Tuesday, November 2, 2010

எதார்த்தத்தை நோக்கி....

மாறுபட்ட அல்லது முரண்பட்ட கருத்தில்லாமல் யாரேனும் இவ்வுலகில் இருக்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாறுபட்ட கருத்து இருப்பதாலேயே கருத்து மோதல்கள், அதையடுத்து சண்டை- சச்சரவுகள் எற்படுகின்றன. எல்லா விசயங்களிலும் மாறுபட்ட கருத்து என்றால் எப்போழுதும் சண்டை- சச்சரவுகள் மோதல்கள்தான். கருத்தொற்றுமைக்கேற்ப சண்டை- சச்சரவுகள், மோதல்களின் அளவு குறையுமேயன்றி அவைகள் இல்லாமல் இருப்பதில்லை.

சமூக வாழ்க்கையில் ஒவ்வொறு நாளும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருப்பதால் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனால் கருத்து வேறுபாடுகள் நிரந்தரமானவைகளா? தீர்க்கவே முடியாதவைகளா?

கணவன்-மனைவி, பெற்றோர்கள்-பிள்ளைகள், மாமனார்/மாமியார்- மருமகள்/மருமகன், அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை இப்படி குடும்ப உறவுகளுக்கிடையில் சண்டை- சச்சரவுகள் இல்லாமல் வாழ்வோரைக் காண்பது அரிது. 

நண்பர்கள், அலுவலக ஊழியர்கள், அக்கம் பக்கம் வாழ்வோர், சங்கங்கள், கட்சிகள், மன்றங்கள், உள்ளிட்டவற்றின் உறுப்பினர்கள், மருத்தவர்கள், பொறியாளர்கள், சமூகப் பணியாளர்கள், போராளிகள் என பொதுவில் எல்லோர் மத்தியிலும் கருத்து முரண்பாடுகள் நிலவுவதைக் காணலாம். ஒரே லட்சியத்தை நோக்கிப் பயணிப்போர் மத்தியிலும் இதைக் காணமுடியும். தான் சொல்வதே சரி என வாதிடும் குணம் பெரும்பாலும் மக்களிடையே காணப்படுகிறது. 

முரண்படுவதை ஒரு குற்றமாகப் பார்ப்பதா அல்லது அது அறியாமையின் வெளிப்பாடு என்று எடுத்துக் கொள்வதா? சாதாரண மக்களிடம் நிலவும் பல்வேறு வகையான மாறுபட்ட கருத்துக்கள் அவர்களின் அறியாமையிலிருந்து வெளிப்படுபவை. எனவே அறியாமையிலிருந்து விடுவிப்பது ஒன்றே ஒத்த கருத்துக்கு வழிவகுக்கும். 

ஒவ்வொருவரும் தாங்கள் உணர்ந்ததைத்தான் பேசுகிறார்கள். அவர்கள் உணர்ந்ததனைத்தும், பேசுவதனைத்தும் உண்மையானவை, எதார்த்தமானவை என்று எடுத்துக் கொள்ள முடியாது. (People not talk about the world, but about their perception). 

ஆங்கிலத்தில் delusion என்றொரு சொல் உண்டு. delusion என்றால் wrong perception of the reality என்று பொருள். அதாவது உள்ளதை உள்ளபடியே உணராமல் மருட்சியாக உணர்வதை திரிபுணர்வு என்று கூறலாம். இவ்வாறு உணர்வது ஆரோக்கியமான நிலை அல்ல. மாறாக உள்ளதை உள்ளபடியே அதாவது தெளிவாக (clarity) உணர்வதுதான் ஆரோக்கியமான நிலை.

எப்பொழுது அனைவரும் எதார்த்தத்தை, உண்மையை திரிபின்றி அறிகிறோமோ, உணர்கிறோமோ அப்பொழுதுதான் கருத்து வேறுபாடுகள் இருக்காது. கருத்து வேறுபாடுகள் நீடிப்பது வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு தடையானதல்லவா; எனவே கருத்து வேறபாடுகளைக் களைய இடையராது முயல வேண்டும். 

புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை எனும் வழிமுறைகளின் மூலம் முயன்றால் உண்மையை, எதார்த்தத்தைக் கண்டறிய முடியும். இயற்கை விதிகளின், மனித உறவுகளின் உண்மை நிலையை அறிந்து கொண்டால் கருத்து வேறுபாடுகள் நிலவாது. பூமி உருண்டை என்கிற இயற்கை விதியை இன்று யாரேனும் மறுக்க முடியுமா?  இது எப்படி சாத்தியமானதோ அதே போன்று அனைத்தையும் அறிய முயன்றால் எதார்த்தத்தை, உண்மையை எட்டுவது எளிது.


ஊரான்.




2 comments:

  1. //குடும்ப உறவுகளுக்கிடையில்
    சண்டை- சச்சரவுகள் இல்லாமல் வாழ்வோரைக் காண்பது அரிது//
    இது இல்லை என்றால் சினிமா, டிவி மெகா தொடர்கள் எழுதுபவர்கள் என்ன செய்வார்கள்.

    சகாதேவன்

    ReplyDelete
  2. "புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை எனும் வழிமுறைகளின் மூலம் முயன்றால் உண்மையை, எதார்த்தத்தைக் கண்டறிய முடியும். இயற்கை விதிகளின், மனித உறவுகளின் உண்மை நிலையை அறிந்து கொண்டால் கருத்து வேறுபாடுகள் நிலவாது. பூமி உருண்டை என்கிற இயற்கை விதியை இன்று யாரேனும் மறுக்க முடியுமா? இது எப்படி சாத்தியமானதோ அதே போன்று அனைத்தையும் அறிய முயன்றால் எதார்த்தத்தை, உண்மையை எட்டுவது எளிது."

    முற்றிலும் உண்மை

    ReplyDelete