ஒட்டகச்சிவிங்கி தனது ஒற்றைக் குட்டியோடு முன்னங்கால்களை அகற்றி தரையில் உள்ள புற்களையும், கழுத்தை நீட்டி நெடிதுயர்ந்த மரத்தின் இலைகளையும் மேய்ந்து கொண்டிருந்த போது தீடீரென சிறிப்பாய்ந்து வந்த சிங்கம் ஒன்று ஒட்டகச்சிவிங்கியின் குட்டியின் கழுத்தைக் கவ்வும் போது நமக்கே பதபதைப்பு ஏற்படுகிறது. இதைக் கண்ட தாய், தனது இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி சிங்கத்தை உதைக்க முற்படுவதைக் கண்டு பயந்து ஓடுகிறது சிங்கம். இரண்டு மூன்று சிங்கங்கள் தாக்க முற்படும் போது குட்டியை தனது முதுகின் மேல் ஏற்றிக்கொண்டு நெருங்கி வரும் சிங்கங்களை, நீண்ட தனது தாடையால் தட்டிவிட்டும், கால்களால் எட்டி உதைத்தும் தன்னையும் தனது குட்டியையும் தற்காத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு தப்பிச் செல்கிறது.
No comments:
Post a Comment