Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, 19 September 2024

மனச் சுமை மனிதனுக்கு மட்டும்தானா?


ஒரு பறவை
ஒரு பசு
ஒரு நாய்
ஒரு நரி....என, 
இவை
தன் உறவுகளை
தன் வாழ்விடத்தை இழக்கும் போது
அவை வடிக்கும் கண்ணீரின்  பொருளை மனிதன் அறிவானோ?

மனச் சுமை
மனிதனுக்கு மட்டும்தானா?

ஊரான்

Sunday, 23 July 2023

புருவத்தை நெறி!

பாட்டாளிகளின் 
பாடுகளில் பங்கேற்காமல், 
தம் பேச்சாற்றல், 
எழுத்தாற்றல் திறமைகளை 
புகழுக்கும் பணத்திற்கும் 
விற்பனை செய்யும் 
விற்பன்னர்கள் நிறைந்த 
உலகமடா இது! 

நீயோ 
வாய் பிளந்து நிற்கின்றாய், 
இரசிக்கின்றாய்; 
சிரிக்கின்றாய்!
உன்,
கண நேர சிரிப்பே
அவர்களின் மூலதனம்!
பிறருக்காய் 
சிரித்தது போதும்
உன் 
வாழ்வின் மகிழ்ச்சிக்கு 
வழி காண 
புருவத்தை நெறி!

ஊரான்