Showing posts with label காஞ்சிபுரம். Show all posts
Showing posts with label காஞ்சிபுரம். Show all posts

Tuesday, 7 January 2020

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? தொடர் - 1

ஜனவரி 6, காலை 6.55 க்கு ஜெ.பி யைப் பிடித்து விடலாம் என ஸ்கூட்டியை எடுத்தேன். சாவியைப் போட்ட போது அது சற்றே வாட்டமுடன் மௌனித்தது. பெட்ரோல் இல்லையாக்கும். அதனால்தான் அது இந்தியப் பொருளாதாரம் போல நகர மறுக்கிறது!. இந்த ஸ்கூட்டிதான் என்னை வாலாசாரோடு இரயில் நிலையம் வரை சுமக்க வேண்டும்.

மணி 6.35 ஐத் தாண்டி விட்டது. வேகமாகச் சென்றால்கூட வீட்டிலிருந்து இரயிலடி செல்ல 10 நிமிடங்களாவது ஆகும். அணைக்கட்டு ரோடில் ஒரு கிலோ மீட்டர் சென்றால்தான் ஸ்கூட்டிக்கு உயிரூட்டமுடியும். இது எதிர்த் திசை என்பதால் அதற்கொரு ஐந்து நிமிடம் என்றால்கூட பதினைந்து நிமிடம் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு ஸ்கூட்டியை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு பெட்ரோல் பங்க் சென்றேன். பணமதிப்பிழப்பு எ.டி.எம் போல பங்க்கிலும் அட்டை தொங்கியதால் இனி ஜெ.பி.யைப் பிடிப்பது உசிதமல்ல என்பதால் பேருந்து நிறுத்தம் வந்தேன். ஸ்கூட்டியை வண்டி ஸ்டாண்டில் ஓரங்கட்டிவிட்டு தற்செயலாய் கிட்டிய மகிழுந்து சவாரியில் சென்னைக்குப் பயணமானேன்.

காஞ்சிபுரம் வெள்ள கேட் தாண்டிய போது வானம் சற்றே மூட்டத்துடன் காணப்பட்டது. மார்கழி முடிந்து தை நெருங்கும் காலம் என்பதால் 'தை மாத மேக'ம்தான் நடனமாடத் தொடங்கி விட்டதோ என எண்ணியவாறு என் 'தேவி காதல் நளினம்' நினைவில் ஆட பயணத்தைத் தொடர்ந்தேன். சுங்குவார் சத்திரத்தை நெருங்கிய போது ஓட்டுநர் வைப்பரைப் போட்டார். எதற்கு எட்டு மணிக்கு வைப்பர் என எட்டிப் பார்த்த போது கார்மேகம் தன் ஈரக் கரங்களால் முகப்புக் கண்ணாடிகளை நனைத்திருந்தாள்.

முகப்பு ஒளியுடன் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மூன்றடிக்கு முன்னால் செல்லும் வாகனங்களைக்கூட மறைத்து வருணன் சற்றே ஆர்பரித்த போது பூவிருந்தவல்லி சேர்ந்தேன். வெளியூர் பயணம் என்றால் எப்பொழுதும் அக்யூ வெதரைப் பார்த்து குடையையும் உடன் கொண்டு செல்லும் நான் இது பனிக்காலம் என்பதால் கை வீசிச் சென்றேன். அதனால் வருணனின் குட்டுகளுக்கு ஆளானேன். புரிதலின்மையால்தானே நாம் பலரின் குட்டுக்கும் ஆளாகிறோம் என எண்ணிக் கொண்டு மூத்திரப் பையை காலி செய்ய மாநகராட்சி கழிப்பிடம் சென்றால் அங்கே ஜலமோ மலமோ எதுவானாலும் கட்டணம் ஐந்து ரூபாய்தானாம். என்ன செய்ய? அடக்கி வைத்தால் ஐயாயிரம் செலவாகுமே என மூத்திரப் பையை காலி செய்துவிட்டு அண்ணா சதுக்கம் செல்ல 25 ஜி யைத் தேடினேன்.

மழை வேறு கொட்டிக் கொண்டிருக்கிறது. வல்லி பேருந்து நிலையமே மழைநீர் சேகரிப்புத் தொட்டியாய்  மாறி இருந்ததால் அடி எடுத்து வைக்க அச்சமாய் இருந்தது. பேருந்து நிலையம் முழுக்க விரவிக் கிடந்த கோமாதக்களின் கழிவுகளால் கால் வைக்க இடமில்லாமல் மக்கள் திண்டாடினாலும் அதில் லாவகமாய் நடப்பது எப்படி என்பதில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர். கோமாதாக்கள் சுதந்திரமாய் சுற்றித் திரிகின்றன. நாமோ கால் வைக்க இடமில்லாமல் திண்டாடுகிறோம்.

ஊரான் 

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

ஜெ.பி-யிலே ஒரு நாள்!

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!


Sunday, 14 September 2014

சங்கரராமன் கொலை வழக்கு: அப்பீலுக்கு ஆப்பு!

2004 ம் ஆண்டு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரரராமன் கொலை வழக்கில் எதிரிகள் குற்றமற்றவர்கள் என புதுச்சேரி நீதிமன்றத்தால் நவம்பர் 23, 2013 ல் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பை எதிர்த்து 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்ய விரும்பாததால், மேல்முறையீடு செய்யாமல் விட்டுவிட்டது. 

அதைத் தொடர்ந்து புதுச்சேரி ஆளுநர் மேல்முறையீடு செய்ய பரிந்துரைத்ததையடுத்து இந்தப் பரிந்துரையை நடுவண் அரசின் அட்வகேட் ஜெனரலின் கருத்தை அறிய உள்துறை அமைச்சகத்தின் மூலம் அனுப்பி வைத்தது பதுச்சேரி அரசு. இவ்வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்த வழக்கு அல்லவென்றும், மீறி மேல்முறையீடு செய்தால் உயர்நீதி மன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாவோம் என்பதனால் மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என அட்வகேட் ஜெனரல் கருத்து தெரிவித்திருந்தார்.
 
தற்போது புதுச்சேரி அரசு அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு  சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வதில்லை என முடிவு செய்துவிட்டதால் இவ்வழக்கு ஒரேயடியாக ஊத்திமூடப்பட்டுவிட்டது என்பது உறுதியாவிவிட்டது.
சங்கரராமன் இப்போது உயிரோடு இல்லை; செத்துப் போனது என்னவோ உண்மை. அதுவும் கொலை செய்யப்பட்டு செத்துப் போனார் என்பது உலகத்துக்கே வெளிச்சம். இவ்வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் கொலையாளிகள் இல்லை என்பது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுவிட்டது. மேல்முறையீட்டுக்கான கதவும் மூடப்பட்டு விட்டதால் கீழமை நீதி மன்றம் தவறான தீர்ப்பு வழங்கியிருக்குமோ என்பதற்கான கேள்விக்கும் இனி இடமில்லை.

சங்கரராமன் கொலை வழக்கில் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. அப்படியானால் உண்மையான கொலையாளிகளை கண்டுபிடிக்கின்ற திறனை இழந்துவிட்டதா நமது காவல் துறை? உலகிலேயே ஸ்காட்லாந்து காவல்துறைக்கு அடுத்து மிகவும் திறமை வாய்ந்தது நமது காவல்துறைதான் என்பதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய்தானா? அப்படி எல்லாம் நமது காவல் துறையை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

சாதி – மத அடிப்படையிலும், ஏழை - பணக்காரன் என்கிற வர்க்க அடிப்படையிலும் மக்கள் வேறுபட்டு இருக்கும் ஒரு சமுதாயத்தில் பொதுவான நீதிக்கு வாய்ப்பே கிடையாது. இந்த வழக்கில் மட்டுமல்ல, பல்வேறு வழக்குகளிலும் பொதுவான நீதி நிலைநாட்டப்படுவதில்லை என்பதை மறுக்க முடியாது. சாதி – மதம் மற்றும் ஏழை – பணக்காரன் என்கிற அம்சங்களை கணக்கில் கொண்டே தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. இப்பொழுது மட்டுமல்ல, வரலாறு நெடுகிலும் இதுதான் நடைமுறையாக இருந்துள்ளது; இருந்தும் வருகிறது.

”பிராமணன் சட்டம் தெரிந்தவனாகையால், எந்தக் குற்றங்களையும் அரசன் பார்வைக்கு கொண்டு வரவேண்டியதில்லை; மாறாக தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு தன்னைக் காயப்படுத்தியவனை தண்டிக்கலாம்” (மனு: 11-31).

“தனக்குள்ள அதிகாரம், அரசனின் அதிகாரத்தைவிட வலுவானதாகையால், ஒரு பிராமணன் தனது எதிரிகளை தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டே தண்டிக்கலாம்” (மனு: 11-32).

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள், சங்கரராமனை மேற்குறிப்பிட்ட மனுதர்ம சட்டப்பிரிவுகளின் கீழ் கொலை செய்து தண்டித்திருக்கலாம். அப்படி தண்டித்திருந்தால் மனுதர்ம சட்டப்படி எதிரிகள் குற்றம் செய்ததாகக் கருத முடியாதே!

“ஒரு பிராமணன் குற்றம் செய்து விட்டால் அதற்குத் தண்டனையாக அவனது தலையை மழித்தாலே போதும்; அதுவே, அவனை தூக்கிலேற்றியதற்கு ஈடான தண்டனையாகும். ஆனால் மற்ற சாதியினர் குற்றம் செய்துவிட்டால் அவர்களை கண்டிப்பாக தூக்கிலிட வேண்டும்” (மனு: 8-379).

ஒரு வேளை சங்கரராமன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் தாங்கள் செய்த குற்றத்திற்காக தங்களது தலையை மழித்துக் கொண்டிருக்கலாம். அப்படி அவர்கள் மழித்துக் கொண்டிருந்தால் அதுவே, அவர்களை தூக்கிலேற்றியதற்கு ஈடான தண்டனையாகிவிடுகிறதே! பிறகு மீண்டும் எப்படி தண்டனை கொடுக்க முடியும்? இதையும் மீறி தண்டிப்பது ஒரு குற்றத்திற்கு இரண்டு முறை தண்டனை கொடுக்கின்ற பாபத்திற்கு நீதித்துறை ஆளாகிவிடக் கூடாதல்லவா? இக்கூற்றின்படிகூட  இவ்வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்ததல்லதானே!

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. சங்ரராமனை வேறு சாதியினர் எவரும் கொன்றிருந்தால் அவர்களுக்கு தூக்கு நிச்சயம் கிடைத்திருக்கும்.

சொத்து குவிப்பு வழக்கில் என்ன நடக்கிறது என செப்டம்பர் 20 அன்று பார்ப்போம்! இவ்வழக்கிலும் ‘எதிரி’ விடுவிக்கப்பட்டுவிட்டால் மனுதர்ம சட்டம் அமுலுக்கு வந்து விட்டது; தொகாடியாக்கள் சொல்வது போல இந்தியா 'ஹிந்து' நாடுதான் என உறுதியாக நம்பலாம்.