Showing posts with label கிருஷ்ணன். Show all posts
Showing posts with label கிருஷ்ணன். Show all posts

Thursday, 29 May 2025

பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !

அக்டோபர் 7, 2019 அன்று எழுதிய கட்டுரை. மீள் பதிவு.
****
ண்ணா பல்கலைக் கழக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது குறித்து தொலைக்காட்சிகளில் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. காந்தியைக் கொலை செய்ய கோட்சேவைத் தூண்டிய ஒரு கொலை நூலை மாணவர்கள் படிப்பதா என பதறுகிறார்கள் பகுத்தறிவாளர்கள். அதுவும் அண்ணா பெயரில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திலா என ஆதங்கப்படுகிறார்கள். நால் வருண சாதி அமைப்பை நியாயப்படுத்தும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது பார்ப்பன மேலாண்மையை நிலை நாட்டுவதும் மறைமுகமாக சமஸ்கிருதத்தைப் புகுத்துவதும்தான் மோடி அரசின் நோக்கம் என்பதே பகவத் கீதையை எதிர்ப்போரின் கருத்தாக இருக்கிறது.









மோடி எதைச் செய்தாலும் எதிர்ப்பதே பெரியாரிஸ்டுகளின் வேலையாப் போச்சு என்கிறது பார்ப்பன தரப்பு. மானுடவியல், தனிமனித ஆளுமை, நிர்வாக மேலாண்மை குறித்துத் தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் கீதையில் கொட்டிக் கிடக்கிறது; மேலும் இந்து மதத்துக்கும் பகவத் கீதைக்கும் தொடர்பே கிடையாது; நால்வருண அமைப்பு என்பது செய்கிற தொழிலை அடிப்படையாகக் கொண்டது; வருண அமைப்புக்கும் சாதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என அடித்துச் சொல்கிறார்கள். கீதை அனைவருக்குமான ஒரு பண்பாட்டு நூல். பிளாட்டோவையும் அரிஸ்டாட்டிலையும் படிக்கும் போது பகவத் கீதையை ஏன் படிக்கக் கூடாது என கேள்வி எழுப்புகிறது வலதுசாரி பார்ப்பனத் தரப்பு.

இதில் எந்தத் தரப்பு சொல்வது சரி. சாதாரண மக்களுக்கு பொறியியல் பாடத்திட்டம் குறித்த விவரம் தெரியாது.  ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்பதைத்தவிர பகவத் கீதை பற்றி வேறு எதுவும் தெரியாது. “எதப் படிச்சா என்ன? வேலை கெடச்சா சரி!” என்பதைத் தாண்டி பொறியியல் மாணவர்களும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. மோடிகளும் எடப்பாடிகளும் நீடிக்கும் வரை யார் எதைப் படிச்சாலும் எந்த வேலைக்கும் உத்தரவாதம் இல்லை என்பது மட்டும்தான் தற்போதைக்கு எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இதுல மேலாண்மைக் கோட்பாடாம்! ஆளுமைத் திறனாம்! சோத்துக்கே வழியில்லையாம். ஆனால் சோக்குக்கு மட்டும் கொறச்சல் இல்ல!’

சரி! விசயத்துக்கு வருவோம்! பகுத்தறிவு தரப்பு குறித்து நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. பார்ப்பனர்களின் கருத்தை பரிசீலித்தாலே எது சரி என்பதை முடிவு செய்ய முடியும் எனக் கருதுகிறேன்.

பகவத் கீதைக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே கிடையாது?

“ருக்ஸாம யஜூரேவ ச!” (கீதை: 9-17). இருக்கு, சாம, யஜூர் என்ற மூன்று வேதங்களும் நானேதான் என்கிறான் கிருஷ்ணன். “இருக்கு, எஜூர், சாம என்னும் பெயரையுடைய அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன் இவர்கள் மூவரிடத்தினின்றும் (பிரம்மா) வெளிப்படுத்தினார்” (மனு:1-23) என்கிறான் மனு.

வேதங்கள், மனு தரும சாஸ்திரம், பகவத் கீதை இவை எல்லாம் இந்து மதத்தைப் பற்றிப் பேசாமல் கன்பூசியசிசமா பேசுகிறது? கீதைக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த சான்றுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் போது பகவத் கீதை ஒரு இந்து மத நூலே அல்ல என்று ஒருவன் பேசுகிறான் என்றால் அவனை சந்தேகப்பட வேண்டுமா? வேண்டாமா?

மனுதரும சாஸ்திரமும் கீதையும்!

“சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்” (கீதை: 4-13). “பார்ப்பனர், சத்திரியர். வைசியர், சூத்திரன் ஆகிய நான்கு வருணங்களையும்”, “கு ணகர்மவி பாக” (கீதை:4-13).  “அவர்களுக்கான குணங்களையும் கர்மங்களையும் நானே படைத்தேன்” என்கிறான் கிருஷ்ணன். இதையேதான் “உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்றும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்” (மனு:1-31) என்கிறது மனுதரும சாஸ்திரம்.












“வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றல் – கற்பித்தல் இவை பார்ப்பனர்களுக்கு இயல்பாகவே உண்டான கர்மங்கள்” (கீதை:18-42), “கொடையும் ஆளும் தன்மையும் சத்திரியர்களுக்கு இயல்பான கர்மங்கள் ஆகும்” (கீதை:18-43), “உழவு செய்தலும், பொருட்களை வாங்கி விற்பதும் வைசியர்களுக்கு இயல்பாக உண்டான கர்மங்கள்” (கீதை:18-44), “மக்கள் அனைவருக்கும் சேவை புரிவது நான்காம் வர்ணத்தவர்களுக்கு இயல்பாக உண்டான கர்மம்” (கீதை:18-45) என கீதை சொல்கிறது.

இதையேதான் மனுதரும சாஸ்திரமும் சொல்கிறது. “இவர்களுக்கான கர்மங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்” (மனு: 1-87), “பார்ப்பானுக்கு வேதம் ஓதுவித்தல், யாகம் செய்தல்” (மனு:1-88), “சத்திரியனுக்கு மக்களைக் காத்தல், தானம் கொடுத்தல்” (மனு:1-89), “வைசியனுக்கு பயிரிடுதல், வாணிபம் செய்தல்” (1-90), “சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமை இன்றி பணி செய்வதை தருமமாக ஏற்படுத்தினார்” (மனு:1-91).

கீதையும் மனுதரும சாஸ்திரமும் வேறு வேறு அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? மனுதர்மத்தை சுலபமாக புரிய வைக்க, பதிய வைக்க எழுதப்பட்ட ஒரு கோனார் உரைதான் கீதை.

தொழிலை மாற்றிக் கொண்டால் வருண சாதி மாறிவிடுமா?

இதில் தொழிலை மாற்றிக் கொண்டால் அதாவது பார்ப்பனன் பிறருக்கு சேவை செய்தால் அவன் சூத்திரனாகவும், சூத்திரன் வேதம் ஓதி யாகம் வளர்த்தால் அவன் பார்ப்பானாகவும் ஆக முடியும் என்று மூச்சு முட்ட பேசுகின்றனர் பார்ப்பனர்கள்.

இசைக் கருவிகளை வாசிப்பது பார்ப்பானின் தொழில் கிடையாது.  வீணை, புல்லாங்குழல், வயலின், பக்க வாத்தியங்களான மிருதங்கம், கஞ்சிரா  வாசிக்கிற பார்ப்பனர்கள் எல்லாம் இசைவேளாளர்களாக சாதி மாறிவிட்டார்களா? அப்படி மாற்றிக் கொண்ட ஒரு பார்ப்பானையாவது காட்ட முடியுமா?

இவர்கள் சொல்வது போல அப்படி எல்லாம் மாற்றிக் கொள்ள முடியாது. “பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் தன்னுடைய தர்மம் உயர்ந்தது” (கீதை:18-47), “தனக்குரிய இயல்பான கடமையை விட்டுவிடலாகாது” (கீதை:18-48), உன்னுடைய தொழில்தான் உயர்ந்தது, அதை விட்டுவிடாதே என வலியுறுத்துகிறான் கிருஷ்ணன்.

ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்திற்காக உனது தொழிலை நீ மாற்றிக் கொண்டால் உனது வருணம் மாறிவிடுமா? உனது தொழிலை நீ மாற்றிக் கொள்ள உனக்கு அதிகாரம் கிடையாது என்பதுதான் இந்து மத சாஸ்திரம். “பார்ப்பனன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பார்ப்பன சாதியாகமாட்டான். ஏனென்றால் அவனுக்கு பார்ப்பனச் சாதித் தொழிலில் அதிகாரமில்லையல்லவா. சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பார்ப்பனன் சூத்திரசாதியாகமாட்டான். ஏனென்றால் அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா. இப்படியே இந்த விசயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார். (மனு:10-73).

நீ உனது தொழிலை மாற்றிக் கொண்டாலும் உனது வருணம் – சாதி மாறாது என ஷேசாத்திரிகள், கோலாகலன்கள், இராமசுப்புக்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் பிரம்மா.

ஊரான்

Thursday, 10 September 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! இறுதிப் பகுதி

அலுவலகங்களில், பேருந்துகளில், பொது இடங்களில் நம்மை அறியாமலேயே நமது கால் மற்றொருவர் மீது பட்டுவிட்டாலோ அல்லது அவசரத்தில் ஒருவரை இடித்துவிட்டாலோ “சாரி சார்!” என நாமாகவே முன்வந்து நமது வருத்தத்தை மற்றவர்கள் முன்னிலையிலேயே பகிரங்கமாக தெரிவிக்கிறோம். தெரியாமல் நடந்துவிட்டால்கூட நம்முடைய செய்கை மற்றவரை பாதிக்கும் என்பதை உணர்ந்திருப்பதால்தான் நாம் வருத்தம் தெரிவிக்கிறோம். அவ்வாறு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் நமது மனம் குறுகுறுக்கிறது. இதுதான் ஒரு மனிதனின் இயல்பான மனநிலை.

ஆனால் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக நடத்துவதில் ஆதிக்கச் சாதியினர் எவரும் தங்களது செயல் மற்றவரை பாதிக்கிறதே என்கிற எண்ணம் சிறிதுகூட இல்லாமல், ‘தான் செய்வது சரி!’ என்ற மனநிலையிலேயே செய்கின்றனர். ஆனால், அதே ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரவன் பொது இடத்தில் ஒருவரை தெரியாமல் இடித்துவிட்டால் வருத்தம் தெரிவிக்கின்றான். ஏன் இந்த முரண் நிலை? தனிப்பட்ட மனிதனாக இருக்கும் போது ஜனநாயகவாதியாகவும், சமூக வாழ்க்கை என வரும் போது அராஜகவாதியாகவும் அவன் ஏன் நடந்து கொள்கிறான்?

இந்து மத சமூக வாழ்க்கையே அடிப்படையில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியது என்பதால் ஒரு இந்துவாக வாழ்பவன் இந்து மத வழக்கப்படிதான் வாழ்வான். தனக்குக் கீழே உள்ள சாதிக்காரனை இழிவாகத்தான் நடத்துவான். அப்படி நடத்துவதுதான் இந்து தர்மம். அராஜகவாதியாகத்தான் வாழ வேண்டும் என ஒருவனை ஒரு மதம் வளர்க்கும் போது அவனிடம் ஜனநாயகத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்து தர்மத்திற்கு, அதாவது மனுதர்மத்திற்கு எப்பொழுதெல்லாம் குறைவு ஏற்படுகிறதோ, அதர்மத்தின் கை ஓங்குகிறதோ – இங்கே அதர்மம் என்பது மனுதர்மத்தை கேள்விக்குள்ளாகும் செயல்கள் - அப்பொழுதெல்லாம் இந்து தர்மத்தைக் காக்க கிருஷ்ணனே நேரில் தோன்றுவான் என்பதைத்தானே பகவத்கீதை சொல்கிறது (4:7). லேடியாக, மோடியாகக்கூட கிருஷ்ணன் அவதாரம் எடுப்பான் என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே! கிருஷ்ணன் நேரில் தோன்றுவது மட்டுமல்ல ‘அதர்மவாதிகளை’ அரக்கர்கள் என முத்திரை குத்தி அழிக்கவும் செய்கிறான். இடதுசாரி சிந்தனையாளராகவும், பகுத்தறிவுவாதியாகவும் அறியப்பட்ட கன்னட அறிஞரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் எம்.எம்.கல்புர்கியின் படுகொலை கிருஷ்ணன் மீண்டும் மீண்டும் அவதாரம் எடுக்கிறான் என்பதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

கிருஷ்ணன்கள் அவதாரம் எடுக்க எடுக்க, இந்து தர்மம் பாதுகாக்கப்பட்டுக் கொண்டே வரும். இந்து தர்மம் பாதுகாக்கப்படும் வரை தன்னை இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்பவன் அராஜகவாதியாகத்தான் வாழ்வான். அராஜகவாதிகள் இருக்கும் வரை தீண்டாமையும் தொடரும்.

தென் அமெரிக்கா நாடான பொலிவியா, ஸ்பெயின் நாட்டின் காலனி நாடாக இருந்தபோது “அமெரிக்காவை கீழ்படுத்தும்” திட்டத்தின் கீழ் கத்தோலிக்க சர்ச்சுகளால் பொலிவிய நாட்டு பூர்வகுடி மக்கள் மீது கடந்த நூற்றாணடுகளில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும், அநீதிகளுக்கும் அர்ஜென்டைனா நாட்டைச் சேர்ந்த தற்போதைய போப் பிரான்சிஸ் பொலிவிய நாட்டு மக்களிடம் மிகவும் கீழ்படிந்து பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். கடவுளின் பெயரால் அமெரிக்க மக்கள் மீது மிகக் கடுமையான குற்றங்களை கத்தோலிக்க சர்ச்சுகள் செய்துள்ளதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். (THE HINDU: 11.07.2015)

கடந்த நூற்றாண்டுகளில் நடந்த அநீதிகளுக்கு போப் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் இந்த நூற்றாண்டிலும் இன்றளவும் இந்து மதத்தின் பெயரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதே! எந்த இந்து மதத் தலைவராவது தீண்டப்படாதவர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு மன்னிப்பு கோரியதுண்டா? குறைந்த பட்சம் வருத்தமாவது தெரிவித்ததுண்டா?

அவர்கள் வருத்தம் தெரிவிக்கமாட்டார்கள். ஓநாய்களிடம் ஆடுகளுக்கு நீதி கிடைக்குமா என்ன?  

முற்றும்.

தொடர்புடைய பதிவுகள்:

*ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கான சட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!


எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

Monday, 29 April 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 5


பார்ப்பனியம் பிறவிக் குணமா?

இந்தக் கேள்வி பல ஆண்டுகளாக என்னைக் குடைந்து கொண்டே இருக்கிறது. முதலில் பார்ப்பனியம் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டால்தான்  மேற்கண்ட கேள்விக்கான விடையைத் தேடுவது சரியாக இருக்கும்.

பார்ப்பனர்கள் ஐயர், ஐயங்கார் உள்ளிட்ட பல்வேறு சாதிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பார்ப்பனர்கள் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடங்கி விடுவர். இவர்களிடையே நிலவும் உணவுப் பழக்க வழங்கங்கள், உடை உள்ளிட்ட இதர அலங்காரங்கள், பேசும் மொழிநடை, வணங்கும் கடவுள்கள், கொண்டாடும் பண்டிகைகள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகளை வைத்துப் பார்க்கும் போது பிற சாதி மக்களிடமிருந்து இவர்களை நாம் மிக எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். தற்போது ஒரு சில இடங்களில் சில பார்ப்பனர்களை அவ்வாறு அடையாளம் காண்பதில் சற்று சிரமம் இருந்தாலும் தங்களது நடத்தையால் விரைவிலேயே அவர்களும் அம்பலப்பட்டுப் போகின்றனர்.

இவர்களின் மூதாதையர்கள் வகுத்து, வகைப்படுத்தி, நடைமுறைப்படுத்திய வர்ண சாதி அமைப்பு முறையில் இவர்களே பிற சாதி மக்களைவிட பிறப்பால் உயர்ந்தவர்கள் என்கிற நினைப்பும், கல்வி அறிவிலும், திறமையிலும் இவர்களே முதன்மையானவர்கள் என்கிற திமிரும் இவர்களை விட்டு இன்னமும் அகன்று விடவில்லை. மன்னர் காலம் தொட்டு இன்றைய உலகமய காலம் வரை அதிகாரமுள்ள அதி உயர் அரசுப் பதவிகளில் பார்ப்பனர்கள் அமர்ந்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கின்ற அதே நேரத்தில் மற்றவர்களை எப்பொழுதும் தங்களுக்குக் கீழாக வைத்துக் கொள்வதற்காக சட்டங்களை வகுப்பதிலும், பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானிப்பதிலும், இவற்றிற்குக் குறுக்காக வரும் எவரையும் அடக்கி ஒடுக்குவதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். தங்களது நிலையை தக்கவைத்துக் கொள்வதற்காக இவர்கள்   மாயாவதி முதல் மோடி வரை, மூப்பனார் முதல் அம்பானி வரை உள்ள ஆளும் வர்க்கம் மற்றும் அதிகார வர்க்கங்களோடு கூட்டு சேர்வதற்குத் தயங்குவதே இல்லை.

ஒடுக்குமுறையின் மூலமாக மட்டும் பிறரை எப்போதும் அடக்கி வைக்க முடியாது என்பதால்தான் கருத்தியல் ரீதியாக முடக்குவதற்கு ரிக், யஜுர், சாம, அதர்வன ஆகிய நான்கு வேதங்கள், விஷ்ணு புராணம் உள்ளிட்ட பதினெட்டு வகை புராணங்கள், ஆறு வகை சாஸ்திரங்கள், மனுஸ்மிருதி உள்ளிட்டு பத்து வகை ஸ்மிருதிகள், இராமாயணம் - மகாபாரதம் என இரண்டு இதிகாசங்கள், சங்கரனின் அத்வைதம் உள்ளிட்டு ஆறு வகை தத்துவங்கள், பத்து வகையான உபநிடதங்கள் மற்றும் ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை என ஏராளமானவற்றை உருவாக்கி வைத்துள்ளனர். இவை தவிர மச்ச அவதாரம் முதல் கல்கி அவதாரம் என பத்து அவதாரப் புருஷர்களும், பொய்கை ஆழ்வார் முதல் திருமங்கையாழ்வார் வரை பனிரெண்டு ஆழ்வார்களும், கண்ணப்ப நாயனார் – திருமூலர் உள்ளிட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களும் என ஏராளமானோர் தோன்றி சனாதன தர்மத்திற்கு வலு சேர்த்துவிட்டுச் சென்றுள்ளனர்.

பார்ப்பனர்கள் போதிக்கின்ற தத்துவத்திற்குப் பெயர் சனாதன தர்மம். அதாவது நால்வர்ண தர்மம்.

பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன். தோளிலிருந்து பிறந்தவன் சத்திரியன். தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன். கால் பாதத்திலிருந்து பிறந்தவன் சூத்திரன். இவைதான் நான்கு வர்ணங்கள். மனிதர்களை நான்கு பிரிவுகளாக்கிவிட்டனர் பார்ப்பனர்கள். இந்த நான்கு பிரிவினரின் உரிமைகளையும் கடமைகளையும் பற்றிக் கூறுவதுதான் நால் வர்ண தர்மம். அதுவேதான் சனாதன தர்மம் அல்லது பார்ப்பன தர்மம். அவர்களுக்காக வகுத்த தர்மத்தைத்தான் அனைவருக்குமான தர்மமாக்கி அதை இந்து தர்மம் என அழைக்கின்றனர்.

தற்போதுள்ள சாதிகளை வைத்து இந்த நான்கு வர்ணங்களை எப்படி அடையாளம் காண்பது?

ஐயர், ஐயங்கார் போன்ற பார்ப்பனர்கள்தான் முதல் வர்ணமாகிய பிராமணர்கள். இந்தியா முழுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்ப்பன சாதிகள் உண்டு. இவர்கள் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் குருமார்கள்.

சம்புவராயர் போன்ற வன்னியர்கள், தீரன் சின்னமலை போன்ற கொங்கு வேளாளக் கவுண்டர்கள், பெரும்பிடுகு முத்தரையர் போன்ற முத்தரையர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற நாய்க்கர்கள் இவர்களெல்லாம் இரண்டாம் வர்ணமாகிய சத்திரியர்களில் அடங்குவதாக இவர்கள் தங்களைக் கருதிக் கொள்கின்றனர். இவர்களில் சிலர் ஒரு காலத்தில் மன்னர்கள் மற்றும் போர் வீரர்களாக இருந்தவர்கள்தான். 

வணிகத்தில் ஈடுபடும் செட்டியார்கள் மற்றும் முதலியார்கள் போன்ற பிரிவினர்  தங்களை வைசியர்களாகக் கருதிக் கொள்கின்றனர்.

நாவிதர், வண்ணார் போன்றோர் பிற சாதியினருக்கு சேவை செய்வதால் மனுதர்மப்படி இவர்களை சூத்திர வர்ணமாக வகைப்படுத்த முடியும்.

மேற்கண்ட நான்கு வர்ணத்தாரிடையே கலப்பு ஏற்பட்டதன் விளைவாக நான்கு வர்ணத்தாரிடமிருந்து விலக்கி வைக்கபட்ட பிரிவினரை பஞ்சமர்கள் என்று அழைத்தார்கள். இவர்களே இன்று தாழ்த்தப்பட்டவர்களாக அறியப்படுகின்றனர். உரிமைகள் எதுவும் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. இவர்களுக்குத்தான் அரிஜனங்கள் என நாமகரணம் சூட்டினார் காந்தி.

பார்ப்பனர்கள் எப்பொழுதும் தங்களை பார்ப்பனர்களாகத்தான் கருதிக் கொள்கின்றனர். ஆனால் பிற சாதியினர் ஒவ்வொருவரும் தங்களை சத்ரியர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள படாத பாடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் என்னதான் மாடாய்க் கத்தினாலும், விந்திய மலைக்குத் தெற்கே உள்ள சத்திரியர்கள் வேதங்களை மறுத்து பார்ப்பனர்களுடைய ஆலோசனைகளை கேட்காததால் அவர்கள் அனைவரையுமே அன்றைக்கே சூத்திர  நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறான் மனு. அது மட்டும்மல்ல, தற்பொழுது நடப்பது கலியுகம் என்பதால் கலியுகத்தில் பார்ப்பனர்கள் மற்றும் சூத்திரர்கள் என இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு என்று பார்ப்பனர்கள் வரையறுத்து விட்டனர்.

பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினர் என்னதான் தாங்கள் சத்திரியர்கள் என்று கூப்பாடு போட்டாலும் பார்ப்பனர்களின் தர்மப்படி அனைவருமே சூத்திரவாள்தான். சுப்பிரமணியசாமி போன்றவர்கள் அடிக்கடி இதை நினைவு படுத்திக் கொண்டே இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத பிற  சாதியினருக்கு இது மண்டையில் ஏறுவதே இல்லை.

உற்பத்திக் கருவிகளின் கண்டுபிடிப்பு அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தொழில் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு தொழில்களைச் செய்பவர்கள் இன்று எல்லாச் சாதிகளிலும் இருந்தாலும் சாதிய முறையிலும் சாதிகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளிலும் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.

சாதிக்கும் நால்வர்ண தர்மத்துக்கும் தொடர்பேதுமில்லை; சாதியை பார்ப்பனர்கள் தோற்றுவிக்கவில்லை என வாதிடுவோரும் உண்டு. அப்படியானால் இந்து மதத்தில் இத்தனை வகையான சாதிகள் எங்கிருந்து வந்தன? எப்போது வந்தன? இந்தச் சாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகள் எப்படி தோன்றின? இதற்கெல்லாம் மனுஸ்மிருதியிலேயே மனு பதிலளித்துவிட்டான்.

‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ (கீதை:4:13) மூன்று வேதங்களும் நானே (கீதை:9:17) என தாங்கள் படைத்ததை கிருஷ்ணன் படைத்ததாகக்கூறி நம்ப வைக்கின்றனர் பார்ப்பனர்கள். ஆண்டவனைக் கைகாட்டிவிட்டால் இவர்கள் உருவாக்கியதை கேள்விக்குள்ளாக்குவதே தெய்வக் குற்றமாகிவிடுமே! உலகில் உள்ள அனைத்து மதவாதிகளும் தங்களின் தத்துபித்துகளை ஆண்டவனைக் காட்டிதான் ஏய்த்து வருகின்றனர்.

தொடரும்.....







Monday, 12 November 2012

தித்திக்கும் தீபாவளி! யாருக்கு?


பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்து மீண்டும் நாடு திரும்பி, ஆட்சிப்பொறுப்பு ஏற்க வந்த இராமனுக்கு அயோத்தி நகர மக்கள் கொடுத்த வரவேற்பே பின்னாளில் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்பது வட இந்தியர்களின் நம்பிக்கையாம்.

நரகாசுரனை, கிருஷ்ணன் வதம் செய்த நாளை தென்னக மக்கள் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்களாம்.

இதோடு நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை. இந்தியாவையும் தாண்டி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறதாம் தீபாவளி.

சாதி, மத, இன, மொழி பேதமின்றி நல்லிணக்கத் திருவிழாவாக தீபாவளி நாட்டில் பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறதாம். இந்துவைத் தவிர வேறு எந்த மதத்துக்காரன் தீபாவளியைக் கொண்டாடுகிறான் என்று தெரியவில்லை – அதுவும் பல நூற்றாண்டுகளாக. இந்த சில - பல என்பதற்கு அளவுகோல் என்னவோ ? அது அவர்களுக்கே வெளிச்சம்! எந்தத் தீபாவளி நாயக்கன் கொட்டாய்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

கதைகள் எதுவாக இருப்பினும் அதை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் வியாபாரிகளும் நாளேடுகளும் தொலைக்காட்சிகளும் உங்களை விடப் போவதில்லை.

தொடரும் மின்வெட்டால் நாம் இருளிலேயே மூழ்கிக் கிடந்தாலும் – எப்போது மின்சாரம் வரும் என ஏங்கி ஏங்கி ஏமாற்றம் அடைந்தாலும், மின் கட்டணம், பெட்ரோல்-டீசல் விலை, பேருந்து கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என அரசின் புதிய புதிய கொள்கைகளால் இருக்கிற பொழப்பும் நிலைக்குமா – எதிர்காலம் என்னவாகும் என்கிற அச்சத்தோடு ஒவ்வொரு நாளையும் நாம் எதிர் கொண்டிருக்கும் வேளையில் நாக்கூசாமல் இருள் அகன்று, ஒளி கிடைக்கும் தீபாவளி என ஊதிப் பெருக்குகின்றன ஊடகங்கள். ஆனால் எப்படி ஒளி கிடைக்கும் என அவனும் சொல்லப் போவதில்லை, நாமும் சிந்திக்கப் போவதில்லை.

இது தித்திக்கும் தீபாவளியாம். வண்ண வண்ணமாக எழுதுகின்றன பத்திரிகைகள். வர்ண்ஜாலம் காட்டுகின்றன தொலைக்காட்சி ஊடகங்கள். பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் வண்ண வண்ண விளம்பரங்களால் வாரிச்சுருட்டுகின்றனர். இது அவர்களுக்கு தித்திக்கும் தீபாவளிதான்.

விளப்பரங்களுக்கு கொட்டிக் கொடுத்தக் காசையும் சேர்த்து - பேரீட்சம் பழத்துக்குகக்கூட லாயக்கற்ற ஓட்டை உடைசல் வீட்டு உபயோகப் பொருட்களையும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என ஆசை காட்டியும், கரித்துணிக்குக்கூட தேறுமா என்கிற நிலையில் ஆண்டுக் கணக்கில் தேங்கிப்போன ஜவுளித் துணிகளை வண்ண வண்ண விளம்பரங்களைக் காட்டி மயக்கியும் நம் தலையில் கட்டும் பெரும் வியாபாரிகளுக்கு இது தித்திக்கும் தீபாவளிதான்.

சிவகாசியில் தொழிலாளர்கள் கருகினால் என்ன, எனக்கு பை நிறைந்தால் போதும் என ஒரு நாள் கூத்துக்காக தயாரிக்கப்படும் பட்டாசுகள் மூலம் ஓராண்டு லாபத்தைச் சுருட்டும் பட்டாசு ஆலை முதலாளிகளுக்கு இது தித்திக்கும் தீபாவளிதான்.

இந்திய உணவுக்கிடங்குளில் மக்கிப்போகும் கோதுமையாக இருந்தாலும் அதிலேயும் அல்வா கிண்டி நம் வாயை அடைத்து பாக்கெட்டில் உள்ளதை லவட்டிக் கொள்ளும் பெரும் ஸ்வீட் ஸ்டால் ஓனர்களுக்கு இது தித்திக்கும் தீபாவளிதான்.

வாழ்க்கை மின்னுகிறதோ இல்லையோ தங்கத்தால் பெண்களை ஜொலிக்க வைக்கும் ஜீவல்லர்ஸ்காரனுக்கு இது தித்திக்கும் தீபாவளிதான்.
எது எப்படியோ ஊருக்குச் சென்று உறவுகளையாவது பார்க்கலாம் என பேருந்து நிலையம் சென்றால் –

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அரசுப் பேருந்தில் செல்ல ஓராண்டுக்கு முன்பு கட்டணம் ரூ.300 இருந்ததை ரூ.600 ஆக உயர்த்தியதையே தாங்க முடியவில்லை. இந்த தீபாவளி சீசனில் தனியார் ஆம்னி பேருந்துகளில் ரூ.1500 என்றால் தாங்கவா முடியும்? ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது மற்றவர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ! ஆம்னி பேருந்துக்காரன் தீபாவளிக்குப் பிறகு இன்னொரு பேருந்தை வாங்கிவிடுவான். இது அவனுக்கு தித்திக்கும் தீபாவளிதான்.

தீபாவளிக்குப் பிறகு -

முதலாளி கணக்குப் பார்ப்பான் – லாபம் எவ்வளவு என்று!
உழைப்பாளியும் கணக்குப் பார்ப்பான் – இழந்தது எவ்வளவு என்று!

Monday, 21 November 2011

கூடங்குளம்: 'மம்மி' நாயகன் வருவானா?

பொதுவாக வெளியூர் பயணம் சென்றால் அவ்வூர் எதற்குப் பெயர் பெற்றது என்பதை அறிந்து அதை வாங்கி வந்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பது இன்றும் நம் வழக்கத்தில் உள்ள ஒன்று. திருநெல்வேலி அல்வா என்றாலே 'பாவ்லோ' கூற்றுப்படி நாவில் ஊறும் எச்சிலை யாரால்தான் நிறுத்தமுடியும்? 

திருவில்லிபுத்தூர் பால்கோவா, நாக்பூர் சோன்பப்டி, லோனேவாலா கடலை மிட்டாய், கிருஷ்ணன் கோவில் கொய்யா, ஆக்ரா பூசனிக்காய் அல்வா, நாக்பூர் ஆரஞ்சு, திண்டுக்கல் பன்னீர் திராட்சை, சந்தவாசல் வாழைப்பழம், திருப்பதி லட்டு, சேலம் மாம்பழம், பன்ருட்டி பலா, மணப்பாறை முருக்கு, ஊட்டி வறிக்கி, அய்தராபாத் பேப்பர் ஸ்வீட், சிம்லா ஆப்பிள், கொல்லிமலை அண்ணாசி, கொடைக்கானல் பேரிக்காய் என இவற்றிற்கு இவ்வூர்கள் புகழ் பெற்றுள்ளதால் அவ்வூர்களுக்குச் சென்று வெறுங்கையோடு திரும்ப முடியுமா? என்னப்பா திருநெல்வேலிக்குப் போயிட்டு அல்வா வாங்காம சும்மா வந்திட்டியே என உறவினர்களும் நண்பர்களும் கேட்காமல் விட மாட்டார்கள். 

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன் முறையாக இராசபாளையம் சென்றிருந்தேன். இராசபாளையம் நாய் புகழ் பெற்றது என்பதால் அதையா வாங்கி வரமுடியும்? பேருந்து நிலையத்துக்கு எதிரில் ஒரு இனிப்புக் கடையைப் பார்த்தேன். விறகு மிலார்களைப் போல குவிக்கப்படிருந்த காராசேவும், ஆள் உயரத்துக்கு சுருட்டி அடுக்கப்பட்டிருந்த வெள்ளை நிற தேன்மிட்டாயும் என்னை மிகவும் கவர்ந்தன. இந்த ஊரின் சிறப்பு என்னவென்று வினவினேன். தேன்மிட்டாய் என்றார்கள்.  விலையோ மிகக் குறைவு. ஒரு கிலோ முப்பது ரூபாய்க்கும் குறைவுதான். ஒரு கிலோ வேண்டும் என்றேன். உடனே பெரிய பனை ஓலைக் கூடை ஒன்றை எடுத்தார்கள். எடை போட்டபிறகு தேன்மிட்டாயை பக்குவமாய் கூடைக்குள் அடைத்தார்கள். என் கையிலோ கூடுதலாக இன்னுமொரு சுமை என்றாலும் புதிதாய் ஒரு தின்பண்டத்தை வாங்கிச் செல்கிற மகிழ்ச்சியில் அது சுமையாகத் தெரியவில்லை. கூடவே சொஞ்சம் மிலார்களையும், தேன் குழலும் வாங்கிக் கொண்டேன். திருச்சிக்குத் திரும்பி வரும் போது, வரும் வழியில் திருவில்லிபுத்தூர் பால்கோவாவையும், கிருஷ்ணன் கோவில் கொய்யாவையும் வாங்கிக் கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. இருக்காதா பின்ன! ஒரே நேரத்தில் மூன்று சிறப்புகளையும் வாங்கிவிட்டேனே!

'பாலிதின் கேரி பேக்'

அப்படி வாங்கிய பொருள் எதற்கும் அன்று 'கேரிபேக்' இல்லை என்பது மற்றுமொரு சிறப்பு. ஆனால் இன்று ஐந்து ரூபாய்க்கு 'ஐஸ்கிரீம்' வாங்கினாலும் அதற்கும் ஒரு பாலிதின் கேரி பேக். இப்படி எதற்கெடுத்தாலும் கேரிபேக் என எங்கும் குவிந்துவிட்டதால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் கேட்டை விளக்க வேண்டிய அவசியமில்லை. அன்று தேன்மிட்டாய் ஒழுகி துணியெல்லாம் பாழாகிவிடுமோ என அச்சப்பட்டேன். அது உடனடி பாதிப்பு என்றாலும் துணியை துவைத்த பிறகு பாதிப்புக்கு முடிவு ஏற்பட்டு விட்டது. ஆனால் இன்று பாலிதின் கேரிபேக்குகளில் அடைத்துக் கொடுப்பதால் உடனடி பாதிப்பு ஏதும் இல்லை. பாதுகாப்பாக பொருளை எடுத்து வருகிறோம். ஆனால் பாலிதின் கேரிபேக்குகளால் ஏற்படும் எதிர்கால பாதிப்பு மனித குலத்திற்கே சவாலாய் உருவெடுத்து வருகிறது. அதனால்தான் கேரிபேக்குகளை தடை செய்ய வேண்டும் எனக் குரல் கொடுக்கிறோம்.

பல்வேறு நச்சு ஆலைகளால் பலருக்கு உடனடி வேலை வாய்ப்புகள் கிடைத்தன-கிடைக்கின்றன. ஆனால் அவற்றால் ஏற்படும் எதிர்கால பாதிப்பு சுற்று வட்டாரத்தையே வாழ இலாயக்கற்றதாக மாற்றிவருகிறது. பிரிட்ஜ் உள்ளிட்ட சில சொகுசுப் பொருட்கள் இன்று நமக்கு உடனடி சுகத்தை அளிக்கின்ற அதேவேளையில் ஓசோன் மண்டலத்தை ஓட்டையாக்கும் மீத்தேன் வாயுவை வெளியேற்றுவதால் அவற்றைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் என்கிறோம். ஏன்? ஓசோன் ஓட்டையாகிவிட்டால் எதிர்காலத்தில் மனித இனம் வாழ இலாயக்கற்றதாக இப்புவி மாறி விடும் என்பதால் புவி வெப்பமயமாவதிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்கிறோம்.

'மம்மி' நாயகன் வருவானா?

உடனடித் தேவையா அல்லது எதிர்காலப் பாதுகாப்பா? எது முதன்மையானது என்று பரிசீலித்தால் மனித குலத்தைக் காக்க வேண்டும் எனில் மேற்கண்ட கோரிக்கைகள் நியாயமானதே. இப்படித்தானே கூடங்குளத்தையும் பார்க்க வேண்டும்.

மின்சாரம் நமக்குத் தேவைதான்.மறுப்பதற்கில்லை.அதற்கு மாற்று வழிகளைத்தான் தேட வேண்டும். ஒரு முப்பது ஆண்டு காலத்திற்கோ அல்லது நாற்பதாண்டு காலத்திற்கோ கூடங்குளம் அணு உலை மின்சாரத்தைக் கொடுக்கும். அதுவரை பூகம்பமோ அல்லது சுனாமியோ வராது என்றே நம்புவோம். ஆனால் நாற்பதாண்டுகள் கழித்து ஆலையில் வேலைசெய்த ஊழியர்களும் அதிகாரிகளும் இலட்சங்களைச் சம்பாதித்துக் கொண்டு வேறு ஊர்களுக்குச் சென்று 'செட்டில்' ஆகிவிடுவார்கள்.  ஆனால் கூடங்குளம் மக்கள் எங்கே செல்வார்கள்?

புதைக்கப்பட்ட மனிதன் ஒருமுறையோ அல்லது அதிகப்படியாக மூன்று முறையோதான் 'உயிர்த்தெழுவான்'. இது சமய நம்பிக்கை. கூடங்குளத்தில் நியூட்ரான் என்கிற எமனை இன்று வேண்டுமானால் நான்கு சுவற்றுக்குள் அடைத்து வைக்கலாம் அல்லது எமனை அடக்க மாடரேட்டர்களை ஏவலாம். ஆனால் புதைக்கப்ட்ட பிறகு ஒரு முறையல்ல, ஓராயிரம் முறையல்ல, ஒன்று-இரண்டாய்,இரண்டு-நான்காய்,நான்கு-பதினாறாய், பதினாறு-இருநூற்று ஐம்பத்தாறாய்,இருநூற்று ஐம்பத்தாறு-அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்று முப்பத்தாறாய்.... எனப் பல்கிப் பெருகி கோடி கோடியாய் உயிர்த்தெழப் போகும் நியூட்ரான் எமன்களை விழுங்க அன்று மாடரேட்டர்கள் இருக்கமாட்டார்கள். இத்துக் கொண்டு வரும் சுவற்றின் ஓட்டைகளைக் கிழித்துக் கொண்டு வெளியேறப் போகும் நியூட்ரான் எமன்களை வெட்டி வீச 'மம்மி' நாயகன் வரப்போவதில்லை?

கோடிக்கணக்கில் உயிர்த்தெழப் போகும் நியூட்ரான் எமன்களை எதிர்கொள்வதா அல்லது அவற்றைக் கருவிலேயே அழிப்பதா என்பதே கூடங்குளம் மக்களின் இன்றைய போராட்டம்.