Friday, September 20, 2024

என்ன! திருப்பதி லட்டு இந்த நாத்தம் நாறுது?

நெய்=கொழுப்பு,  

இதுல 'விலங்குக் கொழுப்பைக் கலந்தது' மாபாவமாம். முன்னாள் தலைமை அர்ச்சகர் ஆதங்கம்.‌ 

ரெண்டுமே விலங்கினுடைய கொழுப்புதானேடா அம்பி? எதக் கலந்தா என்னடா? நோக்கு ருசிதானேடா முக்கியம்.

***
தனியாகவெல்லாம் கலக்க வேண்டியதில்லை.
நெய் என்றாலே 
அது 
மாட்டுக் கொழுப்புதான். திருப்பதி லட்டு மட்டுமல்ல, நெய் கலந்து செய்யிற எல்லாப் பண்டங்களிலும், அவா ஊத்திக் கொழப்பி அடிக்கும் நெய் சோற்றிலும் மாட்டுக் கொழுப்பு இருக்கும்.

***
இது ஏதோ ஜெகன்மோகனின் அரசியல் சோலிய முடிக்கிறதுக்கான ஏற்பாடு மாதிரிதான் எனக்குத் தோனுது.

***
திருப்பதி லட்டை ஆய்வுக்கு குஜராத்துக்கு ஏன் அனுப்பினார்கள்? எங்கயோ இடிக்குதே?

***
இன்சுலின் இல்லாமல் சர்க்கரை நோயாளிகள் உயிர் வாழ முடியாது. ஒரு சர்க்கரை நோயாளி உயிர் வாழ்வதற்காக 26 மாடுகள் தங்களைத் தியாகம் செய்கின்றனவாம். ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

தடுப்பூசிகள், வைட்டமின் மாத்திரைகள், தீப்புண்ணுக்கு பூசப்படும் ஆயின்மெண்ட்டுகள், மூச்சு விட கஷ்டப்படுபவர்கள் இழுக்கும் இன்ஹேலர்கள் இவை எல்லாவற்றிலும் மாடு இருக்கிறது. 

மாடு இன்றி மனிதன் இல்லடா. 'கோமாதா எங்கள் குலமாதான்னு' நீதானடா பாடுற. பிறகு கோமாதா கொழுப்ப மட்டும் ஏண்டா கரிச்சுக் கொட்டுற? 

மாட்டுக் கொழுப்பை மட்டமாகப் பார்க்கும் பரதேசிகளே! சர்க்கரை வந்தால் இன்சுலினை ஏற்றாமல் எமலோகம் போங்களேன்; இன்ஹேலர் இன்றி நாண்டுகிட்டு சாவுங்களேன்.

***
மாட்டுக் கொழுப்புக் கலந்த திருப்பதி லட்டைப் தின்னு எவனும் மண்டையப் போடலயே? பெறவு ஏண்டா குதிக்கிறீங்க? லட்டை வெச்சு அரசியல் பண்றது நிறுத்துங்கடா? 

உங்க சனாதனத்தக் காப்பாத்த எங்க உயிர ஏன்டா எடுக்குறீங்க?

***
என்ன! திருப்பதி லட்டு இந்த நாத்தம் நாறுது?

ஊரான்

(இவை எனது முகநூல் பதிவுகள்)

No comments:

Post a Comment