Showing posts with label #ActorVijay #TVK #Election2026 #Freebies #TamilNaduPolitics #Ooran #Satire #இலவசம் #விஜய் #தமிழகவெற்றிக்கழகம். Show all posts
Showing posts with label #ActorVijay #TVK #Election2026 #Freebies #TamilNaduPolitics #Ooran #Satire #இலவசம் #விஜய் #தமிழகவெற்றிக்கழகம். Show all posts

Tuesday, 21 April 2026

லெஃப்ட்ல ப்ரிட்ஜ்… ரைட்ல சிலிண்டர்… நேரா போனா ஆட்சி! தமிழக தேர்தலின் ‘அன்லிமிடெட் இலவச ஆஃபர்

ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் 'இலவசப்' போட்டியில் மல்லுக்கட்டுவது தமிழக அரசியலில் காலங்காலமாக நடக்கும் ஒரு குஸ்தித் திருவிழா.

ஆனால், சமீபத்தில் களம் இறங்கிய தம்பியின் கட்சி, சீனியர்களுக்கே செக் வைக்கும் வகையில் இலவசங்களை அள்ளி வீசியிருப்பதைப் பார்த்தால், "வாழ்க வசந்தகாலம்" என்று பாடத் தோன்றுகிறது.


கட்சிகளின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், அது மேனிஃபெஸ்டோ மாதிரியே இல்லை; ஏதோ ஆடியில் வரும் 'மெகா டிஸ்கவுண்ட்' சேல்ஸ் நோட்டீஸ் போல இருக்கிறது!

பட்டியலைப் பாருங்களேன்
பெண்களுக்குப் பேருந்து இலவசம், சிலிண்டர் இலவசம், மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், முதியோருக்குப் பென்ஷன், 
இலவச மின்சாரம், கல்யாணத்துக்குக் காசு, 
குழந்தை பிறந்தால் காசு... ஒரு கட்டத்தில் மூச்சு வாங்குகிறது. போதாக்குறைக்கு 'இலவச பிரிட்ஜ்' வேறு!

நிஜமாவே கேக்குறேன் தம்பிகளா... எதுக்கு இவ்வளவு பெரிய லிஸ்ட்டு? இந்த லிஸ்ட்டை மக்களே ஞாபகம் வெச்சுக்க முடியாது. அதுக்காகவே ஒரு கமிட்டி போட வேண்டியிருக்கும் போல!

மக்கள் சார்பில் ஒரு சின்ன வேண்டுகோள்:
அரசியல்வாதிகளே... ரொம்ப ரிஸ்க் எடுக்காதீங்கப்பா. நீங்க இவ்வளவு பெரிய பட்டியலைக் கொடுத்து நிறைவேத்த முடியாம திண்டாடுறதுக்கு பதிலா, ரொம்ப எளிமையான ஒரு 'பேக்கேஜ்' கொடுத்துடுங்க.

எங்களுக்கு மூணே மூணு விஷயம் போதும்:
  1. வயிற்றுக்குச் சோறு (மூணு வேளையும் அன்லிமிடெட்!)
  1. உடம்பை மறைக்கத் துணி (நிச்சயமா விஜய் படம் போட்டது வேணாம்!)
  1. நிம்மதியாத் தூங்க ஒரு இடம்.
இந்த மூணையும் மட்டும் நீங்க கச்சிதமா 'இலவசமா' பண்ணிக் கொடுத்துட்டீங்கன்னு வைங்க...

எங்களுக்கு எதுக்கு இலவச பஸ்? நாங்க எதுக்கு கேஸ் வாங்கப் போறோம்? 
எதுக்கு சிலிண்டர், பிரிட்ஜ், கூப்பன்லாம்?
இவ்வளவு ஏன்... நாங்க எதுக்கு விவசாயம் பண்ணப் போறோம்? எங்களுக்கு எதுக்கு கடன் தள்ளுபடி? 
நாங்க எதுக்குக் கஷ்டப்பட்டுப் படிச்சு வேலை இல்லாத பட்டதாரியா ஆகப்போறோம்? எங்களுக்கு எதுக்கு வேலை இல்லா ஊக்கத்தொகை?

சிம்பிளாச் சொல்லப்போனா:
நீங்க அந்த மூணு கோரிக்கைய மட்டும் இலவசமா செஞ்சுடுங்க...

நாங்க பாட்டுக்குச் சாப்பிட்டோமா…
அப்படியே அந்த இடத்துல படுத்துத் தூங்குனோம்னா போதும்.
“சிவனே!”ன்னு நிம்மதியா இருப்போம்.  

நீங்க ஆட்சியைப் பிடிச்சு அள்ளப்போறது என்னமோ குறையப்போறது இல்ல. அப்புறம் எதுக்கு இந்த மெகா சீரியல் மாதிரி நீண்டுகிட்டே போற இலவசப் பட்டியல்?

வாக்குறுதிகளை 'சிம்பிளா' முடிங்கப்பா... நாங்க 'கண்ணை மூடிக்கிட்டு' ஓட்டுப் போடுறோம் (ஏன்னா முழிச்சிருந்தா இந்த லிஸ்ட்டைப் பார்த்து கண்ணே வேர்க்குது!).

ஊரான்