Sunday, 8 April 2018

ஐ.ஐ.டி தரமும் அண்ணா பல்கலைக்கழகமும்!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து, தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் மோடி அரசுக்கு எதிராக தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கர்நாடகவைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்ததன் மூலம் வெந்த புண்ணில் வேல் பாச்சுகிற வேலையை செய்திருக்கிறது மோடி அரசு.

ஏற்கனவே இசைப் பல்கலைக்கழகத்திற்கு கேரளாவைச் சேர்ந்த பிரமிளா தேவியும், டாக்கடர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஆந்திராவைச் சேர்ந்த சூரியநாராயண சாஸ்திரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், தமிழக மாணவர்களுக்காக செயல்படும் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து வெளிமாநிலத்தவரை துணை வேந்தர்களாக நியமிப்பதன் நோக்கம் என்ன?

இது குறித்து தொலைக்காட்சிகளில் பல்வேறு விவாதங்களும் நடத்தப்பட்டன. காவிரிநீர் போராட்டத்தை திசைதிருப்புவதற்கான ஒரு நடவடிக்கை எனவும், பார்ப்பன சக்திகள் கல்வி நிலையங்களை ஆக்கிரமித்து கல்வியை பார்ப்பன மயமாக்கும் ஒரு நடவடிக்கை எனவும் தமிழக மக்கள் சார்பாக வாதாடியவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு 170பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக்கூடவா அதற்கான தகுதி இல்லை என கேள்விகளை எழுப்புகின்றனர்.

நியூஸ்18, தந்தி டி.வி, சன் நியூஸ்  ஆகிய தொலைக்காட்சிகளில் இது குறித்து நடந்த விவாதங்களில் அருள்மொழி (தி.க), பாலு (பா.ம.க), ரமேஷ்பிரபா (பத்திரிக்கையாளர்), மனோதங்கராஜ் (தி.மு.க), பச்சையப்பன் (தமிழறிஞர்), நெடுஞ்செழியன் (கல்வியாளர்), உள்ளிட்டோர் தமிழக மக்களின் சார்பாக வாதிட்டனர். தமிழ் தெரியாத ஒருவரால் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் 572 உறுப்புக் கல்லூரிகளை எப்படி திறமையாக நிர்வகிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

சீனிவாசன் (பா.ஜ.க), பத்ரி சேஷாத்ரி (சமூக ஆர்வலர்), பாடம் நாராயணன் (சமூக ஆர்வலர்), அரசகுமார் (பா.ஜ.க) உள்ளிட்டோர் தகுதி, திறமை, நேர்மையின் அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக நியமனங்களை நியாயப்படுத்தி தமிழக மக்களுக்கு எதிராகவும் வாதிட்டனர்.

இத்தகைய நியமனங்களை தமிழர்-தமிழரல்லாதோர் பிரச்சனையாக பார்ப்பதா? அப்படி பார்ப்பது இனவெறியைத் தூண்டுவதாகாதா? வேறு மாநிலத்தவரை தமிழகத்தில் நியமனம் செய்வதை எதிர்த்தால் பிற மாநிலங்களில் தமிழர்களை நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா? நடுவண் அரசின்கீழ் இயங்கும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை என்பதும் ஒரு எதார்த்தமான உண்மை. இந்த நிலையில் பிறமாநில அரசுகளின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் தமிழர்களை துணை வேந்தர்களாக நியமிக்கவா போகிறார்கள்?

பார்ப்பனர்கள் வாதிடுவதைப் போல இத்தகைய நியமனங்களை தகுதி, திறமை, நேர்மையின் அடிப்படையில் பார்ப்பதுதான் சரியானதா? பிறப்பால் பார்ப்பனரல்லாதவர்கள்கூட தகுதி, திறமை, நேர்மை குறித்து பேசுகிறார்களே என கேள்வி எழுப்பலாம்.  பிறப்பால் பார்ப்பனர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பார்ப்பன இந்து மதக்கோட்பாடுகளை நியாப்படுத்தும் எவரும் பார்ப்பனியத்தை நிலை நாட்டும் பார்ப்பனர்களே.

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள மூவரும் பிறப்பால் பார்ப்பனர்கள் என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்ட பிறகுதான் தமிழகத்தில் இத்தகைய நியமனங்கள் நடந்தேறுகின்றன. இந்தியாவின் பிற பகுதிகளில் கல்வியை பார்ப்பன மயமாக்கும் நோக்கத்திற்காக இத்தகைய நியமனங்களை ஏற்கனவே பா.ஜ.க அரசு செய்து வருகிறது.

பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகத்தான் அவர்கள் தகுதி, திறமை, நேர்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகம் குறித்து கூப்பாடு போட்டு வருகின்றனர். பார்ப்பனர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்தாலும் அவர்கள் கையில் நிர்வாகத்தை ஒப்படைப்பது சந்தேகத்திற்கிடமின்றி தவறு என அம்பேத்கர் எச்சரிக்கிறார்@.

ஒரு நல்ல அரசு ஒரு திறமையான அரசைவிடச் சிறந்தது. பார்ப்பனர்கள் திறமையான அரசு பற்றி பேசுகிறார்கள். பார்ப்பனரல்லாதோர் கட்சி நல்ல அரசு குறித்து பேசுகிறது. எந்த ஒரு அரசும் அனுதாபத்துடன் செயல்படாவிட்டால் நன்மைகளைச் செய்ய முடியாது. பார்ப்பனர்கள் மட்டுமே பொறுப்பில் இருந்தால் அந்த நிர்வாகம் அனைவரிடமும் அனுதாபத்துடன் செயல்படாது என்கிறார் அம்பேத்கர்@.

மற்ற பொதுமக்களைவிட, தன்னை மேன்மையானவனாகக் கருதுபவன் ஒரு பார்ப்பனன். இயற்கையிலேயே தனது சாதியினருக்குச் சாதகமாக செயல்படுபவன். மக்களின் மீது அக்கறையில்லாததால் ஊழலுக்கு பலியாகிறவனாக இருக்கும் இப்படிப்பட்ட பார்ப்பனன் எப்படிச் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்? என கேள்வி எழுப்புகிறார் அம்பேத்கர்.@

திறமையே எல்லாம் என்ற நிலையை பார்ப்பனர்கள் எடுப்பதற்குக் காரணம் கல்வியில் அவர்கள் முன்னணியில் இருப்பதால்தான். திறமையை மட்டுமே அளவுகோலாக வைப்பதன்மூலம் அரசுப் பணிகளை ஏகபோகமாக பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொள்கின்றனர்.@

திறமைதான் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது என்றால் ஒரு ஆங்கிலேயரையோ, பிரெஞ்சு, ஜெர்மன் நாட்டவரையோ வேலைக்கு அமர்த்துவதில் தவறு ஏதும் இருக்க முடியாதே என்கிறார் அம்பேத்கர்.@ இதன்படி அண்ணா பல்கலைக்கழத்திற்கு திறமையானவர்தான் வேண்டும் என்றால் கர்நாடகாவில் தேடுவதைவிட அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ தேடலாமே!

அண்ணா பல்கலைக்கழகத்தை ஐ.ஐ.டி தரத்திற்கு உயர்த்துவேன் என்கிறார் சூரப்பா. ஒரு அமெரிக்கரை துணைவேந்தராக நியமித்தால் அவர் நேரடியாக உலகின் முதல்தர பல்கலைக்கழகமாக உயர்த்தி விடுவாரே!

அரசு வேலைகளில் பார்ப்பனர்களிடத்தில் சூத்திரர்களை வைத்தால் பார்ப்பனர்கள் மற்ற எல்லோரைவிடவும் உயர்ந்தவர்கள் என்கிற மனு தர்மத்தை நிலை நாட்ட முடியாது என்பதால்தான் தகுதி, திறமை, ஊழலற்ற நிர்வாகம் என்கிற போர்வையில் பார்ப்பன மனுதர்மத்தை நிலை நாட்டுவோரை கொள்கை முடிவு எடுக்கும் அரசு உயர் பதவிகளில் நியமித்து வருகின்றது பா.ஜ.க அரசு.

அண்ணா பல்கலைக்கழகம் ஐ.ஐ.டி தரத்திற்கு உயர்த்தப்படும் என்பதும், ஏற்கனவே ஐ.ஐ.டி அக்ரகாரத் தரத்தில் இருப்பதும் வேறு வேறு அல்லவே!.

@:பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 25 (தமிழ்), பக்கம்: 81 - 83

Thursday, 14 September 2017

எடப்பாடி ஆட்சி எப்படி நீடிக்கிறது?

பார்ப்பனர்கள் சிறந்த நிர்வாகிகளா? – அம்பேத்கரின் அதிரடி கேள்வி! தொடர்-2

ஆளும் தமிழ் மன்னர்கள் அன்று சூத்திரர்களாக்கப்பட்டதற்கும்; சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதற்குமான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா?

மனிதன் கடவுளின் அடிமைதானே! அப்படிதானே மக்கள் கருதுகிறார்கள். எனவேதான் மக்கள் கடவுளை சாமி என்று அழைப்பதோடு கடவுளை தெண்டனிட்டு வணங்கவும் செய்கிறார்கள்.  ஆனால் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை சாமி என்று அழைத்தால் அதற்கு என்ன பொருள்? அவனை வணங்குவதாகத்தான் பொருள்.

சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்ப்பனர்களை சாமி என்றுதான் மக்கள் விளித்தனர்; விளித்ததோடு வணங்கவும் செய்தனர். இன்றும்கூட பார்ப்பனர்களை சாமி என்று விளிப்பதும் வணங்குவதும் தொடரத்தான் செய்கிறது.

இந்து மதத்தைப் பொருத்தவரை இந்து மதக் கடவுளர்களை ஒருவன் வணங்குகிறான் என்றால் அவன் இந்து மத வேதங்களை வணங்குகிறான் என்று பொருள்.

மனிதர்களில் வேதம் ஓதும் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் (மனு: 1:97) என மனு விதி வகுத்ததால் பார்ப்பனர்களை வணங்குவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பார்ப்பனர்களை வணங்காமை என்பது வேதத்தை மதிக்காததற்கு ஒப்பாகும். வேதங்களை மதிக்கவில்லை என்றால் கடவுளையே மறுப்பதாகும். அதனால்தான் கடவுளுக்கு கொடுக்கிற மரியாதையை வேதங்களும், வேதங்களுக்கு கொடுக்கும் மரியாதையை வேதம் ஓதும் பார்ப்பனர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்ப்பட்டது.

எடப்பாடி ஆட்சி எப்படி நீடிக்கிறது?

பார்ப்பனர்களுக்கு மரியாதை கொடுப்பது என்றால் என்ன? அவர்களை சாமி என்று அழைப்பதோடு நிற்கவில்லை. நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சி நீடிக்க வேண்டும் எனில் பார்ப்பனர்களின் ஆலோசனைப்படிதான் ஆட்சி நடத்த வேண்டும்; நீதி செலுத்த வேண்டும். (மனு: 7-38).

நியாயம் எது என்று ஆட்சியாளர்கள் அறிந்திருந்தாலும் அந்த நியாயத்தை பார்ப்பனர்களிடத்தில்தான் அவர்கள் வணங்கிக் கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால் அவர்கள் ஆட்சியை இழக்கமாட்டார்கள். (மனு:7-39). அப்படிக் கேட்பதால்தான் இன்னமும் எடப்பாடி அரசு நீடிக்கிறதோ!.

பார்ப்பனர்களின் ஆலோசனைப்படி ஆட்சி செய்யவில்லை என்றால் அவர்கள் அரசை இழப்பார்கள். (மனு: 7-40). பார்ப்பனர்களை வணங்காததால்தான் வேனன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி போன்ற அரசர்கள் அழிந்து போனார்கள். (மனு:7-41).

பார்ப்பனர்களை எதிர்ப்பதால்தான் சூத்திரர்கள் ஆட்சிக்கு வந்தால் அதை அழிப்பதற்கும்; ஆட்சிக்கு வர முயன்றால் வரவிடாமல் தடுப்பதற்கும் பார்ப்பனர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறார்கள். இன்றை தமிழக அரசியல் இதற்குப் பொருந்துகிறதோ!

குடி-கும்மாளம், பாட்டு-கூத்து, துரோகம்-பொறாமை, பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்தல், குடி-கூத்தி என ஆட்சியாளர்கள் இருப்பார்களேயானால் அவர்கள், நீதி சாஸ்திரம், வேதாந்தம், தநுர் வேதம் இவைகளையறிந்தவர்களை (பார்ப்பனர்களை) ஆலோசனை சொல்வதற்கு வைத்துக் கொள்ள வேண்டியது. (மனு: 7-47 முதல் 54 வரை).

இவர்களிடத்தில் (பார்ப்பனர்களிடத்தில்) சண்டை-சச்சரவுகள்-சமாதானம் குறித்து ஆலோசிக்க வேண்டியது. (மனு: 7-56)

இவர்களிடத்தில் (பார்ப்பனர்களிடத்தில்) தினந்தோறும் நம்பிக்கையுடன் சகலத்தையுஞ்சொல்லி அவருடன் யோசித்து ஒரு காரியத்தை ஆரம்பிக்க வேண்டியது. (மனு: 7-59)

ஈ.பி.எசும்-ஓ.பி.எசும் முட்டி மோதிக் கொண்டதும், இன்று சமாதானம் ஆனதும், இந்த எடுபிடிகளின் ஆட்சி நீடிப்பதும், தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநர் நீடிப்பதும், கிரிஜா உள்துறைச் செயலாளர் ஆனதும் தற்செயலானதோ!

மேட்டூர் அணை இந்த ஆண்டாவது நிரம்பாதா, சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் திறந்து விடுவார்களா என ஏக்கத்தோடு காத்திருக்கும் வேளையில்தான் மகா புஷ்கரத்தையொட்டி பார்ப்பனர்கள் தங்களின் அழுக்கைக் கழுவ மேட்டூரிலிருந்து விநாடிக்கு 10000 கன அடி தண்ணீரை ஒரு வாரத்திற்கு தமிழக அரசு திறந்து விடுகிறது என்றால் இந்த அரசு யாருடைய ஆலோசனைப்படி, யாருக்காக செயல்படுகிறது என்பதை என்னவென்பது?


யாருக்காக இந்த மகா புஷ்கர விழா?

பார்ப்பனர்களின் ஆலோசனை இல்லாமலா  நீட் தேர்வு, ஹைரோ கார்பன் திட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம் உள்ளிட்ட பா.ஜ.க அரசின் திட்டங்களுக்கு தமிழக எடுபிடி அரசு ஒப்புதல் கொடுத்தது? 

பார்ப்பனர்களை வணங்கவில்லை எனில்….

பார்ப்பனர்களை வணங்காத காரணத்தினால் பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம்  ஆசிய நாடுகளை ஆண்ட சத்திரியர்கள் எல்லாம் சூத்திர நிலைக்கு தள்ளப்பட்டார்கள். (மனு: 10-43 & 44).

அரசனே சூத்திர நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு சாமான்ய சூத்திர மக்களுக்கு கல்வி கிடைத்திருக்குமா? அடுத்த தொடரில் பார்க்கலாம்.


தொடர்புடைய பதிவுகள்:

பார்ப்பனர்கள் சிறந்த நிர்வாகிகளா? – அம்பேத்கரின் அதிரடி கேள்வி!

ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கானசட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக்கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*‘நமஸ்காரம்’ சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 2

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

Monday, 11 September 2017

பார்ப்பனர்கள் சிறந்த நிர்வாகிகளா? – அம்பேத்கரின் அதிரடி கேள்வி!

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகப் பொதுமறையை ஒரு தமிழனால் படைக்க முடிந்தது. தமிழனின் பண்பாட்டை பறை சாற்றும் சங்க இலக்கியங்களை வடிக்க முடிந்தது. அதன் பிறகு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக சொல்லிக் கொள்ளும்படியான இலக்கியங்கள் தமிழனால் ஏன் படைக்க முடியவில்லை?

இடைப்பட்ட காலத்தில் குறிப்பாக ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் ஆட்சி காலத்தில், தமிழனை, கடவுளின் பித்தனாக்கிய பக்தி இலக்கியங்களும், இதிகாச புராணக் குப்பைகளுமே புகுத்தப்பட்டன. மக்களைப் பற்றி பாட்டெழுதியவர்கள் எல்லாம் மகான்களைப் பற்றி மட்டுமே எழுத பணிக்கப்பட்டனர்.

இத்தகைய பார்ப்பன பண்பாட்டுக்கு எதிராக குரல் எழுப்பிய; பார்ப்பனர்களின் ஆலோசனைகளையும் – வேதங்களையும் ஏற்க மறுத்த ஒரே காரணத்திற்காக அன்றைய ஆளும் தமிழ் மன்னர்கள் எல்லாம் சூத்திரர்களாக்கப்பட்டனர். மன்னர்களே சூத்திர நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு மக்களின் நிலை பற்றி சொல்லவா வேண்டும்?

இன்றைய எடப்பாடி அரசு போல அன்றும் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து தங்களது எடுபிடிகளின் ஆட்சியை நிறுவிக் கொண்டு, இன்று நீட் தேர்வை புகுத்தி சாமான்ய மக்களின் கல்வியை பறிப்பது போல அன்று சூத்திரர்கள் கல்வியே பயிலக்கூடாது என பார்ப்னர்கள் சட்டம் வகுத்தனர்.

சூத்திரன் கல்வி கற்றால் அவன் நாக்கை அறுத்தெறி; காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என சட்டம் இயற்றி அன்று நமது மூதாதையரின் கல்வி உரிமையைப் பறித்தனர். இன்று நீட் எனும் பார்ப்பன பயங்கரவாத ஆயுதத்தைக் கொண்டு அனிதாவின் கல்வி உரிமையை பறித்ததோடு அவரை கொன்றொழித்தனர். நீட்டுக்கு பாட்டை போடும் எடப்பாடிகள் நீடிக்கும் வரை இந்தப் படுகொலை அனிதாவோடு நிற்கப் போவதில்லை.

இன்று நீட்டுக்கு எதிராக போராடுவோரை தேசத்துரோகிகள் என் முத்திரை குத்துகின்றனர். அன்று பார்ப்பன மனு நீதிக்கு எதிராக போராடியோரை அசுரர்கள் என முத்திரை குத்தினர்.

காலங்கள்தான் உருண்டோடியிருக்கின்றன. ஆனால் தர்மம் என்னவோ மனு காலத்தில்தான் நிற்கின்றன.

ஆளும் தமிழ் மன்னர்கள் அன்று சூத்திரர்களாக்கப்பட்டதற்கும்; சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதற்குமான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா என்பது குறித்து அடுத்த தொடரில் பார்ப்போம்.

தொடரும் …..

தொடர்புடைய பதிவகள்:

இந்து மதக் கொடுங்கோண்மை: கவுரி லங்கேஷ் படுகொலை!

ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கானசட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக்கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*‘நமஸ்காரம்’ சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! .....தொடர்: 2


*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

Thursday, 7 September 2017

இந்து மதக் கொடுங்கோண்மை: கவுரி லங்கேஷ் படுகொலை!

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் ஜவார்கி அருகே சன்னூர் என்கிற குக்கிராமத்தில் தலித் ஒருவருக்குச் சொந்தமான ஒரு கிணற்றில் தலித்துகள் தண்ணீர் எடுக்கிறார்கள் என்பதற்காக அந்தக் கிணற்றில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து கிணற்று நீரை நஞ்சாக்கியிருக்கிறார்கள் இந்து மத கவுடா சாதி வெறியர்கள். 
இத்தகையை இந்து மதவெறிக் கொடுங்கோண்மைக்கு எதிராக துணிச்சலாக, ஒரு பெண்மணி, அதுவும் தன்னந்தனியாய் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த எழுத்தாளர் கவுரி லங்கேஷை கொடூரமாக - கோழைத்தனமாக படுகொலை செய்துள்ளது ஆர்.எஸ்.எஸின் இந்து மதவெறிக் கும்பல். 
கவுரி லங்கேஷ்
'கோழையே..!'
என்னிடம் தோட்டாக்கள்
என்னிடம் அழியா வார்த்தைகள்
எதற்கும் அஞ்ச மாட்டேன்.
நான் கவுரி லங்கேஷ்'
இதுதான் இந்து மதவெறிக் கோழைகளுக்கு அவர் விட்டுச் சென்ற வீரஞ்செறிந்த போர் முழக்கம்.
இந்து மதம் இருக்கின்றவரை சமூக ஏற்றத்தாழ்வுகளும் நீடிக்கவே செய்யும். ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் வரை கவுரி லங்கேஷ்க்கள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள். ஏற்றத் தாழ்வுகள் ஒழிய வேண்டுமனால் இந்து மதத்தை அழித்தாக வேண்டும். இந்து மதத்தை அழிக்க கவுரி லங்கேஷ்களாய், நரேந்திர தபோல்கர்களாய், கோதவிந்த் பன்சாரேக்களாய், எம்.எம்.கல்புர்கிகளாய் உருவெடுப்போம்! 
பெரியாரும், அம்பேத்கரும் காட்டிய வழியில் பார்ப்பன பாசிச இந்து மதவெறிக் கும்பலுக்கு சவக்குழி தோண்ட அணியமாவோம்! 
தொடர்புடைய பதிவுகள்:
நேற்று நான் கல்புர்கி... இன்று நான் கவுரி லங்கேஷ்!

எதற்கும் அஞ்சாத என் தோழியை காவி பயங்கரவாதத்துக்கு பலி கொடுத்துவிட்டேன்: கவுரி லங்கேஷின் நண்பர் வேதனை

கர்நாடகாவில் தலித் மக்களின் குடிநீர் கிணற்றில் விஷம் கலப்பு: 3 பேர் கைது. 

Friday, 1 September 2017

நீட் தேர்வு: அனிதாவைக் கொன்ற குற்றவாளிகள்!

ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதாவைக் கொன்று விட்டார்கள்.

நீட் தேர்வை கட்டாயமாக்கி அனிதாவை தற்கொலைக்குத் தூண்டிய பிரதமர் உள்ளிட்ட காவிக்கூட்டம் முழுவதும் கொலைக் குற்றவாளிகளே! 

இந்தக் காவிக் குற்றவாளிகளின் குற்றச் செயலுக்கு உதவி செய்த உச்சிக்குடுமி மன்றமும் குற்றவாளியே!

காவிகளின் காலை நக்கிக் கொண்டு குற்றச் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எடப்பாடி, ஓ.பி.எஸ், உயர் கல்வி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்கள் உள்ளிட்ட ஒட்டுண்ணிக் கூட்டத்தைச் சேர்ந்த அனைவரும் குற்றவாளிகளே! 

ஜெயலலிதா என்கிற ஒரு கிரிமினல் குற்றவாளியை கொஞ்சமும் கூச்சமின்றி செத்த பிறகும் 'இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா' என கூப்பாடு போடும் ஒரு கூட்டத்திடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?

பல லட்சக் கணக்கில் தொண்டர்களைக் கொண்ட - அதுவும் சமூக நீதிக்கு பேர் போன தமிழக அரசியல் கட்சிகள் நீட்டுக்குப் பாடை கட்டத் தவறியது நமக்கெல்லாம் தலைகுனிவில்லையா?

காவிக்கூட்டததையும், காவிகளின் அடிவருடிகளான 'அம்மா' கூட்டத்தையும் தமிழகத்திலிருந்து கருவறுக்காமல் அனிதாக்களின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு ஒரே வழி தமிழகம் மீண்டும் மெரினாவாகவேண்டும்.