தமிழகத்தில் களமாடும் கட்சிகள் / இயக்கங்கள். இவற்றில் எத்தனை களமாடுகின்றன? எத்தனை பெயர்ப்பலகை அமைப்புகள்? எத்தனை தேர்தல் சமயங்களில் மட்டும் தலை காட்டுகின்றன? என்பதை களநிலவரங்களை உற்று நோக்கினால் தெரிந்து கொள்ள முடியும்.
- அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (எடப்பாடி)
- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி (நடிகர் சரத்குமார்)
- அகில இந்திய சிவில் உரிமை பாதுகாப்புக் கட்சி
- அகில இந்திய சிறுபான்மையினர் முன்னணி
- அகில இந்திய தொழிற்சங்க ஒருங்கிணைப்புக்குழு (AICCTU)
- அகில இந்திய தொழிற்சங்க மையம் (AITUC)
- அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி (நடிகர் கார்த்திக்)
- அகில இந்திய பார்வார்டு பிளாக் (சுபாசிஸ்ட்)
- அகில இந்திய மக்கள் மேடை (வித்யாசாகர்)
- அகில இந்திய மஜ்லீஸ் கட்சி
- அகில இந்திய மாணவர் இயக்கம் (AISA) (இ.பொ.க) (மா.லெ) (விடுதலை)
- அகில இந்திய மாணவர் பேரவை (AISF) (CPI)
- அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
- அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி (ஐசக்)
- அகில பாரத இந்து மகா சபா
- அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP)
- அண்ணா திராவிடர் கழகம் (திவாகரன்)
- அண்ணா தொழிற் சங்கம்
- அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்
- அம்பேத்கர் மக்கள் இயக்கம்
- அம்பேத்கர் மக்கள் கழகம்
- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (தினகரன்)
- அரசு ஊழியர்
ஐய்க்கியப் பேரவை (வி.சி.க)
- அருந்ததியர் இளைஞர் பேரவை
- அருந்ததி மக்கள் கட்சி (வலசை இரவிச்சந்திரன்)
- அறப்போர் இயக்கம்
- அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் (டி.ராஜேந்தர்)
- அனைத்திந்திய தமிழக முன்னேற்றக் கழகம்
- அனைத்து திராவிடர் சமுதாய முன்னேற்றக் கழகம்
- ஆதித் தமிழர் கட்சி (கு.ஜக்கையன்)
- ஆதித் தமிழர் பேரவை (அதியமான்)
- ஆதித் தமிழர் மக்கள் கட்சி
- இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி
- இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக்
- இந்திய கண சங்கம் கட்சி
- இந்திய கிருஸ்துவ முன்னணி
- இந்திய குடியரசுக் கட்சி (A)
- இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI)
- இந்திய தேசிய மக்கள் கழகம்
- இந்திய தேசிய லீக்
- இந்திய தேசியக் காங்கிரஸ் (ராகுல் காந்தி)
- இந்திய தொழிற்சங்க நடுவம் (CITU)
- இந்திய மக்கள் கட்சி (மதச்சார்பற்ற)
- இந்திய மாணவர் சங்கம் (SFI) (CPI-M)
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) (CPI-M)
- இந்திய ஜனநாயகக் கட்சி (பாரிவேந்தர்)
- இந்தியக் குடியரசுக் கட்சி (செ.கு.தமிழரசன்)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (CPI)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (CPI-M)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (போல்ஷ்விக்)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) (மா.அ.க - SOC)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) (வர்க்கப் போராட்டம்)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) (விடுதலை)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ) (போல்ஷ்விக்)
- இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)
- இந்து மக்கள் கட்சி (அர்ஜூன் சம்பத்)
- இந்து முன்னணி (இராம கோபாலன்)
- இல்லத்தார் முன்னேற்றக் கழகம்
- இளந் தமிழகம் (ராசன் காந்தி)
- இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கட்சி
- இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம்
- உரிமைத் தமிழ்த் தேசம்
- உழவர் உழைப்பாளர் கட்சி
- உழைக்கும் மக்கள் சேவைக் கட்சி
- உழைப்பாளி மக்கள் சட்சி
- எம்.ஜி்.ஆர் தொண்டர்கள் கட்சி
- எம்.ஜி.ஆர்.கழகம்
- என் இந்தியா என் உரிமைக் கட்சி
- ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்
- ஏழு தமிழர் விடுதலைக் கட்சி
- கலை இலக்கிய பெருமன்றம் (CPI)
- காந்திய மக்கள் கட்சி
- காமராஜ் ஆதித்தனார் கழகம்
- காமராஜ் தேசிய காங்கிரஸ்
- கைவினைஞர் முன்னேற்றக் கட்சி
- கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு)
- கொங்கு நாடு மக்கள் கட்சி
- கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி
- கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்
- கொங்குநாடு முன்னேற்றக் கட்சி
- சமத்துவக் கழகம்
- சமநீதிப் புலிகள்
- சமூக சமத்துவ மக்கள் படை (சிவகாமி)
- சமூக நீதிக் கட்சி
- சாதி அதிகார எதிர்ப்பு முன்னணி
- சாதி ஒழிப்பு முன்னணி
- சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி
- சிவசேனா
- சுயாட்சி இந்தியா
- செங்கதிர் இயக்கம்
- தந்தை பெரியார் திராவிடர் கழகம் (கோவை.இராமகிருஷ்ணன்)
- தமழ்நாடு அறிவியல் இயக்கம்
- தமழ்நாடு மாணவர் இயக்கம்
- தமிழ் உரிமைக் கூட்டமைப்பு
- தமிழ் பேரரசுக் கட்சி (இயக்குநர் கவுதமான்)
- தமிழ் மாநில முஸ்லீம் லீக்
- தமிழக இந்து மக்கள்
முன்னணி
- தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் (பொழிலன்)
- தமிழக திராவிட மக்கள் கட்சி
- தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
- தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
- தமிழக
மக்கள் முன்னணி (அரங்க குணசேகரன்) (கூட்டமைப்பு)
- தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்)
- தமிழக மக்கள் விடுதலை இயக்கம்
- தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
- தமிழக முற்போக்கு மக்கள் கட்சி
- தமிழக வாழ்வுரிமைக் கட்சி (வேல்முருகன்) I
- தமிழக ஜனதா கட்சி
- தமிழ்த் தேச இறையாண்மைக் கட்சி
- தமிழ்த் தேச குடியரசுக் கட்சி (சிலம்பரசன்)
- தமிழ்த் தேச மக்கள் கட்சி
- தமிழ்த் தேச மக்கள் முன்னணி (மீ.த.பாண்டியன்)
- தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
- தமிழ்த் தேசிய பாதுகாப்பு இயக்கம்
- தமிழ்த் தேசிய பேரியக்கம்
(மணியரசன்)
- தமிழ்த் தேசிய மலை நாடு மக்கள் கட்சி
- தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் (தியாகு)
- தமிழ்நாடு இளைஞர் இயக்கம்
- தமிழ்நாடு இளைஞர் கட்சி
- தமிழ்நாடு இளைஞர் கழகம்
- தமிழ்நாடு இளைஞர் முன்னணி
- தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
- தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ்
- தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
- தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் கட்சி
- தமிழ்நாடு தேசிய ஆன்மீக மக்கள் கட்சி
- தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (தமிழரசன்)
- தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) (கலியபெருமாள்)
- தமிழ்நாடு மக்கள் கட்சி
- தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ்
- தமிழ்நாடு
மாணவர் இயக்கம்
- தமிழ்நாடு மாணவர் இளைஞர் கழகம்
- தமிழ்நாடு மாணவர் முன்னணி
- தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா) (மீ.த.பாண்டியன்)
- தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி (த.நா.மா.லெ)
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (CPI-M)
- தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
- தமிழ்நாடு முஸ்லீம் லீக்
- தமிழ்நாடு விடுதலை புலிகள்
- தமிழ்ப் புலிகள் கட்சி (நாகை திருவள்ளுவன்)
- தமிழர் உரிமை இயக்கம்
- தமிழர் எழுச்சி இயக்கம்
- தமிழர் கட்சி
- தமிழர் கழகம்
- தமிழர் தன்மானப் பேரவை
- தமிழர் தேசிய முன்னணி
- தமிழர் பூமி
- தமிழர் முன்னணி
- தமிழர் விடியல் கட்சி (மார்ட்டின் லாட்டரி டைசன்)
- தமிழர் விடுதலைக் கழகம்
- தமிழர் விடுதலைக் களம்
- தமிழரசுக் கட்சி
- தலித் மக்கள் கழகம்
- தலித் மக்கள் முன்னேற்றக் கழகம்
- தன்னாட்சித் தமிழகம் (ஆழி.செந்தில்நாதன்)
- தியாகி இம்மானுவேல் பேரவை
- திராவிட இயக்கத் தமிழர் பேரவை (சுப.வீ)
- திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
- திராவிட முன்னேற்றக் கழகம் (ஸ்டாலின்)
- திராவிட விழிப்புணர்வு கழகம்
- திராவிடத் தமிழர் கட்சி
- திராவிடர் கழகம் (வீரமணி)
- திராவிடர் விடுதலைக் கழகம் (கொளத்தூர் மணி)
- தீண்டாமை ஒழிப்பு முன்னணி (CPI-M)
- தேசிய பார்வார்டு பிளாக்
- தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (விஜயகாந்த்)
- தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு
- தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (LPF)
- தொழிலாளர் விடுதலை முன்னணி (வி.சி.க)
- நமது மக்கள் கட்சி
- நாணல் நண்பர்கள்
- நாம் தமிழர் கட்சி (சீமான்)
- நெய்தல் வேங்கை இயக்கம்
- பகுஜன் சமாஜ் கட்சி (மாயாவதி)
- பச்சைத் தமிழகம் (சுப.உதயகுமார்)
- பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ்)
- பாரத் சேனா
- பாரதிய ஜனதாக் கட்சி (மோடி)
- புதிய தமிழகம் (டாக்டர் கிருஷ்ணசாமி)
- புதிய நீதிக் கட்சி (ஏ.சி.சண்முகம்)
- புதிய பொதுவுடமை இயக்கம்
- புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF) (ம.க.இ.க)
- புரட்சி சோசலிஸ்ட் கட்சி
- புரட்சி பாரதம் (பூவை ஜெகன் மூர்த்தி)
- புரட்சிகர இளைஞர் கழகம்
- புரட்சிகர இளைஞர் முன்னணி (த.நா.மா..லெ)
- புரட்சிகர தொழிலாளர் முன்னணி (த.நா.மா.லெ)
- புரட்சிகர பெண்கள் முன்னணி (த.நா.மா.லெ)
- புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF) (ம.க.இ.க)
- புரட்சிகர மாணவர் முன்னணி (த.நா.மா.லெ)
- புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் முன்னணி
(த.நா.மா.லெ)
- பூவுலகின் நண்பர்கள் (சுந்தர்ராஜன்)
- பெண்கள் எழுச்சி இயக்கம்
- பெரியார் அம்பேத்கர் சுயமரியாதை இயக்கம்
- பெரியார் அம்பேத்கர் முன்னேற்றக் கழகம்
- பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம்
- இளந்தமிழர் பாசறை
- பெருந்தலைவர் மக்கள் கட்சி (என்.ஆர்.தனபால்)
- பொது நல மாணவர் எழுச்சி இயக்கம் (வளர்மதி)
- பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
- பொதுமையர் பரப்புரை மன்றம்
- மக்கள் அதிகாரம் (ம.க.இ.க)
- மக்கள் இயக்கம்
- மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் (ம.க.இ.க)
- மக்கள் உரிமை மீட்பு இயக்கம்
- மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி (இந்தியா)
- மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
- மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க)
- மக்கள் சக்தி
- மக்கள் சக்தி கட்சி
- மக்கள் சமூக நீதிப் பேரவை
- மக்கள் சிந்தனைப் பேரவை
- மக்கள் தமிழ் தேசம் கட்சி
- மக்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகம்
- மக்கள் நீதி மய்யம் (கமல்)
- மக்கள் பாதை (சகாயம்)
- மக்கள் மனது சட்சி
- மக்கள் மன்றம் (காஞ்சி)
- மக்கள் வழிப்புணர்வு இயக்கம்
- மக்கள் விடுதலை முன்னணி
- மக்கள் விடுதலைக் கட்சி
- மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் (ம.ஜ.இ.க)
- மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி
- மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சி
- மண்ணின் மைந்தர்கள் கழகம்
- மதச் சார்பற்ற ஜனதா தளம்
- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (வைகோ)
- மனித நேய மக்கள் கட்சி
- மனித நேய ஜனநாயகக் கட்சி
- மஜ்லீஸ் கட்சி
- மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி (ஆனைமுத்து)
- மூவேந்தர் மக்கள் கட்சி
- மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
- மே 17 இயக்கம் (திருமுருகன் காந்தி)
- ராஷ்ட்டிரிய ஜனதா தளம்
- ராஷ்ட்ரிய சேவா சவங் (RSS)
- லெனின் கம்யூனிஸ்ட் கட்சி
- லோக் சத்தா கட்சி
- லோக் ஜன்சக்தி கட்சி
- வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி
- வள்ளி மக்கள் முன்னேற்றக் கழகம்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி (தொல்.திருமாவளவன்)
- விடுதலைத் தமிழ்ப் புலிகள்
- விவசாயி அன்புக் கட்சி
- வீரத் தமிழர் முன்னணி (நா.த.க)
- வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
- ஜம்மு - காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி
- ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா
- ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (U)
- ஜெபமணி ஜனதா
தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள்
மற்றும் தேர்தல் அரசியலில் ஈடுபடாத கட்சிகள், இயக்கங்கள் உள்ளடக்கிய தமிழகப் பட்டியல் இது. இவற்றில் பல இயக்கங்கள் மற்றும் கட்சிகள் பற்றி கேள்விப்பட்டுகூட இருக்க மாட்டோம்.
சமூக ஊடகங்களில் உலா வருவோருக்கு சிலவற்றைப் பற்றித் தெரிந்திருக்கக்கூடும். நீங்கள்
அறிந்த ஒரு சில கட்சிகள் / இயக்கங்கள் இதில் விடுபட்டிருக்கலாம். மற்றபடி பெரும்பாலான
இயக்கங்கள் மக்கள் அறியாதவை. இதையும் தாண்டி உள்ளுர் அளவில் பல்வேறு சங்கங்கள் / மன்றங்கள்
மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல்லாயிரக் கணக்கில் செயல்பட்டு வருகின்றன.
எதற்கு இத்தனை கட்சிகள் / இயக்கங்கள்?
மக்கள் குழப்பமடையமாட்டார்களா? இப்படி கேள்விகள் எழுவது இயல்புதான். தனிநபர்களை முன்னிறுத்தி
தொடங்கப்படும் கட்சிகள் / இயக்கங்களின் நோக்கம் பதவி – புகழ் - பிழைப்பு என்பதைத்தாண்டி வேறு எதுவும்
இருக்க வாய்ப்பில்லை. இவற்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் கட்சிகளை / இயக்கங்களை குப்பைத் தொட்டிகளில் அள்ளிக் கொட்ட வேண்டியது மக்களின் கடமை. அரசியல் சித்தாந்த வேறுபாடுகள் காரணமாகவும் பல்வேறு இயக்கங்கங்கள்
உருவாகலாம். ஒவ்வொரு கட்சி மற்றும் இயக்கத்தின் செயல்பாடுகளை கூர்ந்து
கவனிப்பதன் மூலம் இவற்றில் எவை சரியாகச் செயல்படுகின்றன என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.
மேலும் இது குறித்து தங்களுக்குத் தெரிந்த விவரங்கள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
கோவணம்!
பால் வார்த்த தாயே போற்றி! போற்றி!
நன்றி
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
கோவணம்!
பால் வார்த்த தாயே போற்றி! போற்றி!