Friday, July 21, 2023

தண்ணீரின் காதல் கதை!

முகநூல் நண்பர் ஒருவரின் பதிவு ஒன்றில் நான் எழுதிய பின்னூட்டத்தை இங்கே தனிப் பதிவாக உங்களோடு பகிர்கிறேன்:

தண்ணீரின் காதல் கதை!

தனிமங்கள்னு (elements) சொல்ற ஆளுங்க பூரா ஒத்த பயலா இருந்தா பெரும்பாலும் எதுக்கும் பிரயோஜனப்பட மாட்டாங்க. எலக்ட்ரான்கிற (electron) காதல் அம்புகள் இந்த பயலுகள சுத்தி வட்டமடிச்சிட்டு இருப்பாங்க. மொதவட்டத்தில ரெண்டு, இரண்டாவது வட்டத்தில 8, மூணாவது வட்டத்தில் 16‌,,, என்கிற எண்ணிக்கையில இருந்தாதான் நிதானமா இருப்பாங்க. வெளிவட்டத்துல ஒன்னு ரெண்டு கொறஞ்சா பக்கத்தில யாராவது சுத்திட்டு இருந்தா லபக்குனு இழுத்துக்குவானுங்க. குறைவா இருக்கிறதுக்கு பேரு வேலன்ஸ் (valence electron) எலக்ட்ரான்னு சொல்லுவாங்க.

இந்த ஆக்சிஜன் பயலுக்கு இரண்டாவது வட்டத்தில் (this is the outer most orbit for oxygen element) ஆறு எலக்ட்ரான்கள்தான் உண்டு. அவனுக்கு மேலும் இரண்டு எலக்ட்ரான்கள் இருந்தால்தான் ஸ்டெடியா (stable) இருப்பான். நம்ம ஹைட்ரஜன் பொண்ணு இருக்கே அது ஒரே ஒரு எலக்ட்ரான வச்சுக்கிட்டு ஒத்தையா அலஞ்சுகிட்டு திரியும் (firt orbit) அதுக்கு யாராவது ஒருத்தன் கிடைச்சா போதும் ஸ்டெடியாயிடும்.

அதனாலதான் இந்த ஆக்சிஜன் பய இரண்டு ஹைட்ரஜன் பொண்ணுங்கள சேர்த்துக்கிட்டு தண்ணியா மாறி ஸ்டெடியாயிடுரான். இப்போ அவன் ஒத்த ஆள் இல்ல. ரெண்டு பொண்டாட்டிகாரன்.

ரெண்டு ஹைட்ரஜன் பொண்ணும் ஒரு ஆக்சிஜன் பயலும் இரண்டறக் கலந்து மூலக்கூறா (molecule) மாறி ஸ்டெடியாயிடுறாங்க. பிறகுதான் அவங்கள நாம தண்ணீர்னு அழைக்கிறோம்.

நீரின்றி அமையாது உலகு என்றான். 
ஆனால், காதல் இன்றி அமையாது நீரன்றோ!

எல்லாம் பாலிடெக்னிக்ல படிச்சது. இப்படி ஏராளமான காதல் கதைகள் உண்டு ப்ரோ.

ஊரான்

1 comment:

  1. மகேஷ்வரி சீனிவாசன்: Vera level pa. இப்படி கூட chemistry a படிக்கலாமா?

    ReplyDelete