Friday, November 29, 2024

இட ஒதுங்கீடு சிக்கல்களுக்கு வழிகாட்டும் தலைவன்!

பட்டியல் சாதி இட ஒதுக்கீட்டிற்குள் அருந்ததியர்களுக்கான மூன்று சதவீத உள்ஒதுக்கீடு  செல்லும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஒட்டி, இதற்கு எதிராக   பள்ளர் பறையர் சாதித் தலைவர்களின் அறிக்கைகளும், போராட்டங்களும், உச்சநீதிமன்ற மேல் முறையீடும், பட்டியல் சாதிகளுக்குள் பெரும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
 
வன்னியர்களின் வாக்கு வங்கியை மனதில் கொண்டு எடப்பாடி ஆட்சி காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட 
சாதிகளுக்கான (MBC) 20 % இட ஒதுக்கீட்டிலிருந்து 
வன்னியர்களுக்கு என அவசர அவசரமாக  கொண்டு வரப்பட்ட 
10.5% தனி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக MBC பட்டியலில் உள்ள பிறசாதியினர் அதற்கு எதிராகக் குமுற நீதிமன்றமும் அந்த இட ஒதுக்கீட்டை இரத்து செய்து அவர்களின் குமுறலைத் 
தணிக்கஇன்று மீண்டும் அதே கோரிக்கையை வன்னியர்கள் வலியுறுத்த
அதற்காகச் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோர, MBC சாதிகளுக்குள் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.


இட ஒதுக்கீடு மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெறுவோரை கோட்டா என 
இதுவரை ஏளனம் செய்து வந்த பார்ப்பனர்கள், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு எனக்கூறி ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய்
வருவாய் ஈட்டும் அரிய வகை 
ஏழைகளுக்காக, பாஜகவின் 
முன்னெடுப்பில், மார்க்சிஸ்ட் 
கம்யூனிஸ்ட் கட்சியினர் (CPI-M) 
வெண் சாமரம் வீச10% தனி கோட்டாவை பார்ப்பனர்கள் தங்களுக்காக எடுத்துக்கொண்ட தந்திரத்தைக் கண்ட இதர ஒடுக்கப்பட்ட மக்களின் குமுறலாலும்,
 
இட ஒதுக்கீட்டின் பலன்களை 

அருந்ததியர்கள் தங்களுக்கான பங்கையும் பிடுங்கிக் கொள்கிறார்கள் என்று பள்ளர்களும் பறையர்களும் பொருமுவதாலும்,
 
இட ஒதுக்கீட்டின் பலன்களை 
அனுபவித்துக் கொண்டே  இட ஒதுக்கீட்டினால் 
பள்ளர்களும் பறையர்களும்தான் பயன் பெறுகிறார்கள் என வன்மம் கக்கும் நடுநிலைச் சாதியினராலும்
 
முன்பு போல அனைத்து வகையிலும் தங்களால் மேலாதிக்கம் செலுத்த முடியவில்லையே என்ற பார்ப்பனர்களின் புலம்பலாலும்,
 
சாதிகளுக்கு இடையிலான பகைமையும் வன்மமும் நாளுக்கு நாள் கனன்று 
கொண்டே வருகிறது.
 
கும்புடுறன் சாமி” என்று முன்பு 
குனிந்து நின்றவர்கள், இன்று 
நெஞ்சு நிமிர்த்தி “ஹாய்” 
சொல்லிச் செல்கிறார்களே என்ற ஆதங்கம் 
மேலோங்கதமிழ்நாட்டில் பிற 
சாதியினரால் தாங்கள் 
ஒடுக்கப்படுவதாக உச்சிக் குடுமியை சிலிர்த்துக் கொண்டு பார்ப்பனர்கள் 
ஓலமிட்டு ஒப்பாரி வைத்ததை 
அண்மையில் தமிழகம் கண்டது.

இன்று அறிக்கைகளாகவும், கருத்துகளாகவும், 
ஆர்ப்பாட்டங்களாகவும் உள்ள இந்தக் கனல் என்றைக்கு பெரும் காட்டுத் தீயாகப் பற்றும் என்று எவராலும் யூகிக்க முடியாத நிலையில், இதைத் தணிப்பதற்கு என்னதான் வழி என்று பலரும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

பார்ப்பனர்கள் இச்சமூக 
மக்களைப் பல்வேறு சாதிகளாகப் 
பகுத்து, அவர்களுக்கிடையே படிநிலை 
ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி ஆதிக்கம் செய்து 
வந்தார்களோ, அதே சாதியை 
ஆயுதமாகக் கொண்டு, 
இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி 
வேலை வாய்ப்புகளில் ஓரளவு 
முன்னைற்றம் கண்டு‌ 
பார்ப்பனர்களின் ஆதிக்கம் 
ஆட்டம் காணக் காரணமாக 
இருந்த அம்பேத்கர் பெரியார் 
வழியில் மற்றும் ஒருவர் 
பயணித்துள்ளார்.
 
இட ஒதுக்கீட்டினால் சாதிகளுக்கு இடையில் உருவாகும் முரண்களுக்கு 
முற்றுப் புள்ளி வைக்கவும் அவர் 
வழிகாட்டி உள்ளார்யார் அவர்அவர் காட்டிய வழி எது
அடுத்து பார்ப்போம்!
 
தொடரும்

ஊரான்
 

No comments:

Post a Comment