி இலக்கியங்களும், இதிகாச புராணக் குப்பைகளுமே புகுத்தப்பட்டன. மக்களைப் பற்றி பாட்டெழுதியவர்கள் எல்லாம் மகான்களைப் பற்றி மட்டுமே எழுத பணிக்கப்பட்டனர்.

இத்தகைய பார்ப்பன பண்பாட்டுக்கு எதிராக குரல் எழுப்பிய; பார்ப்பனர்களின் ஆலோசனைகளையும் – வேதங்களையும் ஏற்க மறுத்த ஒரே காரணத்திற்காக அன்றைய ஆளும் தமிழ் மன்னர்கள் எல்லாம் சூத்திரர்களாக்கப்பட்டனர். மன்னர்களே சூத்திர நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு மக்களின் நிலை பற்றி சொல்லவா வேண்டும்?

இன்றைய எடப்பாடி அரசு போல அன்றும் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து தங்களது எடுபிடிகளின் ஆட்சியை நிறுவிக் கொண்டு, இன்று நீட் தேர்வை புகுத்தி சாமான்ய மக்களின் கல்வியை பறிப்பது போல அன்று சூத்திரர்கள் கல்வியே பயிலக்கூடாது என பார்ப்னர்கள் சட்டம் வகுத்தனர்.

சூத்திரன் கல்வி கற்றால் அவன் நாக்கை அறுத்தெறி; காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என சட்டம் இயற்றி அன்று நமது மூதாதையரின் கல்வி உரிமையைப் பறித்தனர். இன்று நீட் எனும் பார்ப்பன பயங்கரவாத ஆயுதத்தைக் கொண்டு அனிதாவின் கல்வி உரிமையை பறித்ததோடு அவரை கொன்றொழித்தனர். நீட்டுக்கு பாட்டை போடும் எடப்பாடிகள் நீடிக்கும் வரை இந்தப் படுகொலை அனிதாவோடு நிற்கப் போவதில்லை.

இன்று நீட்டுக்கு எதிராக போராடுவோரை தேசத்துரோகிகள் என் முத்திரை குத்துகின்றனர். அன்று பார்ப்பன மனு நீதிக்கு எதிராக போராடியோரை அசுரர்கள் என முத்திரை குத்தினர்.

காலங்கள்தான் உருண்டோடியிருக்கின்றன. ஆனால் தர்மம் என்னவோ மனு காலத்தில்தான் நிற்கின்றன.

ஆளும் தமிழ் மன்னர்கள் அன்று சூத்திரர்களாக்கப்பட்டதற்கும்; சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதற்குமான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா என்பது குறித்து அடுத்த தொடரில் பார்ப்போம்.

தொடரும் …..

தொடர்புடைய பதிவகள்:

இந்து மதக் கொடுங்கோண்மை: கவுரி லங்கேஷ் படுகொலை!

ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கானசட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக்கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*நமஸ்காரம் சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 2


*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

No comments:

Post a Comment