Saturday, 22 November 2025
சரித்திர நாளா? தரித்திர நாளா?
Friday, 4 October 2024
சாம்சங் தொழிலாளர்கள் நம்ம வீட்டுப் பிள்ளைகள் இல்லையா?
அண்மையில் எனது பள்ளித் தோழனிடம் குசலம் விசாரித்த போது, “புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமைக்குள் ஏரி கோடி போகவில்லை என்றால் அந்த ஆண்டு வேளாண்மை விளங்காது” என 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமைகளை நினைவு கூர்ந்தான்.
ஏரிப் பாசனத்தில் இரண்டு போகம் விளைந்தாலே, பத்தைப் பெத்துப் போட்டாலும் பட்டினி இல்லாமல் வாழ முடிந்தது அன்று.
சுற்றுச்சூழல் கேடுகளாலும், பருவநிலை மாற்றங்களாலும், வழமையான மழைப்பொழிவு அற்றுப் போனதால், வயிற்றுப் பாட்டுக்குக் கூலிகளாக நகரங்களை நோக்கி நகரத் தொடங்கினர் கிராமவாசிகள்.
கிராமப்புறங்களில் கிடைத்த அரைகுறை கல்வியில் நீந்திக் கரை சேர்ந்த ஒரு சிலர் ஆலைகளுக்கும், அலுவலக வேலைகளுக்குமாக இடம் பெயர்ந்தனர். படிக்காத பாமரர்களோ கிடைத்த வேலைகளில் ஒட்டிக்கொண்டனர்.
ஒரு பக்கம் வேலை கிடைத்தாலும், மறுபக்கம் விலைவாசி உயர்வால் மேலும் வயிறுகள் காய்ந்ததே ஒழிய நனைந்ததாய் இல்லை. 1980 களில் தொடங்கிய இந்தப் போக்கு, தாராளமயக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு 1990 களின் இறுதியில் தீவிரமடைந்தது.
நிரந்தரப் பணி என்றால் நிர்வாகத்திற்குச் சுமை என்பதை உணர்ந்துகொண்ட முதலாளிகள், நிரந்தரத் தன்மை கொண்ட வேலைகளைக்கூட ஒப்பந்த முறைக்கு மாற்றினார்கள்.
இதனால், முதலாளிகளின் வயிறுதான் பெருத்ததே ஒழிய, தொழிலாளர்களின் வாழ்வு மேலும் நலியவே செய்தது. வாங்குகிற சம்பளம் வயிற்றுக்கே எட்டாத போது வாடகைக்கு வீடெடுத்து நகரங்களில் தங்க முடியுமா என்ன?
தான் வாங்கும் ஊதியத்தில் தனக்குப் போக கொஞ்சமாவது உபரி இருந்தால்தானே உறவுகளையும் கவனிக்க முடியும்? தனக்கே எட்டாத போது அவன் என்னதான் செய்வான் பாவம்? ஓரிரு ஆண்டு அனுபவத்தில் கசந்து போய் மீண்டும் கிராமத்துக்கே திரும்ப சில இளைஞர்கள் முனைந்ததை உணர்ந்து கொண்ட முதலாளிகள் கிராமங்களை நோக்கித் தனது கம்பெனி வண்டிகளைத் திருப்பி விட்டு ஆட்களை அள்ளிச் செல்கின்றனர். அதே சம்பளம் என்றாலும், வாடகை மிச்சம் என்பதால் வேலையை விட முடியாமல் ஓரகடம், ஓசூரை நோக்கி ஆயிரக்கணக்கில் அன்றாடம் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
படிப்பைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு சிலர் அன்று மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை என பெரு நகரங்களை நோக்கி அரசாங்க வேலைகளுக்காக நகர்ந்தனர். இன்று அமெரிக்காவை நோக்கி ஹாயாய் ஆகாயத்தில் பறக்கின்றனர். அங்கேயே செட்டிலும் ஆகி விட்டனர்.
ஆனால் நம்ம ஆட்களும் இன்று துபாய்க்கும், எமிரேட்சுக்கும் என எங்கெங்கோ பறக்கின்றனர். அவர்கள் செல்வ வளம் பெருக்க நகர்கிறார்கள். நம்மவர்கள் வாழ்க்கைப் போராட்டத்திற்காக ஓடுகிறார்கள்.
பறக்க வேண்டாம், இங்கேயே சிறப்புப் பெறலாம் என்பதாலோ என்னவோ முதல்வர்கள் வெளிநாடுகளுக்குப் பயணிக்கிறார்கள், முதலீடுகளை ஈர்க்கிறார்கள். ஆலைகளும் வருகின்றன. வேலைகளும் கிடைக்கின்றன. ஆனால், உழைப்புதான் சுரண்டப்படுகிறதே ஒழிய தொழிலாளர்களின் வாழ்வு சிறப்புற்றதாகத் தெரியவில்லை.
நமது மண்ணை, நமது நீரை, நமது கச்சாப் பொருட்களை, நமது உழைப்பைச் சுரண்டும் அந்நிய முதலாளிகள் கோடி கோடியாய் தங்களது நாடுகளுக்கு அள்ளிச் செல்கின்றனர்.
ஒரு காலத்தில் ஆலையில் பணிபுரியும் அனைவருமே நிரந்தர ஊழியர்களாக இருந்தார்கள். நிரந்தர ஊழியர்கள் என்றால் முதலில் வேலைப் பாதுகாப்பு, போதுமான ஊதியம், விடுப்பு உள்ளிட்ட சட்டபூர்வமான எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், மெல்ல மெல்ல இங்கே ஒப்பந்த முறை புகுத்தப்பட்டு, வேறு எந்தவித சலுகைகளும் இல்லாமல் அற்பக் கூலிக்கு தொழிலாளர்கள் சுரண்டப்படுவது அதிகரித்தது.
இந்த ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 1970 இல் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுபோல தொழிலாளர்களுக்குச் சாதகமாகக் கொண்டுவரப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களை இன்று நான்கு சட்டத்தொகுப்புகளாகச் சுருக்கி முதலாளிகள் மேலும் தொழிலாளர்களைச் சுரண்டிக் கொழுக்க வழி செய்து கொடுத்திருக்கிறார் மோடி. இதனால் உழைப்பு சுரண்டல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் இப்படித்தான் தொழிலாளர்களைச் சுரண்டி வருகிறது.
இதனால், வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், தொழிற்சங்க அங்கீகாரம், மகப்பேறு விடுப்பு, 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு மாத காலமாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அயல்நாடுகளுக்கு ஆகாயத்தில் பறந்து முதலீடுகளை ஈர்க்கத் தெரிந்த முதல்வருக்கு, அருகில் உள்ள சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் மட்டும் கண்களுக்குத் தெரியவில்லையோ? தொழிலாளர்கள் எழுப்பும் முழக்கங்கள் ஆட்சியாளர்களின்
செவிகளை எட்டவில்லையோ?
கண்ணிருந்தும் குருடர்களாய், செவி இருந்தும் செவிடர்களாய் இருப்போரின் கண்களைக் திறக்க, செவிகளில் அறைய நீலமலை, கோவை, சென்னை, இராணிப்பேட்டை என தமிழ்நாடெங்கும் ஆங்காங்கே இடதுசாரிகளும், தொழிலாளர்களும் போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டுகின்றனர்.
'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கதைப்பதனால் களம் மாறாது. மாறாக, வேளாண் சட்டங்களுக்கு எதிராக வீதியில் இறங்கியது போல, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஷாகின்பாத்துகளைக் கண்டதைப் போல, ஜல்லிக்கட்டுக்காக மல்லுக் கட்டியதைப் போல சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாம் களமாட வேண்டாமா? அவர்கள் நம்ம வீட்டுப் பிள்ளைகள் இல்லையா?
ஊரான்
x
Saturday, 26 October 2019
தமிழகத்தில் இத்தனை இயக்கங்களா?
- அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (எடப்பாடி)
- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி (நடிகர் சரத்குமார்)
- அகில இந்திய சிவில் உரிமை பாதுகாப்புக் கட்சி
- அகில இந்திய சிறுபான்மையினர் முன்னணி
- அகில இந்திய தொழிற்சங்க ஒருங்கிணைப்புக்குழு (AICCTU)
- அகில இந்திய தொழிற்சங்க மையம் (AITUC)
- அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி (நடிகர் கார்த்திக்)
- அகில இந்திய பார்வார்டு பிளாக் (சுபாசிஸ்ட்)
- அகில இந்திய மக்கள் மேடை (வித்யாசாகர்)
- அகில இந்திய மஜ்லீஸ் கட்சி
- அகில இந்திய மாணவர் இயக்கம் (AISA) (இ.பொ.க) (மா.லெ) (விடுதலை)
- அகில இந்திய மாணவர் பேரவை (AISF) (CPI)
- அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
- அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி (ஐசக்)
- அகில பாரத இந்து மகா சபா
- அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP)
- அண்ணா திராவிடர் கழகம் (திவாகரன்)
- அண்ணா தொழிற் சங்கம்
- அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்
- அம்பேத்கர் மக்கள் இயக்கம்
- அம்பேத்கர் மக்கள் கழகம்
- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (தினகரன்)
- அரசு ஊழியர்
ஐய்க்கியப் பேரவை (வி.சி.க)
- அருந்ததியர் இளைஞர் பேரவை
- அருந்ததி மக்கள் கட்சி (வலசை இரவிச்சந்திரன்)
- அறப்போர் இயக்கம்
- அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் (டி.ராஜேந்தர்)
- அனைத்திந்திய தமிழக முன்னேற்றக் கழகம்
- அனைத்து திராவிடர் சமுதாய முன்னேற்றக் கழகம்
- ஆதித் தமிழர் கட்சி (கு.ஜக்கையன்)
- ஆதித் தமிழர் பேரவை (அதியமான்)
- ஆதித் தமிழர் மக்கள் கட்சி
- இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி
- இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக்
- இந்திய கண சங்கம் கட்சி
- இந்திய கிருஸ்துவ முன்னணி
- இந்திய குடியரசுக் கட்சி (A)
- இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI)
- இந்திய தேசிய மக்கள் கழகம்
- இந்திய தேசிய லீக்
- இந்திய தேசியக் காங்கிரஸ் (ராகுல் காந்தி)
- இந்திய தொழிற்சங்க நடுவம் (CITU)
- இந்திய மக்கள் கட்சி (மதச்சார்பற்ற)
- இந்திய மாணவர் சங்கம் (SFI) (CPI-M)
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) (CPI-M)
- இந்திய ஜனநாயகக் கட்சி (பாரிவேந்தர்)
- இந்தியக் குடியரசுக் கட்சி (செ.கு.தமிழரசன்)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (CPI)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (CPI-M)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (போல்ஷ்விக்)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) (மா.அ.க - SOC)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) (வர்க்கப் போராட்டம்)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) (விடுதலை)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ) (போல்ஷ்விக்)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)
- இந்து மக்கள் கட்சி (அர்ஜூன் சம்பத்)
- இந்து முன்னணி (இராம கோபாலன்)
- இல்லத்தார் முன்னேற்றக் கழகம்
- இளந் தமிழகம் (ராசன் காந்தி)
- இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கட்சி
- இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம்
- உரிமைத் தமிழ்த் தேசம்
- உழவர் உழைப்பாளர் கட்சி
- உழைக்கும் மக்கள் சேவைக் கட்சி
- உழைப்பாளி மக்கள் சட்சி
- எம்.ஜி்.ஆர் தொண்டர்கள் கட்சி
- எம்.ஜி.ஆர்.கழகம்
- என் இந்தியா என் உரிமைக் கட்சி
- ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்
- ஏழு தமிழர் விடுதலைக் கட்சி
- கலை இலக்கிய பெருமன்றம் (CPI)
- காந்திய மக்கள் கட்சி
- காமராஜ் ஆதித்தனார் கழகம்
- காமராஜ் தேசிய காங்கிரஸ்
- கைவினைஞர் முன்னேற்றக் கட்சி
- கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு)
- கொங்கு நாடு மக்கள் கட்சி
- கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி
- கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்
- கொங்குநாடு முன்னேற்றக் கட்சி
- சமத்துவக் கழகம்
- சமநீதிப் புலிகள்
- சமூக சமத்துவ மக்கள் படை (சிவகாமி)
- சமூக நீதிக் கட்சி
- சாதி அதிகார எதிர்ப்பு முன்னணி
- சாதி ஒழிப்பு முன்னணி
- சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி
- சிவசேனா
- சுயாட்சி இந்தியா
- செங்கதிர் இயக்கம்
- தந்தை பெரியார் திராவிடர் கழகம் (கோவை.இராமகிருஷ்ணன்)
- தமழ்நாடு அறிவியல் இயக்கம்
- தமழ்நாடு மாணவர் இயக்கம்
- தமிழ் உரிமைக் கூட்டமைப்பு
- தமிழ் பேரரசுக் கட்சி (இயக்குநர் கவுதமான்)
- தமிழ் மாநில முஸ்லீம் லீக்
- தமிழக இந்து மக்கள்
முன்னணி
- தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் (பொழிலன்)
- தமிழக திராவிட மக்கள் கட்சி
- தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
- தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
- தமிழக
மக்கள் முன்னணி (அரங்க குணசேகரன்) (கூட்டமைப்பு)
- தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்)
- தமிழக மக்கள் விடுதலை இயக்கம்
- தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
- தமிழக முற்போக்கு மக்கள் கட்சி
- தமிழக வாழ்வுரிமைக் கட்சி (வேல்முருகன்) I
- தமிழக ஜனதா கட்சி
- தமிழ்த் தேச இறையாண்மைக் கட்சி
- தமிழ்த் தேச குடியரசுக் கட்சி (சிலம்பரசன்)
- தமிழ்த் தேச மக்கள் கட்சி
- தமிழ்த் தேச மக்கள் முன்னணி (மீ.த.பாண்டியன்)
- தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
- தமிழ்த் தேசிய பாதுகாப்பு இயக்கம்
- தமிழ்த் தேசிய பேரியக்கம்
(மணியரசன்)
- தமிழ்த் தேசிய மலை நாடு மக்கள் கட்சி
- தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் (தியாகு)
- தமிழ்நாடு இளைஞர் இயக்கம்
- தமிழ்நாடு இளைஞர் கட்சி
- தமிழ்நாடு இளைஞர் கழகம்
- தமிழ்நாடு இளைஞர் முன்னணி
- தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
- தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ்
- தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
- தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் கட்சி
- தமிழ்நாடு தேசிய ஆன்மீக மக்கள் கட்சி
- தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (தமிழரசன்)
- தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) (கலியபெருமாள்)
- தமிழ்நாடு மக்கள் கட்சி
- தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ்
- தமிழ்நாடு
மாணவர் இயக்கம்
- தமிழ்நாடு மாணவர் இளைஞர் கழகம்
- தமிழ்நாடு மாணவர் முன்னணி
- தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா) (மீ.த.பாண்டியன்)
- தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி (த.நா.மா.லெ)
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (CPI-M)
- தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
- தமிழ்நாடு முஸ்லீம் லீக்
- தமிழ்நாடு விடுதலை புலிகள்
- தமிழ்ப் புலிகள் கட்சி (நாகை திருவள்ளுவன்)
- தமிழர் உரிமை இயக்கம்
- தமிழர் எழுச்சி இயக்கம்
- தமிழர் கட்சி
- தமிழர் கழகம்
- தமிழர் தன்மானப் பேரவை
- தமிழர் தேசிய முன்னணி
- தமிழர் பூமி
- தமிழர் முன்னணி
- தமிழர் விடியல் கட்சி (மார்ட்டின் லாட்டரி டைசன்)
- தமிழர் விடுதலைக் கழகம்
- தமிழர் விடுதலைக் களம்
- தமிழரசுக் கட்சி
- தலித் மக்கள் கழகம்
- தலித் மக்கள் முன்னேற்றக் கழகம்
- தன்னாட்சித் தமிழகம் (ஆழி.செந்தில்நாதன்)
- தியாகி இம்மானுவேல் பேரவை
- திராவிட இயக்கத் தமிழர் பேரவை (சுப.வீ)
- திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
- திராவிட முன்னேற்றக் கழகம் (ஸ்டாலின்)
- திராவிட விழிப்புணர்வு கழகம்
- திராவிடத் தமிழர் கட்சி
- திராவிடர் கழகம் (வீரமணி)
- திராவிடர் விடுதலைக் கழகம் (கொளத்தூர் மணி)
- தீண்டாமை ஒழிப்பு முன்னணி (CPI-M)
- தேசிய பார்வார்டு பிளாக்
- தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (விஜயகாந்த்)
- தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு
- தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (LPF)
- தொழிலாளர் விடுதலை முன்னணி (வி.சி.க)
- நமது மக்கள் கட்சி
- நாணல் நண்பர்கள்
- நாம் தமிழர் கட்சி (சீமான்)
- நெய்தல் வேங்கை இயக்கம்
- பகுஜன் சமாஜ் கட்சி (மாயாவதி)
- பச்சைத் தமிழகம் (சுப.உதயகுமார்)
- பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ்)
- பாரத் சேனா
- பாரதிய ஜனதாக் கட்சி (மோடி)
- புதிய தமிழகம் (டாக்டர் கிருஷ்ணசாமி)
- புதிய நீதிக் கட்சி (ஏ.சி.சண்முகம்)
- புதிய பொதுவுடமை இயக்கம்
- புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF) (ம.க.இ.க)
- புரட்சி சோசலிஸ்ட் கட்சி
- புரட்சி பாரதம் (பூவை ஜெகன் மூர்த்தி)
- புரட்சிகர இளைஞர் கழகம்
- புரட்சிகர இளைஞர் முன்னணி (த.நா.மா..லெ)
- புரட்சிகர தொழிலாளர் முன்னணி (த.நா.மா.லெ)
- புரட்சிகர பெண்கள் முன்னணி (த.நா.மா.லெ)
- புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF) (ம.க.இ.க)
- புரட்சிகர மாணவர் முன்னணி (த.நா.மா.லெ)
- புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் முன்னணி
(த.நா.மா.லெ)
- பூவுலகின் நண்பர்கள் (சுந்தர்ராஜன்)
- பெண்கள் எழுச்சி இயக்கம்
- பெரியார் அம்பேத்கர் சுயமரியாதை இயக்கம்
- பெரியார் அம்பேத்கர் முன்னேற்றக் கழகம்
- பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம்
- இளந்தமிழர் பாசறை
- பெருந்தலைவர் மக்கள் கட்சி (என்.ஆர்.தனபால்)
- பொது நல மாணவர் எழுச்சி இயக்கம் (வளர்மதி)
- பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
- பொதுமையர் பரப்புரை மன்றம்
- மக்கள் அதிகாரம் (ம.க.இ.க)
- மக்கள் இயக்கம்
- மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் (ம.க.இ.க)
- மக்கள் உரிமை மீட்பு இயக்கம்
- மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி (இந்தியா)
- மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
- மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க)
- மக்கள் சக்தி
- மக்கள் சக்தி கட்சி
- மக்கள் சமூக நீதிப் பேரவை
- மக்கள் சிந்தனைப் பேரவை
- மக்கள் தமிழ் தேசம் கட்சி
- மக்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகம்
- மக்கள் நீதி மய்யம் (கமல்)
- மக்கள் பாதை (சகாயம்)
- மக்கள் மனது சட்சி
- மக்கள் மன்றம் (காஞ்சி)
- மக்கள் வழிப்புணர்வு இயக்கம்
- மக்கள் விடுதலை முன்னணி
- மக்கள் விடுதலைக் கட்சி
- மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் (ம.ஜ.இ.க)
- மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி
- மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சி
- மண்ணின் மைந்தர்கள் கழகம்
- மதச் சார்பற்ற ஜனதா தளம்
- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (வைகோ)
- மனித நேய மக்கள் கட்சி
- மனித நேய ஜனநாயகக் கட்சி
- மஜ்லீஸ் கட்சி
- மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி (ஆனைமுத்து)
- மூவேந்தர் மக்கள் கட்சி
- மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
- மே 17 இயக்கம் (திருமுருகன் காந்தி)
- ராஷ்ட்டிரிய ஜனதா தளம்
- ராஷ்ட்ரிய சேவா சவங் (RSS)
- லெனின் கம்யூனிஸ்ட் கட்சி
- லோக் சத்தா கட்சி
- லோக் ஜன்சக்தி கட்சி
- வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி
- வள்ளி மக்கள் முன்னேற்றக் கழகம்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி (தொல்.திருமாவளவன்)
- விடுதலைத் தமிழ்ப் புலிகள்
- விவசாயி அன்புக் கட்சி
- வீரத் தமிழர் முன்னணி (நா.த.க)
- வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
- ஜம்மு - காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி
- ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா
- ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (U)
- ஜெபமணி ஜனதா
நன்றி
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
கோவணம்!
பால் வார்த்த தாயே போற்றி! போற்றி!
.jpeg)

