வருமான வரி கட்டுகின்ற அளவுக்கு எனக்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்யச் சொல்லி அவர்கள் தொடர்ந்து அறிவிப்பு அனுப்புகிறார்கள். என்ன செய்ய?
எனது வங்கிக் கணக்கு விவரங்கள், தொலைபேசி எண் மற்றும் ஓய்வூதியம், நிரந்தர வைப்பு நிதி வட்டி வருவாய் உள்ளிட்ட அனைத்தும் PAN அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்துப் பார்த்தாலே எனது வருவாய் என்ன என்பது தெரியுமே?
எல்லா வகையான வருவாயையும் வெளிப்படையாகக் காண்பிப்பவர்கள் மிகச் சொர்ப்பமே. வருவாயை மறைத்து பொய் கணக்குக் காட்டுவதற்கென்றே தனி படிப்பு வைத்திருப்பது முதலாளித்துவத்தின் 'சிறப்பு'.
ஒருவரின் அனைத்து வகையான வருவாய்களையும் கண்டுபிடித்து, கணக்கிட்டு வரியை வசூல் செய்ய வேண்டியது அரசின் கடமையல்லவா?
அறிவாளிகள் காய்க்கும் மரங்களைத்தான் உலுக்குவார்கள். ஆனால் இங்கோ, காய்ந்த மரங்களை உலுக்கிக் கொண்டிருக்கிறார்கள் சரகுகளுக்காக! நிறுவன ஓய்வூதியம் மற்றும் சேமநல நிதி ஓய்வூதியம் என இரண்டையும் சேர்த்து 'ஐயாயா...யிரம்' ஓய்வூதியம் பெறுபவனிடம் என்ன இருக்கும்?
அப்படி இருக்க, குற்றவாளிக்கு அழைப்பாணை அனுப்புவது போல எதற்குத் தொடர்ந்து எனக்கு அறிவிப்பு அனுப்புகிறார்கள்? எதைத் தட்டினாலும் விவரங்களைக் கொட்டும் இன்றைய நவீன தொழில்நுட்பக் காலத்தில் நாக்கு வழிக்கவா கணினி அறிவியல்? பாவம் சுந்தர் பிச்சைகள்?
ஊரான்
தானியிங்கி தகவல் அனுப்பும் செய்திகள். தொடர்ந்து வருவதால் எரிச்சலாகதான் இருக்கும். என்ன செய்ய நீங்கள் கேட்டது சரிதான், நவீன தொழில்நுட்பக் காலத்தில் நாக்கு வழிக்கவா கணினி அறிவியல்?
ReplyDeleteநீங்கள் திட்ட வேண்டியது இந்தியா வருவாய் துறையை மற்றும் அதன் அமைச்சராக இருக்கும் ஊறுகாய் மாமி நிர்மலாவை .
ReplyDeleteசுந்தர் பிச்சைக்கும் உங்கள் ஈமைலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
ஆ.சுப்பிரமணி:தங்களது கருத்து / தகவல் உண்மையானது, சரியான மற்றும் நேர்பட உள்ளது. தாங்கள் கூறுவது போல் வரி ஏய்ப்பவர்கள் ஏராளம்.இதனை வருவாய் துறை கண்டும் காணாது போல் உள்ளது. ஆ சு (எ) ஆ. சுப்பிரமணி / எழில் நகர்
ReplyDelete