கல்லில் என்ன இருக்கிறது? இயற்கையாய் இருந்தால் அது பாறை. செதுக்கினால் அதுவே சிலை. அதைத்தாண்டி அதில் ஒரு வெங்காயமும் இல்லை. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண் செதுக்கிய சிலைகூட அல்ல; அது செங்குத்தாய் நிற்கும் ஒரு வெற்றுக்கல். இதற்கு தீபம் ஏற்றச் சொல்லி கலவரத்திற்கு தூபம் போடுகிறார் ஒரு நீதிபதி. தமிழ்நாடு காவல்துறை இருக்கும்பொழுது, அதற்கு மத்திய காவல்படை, மனுதாரருக்கு பாதுகாப்புத்தர வேண்டும் என்கிறார். இது தீபத்தூண் அல்ல அது ஒரு எல்லைக் கல் என்கின்றனர் பிறர்.
“நட்டகல்லைத் தெய்வம்என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்! …” (494)
என கல்லை வணங்குவோரை எள்ளி நகையாடுவதோடு,.
“ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர்…” (424)
“..செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர் ..” (35)
“…பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர்…” (235)
என சிவவாக்கியர் கல் வழிபாட்டைச் சாடிச் சீறுவதோடு,
“இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான் …” (37)
“…எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?...” (222)
“…கோயில்பள்ளி ஏதடா? குறித்து நின்றது ஏதுடா?
வாயினால் தொழுதுநின்ற மந்திரங்கள் ஏதடா?
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே!” (184)
அதாவது, புறச் சடங்குகளை விட, அறிவை வளர்க்கும் பள்ளியில் உண்மை பக்தியுடன் ஈடுபடும்போது, இறைவனின் இருப்பை தன் உடலிலேயே உணர முடியும் என்பதை இந்தப் பாடலில் சிவவாக்கியர் வலியுறுத்துகிறார்.
“…சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ…” (13),
“ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும்
பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம் ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே (463)
“..ஓதுகின்ற வேதம்எச்சில், உள்ளமந்திரங்கள் எச்சில்…” (41)
“…நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?...” (140)
“புத்தகங் களைச்சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்!” (472)
“பொத்தகத்தை மெத்தவைத்துப் போதமோதும் பொய்யரே,” (248)
“பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூலி உடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?” (192)
என வேதங்களையும் மந்திரங்களையும் எதிர்த்துக் கேள்வி கேட்கிறார் சிவவாக்கியர் எனும் சித்தர்.
வேதங்கள், ஆகமங்கள், மந்திரங்கள், கோவில்கள், உருவ வழிபாடுகள் இவை இறைவனை அடைவதற்கு அல்ல, மாறாக வேதியர்கள் தங்கள் பிழைப்புக்காக உருவாக்கிக் கொண்ட ஏற்பாடுகள் என்பதை வால்மீகர் எனும் சித்தர்
சொல்வது போல,
தொடுத்தார்க ளரவர்கள் பிழைக்கத் தானே". (8 - சூத்திர ஞானம்), என்பதை நாம் புரிந்து கொண்டு,
இறை நம்பிக்கை உள்ளவர்கள் உள்ளத்தில் மட்டும் இறைவனை நினைவுகூர்வதோடு நிறுத்திக்கொண்டால், சனாதனம் சவக்குழிக்கு செல்வது உறுதி.
சித்தர்கள் எனும் சம்மட்டியைக் கையில் எடுப்போம்! சனாதனத்தை அடித்து நொறுக்குவோம்!
திருப்பரங்குன்றம் உணர்த்தும் பாடம் இதுதான்!
ஊரான்
.jpeg)
No comments:
Post a Comment