Saturday, September 21, 2024

திருப்பதி லட்டு-மாட்டுக் கொழுப்பு: இறை மறுப்பாளர்கள் கேலி-கிண்டல் செய்கிறார்களா?

"திருப்பதி லட்டுல மாட்டுக் கொழுப்பு கலந்திருக்குன்னு மாற்று மதத்தினர் மற்றும் இறை மறுப்பாளர்கள் நிறைய விமர்சனங்கள், கேலி கிண்டல்ன்னு
மகிழ்ச்சி அடைகின்றனர்..."

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு இருப்பதைக் கிண்டல் செய்வது இந்துக்களை இழிவு செய்வது போல சங்கி மனநிலையில் உள்ள சிலர் மேற்கண்டவாறு சித்தரிக்கின்றனர். 


இன்று ஆதங்கப்படும் இவர்கள், பல சமயங்களில் மாட்டுக் கறியை, அதை உண்போரை,
இழிவானதாகச் சித்தரிக்கும் போது, ‌எள்ளி நகையாடும் பொழுது, ஏளனம் செய்யும் பொழுது மாட்டுக்கறி உண்போருக்காக இவர்கள் நியாயம் பேசவில்லையே?

சுவைக்காகவும், கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சில தின்பண்டங்களில், உணவுப் பொருட்களில் வேறு சில பொருட்களைத் தெரிந்தே சேர்ப்பதில் தவறில்லையே? நமது வீடுகளிலும் நடப்பதுதானே இது? விற்பனைக்கு என்று வரும் பொழுது அவை அவ்வப்பொழுது தரச்சான்றுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி உட்பட்டுத்தப்பட்ட பொழுதுதான் திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தற்போது லட்டில் கண்டறியப்பட்ட மாட்டுக் கொழுப்பு ஒன்றும் நஞ்சில்லையே? திருப்பதி லட்டால் யாரும் நலிவடையவில்லையே?
பிறகு ஏன் இத்தனைக் கூப்பாடு? 

'ஐயையோ திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு' என்று அலருவதால்தான், அதில் உள்ள அருவெறுப்பின் வெளிப்பாட்டினால்தான்
இறை மறுப்பாளர்கள் தற்போது ஏளனம் செய்கின்றனர். இது ஒரு எதிர் வினை, தீண்டாமைக்கு எதிரான நல்வினை!

ஊரான்

No comments:

Post a Comment