Showing posts with label கேப்டன். Show all posts
Showing posts with label கேப்டன். Show all posts

Monday, 8 February 2016

சீக்காளியும் லேகியக்காரனும்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. திராவிடம் - தமிழியம் - தேசியம் - சாதியம் என வித விதமான லேகியங்களை கிண்டத் தொடங்கிவிட்டனர். 

இலையில் மை தடவி மயக்கும் காரிகை ஒருத்தி 'என் பச்சிலை லேகியத்துக்கு ஈடு இணை ஏது?' என எக்காளத்துடன் இருமாந்து இருக்கிறாள். இவள் மென்று துப்பும் எச்சத்தைக் கவ்வ சிலர் நாய் போல காத்துக் கிடக்கின்றனர்.

ஏற்கனவே லேகியத்தைக் கிண்டி கண்ணாடிக்  குடுவையில் போட்டு வெயிலில் வைத்து 'லேகியம் கைகூடுமா!' என சூரியனையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் ஒரு இளம் காளை.

இவர்கள் இருவரும் மொத்த வியாபாரிகள் என்பதால் தனியாக கடைவிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். 

அவர்களில்...

மஞ்சள் சட்டைக்காரன் தனியாக 'மாங்கனி' லேகியம் கிண்ட முயற்சிக்கிறான். ஆளாளுக்கு கூவினால் கூட்டம் கலைந்து விடுமோ என இவன் எண்ணினானோ என்னவோ ஒருவனை மட்டுமே லேகியம் விற்க நியமித்துள்ளான். இவன் கிண்டும் லேகியத்தை இவன் வீட்டில் உள்ளவனே வாங்குவானா என்பதுகூட தெரியாமலேயே இவன் கடைவிரித்திருக்கிறான் பாவம்!

மோடி மஸ்தான் வித்தை எல்லாம் இங்கே எடுபடாது என உணர்ந்த காவி வேட்டிக்காரன், 'கேனவாயன் எவனாவது கிடைக்கமாட்டானா!' என அலைந்து கொண்டிருக்கிறான். எவனும் கிடைக்கவில்லை எனில் இவன் முதலுக்கு மோசம்தான். 


நீலச்சட்டையும்,  சிவப்புச் சட்டைகளும், பட்டா பட்டியோடு சேர்ந்து ஊர் ஊராய் லேகியம் விற்கத் தொடங்கி விட்டனர். சீக்காளிகள் பெருத்த நாடல்லவா இது! லேகியம் என்றால் கூட்டம் கூடத்தானே செய்யும். ஆனால் வேடிக்கை பார்ப்பவன் எல்லாம் லேகியம் வாங்குவானா என்பதைக்கூட அறியாமலேயே இப்பொழுதே கல்லாப் பெட்டி நிறைந்து விட்டதாக எண்ணி குதூகலிக்கத் தொடங்கிட்டனர் இவர்கள்.

போன முறை காரிகையோடு சேர்ந்து லேகியம் விற்றதில் கேப்டனுக்கு கொஞ்சம் சில்லரை சேர்ந்தது. சில சேல்ஸ்மேன்கள் கல்லாப்பெட்டியை லவட்டிக் கொண்டு இவரை விட்டு ஆத்தா வீட்டுக்கே ஓட்டம் பிடித்ததால் இம்முறை கடைவிரிப்பது பற்றி சேல்ஸ்மேன்களோடு இன்னமும் ஆலோசித்து வருகிறார். 

அகில இந்திய அளவில் லேகியம் விற்பவர்களுக்கு இங்கே காலனாகூட பேறாது என்பதால் ஏதாவது ஒரு கடையில் லேகியம் மடிக்கவாவது வாய்ப்பு கிடைக்குமா என 'கை' ஏந்தி நிற்கின்றனர்.

முதல் போட வாய்ப்பில்லாத பலர் சில்லரை விற்பனைக்காக முண்டியடிக்கின்றனர். 

லேகியங்களுக்கான லேபில்கள் பல வண்ணங்களில் தயாராகிவிட்டன. 

சந்துக்கு சந்து - தெருவுக்கு தெரு - ஊருக்கு ஊரு என முச்சந்திகளில் லேகியக்காரர்கள் கடைவிரிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த லேகியக் கடைகள் திறந்திருக்கும் என்பதால் முச்சந்திகளில் கூட்டம் அலைமோதுகிறது. 

ஆசை காட்டியும், அச்சமூட்டியும் எப்படியாவது லேகியத்தை நம் தலையில் கட்டுவதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். எச்சரிக்கை!

சீக்காளிகள் இருக்கும் வரை லேகியக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான்.

ஊரான்

தொடர்படைய பதிவுகள்:

டம்மி பீசு!
தேர்தல் களம்-4: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-3: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-2: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தமிழகமே திருமங்கலமாக மாறுமா?
சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?
கேப்டன் கேடட் ஆன கதை!
"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
யாருக்கும் வெட்கமில்லை!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

Thursday, 13 February 2014

சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?

16 - வது மக்களவைத் தேர்தல் திருவிழா நெருங்குகிறது.

“வாங்க சார்! வாங்க!

ஒண்ணு வெச்சா பத்து!!

பத்து வெச்சா நூறு!!!

வாங்க சார்! வாங்க!!!!”

என கூவிக் கொண்டிருக்கின்றன பரிவாரங்கள்.

‘இளம் தாமரை’ என திருச்சியில் கடை விரித்தார்கள். ‘கடல் தாமரை’ என ராமேஸ்வரத்தில் கடை போட்டார்கள். வண்டலூரிலும் டேரா அடித்தார்கள். சக்கரத்தைச் சுழற்றிவிட்டு எவனாவது காசு வைப்பானா என கடை விரித்துக் காத்துக்கிடக்கின்றனர்.
 
சாதி வெறி முகத்தில் வழியும் ஈஸ்வரன்கள், சில்லரை பொறுக்குவதற்காகவே தோளில் தொங்கும் துண்டை தரையில் விரிக்கும் கலிங்கப்பட்டி காளைகள், புறம்போக்கிலேயே புதிய நீதி கண்ட நீதியரசர்கள். கேடிக்கு கார் ஓட்டும் கோடி வேந்தர்கள் என ஒரு சில சில்லரைகள் மட்டுமே கடை பக்கம் சென்றுள்ளனர். காடுவெட்டி  தைலாபுர தடியன்கள்கூட பரிவாரக்கடை ஓனர் எடுப்பாய் இருக்கிறான் என்று சொல்கிறார்களே ஒழிய இன்னமும் கடை அருகில் செல்லவில்லை. இவர்கள் வைக்கும் சில்லரைக் காசு மொத்தத்தையும் சேர்த்தால்கூட கல்லா கட்டா முடியாது என்பதால் கேப்டன் காதில் விழுவதற்காக உரக்க உரக்க கூவுகின்றன பரிவாரங்கள்.


சாதாரணக் கடைக்காரன் கூவுவதைப் போல கூவினால் கடை பக்கம் பசை உள்ளவர்கள் வரமாட்டார்கள் என்பதற்காக கூவுவதெற்கென்றே தனியாக ஒரு ஆளையே நியமித்துள்ளனர். அவன் அடுக்கு மொழியில் அள்ளித் தெளிக்கும் புள்ளிவிரக் கணக்குகள் பேரருவியாய் கொட்டுவதைப் பார்த்தாலே ஒரு முறை காசு வைத்துப் பார்க்கலாமே என எண்ணத் தோன்றும். அவன் கூவுவதில்தான் எத்தனை ஒரு நேர்த்தி. பரிவாரக்கடையில் போணி மட்டும் சிறப்பாக நடந்து விட்டால் அருவிக்காரன் காட்டில் பனியாரத்துக்குப் பஞ்சம் இருக்காது.
 
“தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கோபாதாபங்களை வெளிக்காட்டக்கூடிய யதார்த்தமான மனிதர். மற்ற அரசியல்வாதிகளைப் போல அவருக்கு நடிக்கத் தெரியாது” என காமெடி நடிகன் ஆசை காட்டுகிறான்.
 
“பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க உறுதியாக இணையும்” என தே.மு.தி.க நிச்சயம் எட்டிப்பார்க்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார் பொன்னார்.
 
”தி.மு.க கூட்டணியில் இணைவதே தே.மு.தி.க வுக்கு நல்லது” என அருள் வாக்கு கொடுக்கிறார் திருமா. “காங்கிரசுக்கு நெருக்கமான கட்சி தே.மு.தி.க”  என ஆசை காட்டுகிறார் ஞானதேசிகன். தங்களது கடை பக்கம் கேப்டனை ஈர்க்க மற்ற கடைகாரர்கள் கொடுக்கும் வரமும் கேப்டன் காதில் விழாமலா போகும்.
 
கேப்டன் சிக்கினால் கொத்தாக அள்ளிவிடலாம் என நாக்கில் ஜொள்ளு ஒழுக கூவி வருகின்றனர். ஆனால் கேப்டனோ  திருவிழாவில் போடப்பட்டுள்ள கடைகள் அனைத்தையும் பார்த்து விட்டுத்தான்   எந்தக் கடைக்குச் செல்வது என்பதை முடிவு செய்ய முடியும் என்பது போல “கூட்டணி விசயத்தில் அவசரப்பட மாட்டேன்” என பேசிக் கொண்டே பரிவாரக் கடையை எட்டிக்கூட பார்க்காமல் மற்ற கடைகளை நோட்டமிட செல்வதைப் பார்த்து இப்போது பரிவாரக் கடைக்காரன் உச்சஸ்தாயில் கத்த ஆரம்பித்து விட்டான்.
 
ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்திவிட்டு இப்போது டெல்லிக்கு படை எடுப்பதால் தே.மு.தி.க கட்சிக்கு என்ன கொள்கை என்பது அந்தக் கட்சித் தலைவருக்கே தெரியாது என கேப்டன் மீதே மண்ணை வாரி தூற்றுகிறான் பரிவாரக் கடைக்காரன். “தி.மு.க வுடன் இணைந்தால் தே.மு.தி.க காணாமல் போய்விடும்” என பைந்தமிழில் சாமியாகிறான்.
 
கலர் கலராய் பலர் கடை விரித்துள்ளனர். இதில் தங்களது கடை மட்டும் தனியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக இவர்கள் கடையில் எல்லாமுமே காவி மயம்தான். கோடையின் தாக்கம் இப்போதே தெரியத் தொடங்கி விட்டதால் இவர்களின் காவிகூட தற்போது சற்றே வெளுக்கத் தொடங்கிவிட்டது. போதாக் குறைக்கு ஆம் ஆத்மிகாரன் வேறு இந்தியா முழுக்க கடை போடப் போவதாக மிரட்டுகிறான். கூட்டுறவு கடை போட முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் மூன்றாம் அணியினர். இதுவெல்லாம் நடக்கும் பட்சத்தில் கேப்டனுக்கு இட்ட சாபம் பலிக்கிறதோ இல்லையோ,  முழுக் கோடையில் பரிவாரங்களின் காவி வெளுக்காமல் இருந்தால் சரி! கல்லா கட்டவில்லை என்றாலும் கடையாவது மிஞ்சும். 
 
தொடர்புடைய பதிவுகள்:
 
 

Sunday, 6 March 2011

கேப்டன் கேடட் ஆன கதை!

வாள் எடுத்து வீசுவதில் சூராதிசூரன். தோள்களைக் கொண்டு எதிரிகளைத் தூக்கி எறிவதில் இவருக்கு இணை யாரும் இல்லை. 'ஏ.கே.பார்ட்டி செவன்களும்', ஏவுகனைகளும் சரமாரியாய் குண்டு மழை பொழிந்தாலும் கையடக்க 'ரிவால்வரிலேயே' எதிரிகளை எமலோகம் அனுப்பவதில் இவர் ஒரு 'ரிவால்வர் ரீட்டா'. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை இவர் பந்தாடும் போது இவரது படையணிகள் வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும். இவர் ஒருவரே முடிப்பார். 'கேப்டன்' ஆயிற்றே.

அம்மாவும் அய்யனும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் எதிர் வரும் யுத்தத்தில்  குறுக்கே நுழைந்து எதிரிகள் இருவரையும் கோடரியால் போட்டுத்தள்ள இது ஒன்றும் கோடம்பாக்க 'ரிகர்சல்கள்' அல்லவே. இந்த யுத்தத்திற்கு படையணிகள் இல்லாமல் பப்பு எதுவும் வேகாது. ஏற்கனவே நடந்த யுத்தங்களில் இருக்கின்ற துண்டையும் தொலைத்து விட்டு கோவணத்தோடு நிற்கும் அல்லக்கைகைள் இம்முறை தனித்து நின்றால் அம்மனமாவது, அல்லக்கைகள் மட்டமல்ல 'கேப்டனுக்கே' கோவணம்கூட மிஞ்சாது.

ஏற்கனவே தனியாக வாள்வீசி, கோவணமும் பறிபோய், ஒட்டு (இரட்டை) இலையால் மானம் காத்து, இலை விலகாமல் இருக்க இன்று 'சைலன்ட்டாய்' இருக்கும் வைகோ கற்ற பாடம் பண்ருட்டிக்குத் தெரியாதா என்ன? பக்குவமாய் எடுத்துச் சொல்ல 'கேப்டனும் கேடட்' ஆனார். அம்மா தலைமையில் கண்டபடி வாள் எடுத்து வீச முடியாதுதான். என்ன செய்ய? 

இது 'டி-புரமோஷன்தானே'.வேலை ஒன்றும் போய்விடவில்லையே! யுத்தத்தில் அம்மா வென்று, அல்லக்கைகள் அள்ள வாய்ப்பளித்தால் 'ரிவோக்' ஆகாமலா போகும். அம்மாவின் ஆணையின் கீழ் இப்போதைக்கு 'கேடட்டாய்' இருப்பதே மேல்.

அம்மா இருக்க ஆண்டவன் எதற்கு?