Monday, July 24, 2023

குடிப்பவனும் திருந்த மாட்டான்! கொடுப்பவனும் மாற மாட்டான்!

காலை வேளை, 
ஜூலையிலும்
மோடம் பிடித்தது போல் 
சாரல் மழை.
காட்டோர கூட்ரோடு
பகலில் 
பயணிகளின் நிழற்குடை,
இரவில் 
குடிகாரர்களின் வாழ்விடம். 


பேருந்துக்காகக் காத்திருக்கும் 
பள்ளி மாணவர்களின்
கனவுகளை சிதைக்கும்
காலி பாட்டில்கள்!

குடிப்பவனும் திருந்த மாட்டான்
கொடுப்பவனும் மாற மாட்டான்.
வெஞ்சீற்றத்துடன்
ஊர் நோக்கிப் பயணிக்கிறேன்.

ஊரான்

3 comments:

  1. ரவிக்குமார் பTuesday, July 25, 2023 at 8:58:00 PM PDT

    பதிவில் சினம் பொதிந்துள்ளது.

    நம் ஊர் வார்த்தைகள் மோடம், கூட்ரோடு 👌👌

    வாசஸ்தலம் என்ற வடமொழிச் சொல்லை வாழ்விடம் எனப் பயன் படுத்தி இருக்கலாம்.

    வெஞ்சீற்றம் எனும் ஒரு வார்த்தை பாடலின் மொத்த உணர்வை உள்ளடக்கி உள்ளது.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா, வாழ்விடம் என மாற்றி விட்டேன்.

      Delete
  2. மகேஷ்வரி சீனிவாசன்: நானும் பல முறை மனம் வருந்திய காட்சி அது

    ReplyDelete