Thursday, 7 September 2017

இந்து மதக் கொடுங்கோண்மை: கவுரி லங்கேஷ் படுகொலை!

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் ஜவார்கி அருகே சன்னூர் என்கிற குக்கிராமத்தில் தலித் ஒருவருக்குச் சொந்தமான ஒரு கிணற்றில் தலித்துகள் தண்ணீர் எடுக்கிறார்கள் என்பதற்காக அந்தக் கிணற்றில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து கிணற்று நீரை நஞ்சாக்கியிருக்கிறார்கள் இந்து மத கவுடா சாதி வெறியர்கள். 
இத்தகையை இந்து மதவெறிக் கொடுங்கோண்மைக்கு எதிராக துணிச்சலாக, ஒரு பெண்மணி, அதுவும் தன்னந்தனியாய் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த எழுத்தாளர் கவுரி லங்கேஷை கொடூரமாக - கோழைத்தனமாக படுகொலை செய்துள்ளது ஆர்.எஸ்.எஸின் இந்து மதவெறிக் கும்பல். 
கவுரி லங்கேஷ்
'கோழையே..!'
என்னிடம் தோட்டாக்கள்
என்னிடம் அழியா வார்த்தைகள்
எதற்கும் அஞ்ச மாட்டேன்.
நான் கவுரி லங்கேஷ்'
இதுதான் இந்து மதவெறிக் கோழைகளுக்கு அவர் விட்டுச் சென்ற வீரஞ்செறிந்த போர் முழக்கம்.
இந்து மதம் இருக்கின்றவரை சமூக ஏற்றத்தாழ்வுகளும் நீடிக்கவே செய்யும். ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் வரை கவுரி லங்கேஷ்க்கள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள். ஏற்றத் தாழ்வுகள் ஒழிய வேண்டுமனால் இந்து மதத்தை அழித்தாக வேண்டும். இந்து மதத்தை அழிக்க கவுரி லங்கேஷ்களாய், நரேந்திர தபோல்கர்களாய், கோதவிந்த் பன்சாரேக்களாய், எம்.எம்.கல்புர்கிகளாய் உருவெடுப்போம்! 
பெரியாரும், அம்பேத்கரும் காட்டிய வழியில் பார்ப்பன பாசிச இந்து மதவெறிக் கும்பலுக்கு சவக்குழி தோண்ட அணியமாவோம்! 
தொடர்புடைய பதிவுகள்:
நேற்று நான் கல்புர்கி... இன்று நான் கவுரி லங்கேஷ்!

எதற்கும் அஞ்சாத என் தோழியை காவி பயங்கரவாதத்துக்கு பலி கொடுத்துவிட்டேன்: கவுரி லங்கேஷின் நண்பர் வேதனை

கர்நாடகாவில் தலித் மக்களின் குடிநீர் கிணற்றில் விஷம் கலப்பு: 3 பேர் கைது

Friday, 1 September 2017

நீட் தேர்வு: அனிதாவைக் கொன்ற குற்றவாளிகள்!

ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதாவைக் கொன்று விட்டார்கள்.

நீட் தேர்வை கட்டாயமாக்கி அனிதாவை தற்கொலைக்குத் தூண்டிய பிரதமர் உள்ளிட்ட காவிக்கூட்டம் முழுவதும் கொலைக் குற்றவாளிகளே! 

இந்தக் காவிக் குற்றவாளிகளின் குற்றச் செயலுக்கு உதவி செய்த உச்சிக்குடுமி மன்றமும் குற்றவாளியே!

காவிகளின் காலை நக்கிக் கொண்டு குற்றச் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எடப்பாடி, ஓ.பி.எஸ், உயர் கல்வி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்கள் உள்ளிட்ட ஒட்டுண்ணிக் கூட்டத்தைச் சேர்ந்த அனைவரும் குற்றவாளிகளே! 

ஜெயலலிதா என்கிற ஒரு கிரிமினல் குற்றவாளியை கொஞ்சமும் கூச்சமின்றி செத்த பிறகும் 'இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா' என கூப்பாடு போடும் ஒரு கூட்டத்திடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?

பல லட்சக் கணக்கில் தொண்டர்களைக் கொண்ட - அதுவும் சமூக நீதிக்கு பேர் போன தமிழக அரசியல் கட்சிகள் நீட்டுக்குப் பாடை கட்டத் தவறியது நமக்கெல்லாம் தலைகுனிவில்லையா?

காவிக்கூட்டததையும், காவிகளின் அடிவருடிகளான 'அம்மா' கூட்டத்தையும் தமிழகத்திலிருந்து கருவறுக்காமல் அனிதாக்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு ஒரே வழி தமிழகம் மீண்டும் மெரினாவாகவேண்டும்.

Thursday, 31 August 2017

ஆண்மீகத்தின் வேர்களைத் தேடி...........

ஆண்மீகத்தின் வேர்களைத் தேடி...........

பஞ்சாப்பை பற்ற வைத்த குர்மீத் ராம் ரகீம்


ஆணுருப்பை இழந்த கேரளாவின் காகேசனந்தா 



ராம்பால்


 நாராயணி சக்தி அம்மா


ரஞ்சிதா புகழ் பிரேமானந்தா


சிறீ சிறீ ரவி சங்கர்


ஆசாராம் பாபு


பங்காரு


ராம் தேவ்

காட்டு வேட்டை ஜக்கி வாசுதேவ்


அமிர்தானந்த மயி


காஞ்சி சின்னவாள்


காஞ்சி நடுவாள்


புட்டபர்த்தி சாய்பாபா



திருச்சி பிரோமானந்தா


 ஆயுத பேரப் புகழ் சந்திராசாமி


மேலே உள்ளவர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்தான். ஆசிரமம் என்ற பெயரில் இவர்கள் நடத்தும் அட்டூழியங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. கார்பரேட் ஆண்மீகமும் கருப்புப் பணமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். 


வேதாத்திரி மகரிஷி


காஞ்சிப் பெரியவாள்


ரமண மகரிஷி


சீரடி சாய்பாபா 


 சுவாமி விவேகானந்தன்


 ராமகிருஷ்ண பரமஹம்சன்


ராமானுஜன்


இவர்களின் மூலதனம்  ஆண்மீகம் மட்டுமே. ஆண்மீகத்தின் பெயரால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு இன்றைய கார்பரேட் சாமியார்களே சாட்சி. இவர்கள் தவிர உள்ளூர் அளவில் எண்ணிலடங்கா சாமியார்களும் வலம் வருகிறார்கள். கிருத்துவ மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆண்மீகத்தின் தோற்றுவாய் மதம். மதம் இருக்கும் வரை ஆண்மீகம் இருக்கும். ஆண்மீகம் இருக்கும் வரை ராம் ரகீம்கள் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்கள். 

Sunday, 19 June 2016

அவுத்து வுடறதுக்கு அளவே இல்லையா?

"தமிழ், சமஸ்கிருதம் இவ்விரு மொழிகளும் சிவனின் உடுக்கையில் இருந்து பிறந்தவையாகும்." - இது இல.க மலர்ந்த முத்து.

மொழிய பத்தின இவங்க காமெடி தாங்க முடியல!

இவங்க சிலாகிக்கும் சமஸ்கிருதத்தின் இன்றைய நிலை அறிய......கல்யாணம் முதல் கருமாதி வரை விடாது துரத்தும் சமஸ்கிருதம்!

Saturday, 26 March 2016

“பாரத் மாதா கீ ஜே!” சொல்லலாமா? கூடாதா?

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் ‘பாரத் மாதா கீ ஜே!’ எனச் சொல்ல மறுத்ததற்காக ஆல் இண்டியா மஜ்லிஸ்-ஏ-இத்தேஹதுல் முஸ்லிமின் கட்சியைச் சேர்ந்த வாரிஸ் பதான் என்னும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

‘பாரத் மாதா கீ ஜே!’யில்தான் தேசப்பற்று இருக்கிறதாம். ‘பாரத் மாதா கீ ஜே’ என ஒருவன் சொல்லிவிட்டால் அவன் தேசப்பற்று உள்ளவனாம். சொல்லாதவனெல்லாம் தேசத்துரோகியாம். அதனாலே, `இந்தியாவில், ‘பாரத் மாதா கீ ஜே’ என்று சொல்லாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம்’’ என்று மத்திய அமைச்சர் ஒருவர் சொல்கிறார்.

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்கள் தற்போது "நாங்கள் ஜெய் ஹிந்த் அல்லது பாரத் மாதா கீ ஜே!” என்ற கோஷத்தை எழுப்புவோம்' என்று கூறத் தொடங்கிவிட்டார்களாம். அதனாலே தேசியம் குறித்த விவாதத்தில் பாஜகவுக்கு சித்தாந்த ரீதியிலான வெற்றி கிடைத்துவிட்டதாம். இப்படி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி தெரிவிக்கிறார்.

ஆனால் தேசியம் குறித்தும் ‘பாரத் மாதா கீ ஜே!’ குறித்தும் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

“இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மதித்து நடப்பதும், இந்திய நாட்டிற்காக உழைப்பதும், நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதும்தான் தேசப்பற்று” என்கிறார் ஒரு தொழில் முனைவோர்.

“ஒருவன் தான் அணிந்திருக்கும் டி-சட்டையில் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என எனக் குத்திக் கொள்வதில் இல்லை தேசப்பற்று. மாறாக சாதி-மத-இன வேறுபாடுகளை மறந்து இந்தியர்கள் அனைவரையும் சமமாக மதித்து நடத்துவதிலும், ஊழல் மற்றும் மதவாதத்திற்கு எதிராக குரல்கொடுப்பதிலும் இருக்கிறது தேசப்பற்று” என்கிறார்  ஒரு டாஸ்மாக் ஊழியர்.

“கடல்தான் எனக்கு சோறு போடுகிறது; உடை தருகிறது; எனது குழந்தைகளுக்கு படிப்புத் தருகிறது. எனது குடும்பத்தையே வழி நடத்துகிறது; எனவே கடல்தான் எனக்குத் தாய். கடல் தாய்க்குப் பிறகுதான் ‘பாரத மாதா’, சாமிகள், கோவில்கள் இன்ன பிற.,இன்ன பிறவெல்லாம். என்னைப் பொருத்தவரை கடல்தான் தேசத்தைவிடப் பெரியது” என்கிறார் ஒரு மீனவர்.

“தெருக்களையும், கழிவறைகளையும் சுத்தம் செய்யும் ஒரு துப்புறவுத் தொழிலாளிக்கு, தன்மானத்திற்காகப் போராடும் ஒரு தலித்துக்கு, ”‘பாரத் மாதா கீ ஜே!’” என்பது பொருளற்ற ஒன்று. பல நூற்றாண்டுகளாக ஆதிக்கச் சாதியினரின் வன்கொடுமைகளுக்கு ஆட்பட்டுவரும் தலித்துகளுக்கு ‘பாரத் மாதா கீ ஜே!’ என்கிற முழக்கம் ஒரு இழிவான முழக்கமாகும். தலித்துகள் மீது அநீதியையும், தீண்டாமையையும் கடைபிடிக்கும் சாதி அமைப்பு முறை தொடர வேண்டும் என விரும்புகின்றவர்கள்தான் ‘பாரத மாதா’ பற்றி பேசுகின்றனர். என்னைப் பொருத்தவரை தேசப்பற்று என்பது இந்த நாட்டில் வாழ்பவர்களைப் பற்றி பேசுவதும், சமத்துவம், சமூக நீதி, சுதந்திரம் மற்றும் ஊழலற்ற தம்மை பற்றி பேசுவதுமாகும். இடை நீக்கம் செய்யப்பட்ட MLA வாரிஸ் பதான் மட்டுமல்ல நான்கூட ‘பாரத் மாதா கீ ஜே!’ சொல்ல மாட்டேன் என்கிறார் ஒரு துப்புறவுத் தொழிலாளி.


செய்தி ஆதாரம்: THE HINDU 27.03.2016. நன்றி!