Tuesday, August 7, 2018

கலைஞர் கடைசி அசுரனா?


இவன் வேதம் கூறும் நியதிகளையும், நெறிமுறைகளையும் ஒதுக்கித் தள்ளினான். மனுஸ்மிருதியின் விதிகளுக்கு விரோதமாக  செயல்பட்டான். இவனது ஆட்சியில் வேத நூல்களைக் கற்க தடை விதித்தான். இவன்தான் ஹரிவம்சம் எனும் நூலில் சொல்லப்ட்டுள்ள வீணா என்கிற அரசன்.

இவன் ஒரு பலம் கொண்ட மன்னன். இவனே ஒரு பலசாலி என்பதால் பார்ப்பனர்களின் ஆலோசனைகளை கேட்க மறுத்தான். இவன்தான் மகாபாரதம், ஆதிபருவத்தில் குறிப்பிடப்படும் புரூவரன் என்கிற மன்னன்.

இவன் பார்ப்பனர்களின் வேத மந்திரங்களை ஏற்க மறுத்தான். இவன் புரூவரனின் மகன். இவன்தான் மகாபாரதம், உத்யோகப் பருவத்தில் சொல்லப்பட்டுள்ள நகுஷன் என்கிற மன்னன்.

இவன் பார்ப்பன ரிஷி வசிட்டருடன் முரண்பட்டதால் சாபத்திற்குள்ளாகி கொல்லப்பட்டவன். இவன்தான் விஷ்ணு புராணித்தில  சொல்லப்ட்டுள்ள நிமி என்கிற அரசன்.

வேதங்கள் கூடாது என்பதனால் இவனது ஆட்சியில் வேத பாட்சாலைகள் கிடையாது. இவன்தான் வாமண புராணத்தில் சொல்லப்படும் கேரள மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட மகாபலி சக்ரவர்த்தி. சும்மா விடுவார்களா பார்ப்னர்கள்? சூழ்ச்சியால் மகாபலியை ஒழித்துக் கட்டினார்கள்.

பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ள இரணியன் என்கிற இரணிய கசிபு. இவன் பிரகலாதனின் தந்தை. இவன் பார்ப்பனர்களை எதிர்த்த ஒரு மாபெரும் அரசன். நரசிங்க அவதாரம் மூலம் இவனையும் கொலை செய்தனர் பார்ப்பனர்கள்.

இலங்கைக்கே அதிபதியாக இருந்த இராவணனைக் கொன்றார்கள். இப்படி பார்ப்பனர்களால் படுகொலை செய்யப்பட்ட மன்னர்களின் பட்டியல் மிக நீளமானது.

மன்னர்களின் ஆட்சிகள் எல்லாம் ஒன்றும் பொதுவுடமை ஆட்சிகள் அல்ல. இவர்களது ஆட்சி காலத்திலும் மக்கள் பல்வேறு அரசியல்-பொருளாதார பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்திருப்பார்கள். மன்னரும் அவரது குடும்பமும் செல்வச் செழிப்போடு சுகபோகமாக வாழ்ந்திருப்பார்கள்.

இவர்கள் மாபெரும் சக்ரவர்த்திகளாக, மன்னர்களாக, அரசர்களாக கோலாச்சிய போதும் இவர்களை ஏன் அசுரர்களாக, அரக்கர்களாக அதாவது இழிவானவர்களாக புராணங்கள் அடையாளப்படுத்துகின்றன? இவர்களது ஆட்சிக் காலத்தில் மக்கள் தும்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தார்கள் என்பதற்காகவா? அல்லது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தை ஏற்க மறுத்ததற்காகவா?

பார்ப்பனர்களை வணங்காமையால் பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் உள்ளிட்ட நாட்டை ஆண்ட சத்திரியர்கள் அனைவரையும் மூன்றாம் வர்ணத்திலிருந்து நான்காம் வர்ணமான இழிவான சூத்திர நிலைக்கு தகுதி இறக்கம் செய்கிறான் மனு. (மனுஸ்மிருதி 10 - 43, 44).


யாரெல்லாம் வேதங்களையும், பார்ப்பன இந்து மதத்தின் வர்ணாசிரம தத்துவங்களையும் கேள்விக்குள்ளாக்கினார்களோ, அவர்களெல்லாம் அசுரர்கள் என இழிவு படுத்தப்பட்டார்கள். சதி மற்றும் நயவஞ்சகத்தால் கொன்றொழிக்கப்பட்டார்கள். புத்தரில் தொடங்கி பல்வேறு மன்னர்கள் ஈடாக அதைத் தொடர்ந்து வள்ளலார், பசவன்னர், மகாத்மா புலே, பெரியார், அண்ணா, அம்பேத்கர், கௌரிலங்கேஷ்நரேந்திர தபோல்கர்கோவிந்த் பன்சாரேஎம்.எம்.கல்புர்கி, என்கிற இந்த அசுரர்களின் பட்டியல் மிக நீளமானது. இந்த வரிசையில் இதோ இன்னுமொரு அசுரன். யாருடைய மரணத்தை பார்ப்பனர்கள் கொண்டாடுகிறார்களோ, யாருடைய மரணம் பார்ப்பனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதோ அவர் நிச்சயம் அசுரர்தான். ஆனால் பார்ப்பனர்களுக்கு இது இறுதி மகிழ்ச்சி அல்ல!

7 comments:

  1. கலைஞரின் இலக்கியப் பணிக்காக, அவரது இழப்பு துயரைத் தருகிறது.

    ReplyDelete
    Replies
    1. இலக்கியப் பணிக்காக மட்டுமல்ல பார்ப்பனீயத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதற்காகவும்.. இது அவரது இறப்பிற்குப் பிறகும் வெளிப்பட்டதே!

      Delete
  2. அஞ்சலி. நீண்ட நாட்களாகி விட்டது. நலமா?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஆம்! பார்ப்பனீயத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதற்காக எனது இதய அஞ்சலி. நான் நலமே. தாங்கள் நலமா? கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் நான் எழுதியவை மிகச் சிலவே. கிட்டத்தட்ட தொடர்பற்ற நிலைதான். தற்போது நான் அலுவலகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். இனி அதிகம் எழுத வாய்ப்பு உண்டு.

      எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு "ஊரான்" அறிமுக விழா! https://hooraan.blogspot.com/2018/06/blog-post.html

      பணி ஓய்வு: கிளைச் சிறையிலிருந்து திறந்த வெளிச் சிறைக்கு….
      https://hooraan.blogspot.com/2018/07/blog-post.html.

      நன்றி!

      Delete