வாள் எடுத்து வீசுவதில் சூராதிசூரன். தோள்களைக் கொண்டு எதிரிகளைத் தூக்கி எறிவதில் இவருக்கு இணை யாரும் இல்லை. 'ஏ.கே.பார்ட்டி செவன்களும்', ஏவுகனைகளும் சரமாரியாய் குண்டு மழை பொழிந்தாலும் கையடக்க 'ரிவால்வரிலேயே' எதிரிகளை எமலோகம் அனுப்பவதில் இவர் ஒரு 'ரிவால்வர் ரீட்டா'. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை இவர் பந்தாடும் போது இவரது படையணிகள் வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும். இவர் ஒருவரே முடிப்பார். 'கேப்டன்' ஆயிற்றே.
அம்மாவும் அய்யனும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் எதிர் வரும் யுத்தத்தில் குறுக்கே நுழைந்து எதிரிகள் இருவரையும் கோடரியால் போட்டுத்தள்ள இது ஒன்றும் கோடம்பாக்க 'ரிகர்சல்கள்' அல்லவே. இந்த யுத்தத்திற்கு படையணிகள் இல்லாமல் பப்பு எதுவும் வேகாது. ஏற்கனவே நடந்த யுத்தங்களில் இருக்கின்ற துண்டையும் தொலைத்து விட்டு கோவணத்தோடு நிற்கும் அல்லக்கைகைள் இம்முறை தனித்து நின்றால் அம்மனமாவது அல்லக்கைகள் மட்டமல்ல 'கேப்டனுக்கே' கோவணம் கூட மிஞ்சாது.
ஏற்கனவே தனியாக வாள்வீசி, கோவணமும் பறிபோய், ஒட்டு (இரட்டை) இலையால் மானம் காத்து, இலை விலாகாமல் இருக்க இன்று 'சைலன்ட்டாய்' இருக்கும் வைகோ கற்ற பாடம் பண்ருட்டிக்குத் தெரியாதா என்ன? பக்குவமாய் எடுத்துச் சொல்ல 'கேப்டனும் கேடட்' ஆனார். அம்மா தலைமையில் கண்டபடி வாள் எடுத்து வீச முடியாதுதான். என்ன செய்ய?
இது 'டி-புரமோஷன்தானே'.வேலை ஒன்றும் போய்விடவில்லையே! யுத்தத்தில் அம்மா வென்று, அல்லக்கைகள் அள்ள வாய்ப்பளித்தால் 'ரிவோக்' ஆகாமலா போகும். அம்மாவின் ஆணையின் கீழ் இப்போதைக்கு 'கேடட்டாய்' இருப்பதே மேல்.
அம்மா இருக்க ஆண்டவன் எதற்கு?
அம்மா இருக்க ஆண்டவன் எதற்கு?
என்ன சுருக்கமாக முடித்து விட்டீங்க?
ReplyDeleteஇதுவே போதும் என்று நினைத்தேன். ஏற்கனவே வினவில் விரிவா எழுதிட்டாங்களே!
ReplyDeleteவெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல்!
http://www.vinavu.com/2011/01/12/vijayakanth/
நன்றி!
அப்படிப் போடு ......
ReplyDeleteஅள்ளிக் கொடுத்த வள்ளல் ஜெயலலிதா.
thevarsangam.blogspot
yenga 2006 la elloraiyum kenchi koothadi,,,captainukku ottu potta nadikka vara mattrnnu viruyhasalathil jeyikka vachom....maggal enna muttalgala.
ReplyDelete