வேதங்களும் சாஸ்திரங்களும் தாங்கள் பிழைப்பதற்காக 'நூலார்' உருவாக்கியவை என்கிறார் அகத்தியர் எனும் சித்தர். நம்மை ஏய்க்க புனை நூல்களை ஆக்கியதனலோ அல்லது தங்களை உயர்ந்தவர்கள் என காட்டிக்கொள்வதற்காக (பூ)நூல் அணிவதாலோ என்னவோ பார்ப்பனர்கள் நூலாரென்றே அன்றும் இன்றும் விளிக்கப்படுகின்றனர்.
ஞானம்-1
பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே
பலவேத சாத்திரமும் பாரு பாரு
ஏச்சலில்லா தவர்பிழைக்கச் செய்த மார்க்கம்
என்மக்கா ளெண்ணி யெண்ணிப் பாரீர் நீரே. (2)
பாரப்பா நாலுவேதம் நாலும் பாரு
பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி
வீரப்பா ஒன்றொன்றுக்கு ஒன்றை மாறி
வீணிலே யவர் பிழைக்கச் செய்த மார்க்கம்
தேரப்பா தெருத்தெருவே புலம்பு வார்கள்
தெய்வநிலை ஒருவருமே காணார் காணார்!
ஆரப்பா நிலைநிற்கப் போறா ரையோ ஆச்சரியங் கோடியிலே யொருவன் தானே. (3)
மூச்சொடுங்கிப் போனவிடம் ஆறுங் காணார்
மோட்சத்தின் நரகாதி யிருப்புங் காணார்
வாச்சென்றே வந்தவழி யேற்றங் காணார்
வளிமாறி நிற்குமணி வழியுங் காணார்
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய்ப் பாரு
வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே
ஆச்சப்பா கருவுதனில் அமைத்தாற் போலாம்
அவனுக்கே தெரியுமல்லா லறிவாய்ப் பாரே. (7)
ஞானம்-4
தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளே
தாயான பூரணத்தை யறிந்த பின்பு
தேனென்ற அமுதமதைப் பானஞ் செய்து
தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்
ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கே ஒருநான்கு வேதமென்றும் நூலா றென்றும்
நாட்டினா ருலகத் தோர் பிழைக்கத்தானே. (2)
பிழைப்பதற்கு நூல் பலவுஞ் சொல்லா விட்டால்
பூரணத்தை யறியாமலிறப்பா ரென்றும் உழைப்பதற்கு நூல்கட்டிப் போடா விட்டால்
உலகத்திற் புத்தி கெட்டேயலைவாரென்றும்
தழைப்பதற்குச் சாதி யென்றும் விந்துவென்றும்
தந்தைதாய் பிள்ளையென்றும் பாரியென்றும்
உழைப்பதற்குச் சொன்னதல்லாற் கதிவே றில்லை
உத்தமனே யறிந்தோர்கள் பாடினாரே. (4)
பாடினா ரிப்படியே சொல்லா விட்டால்
பரிபாடை யறியார்கள் உலக மூடர்
சாடுவார் சிலபேர்கள் பலநூல் பார்த்துத்
தலைமறந்து படுகுழியில் விழுவார் சாவார்
வாடுவார் நாமமென்றும் ரூபமென்றும்
வையகத்திற் கற்செம்பைத் தெய்வமென்றும்
நாடுவார் பூரணத்தை யறியார் மூடர்
நாய்போலே குரைத்தல்லோ வொழிவார் காணே. (5)
அகத்தியர்
பதினெண் சித்தர்களில் ஒருவர்
தொடரும்
ஊரான்
.jpeg)
No comments:
Post a Comment