Tuesday, December 31, 2019

2020 - எழுந்து நில்!

2019 விடை பெற்று 2020 வந்து விட்டது. இது ஆங்கிலப் புத்தாண்டு,  நம்மை அடிமைப் படுத்தியவன் புகுத்தியது, இதை நாம் ஏன் கொண்டாட வேண்டும் எனக் கேள்வி எழுப்புவோரும், தமிழருக்குப் புத்தாண்டு சித்திரையே என்போரும் உண்டு. பிறப்பில் தொடங்கி இறப்பையும் நினைவூட்டி அனைத்திலும் நீக்கமற நிறைந்து விட்ட ஆங்கிலப் ஆண்டுக் கணக்கை அவ்வளவு எளிதில் ஒதுக்கி விட முடியாது. பழைமையை மட்டும் சுமந்து வரும் சித்திரை, தமிழரின் புத்தாண்டு இல்லை என்றாலும் ஆரியப் பண்பாட்டை தமிழன் உதறாதவரை சித்திரைக்கும் நித்திரை இல்லை.
கடைகளில் கழிக்கப்பட்டவை புதியனவாய் நம் இல்லங்களில் புகுவதுதான் “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்றாகி விட்டது. கழித்தவனின் கல்லாப்பெட்டிகளை பெற்றவனின் மணிபர்சுகள் நிரப்புவது வாடிக்கையாகி விட்டது. ஆண்டுப் பலன் தொடங்கி அன்றாட இராசிபலன் வரை அலசுகின்ற அரை அறிவாளிகளுக்கு ஆண்டு முழுக்க கொண்டாட்டம்தான். ஆனால் புத்தாண்டு பிறக்கிற போது வாழ்க்கைச் சுமையோடு வயது ஒன்று கூடுவதைத்தவிர வேறெதையும் கண்டதில்லை பலர்.

இனி வரும் வாழ்க்கை வளமாய், நலமாய், இனிமையாய் அமைய வேண்டும் என்கிற ஏக்கப் பெருமூச்சின் வெளிப்பாடாய்தான் பலரின் புத்தாண்டு வாழ்த்துகள் அமைகின்றன. ஏக்கப் பெருமூச்சுக்கு முடிவு கட்ட வேண்டாமா? எழுந்து நில்!

ஊரான்

Sunday, December 29, 2019

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?.....தொடர்-1

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, குறிப்பாக தமிழகத்தில் எடப்பாடி கும்பலிடம் தமிழகம் சிக்கிய பிறகு பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிக்கும் சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டது. இதனால் பெரியார் மறைவுக்குப் பிறகு சற்றே உறங்கிக்கிடந்த பகுத்தறிவு - சுயமரியாதை குறித்த விவாதங்கள் இன்று தீவிரமடைந்துள்ளன. இதன் விளைவை சகல துறைகளிலும் காண முடிகிறது.

வீடு, தெரு, ஊர், அலுவலகம், நாடு, ஊடகம் என எங்கு பார்த்தாலும் சாதி-மதம் குறித்து பேச்சாகத்தான் இருக்கிறது. வாட்ஸ்அப் குழுக்களிலும், முகநூலிலும் நண்பர்களிடையே இது குறித்து மயிர் பிளக்கும் விவாதங்கள் நடக்கின்றன. முகநூல் நட்பாவது முகம் பார்த்திராத நட்பு. முகநூல் வட்டத்திலிருந்து ஒருவர் விலகினால் பெரிதாக நட்டம் ஏற்படப் போவதில்லை. ஆனால் வாட்ஸ்அப் குழு நட்பு மிக நெருக்கமானது. பெரும்பாலும் முகம் பார்த்துப் பழகிய வட்டம். நேற்றுவரை சுக துக்கங்களில் இரண்டரக் கலந்த நட்பு. சாதி-மதம் சார்ந்தப் பதிவுகளால் இந்த நட்பு வட்டமே இன்று அதகளப்படுகிறது. இதனால் நேற்றுவரை முகம் பார்த்துக் கொண்டவர்கள் இன்று முதுகைக் காட்டி நகர்கிறார்கள். அரசியல் கருத்துக்களும் சர்ச்சையில் சிக்குவதால் நடையின் வேகம் சற்றே கூடுகிறது.

பொதுவாக சாதி-மதம்-அரசியல் சார்ந்தப் பதிவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தங்களது நட்பைத் தக்கவைத்துக் கொள்ளவே இவர்கள் முயலுகின்றனர். தான் சாதி-மதம் பார்ப்பதில்லை என்றும், அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் நட்புடன் பழகுவதாகவும்தான் பலரும் தங்களைக் கருதிக் கொள்கின்றனர். இவர்கள் கருதுவது சரிதானா? இல்லை என்பதைத்தான் இன்றைய சமூக நடப்பு காட்டுகிறது. கல்வி-வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, பதவி உயர்வு, காதல்-சாதி மறுப்புத் திருமணங்கள்,  வழிபாட்டுரிமை உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இதைக் காண முடிகிறது. ஒரு வரியில் சொன்னால் சாதியும் மதமும், அதையொட்டிய உயர்வு – தாழ்வு – பொறாமை - பகைமை எண்ணங்கள் பலரது வாழ்வில் இரத்தமும் சதையுமாக ஒன்று கலந்து விட்டன.

கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றார்கள்தூண்களையும் உடைத்துப் பார்த்தோம், துரும்மையும் கிள்ளிப் பார்த்தோம், கடவுளைத்தான் காணமுடியவில்லை. ஆனால் சாதியும் மதமும் அங்கிங்குகெனாதபடி எங்கும் வியாபித்திருக்கிறது.

தமிழர் வாழ்வில் சாதி இல்லை, மதம் இல்லை என்கின்றன சங்க இலக்கியங்கியங்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவனின் வாக்கு அதை உறுதி செய்கிறது. பிறகு தமிழனின் வாழ்வில் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதியும் மதமும் எப்படி ஊடுருவியது? சாதி – மதம் மட்டுமல்ல அதைச் சார்ந்த சடங்குகளும், சம்பிரதாயங்களும், நம்பிக்கைகளும் மனித வாழ்வில் எப்படி ஒன்று கலந்தன? சனாதன தருமம் என்றால் என்ன? இதற்கு எது அடிப்படை? இவற்றை எல்லாம் யார் போதித்தது? இது குறித்துதான் இந்தத் தொடரில் பேசவிருக்கிறோம்.


ஊரான்


தொடரும்

Thursday, December 12, 2019

அடுத்த நூறு ஆண்டுகளில் மெரினா இருக்குமா?


அண்ணா பல்கலைக்கழகத்தின் 40 வது பட்டமளிப்பு விழா 04.12.2019 அன்று சென்னையில் நடைபெற்றது. உறவினர் ஒருவர் முனைவர் பட்டம் பெறுவதால், நானும் அந்நிகழ்வில் ஒரு பார்வையாளராகப் பங்கேற்றேன். அண்ணா பல்கலைக்கழக நூலகக் கட்டடத்தில் உள்ள அரங்கத்தில் அவ்விழா நடைபெற்றது. 1,251 மாணவர்கள் நேரில் அழைக்கப்பட்டிருந்ததால், அந்த அரங்கம் அவர்களுக்கே போதுமானதாக இல்லை. உடன் வந்த உறவினர்கள் விழாவைக்கான அரங்கத்திற்கு வெளியே திரை அமைத்திருந்தார்கள். அந்த இடமும் நெருக்கடியாக இருந்ததால் கூட்டம் அலைமோதி முண்டியடித்துக் கொண்டுதான் திரையில்கூட நிகழ்ச்சியைக் காண முடிந்தது.
திரையில் பட்டமளிப்பு விழா

1,251 பேருக்கு ஆளுநர் நேரில் பட்டம் வழங்கினார் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் 71 பேருக்கு மட்டுமே தனது கையால் பட்டம் வழங்கினார். இதில் வேடிக்கை என்னவென்றால் விழா முடிந்த பிறகு, ஏற்கனவே மொத்தமாக தங்கள் கைக்கு வந்துவிட்ட பட்டத்தை துணை வேந்தர் சூரப்பாவின் கையில் கொடுத்து, அவர் கையால் பட்டம் பெறுவது போல புகைப்படம் எடுத்துக் கொண்டனர் சிலர். இதைப் பார்த்த போது துணைவேந்தரே இவர்களுக்கு நேரில் பட்டமளிப்பது போன்றதொரு பிம்பத்தை மட்டுமே ஏற்படுத்தியது. 71 பேர் மட்டுமே நேரில் பட்டம் பெறும் ஒரு நிகழ்ச்சியில் போக்குவரத்து, தங்குமிடம், உணவுக்கு என பெரும் தொகையை செலவு செய்து ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு ஏன் வரவேண்டும்?

அண்ணா நினைவிடம்
சரி! செய்த செலவுக்கு மெரினாவுக்காகவாவது சென்று வரலாம் என அங்கு சென்றோம். முதலில் அண்ணா நினைவிடத்தையும், அதற்கு உள்ளேயே ஒரு ஓரமாக மிகச்சிறிய இடத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தையும் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். எனக்கு தி.மு.க வோடு அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகளும், முரண்களும் இருந்தாலும் கலைஞர் நினைவிடத்தின் அருகில் நான் சென்ற போது என்னை அறியாமலேயே என் கண்கள் சற்றே கலங்கின. பார்ப்பனர்கள் ஒருவனை மூர்க்கமாக  எதிர்க்கிறார்கள் என்றால், அவனும் ஏதோ ஒரு வகையில் உன் தோழனே என ஆசுவாசப்படுத்திக் கொண்டு அங்குள்ள கலைஞரின் பொன் மொழிகள் சிலவற்றை உற்று நோக்கிய போது “மூளை! மூளை! அவ்வளவும் மூளை!” என ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி தன்னுடன் வந்தவர்களுடன் பேசிக் கொண்டது, கலைஞர் மிக ஆழமாகவே மக்கள் மனிதில் இடம் பிடித்துள்ளார் என்பதை உணர்த்தியது!
கலைஞர் நினைவிடம்
வெளியே வந்த பிறகு எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்றோம். அங்கு பராமறிப்புப் பணிகள் நடைபெற்று வந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. வெளியில் இருந்து பார்த்த போது ஜெயலலிதாவின் நினைவிடம் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்படுவதைக் காண முடிந்தது. அண்ணா - கலைஞர் நினைவிடத்தையும், எம்ஜி.ஆர் – ஜெயலலிதா நினைவிடத்தையும் பிரிக்கும் வகையில் தடுப்புச்சுவர் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அண்ணாவும் கலைஞரும் அண்ணன் - தம்பி போலவும், (உடன் பிறந்தவர்கள் இல்லை என்றாலும் இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகளாகத்தானே கருதப்படுகின்றனர்) எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கணவன் - மனைவி போலவும் (அங்கு வைக்கப்பட்டிருக்கும் WAY TO DR.MGR & AMMA SAMADHI என்ற அறிவிப்பைப் பார்க்கும் அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது) ஒரு தோற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இது என்ன பங்காளிகளைப் பிரிக்கும் தடுப்புச் சுவரா? இல்லை கலைஞர் சமாதியை மிதித்தவன் நேராக ஜெயலலிதாவின் சமாதியை மிதித்துவிடக்கூடாது என்பதற்கான தீண்டாமைச் சுவரா? அண்ணா, கலைஞர், எம்ஜி.ஆர், ஜெயலலிதா நால்வருமே தமிழக முதல்வராக இருந்தவர்கள்தானே! பிறகு எதற்காக இந்த தடுப்புச்சுவர்?
ஜெயலலிதா நினைவிடம்

அண்ணா - எம்ஜி.ஆர் - ஜெயலலிதா மூவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடம் மற்றும் அவர்களது நினைவிடத்தின் பிரம்மாண்டத்தையும், கலைஞருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் அவரது நினைவிடத்தின் அமைப்பையும், பார்த்த போது
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி

அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்!”
என்கிற எம்.ஜி.ஆரின் “என் அண்ணன்” திரைப்படத்தில் வரும் கவிஞர் கண்ணதாசனின் "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா!" எனத் தொடங்கும் பாடலில் உள்ள வரிகள்தான் நினைவுக்கு வந்தது.


எம்ஜி.ஆர் நினைவிடம்
மெரினாவில் சமாதிகளே கூடாது என்பதுதான் எனது கருத்து. இருப்பவற்றையும் இடித்துத்தள்ளி, சமாதிகளுக்கு முடிவுகட்டவில்லை என்றால், நாற்பது ஆண்டுகளில் நான்கான சமாதிகள் அடுத்த நூறு ஆண்டுகளில் பதினான்காகும். அப்பொழுது மெரினாவும் புதைக்கப்பட்டிருக்கும்.

மெரினா என்றால் கடலில் கால் நனைக்காமலா? “யாரும் கடலில் இறங்க வேண்டாம். கடல் நீரில் கால் நனைக்க வேண்டாம். நனைத்தால் நோய் தொற்று வரும்!” என மெரினாக் காவல் நிலையம் எச்சரித்திருந்ததாக கேள்விப்பட்டோம். அருகில் சென்ற போது கடலிலிருந்து வீசிய கெட்டநாற்றம், இந்த எச்சரிக்கை உண்மைதான் என்பதைப் புரிய வைத்தது. ‘கடலில் பெருங்காயம் கலப்பதைப் போல’ என்கிற சொலவடை இங்கே பொய்யாக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் சென்னை நகரின் மொத்தக் கழிவும் வங்கக்கடலில் சங்கமித்ததால் வந்தக்கேடு இது. கழிவுநீரைக்கூட சுத்திகரிக்கும் ஆற்றலற்ற அரசு கட்டமைப்பு நீடிக்கும்வரை கடல் கன்னிகள் கலங்கப்படுவதை யார்தான் தடுக்க முடியும்?

மெரினா
கடற்கரைக்கு வந்துவிட்ட பிறகு இளைப்பாறாமலா? மணற்பரப்பில் இரண்டறக் கலந்திருந்த குப்பைக் கூலங்கள் சுற்றித்திரியும் நாய்கள், மாடுகளின் கழிவுகள் சங்கடத்தை ஏற்படுத்தினாலும் நீண்ட நேரம் நடந்த களைப்பைப் போக்க சிறது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஜல்லிக்கட்டின் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு ஊர் திரும்பினோம்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Monday, November 18, 2019

பீயா? பீதாம்பரமா?


ஆபாச பொம்மைகள் இருந்தால் அது இந்துக் கோயில்தான் என திருமா பேசியதற்கு பார்ப்பனர்கள் மட்டுமல்ல வன்னியர் உள்ளிட்ட சில சூத்திரச்சாதி வெறியர்களும் இந்துமதக் காவலர்களாக பிதற்றித் திரிகின்றனர். திருமா பேசியது நூற்றுக்கு நூறு உண்மை.. இது குறித்து முகநூலில் எனது எதிர் வினையாக நான் எழுதியதைத் தொகுத்து உங்களுக்காக.

"வார் கொண்ட வனமுலையாள்"
கச்சணிந்த வனநகில்களையுடைய- திருவாரூர்.

"அளைப்பிரி யாஅரவு அல்கு லாளொடு"-
வலையினின்றும் நீங்காத பாம்பின் படம் போன்ற அல்குலைப் பெற்ற-திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) –

சிவனின் மனைவி உமையாளைத்தான் தேவாரத்தில் இப்படி வர்ணிக்கிறான் சுந்தரன். இப்படி நிறைய உண்டு. அல்குல்=பெண் குறி. கண் என்றும் இடை என்றும் கதைப்போரும் உண்டு. இவை இரண்டும் பாம்பின் படம் போன்று இல்லை என்பது பாமரனுக்கும் விளங்கும்.

அடி அம்மாடி என்ன ஒடம்பு! அங்கங்கே பச்ச நரம்பு!- வைரமுத்துவின் இந்த வரிகளே நமக்கு அருவருப்பைத் தருகிறது. "பஞ்சுண்டஅல் குல்பனை மென்முலையா ளொடு" (திருப்பரங்குன்றம்) - பாம்பின் படம் போலும் அல்குலையும், பருத்த மென்மையான தனங்கைளையும் உடைய - சிவனின் மனைவி உமையாளைத்தான் தேவாரத்தில் இப்படி வர்ணிக்கிறான் சுந்தரன்.

தேவாரம் பாடிய சுந்தரனுக்கு இரண்டு பொண்டாட்டி. திருவாரூரில் பரவையார் என்கிற முதல் பொண்டாட்டி. திருவொற்றியூர் சென்ற போது சங்கிலியார் என்கிற இரண்டாவது பொண்டாட்டி. இரண்டாவது பொண்டாட்டிக்குத் தூது பார்த்தவன் சிவன். இன்பங்களை ஆரத் துய்த்து சங்கிலியாரை அங்கேயே விட்டுவிட்டு பல ஊர் சுற்றி பிறகு திருவாரூர் வருகிறான். விவரம் அறிந்த பரவையார் சுந்தரனை சேர்க்க மறுக்கிறாள். காமத் தீ மூண்டெழுந்ததால் சிவன் இரண்டு முறை தூது சென்று சேர்த்து வைக்கிறான். (திருவாரூர், திருவொற்றியூர், திருப்புன்கூர் பாடல்களில் விவரம் காண்க).

"அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின்அரைதனில் உடை தனை அவிழ்த்தும்"... அருமை வாய்ந்தவிலைமாதர்களின் மலர் போன்ற அடிகளைப் பிடித்தும்,(அவர்களுடைய) எண்ணத்தை அறிந்த பின்பு இடுப்பில் கட்டியஆடையை அவிழ்த்தும்,

"அங்கு உள அரசிலை தடவியும் இரு தோள் உற்றுஅணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டைமென்று பல் இடு குறிகளும் இட" ... அங்குள்ள அரசிலை போன்றஉறுப்பைத் தடவியும், அவர்களுடைய இரண்டு தோள்களிலும் பொருந்திஅணைத்தும், அங்கையின் அடிப்பாகம் தோறும் நகக் குறிகள் இட்டும்,இதழ்களை மென்று பற்களால் பல குறிகள் பதித்தும்,

"அடிக் களம் தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டுஉருக்கும் அங்கியின் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும்அநுபவம் உறு பலம் உற" ... அடி நெஞ்சில் மயில் குயில் புறா ஆகியஇப் பறவைகள் போன்று பெரிய ஒலி எழச் செய்தும், உருக்க வல்லநெருப்பிலிட்ட மெழுகு போல உருகிய ஊக்கம் மிக்க அனுபவத்தால்
வருகின்ற பயன்களைப் பெற,

"கையின் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து உருக்கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியின் முழுகிமெய் உணர்வு அற உழைத்திடும் கன கலவியை மகிழ்வதுதவிர்வேனோ" ... கையில் உள்ள பழம் போல் விளங்கிய தனங்களின் மீதுவிழுந்து உருவம் கலங்கி உடல் உருகி, அமுதம் பெருகும் பெருத்த உந்தித்தடத்தில் முழுகி, மெய் உணர்வு அற்றுப் போகும் வண்ணம் உழைக்கின்றபெருத்த கலவி இன்பத்தில் மகிழ்ச்சி கொள்ளுவதை விட்டு ஒழியேனோ? திருப்புகழ் பாடல் -7. வாய் மணக்குதா?

"நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்தஅகம் தனில் இணை முலை எதிர் பொர நகத்து அழுந்திடஅமுது இதழ் பருகியும்" - திருப்புகழ் பாடல் - 10 ... மணம் தோய்ந்த பஞ்சணையின் மேல்மனம் பொருந்த அணைத்த மார்பில் அவர்களது இரு மார்பகங்களைஎதிர்பொர, நகக் குறி அழுந்த, இதழ் அமுதைப் பருகியும்,.... திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்!

பீயை, பீ என்றுதானே சொல்ல வேண்டும். பீதாம்பரம் என்கின்றனர் சிலர். என்ன செய்ய?

Saturday, October 26, 2019

தமிழகத்தில் இத்தனை இயக்கங்களா?

தமிழகத்தில் களமாடும் கட்சிகள் / இயக்கங்கள். இவற்றில் எத்தனை களமாடுகின்றன? எத்தனை பெயர்ப்பலகை அமைப்புகள்? எத்தனை தேர்தல் சமயங்களில் மட்டும் தலை காட்டுகின்றன? என்பதை களநிலவரங்களை உற்று நோக்கினால் தெரிந்து கொள்ள முடியும். 

  1. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (எடப்பாடி)
  2. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி (நடிகர் சரத்குமார்)
  3. அகில இந்திய சிவில் உரிமை பாதுகாப்புக் கட்சி
  4. அகில இந்திய சிறுபான்மையினர் முன்னணி
  5. அகில இந்திய தொழிற்சங்க ஒருங்கிணைப்புக்குழு (AICCTU)
  6. அகில இந்திய தொழிற்சங்க மையம் (AITUC)
  7. அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி (நடிகர் கார்த்திக்)
  8. அகில இந்திய பார்வார்டு பிளாக் (சுபாசிஸ்ட்)
  9. அகில இந்திய மக்கள் மேடை (வித்யாசாகர்)
  10. அகில இந்திய மஜ்லீஸ் கட்சி
  11. அகில இந்திய மாணவர் இயக்கம் (AISA) (இ.பொ.க) (மா.லெ) (விடுதலை)
  12. அகில இந்திய மாணவர் பேரவை (AISF) (CPI)
  13. அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
  14. அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி (ஐசக்)
  15. அகில பாரத இந்து மகா சபா
  16. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP)
  17. அண்ணா திராவிடர் கழகம் (திவாகரன்)
  18. அண்ணா தொழிற் சங்கம்
  19. அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்
  20. அம்பேத்கர் மக்கள் இயக்கம்
  21. அம்பேத்கர் மக்கள் கழகம்
  22. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (தினகரன்)
  23. அரசு ஊழியர் ஐய்க்கியப் பேரவை (வி.சி.க)
  24. அருந்ததியர் இளைஞர் பேரவை
  25. அருந்ததி மக்கள் கட்சி (வலசை இரவிச்சந்திரன்)
  26. அறப்போர் இயக்கம்
  27. அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் (டி.ராஜேந்தர்)
  28. அனைத்திந்திய தமிழக முன்னேற்றக் கழகம்
  29. அனைத்து திராவிடர் சமுதாய முன்னேற்றக் கழகம்
  30. ஆதித் தமிழர் கட்சி (கு.ஜக்கையன்)
  31. ஆதித் தமிழர் பேரவை (அதியமான்)
  32. ஆதித் தமிழர் மக்கள் கட்சி
  33. இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி
  34. இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக்
  35. இந்திய கண சங்கம் கட்சி
  36. இந்திய கிருஸ்துவ முன்னணி
  37. இந்திய குடியரசுக் கட்சி (A)
  38. இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI)
  39. இந்திய தேசிய மக்கள் கழகம்
  40. இந்திய தேசிய லீக்
  41. இந்திய தேசியக் காங்கிரஸ் (ராகுல் காந்தி)
  42. இந்திய தொழிற்சங்க நடுவம் (CITU)
  43. இந்திய மக்கள் கட்சி (மதச்சார்பற்ற)
  44. இந்திய மாணவர் சங்கம் (SFI) (CPI-M)
  45. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
  46. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) (CPI-M)
  47. இந்திய ஜனநாயகக் கட்சி (பாரிவேந்தர்)
  48. இந்தியக் குடியரசுக் கட்சி (செ.கு.தமிழரசன்)
  49. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (CPI)
  50. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (CPI-M)
  51. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (போல்ஷ்விக்)
  52. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) (மா.அ.க - SOC)
  53. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) (வர்க்கப் போராட்டம்)
  54. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) (விடுதலை)
  55. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ)
  56. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ) (போல்ஷ்விக்)
  57. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)
  58. இந்து மக்கள் கட்சி (அர்ஜூன் சம்பத்)
  59. இந்து முன்னணி (இராம கோபாலன்)
  60. இல்லத்தார் முன்னேற்றக் கழகம்
  61. இளந் தமிழகம் (ராசன் காந்தி)
  62. இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கட்சி
  63. இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம்
  64. உரிமைத் தமிழ்த் தேசம் 
  65. உழவர் உழைப்பாளர் கட்சி
  66. உழைக்கும் மக்கள் சேவைக் கட்சி
  67. உழைப்பாளி மக்கள் சட்சி
  68. எம்.ஜி்.ஆர் தொண்டர்கள் கட்சி
  69. எம்.ஜி.ஆர்.கழகம்
  70. என் இந்தியா என் உரிமைக் கட்சி
  71. ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்
  72. ஏழு தமிழர் விடுதலைக் கட்சி
  73. கலை இலக்கிய பெருமன்றம் (CPI)
  74. காந்திய மக்கள் கட்சி
  75. காமராஜ் ஆதித்தனார் கழகம்
  76. காமராஜ் தேசிய காங்கிரஸ்
  77. கைவினைஞர் முன்னேற்றக் கட்சி
  78. கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு)
  79. கொங்கு நாடு மக்கள் கட்சி
  80. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி
  81. கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்
  82. கொங்குநாடு முன்னேற்றக் கட்சி
  83. சமத்துவக் கழகம்
  84. சமநீதிப் புலிகள்
  85. சமூக சமத்துவ மக்கள் படை (சிவகாமி)
  86. சமூக நீதிக் கட்சி
  87. சாதி அதிகார எதிர்ப்பு முன்னணி
  88. சாதி ஒழிப்பு முன்னணி
  89. சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி
  90. சிவசேனா
  91. சுயாட்சி இந்தியா
  92. செங்கதிர் இயக்கம்
  93. தந்தை பெரியார் திராவிடர் கழகம் (கோவை.இராமகிருஷ்ணன்)
  94. தமழ்நாடு அறிவியல் இயக்கம்
  95. தமழ்நாடு மாணவர் இயக்கம்
  96. தமிழ் உரிமைக் கூட்டமைப்பு
  97. தமிழ் பேரரசுக் கட்சி (இயக்குநர் கவுதமான்)
  98. தமிழ் மாநில முஸ்லீம் லீக்
  99. தமிழக இந்து மக்கள் முன்னணி
  100. தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் (பொழிலன்)
  101. தமிழக திராவிட மக்கள் கட்சி
  102. தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
  103. தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
  104. தமிழக மக்கள் முன்னணி (அரங்க குணசேகரன்) (கூட்டமைப்பு)
  105. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்)
  106. தமிழக மக்கள் விடுதலை இயக்கம்
  107. தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
  108. தமிழக முற்போக்கு மக்கள் கட்சி
  109. தமிழக வாழ்வுரிமைக் கட்சி (வேல்முருகன்) I
  110. தமிழக ஜனதா கட்சி
  111. தமிழ்த் தேச இறையாண்மைக் கட்சி
  112. தமிழ்த் தேச குடியரசுக் கட்சி (சிலம்பரசன்)
  113. தமிழ்த் தேச மக்கள் கட்சி
  114. தமிழ்த் தேச மக்கள் முன்னணி (மீ.த.பாண்டியன்)
  115. தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
  116. தமிழ்த் தேசிய பாதுகாப்பு இயக்கம்
  117. தமிழ்த் தேசிய பேரியக்கம் (மணியரசன்)
  118. தமிழ்த் தேசிய மலை நாடு மக்கள் கட்சி
  119. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் (தியாகு)
  120. தமிழ்நாடு இளைஞர் இயக்கம்
  121. தமிழ்நாடு இளைஞர் கட்சி
  122. தமிழ்நாடு இளைஞர் கழகம்
  123. தமிழ்நாடு இளைஞர் முன்னணி
  124. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
  125. தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ்
  126. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
  127. தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் கட்சி
  128. தமிழ்நாடு தேசிய ஆன்மீக மக்கள் கட்சி
  129. தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (தமிழரசன்)
  130. தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மா.லெ) (கலியபெருமாள்)
  131. தமிழ்நாடு மக்கள் கட்சி
  132. தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ்
  133. தமிழ்நாடு மாணவர் இயக்கம்
  134. தமிழ்நாடு மாணவர் இளைஞர் கழகம்
  135. தமிழ்நாடு மாணவர் முன்னணி
  136. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா) (மீ.த.பாண்டியன்)
  137. தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி (த.நா.மா.லெ)
  138. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (CPI-M)
  139. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
  140. தமிழ்நாடு முஸ்லீம் லீக்
  141. தமிழ்நாடு விடுதலை புலிகள்
  142. தமிழ்ப் புலிகள் கட்சி (நாகை திருவள்ளுவன்)
  143. தமிழர் உரிமை இயக்கம்
  144.  மிழர் எழுச்சி இயக்கம்
  145. தமிழர் கட்சி
  146. தமிழர் கழகம்
  147. தமிழர் தன்மானப் பேரவை
  148. தமிழர் தேசிய முன்னணி
  149. தமிழர் பூமி
  150. தமிழர் முன்னணி
  151. தமிழர் விடியல் கட்சி (மார்ட்டின் லாட்டரி டைசன்)
  152. தமிழர் விடுதலைக் கழகம்
  153. தமிழர் விடுதலைக் களம்
  154. தமிழரசுக் கட்சி
  155. தலித் மக்கள் கழகம்
  156. தலித் மக்கள் முன்னேற்றக் கழகம்
  157. தன்னாட்சித் தமிழகம் (ஆழி.செந்தில்நாதன்)
  158. தியாகி இம்மானுவேல் பேரவை
  159. திராவிட இயக்கத் தமிழர் பேரவை (சுப.வீ)
  160. திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
  161. திராவிட முன்னேற்றக் கழகம் (ஸ்டாலின்)
  162. திராவிட விழிப்புணர்வு கழகம்
  163. திராவிடத் தமிழர் கட்சி
  164. திராவிடர் கழகம் (வீரமணி)
  165. திராவிடர் விடுதலைக் கழகம் (கொளத்தூர் மணி)
  166. தீண்டாமை ஒழிப்பு முன்னணி (CPI-M)
  167. தேசிய பார்வார்டு பிளாக்
  168. தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (விஜயகாந்த்)
  169. தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு
  170. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (LPF)
  171. தொழிலாளர் விடுதலை முன்னணி (வி.சி.க)
  172. நமது மக்கள் கட்சி
  173. நாணல் நண்பர்கள்
  174. நாம் தமிழர் கட்சி (சீமான்)
  175. நெய்தல் வேங்கை இயக்கம்
  176. பகுஜன் சமாஜ் கட்சி (மாயாவதி)
  177. பச்சைத் தமிழகம் (சுப.உதயகுமார்)
  178. பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ்)
  179. பாரத் சேனா
  180. பாரதிய ஜனதாக் கட்சி (மோடி)
  181. புதிய தமிழகம் (டாக்டர் கிருஷ்ணசாமி)
  182. புதிய நீதிக் கட்சி (ஏ.சி.சண்முகம்)
  183. புதிய பொதுவுடமை இயக்கம்
  184. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF) (ம.க.இ.க)
  185. புரட்சி சோசலிஸ்ட் கட்சி
  186. புரட்சி பாரதம் (பூவை ஜெகன் மூர்த்தி)
  187. புரட்சிகர இளைஞர் கழகம்
  188. புரட்சிகர இளைஞர் முன்னணி (த.நா.மா..லெ)
  189. புரட்சிகர தொழிலாளர் முன்னணி (த.நா.மா.லெ)
  190. புரட்சிகர பெண்கள் முன்னணி (த.நா.மா.லெ)
  191. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF) (ம.க.இ.க)
  192. புரட்சிகர மாணவர் முன்னணி (த.நா.மா.லெ)
  193. புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் முன்னணி (த.நா.மா.லெ)
  194. பூவுலகின் நண்பர்கள் (சுந்தர்ராஜன்)
  195. பெண்கள் எழுச்சி இயக்கம்
  196. பெரியார் அம்பேத்கர் சுயமரியாதை இயக்கம்
  197. பெரியார் அம்பேத்கர் முன்னேற்றக் கழகம்
  198. பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம்
  199. இளந்தமிழர் பாசறை 
  200. பெருந்தலைவர் மக்கள் கட்சி (என்.ஆர்.தனபால்)
  201. பொது நல மாணவர் எழுச்சி இயக்கம் (வளர்மதி)
  202. பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
  203. பொதுமையர் பரப்புரை மன்றம்
  204. மக்கள் அதிகாரம் (ம.க.இ.க)
  205. மக்கள் இயக்கம்
  206. மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் (ம.க.இ.க)
  207. க்கள் உரிமை மீட்பு இயக்கம்
  208. மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி (இந்தியா)
  209. மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
  210. மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க)
  211. மக்கள் சக்தி
  212. மக்கள் சக்தி கட்சி
  213. மக்கள் சமூக நீதிப் பேரவை
  214. மக்கள் சிந்தனைப் பேரவை
  215. மக்கள் தமிழ் தேசம் கட்சி
  216. மக்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகம்
  217. மக்கள் நீதி மய்யம் (கமல்)
  218. மக்கள் பாதை (சகாயம்)
  219. மக்கள் மனது சட்சி
  220. மக்கள் மன்றம் (காஞ்சி)
  221. மக்கள் வழிப்புணர்வு இயக்கம்
  222. மக்கள் விடுதலை முன்னணி
  223. மக்கள் விடுதலைக் கட்சி
  224. மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் (ம.ஜ.இ.க)
  225. மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி
  226. மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சி
  227. மண்ணின் மைந்தர்கள் கழகம்
  228. மதச் சார்பற்ற ஜனதா தளம்
  229. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (வைகோ)
  230. மனித நேய மக்கள் கட்சி
  231. மனித நேய ஜனநாயகக் கட்சி
  232. மஜ்லீஸ் கட்சி
  233. மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி (ஆனைமுத்து)
  234. மூவேந்தர் மக்கள் கட்சி
  235. மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
  236. மே 17 இயக்கம் (திருமுருகன் காந்தி)
  237. ராஷ்ட்டிரிய ஜனதா தளம்
  238. ராஷ்ட்ரிய சேவா சவங் (RSS)
  239. லெனின் கம்யூனிஸ்ட் கட்சி
  240. லோக் சத்தா கட்சி
  241. லோக் ஜன்சக்தி கட்சி
  242. வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி
  243. வள்ளி மக்கள் முன்னேற்றக் கழகம்
  244. விடுதலை சிறுத்தைகள் கட்சி (தொல்.திருமாவளவன்)
  245. விடுதலைத் தமிழ்ப் புலிகள்
  246. விவசாயி அன்புக் கட்சி
  247. வீரத் தமிழர் முன்னணி (நா.த.க)
  248. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
  249. ஜம்மு - காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி
  250. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா
  251. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (U)
  252. ஜெபமணி ஜனதா
தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள் மற்றும் தேர்தல் அரசியலில் ஈடுபடாத கட்சிகள், இயக்கங்கள் உள்ளடக்கிய தமிழகப் பட்டியல் இது. இவற்றில் பல இயக்கங்கள் மற்றும் கட்சிகள் பற்றி கேள்விப்பட்டுகூட இருக்க மாட்டோம். சமூக ஊடகங்களில் உலா வருவோருக்கு சிலவற்றைப் பற்றித் தெரிந்திருக்கக்கூடும். நீங்கள் அறிந்த ஒரு சில கட்சிகள் / இயக்கங்கள் இதில் விடுபட்டிருக்கலாம். மற்றபடி பெரும்பாலான இயக்கங்கள் மக்கள் அறியாதவை. இதையும் தாண்டி உள்ளுர் அளவில் பல்வேறு சங்கங்கள் / மன்றங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல்லாயிரக் கணக்கில் செயல்பட்டு வருகின்றன.

எதற்கு இத்தனை கட்சிகள் / இயக்கங்கள்? மக்கள் குழப்பமடையமாட்டார்களா? இப்படி கேள்விகள் எழுவது இயல்புதான். தனிநபர்களை முன்னிறுத்தி தொடங்கப்படும் கட்சிகள் / இயக்கங்களின் நோக்கம் பதவி – புகழ் - பிழைப்பு என்பதைத்தாண்டி வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. இவற்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் கட்சிகளை / இயக்கங்களை குப்பைத் தொட்டிகளில் அள்ளிக் கொட்ட வேண்டியது மக்களின் கடமை. அரசியல் சித்தாந்த வேறுபாடுகள் காரணமாகவும் பல்வேறு இயக்கங்கங்கள் உருவாகலாம். ஒவ்வொரு கட்சி மற்றும் இயக்கத்தின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிப்பதன் மூலம் இவற்றில் எவை சரியாகச் செயல்படுகின்றன என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.