Showing posts with label குலதெய்வம் முத்தாலம்மன் ஜெயலலிதா அதிமுக திருவண்ணாமலை கப்பலூர். Show all posts
Showing posts with label குலதெய்வம் முத்தாலம்மன் ஜெயலலிதா அதிமுக திருவண்ணாமலை கப்பலூர். Show all posts

Thursday, 27 November 2025

முதன்முறையாகக் குலதெய்வக் கோவிலை நோக்கி…

முதன்முறையாகக் குலதெய்வக் கோவிலை நோக்கி…
வணங்க அல்ல, வாழ்த்துக் கூற..!


எமக்கான குலதெய்வம் முத்தாலம்மன் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்தக் குலதெய்வத்திற்கு கோவில் ஒன்று உண்டென்பதை எமது தற்போதைய தலைமுறைதான் கண்டெடுத்துள்ளது. அங்கு நடைபெற்ற உறவினரின் மணவிழாவில் கலந்து கொள்ளவே நான் காப்பலூர் சென்றேன்.

இந்த முத்தாலம்மன், ஒரு சாதிக்கு மட்டுமல்ல வேறு சில சாதிகளுக்கும் குல தெய்வமாகக் கருதப்படுகிறாள். தாய்வழிச் சமூக காலத்தில் மக்களைக் காத்தத் தலைவியைத்தான் இன்றுவரை குலதெய்வமாக தமிழ்நாட்டில் பலரும் வணங்கி வருகிறார்கள். 


சனாதனிகளால் மக்களிடைய புகுத்தப்பட்டிருக்கும் ஆரியக் கற்பனைக் கடவுளர்களை அப்புறப்படுத்தி, மக்களைக் காத்த மூதாதையர்களை, குல தெய்வங்களாக வணங்குவதில், வணங்குவது என்று சொல்வதைவிட மரியாதை செய்வதில் குறையொன்றுமில்லை என்றே நான் கருதுகிறேன்.

ஊழல் ராணிகளையெல்லாம் 'அம்மா'வென அடிமைகள் மண்டியிட்டு தாள் தொழும்பொழுது, நமது மரபுவழி வீரமங்கைகளை வணங்குவதில், மரியாதை செய்வதில் தவறொன்றுமில்லையே?

ஆனால், அவள் அள்ளிக் கொடுப்பாள், வேண்டுதலை நிறைவேற்றுவாள் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கையே; மாறாக அவள் வரலாறு தெரிந்திருந்தால், அந்த வரலாற்றுச் சுவடுகள் நமக்கு உத்வேகமூட்டக் கூடியதாக இருக்கக்கூடும் என்பதால் நமது சமகாலத் தலைவர்களுக்கு செலுத்தும் மரியாதையைப் போல, குலதெய்வமாகக் கருதப்படும் நம் மூதாதர்களுக்கும் மரியாதை செலுத்தலாம். 

நேற்றுவரை, நம் மூதாதையர்கள்தான் கைநாட்டுகளாச்சே; அதனால்தானே நமது மூளையில் ஏற்றப்பட வேண்டிய நம் மூதாதையர்களின் வரலாறுகளுக்குப் பதிலாக, கற்பனைப் புனைச்சுருட்டுகளும், ஆபாசங்களும் நிறைந்த சிவன், விநாயகன், ராமன் போன்ற ஆரிய சனாதனக் 'கடவுளர்களின்' கதைகள் புகுத்தப்பட்டுள்ளன. 

ஆரியக் கடவுள்களை அப்புறப்படுத்தி, தமிழ் மக்களின் குலதெய்வங்களின் வரலாறுகளை கண்டெடுத்து, நம் மரபை மீட்டெடுப்பதும் சனாதனத்துக்கு எதிரானப் போராட்டத்தின் ஓர் அங்கமே!

ஊரான்
27.11.2025
வியாழன்