இராணிப்பேட்டை
“பெல்“ வளாகத்தில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் 22-வது சந்திப்பு
30.08.2019 அன்று இராணிப்பேட்டையில் நடைபெற்றது. ஆயிஷா இரா
நடராசன் அவர்கள் எழுதிய “டார்வின் ஸ்கூல்”
நூல் குறித்து தோழர் நா.பாலாஜி அவர்களும், டாக்டர் ஜோசப் மர்ஃபி (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)
அவர்கள் எழுதிய “ஆழ்மனத்தின்
அற்புத சக்தி” நூல் குறித்து தோழர் கோ.இளங்கீரன்
அவர்களும் உரையாற்றினர். தோழர் தி.க.சின்னதுரை கூட்டத்தை நெறிப்படுத்தினார். தோழர்
செ.வினோதினி வரவேற்புரை நிகழ்த்தினார். பார்வையாளர்கள் உற்சாகத்தோடு பங்கேற்று சிறப்பித்தனர்.
இறுதியில் தோழர் கோ.இளங்கொவன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
“டார்வின் ஸ்கூல்” நூல்
கதை வடிவில் பரிணாமக் கோட்பாட்டை அறிவியல் கண்ணோட்டத்தில் விளக்குகிறது. அதே வேளையில் “ஆழ்மனத்தின் அற்புத சக்தி” நூல் மனித மனத்தின் நிலைகளை விளக்கினாலும்
அறிவியல் பார்வையில் கருத்துமுதல்வாதத் தன்மையைக் கொண்டது. பலதரப்பு நூல்களையும் வாசிப்பது,
மாறுபட்ட கருத்தோட்டங்களையும் விவாதிப்பது என்கிற நோக்கத்கில் இத்தகைய நூல்களும் வாசிப்புக்கு
எடுத்துக் கொள்ளப்படுவதை பாராட்டியாக வேண்டும்.
அம்பேத்கர்
- பெரியார் வாசகர் வட்டம் பிரபலமானப் பேச்சாளர்களை மட்டும் நம்பி கூட்டத்தை நடத்துவதில்லை.
மாறாக புதியவர்களை படிக்கச்சொல்லி உற்சாகப்படுத்துவதோடு, தாங்கள் படித்துப் புரிந்து
கொண்டதை விளக்கிப் பேசுவதற்கான வாய்ப்பையும் தருகிறது. எனவே இங்கு ஒருவர் வாசிப்பை
மட்டும் வளர்த்துக் கொள்ளவதோடு நில்லாமல் ஒரு கருத்தாளராகவும் தன்னை உயர்த்திக் கொள்கிறார்.
தொடர்புடைய பதிவுகள்
அருமையான பதிவு
ReplyDeleteபடிக்க மறக்காதீர்கள்
ReplyDeleteநீங்களும் திருக்குறள் எழுதலாம்!
http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html