Monday, August 31, 2015

வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை!

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

மகாராஷ்டிராவில் - தங்களை வணங்கவில்லை என்பதற்காக தலித் முதியவரை அடித்துக் கொன்ற மராத்தா சாதி வெறியர்கள்!

மகாராஷ்டிரா மாநிலம், சங்கிலி மாவட்டம், பொர்கான் கிராமத்தில், வாமன் நியாநிர்குனி என்ற 62 வயது முதியவர் தனது வயலில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது மராத்தா ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சந்திரகாந்த் பாட்டில், சச்சின் பாட்டில் என்கிற இரு இளைஞர்கள் அங்கே வருகின்றனர். இவர்களை அம்முதியவர் வணங்கவில்லை என்பதற்காக அந்த முதியவரை அந்த இடத்திலேயே அத்துக் கொன்றுள்ளனர். முதலில் பின்பக்கமாக தாக்கி உள்ளனர். “ஏன் அடிக்கிறீர்கள்?” என அவர் கேட்டதற்கு அவரை அடித்தேக் கொன்றுள்ளனர்.

வணங்கவில்லை என்பதற்காக யாராவது அடித்துக் கொள்வார்களா என நீங்கள் வினவக்கூடும். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிறுவர்களைக்கூட தாழ்த்தப்பட்ட முதியவர்கள் “கும்பிடுறன் சாமி!” என்று வணங்குவதுதானே வழக்கமாக இருந்தது; இன்றும் பல இடங்களில் இருந்து வருகிறது.

இம்முதியவர், மும்பைக்குச் சென்று சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து சற்று வசதியுடன் ஊர் திரும்பி, தான் சேர்த்த வாழ்நாள் சம்பாத்தியத்தைக் கொண்டு தனது நிலத்தில் செலவு செய்து நல்ல விவசாயத்தைக் கண்டுள்ளார்.

பங்காளி தன்னைவிட முன்னேறிவிட்டால் அவனையேக் கொலை செய்யும் இந்தியச் சமூகத்தில், ஒரு தாழ்த்தப்பட்டவன் முன்னேறுவதை ஏற்றுக் கொள்வார்களா என்ன? ஒரு தாழ்த்தப்பட்டவன் முன்னேறியதைக் கண்டு பொறாமைப்பட்டு “ஒரு தாழ்த்தப்பட்டவன் எப்படி முன்னேறலாம்?” என்ற ஆத்திரத்தில்தான் அவரைக் கொன்றுள்ளனர்.

அம்முதியவரின் மகன் ரத்ணதீப் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடைச்சட்டத்தின் கீழ் அவ்விளைஞர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“சம்படா கிராமீன் மகிளா சன்ஸ்தா” என்கிற அமைப்பினர் கண்டனக் குரல் எழுப்பிய பிறகே இச்செய்தி வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது.

(செய்தி ஆதாராம் THE HINDU: 20.07.2015)

பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள சத்திரியனையும் தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது. அதில் பிராமணன் தகப்பன் மரியாதையையும், சத்திரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது. (மனு: 2 135)

ஆளும் பரம்பரைக்கே இந்த நிலை என்றால் சேவை செய்யும் சூத்திரனின் நிலையைப் பாருங்கள்.

தொண்ணூறு வயதுக்கு மேல்தான் சூத்திரனுக்கு மரியாதை கிடைக்கும். (மனு: 2.137).

சூத்திரனுக்கும் கீழே தள்ளப்பட்டு ஊருக்கு வெளியே சேரிகளில் வாழும் தாழ்த்தப்பட்டவர்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமானது அல்லவே!

மனு வகுத்து வைத்த சட்டம்தான் ஒரு பண்பாடாக, வாழ்க்கை முறையாக மக்களிடையெ ஊறிப்போயுள்ளது. மரியாதை செய்வதில் கூட ஏற்றத்தாழ்வை உருவாக்கி அதை அன்று சட்டமாக்கினான் மனு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மனுவின் சட்டம் இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தொடர்கிறது என்றால் பார்ப்பனியம்தானே இன்னமும் கோலோச்சுகிறது.

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!

எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

Tuesday, August 25, 2015

தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா?


தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

”இந்துக்கள், என்றைக்காவது ஒரு நாள் தீண்டப்படாதவர்களைத் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக்கொள்வார்கள் என்பதை நம்புவது இயலாத காரியமாக உள்ளது. அவர்களது சாதி அமைப்பு முறையும், மதக் கொள்கைகளும் இதைப் பற்றி எத்தகைய நம்பிக்கை கொள்வதையும் முற்றிலும் தடுக்கின்றன. இருப்பினும், இந்து சமுதாயத்தில் தீண்டப்படாதவர்களை தன்வயப்படுத்திக் கொள்ள முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தீண்டப்படாதவர்களிடையே உள்ளதைவிட இந்துக்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது…. இந்தத் தன்வயமாக்கிக் கொளன்ளும் பிரச்சனை பல நூற்றாண்டுகளுக்கு இழுத்தடிக்கும் ஒரு செயல்பாடாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இதற்கிடையில் இந்துக்களின், சமூக, அரசியல் ஆதிக்கத்தின் கீழ் திண்டப்படாதவர்கள் வாழ வேண்டியிருக்கும். கடந்த காலத்தைப் போலவே இந்துக்களின் கொடுங்கொன்மைக்கும், அடக்குமுறைக்கும் அவர்கள் தொடர்ந்து வாழ வேண்டியிருக்கும்”

(ஆதாரம்: பாபசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்கள் என்பதை நம்புவது இயலாத காரியம் என்பதைத்தான் இன்றைய இந்தியச் சமூகம் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

தீண்டப்படாதவர்கள் மீது ஏவிவிடப்பட்ட சமீபத்திய சில கொடுங்கோன்மைகளைப் பற்றி இனி பார்ப்போம்.

தெலங்கானாவில் சொந்த நிலத்தை விட்டே விரட்டப்பட்ட தலித் குடும்பங்கள்!

தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் பத்தப்பள்ளி என்கிற கிராமம். ஐதராபாத்திலிரந்து சுமார் 170 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கே ”போயர்” என்கிற ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த 400 குடும்பங்களும் ”மடிகா” என்கிற தாழ்த்தப்பட்டச் சாதியைச் சேர்ந்த 40 குடும்பங்களும் வசிக்கின்றனர். மடிகாக்கள் வாழும் பகுதி “மடிகா-வாடா‘ என்று அழைக்கப்படுகிறது.

மடிகா சாதியைச் சோந்த ரகுராம் என்பவருக்கு 01.05.2015 அன்று திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தன்று கடவுளை வழிபடுவது கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் விரும்புவதுதானே. அதன்படி உள்ளூர் MLA G.சின்னரெட்டி தலையீட்டில் கோவிலுக்குள் செய்று ரகுராம் ‘சாமி தரிசனம்’ செய்கிறார்.

தலித்துகள் நுழைந்ததால் கோவில் (impure) தீட்டுப்பட்டுவிட்டதாம். அதனால் கிருஷ்ணமாச்சாரி என்கிற பார்ப்பன அர்ச்சகன் தீட்டுக்கழிப்பு யாகம் (purification yagna) நடத்தி உள்ளான். மே 4 ம் தேதி கோவில் பூட்டப்பட்டுவிட்டது.

கோவில் பூட்டப்பட்டது குறித்து புகார் தெரிவித்தபிறகு மண்டல வருவாய் அதிகாரி மற்றும் காவல் உதவி ஆய்வாளா் அக்கிராமத்தை பார்வையிட்ட பிறகு பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிகாரிகள் சென்ற பிறகு, போயா சாதியினரால் மீண்டும் கோவில் பூட்டப்பட்டது.

அதன் பிறகு அச்சிறு தலித் சமுதாயத்தினர் முன்னேப்போதும் கண்டிராத அடக்கு முறைகளை எதிர் கொண்டனர்.

40000 லிட்டர் கொள்ளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து மடிகாக்களுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். மிரட்டப்பட்டனர்; ஏன் தாக்கவும்பட்டனர்.

மே 6 ந்தேதி அரசு அவர்களுக்கு ஒதுக்கியிருந்த நிலத்திலிருந்து மடிகாக்கள் அடித்து விரட்டப்பட்டனர். பெட்ரோல் குண்டுகளை வீசி குடிசை வீடுகளை எரித்து தரைமட்டமாக்கி உள்ளனர். அவர்கள் திரும்ப வராமலிருக்க இறந்த பிணங்களை புதைத்து அந்நிலத்தை சுடுகாடாக மாற்றினர் ஆதிக்க போயர் சாதியினர்.

நிலம் மடிகாக்களுக்கு சொந்தம் எனப்பதற்கான ஆதாரம் இருந்த போதும் அரசு அதிகாரிகள் அதை ஆக்கிரமிப்பு என்றனர்.

”சாதி ஒழிப்பு கமிட்டி” இப்பிரச்சனையை கையில் எடுத்து ஜீன் 23 அன்று மகபூப்நகர் மற்றும் பெப்பேர் ஆகிய இடங்களில் மடிகாக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து போராட்டம் நடத்திய பிறகுதான் இப்பிரச்சனை வெளி உலகுக்குத் தெரிய வந்தது. பெப்பேரில் நடந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் தெல்தும்டேவும் பங்கேற்றிருக்கிறார்.

நீதி கேட்டுப் பேரணி!

06.08.2015 நன்பகலில் பெப்பேரில் தொடங்கி பத்தப்பள்ளி நோக்கிய சில நூறு பேரோடு ஆரம்பித்த பேரணி, ஆயிரமாயிரமாயப் பெருகி கோலாபூர் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தது. சுமார் 8 கிமீ வரை நீண்ட “பத்தப்பள்ளியை நோக்கி!” (சலோ பத்தப்பள்ளி) என்ற இப்பேரணி மடிகாக்கள் மீது போயர்கள் நடத்திய வன்கொடுமைகளுக்கு நீதி கேட்டு நடத்தப்பட்டது.

கோரக்பூர் ஐ.ஐ.டியைச் சேர்ந்த பேராசிரியர் வினோத் குப்தா, ஐதராபாத் பல்கலைக்கழகத்தைச் சோந்த சுரபள்ளி சுஜாதா, புரட்சிகர எழுத்தாளர்கள் பேராசிரியர் கே.ஒய் ரத்தினம், கே.லட்சுமி நாராயணா, சதவாகனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டி.சுஜாதா மற்றும் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட அறிவுஜீவிகளும், சமூக ஆாவலர்களும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டு போயர் சாதியினரை ”எதிர்கொள்ளத் தயார்!” என்பதை பறைசாற்றி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மடிகாக்களுக்கு கோலப்பூர் சாலையையொட்டி வீட்டு மனைப்பட்டா வழங்கவும், அடிப்படை வசதிகளுடன் குடியிருப்புகளை கட்டித் தரவும், போயர்களுக்குத் துணைபோன அரசு அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் முன்வைக்கப்படன.

(செய்தி ஆதாரம்: THE HINDU: 20.07.2015 & 07.08.2015)

தொடர்புடைய பதிவகள்:

பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!


எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

Sunday, August 23, 2015

பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்?

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8

”ஏற்றத்தாழ்வைதான் மனுதர்மம் எடுத்துரைக்கிறது. இந்த மனு தர்மப்படி பிராமணர்களுக்கு எல்லாச் சலகைகளும் அளிக்கப்படுவதுடன், சூத்திரர்களுக்கு மனிதப்பிறவி என்ற உரிமைகூட வழங்கப்படவில்லை. பிராமணன் அவனது உயர்ந்த பிறவியின் காரணத்தினால் மட்டுமே மற்ற எல்லோரையும்விட எல்லா விசயத்திலும் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.”

“இந்தியாவில் எல்லா மாகாணங்களிலும் சமஸ்தானத்தில் எல்லாம் துறைகளிலும் அரசுப் பணிகளில் அனேகமாக பிராமணர்களின் ஆதிக்கமே முற்றிலும் ஏகபோகமாக இருந்தது. அரசுப் பணிகளில் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு வகுப்பினருக்கு - அதாவது பார்ப்பனர்களுக்கு - மட்டும் ஏக போகம் இருக்கக்கூடாது என்ற தெளிவான குறிக்கோளின் அடிப்படையில் பிராமணரல்லாதவர்களின் கட்சி தொடங்கப்பட்டது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - அதாவது அரசுப் பணிகளில் எல்லாச் சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் - என்று அறியப்பட்ட கொள்கையை இக்கட்சி முன்வைத்தது. அதாவது குறைந்த தகுதியுடையவர்களை அரசுப் பணிகளில் வேலைக்கு அமர்த்தும் போது பிராமண வகுப்பினர்களைவிட, பிராமணர்கள் அல்லாதவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டுமென்ற  கோட்பாடுதான் அது. இந்தக் கொள்கையில் எந்தவிதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு தனிப்பட்ட வகுப்பினரின் கைப்பிடியில் - அதாவது பார்ப்பனர்களின் கைப்பிடியில் - அந்த வகுப்பினர் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்தாலும் ஒரு நாட்டின் நிர்வாகத்தையே கொடுப்பது சந்தேகத்துக்கிடமின்றி தவறு.”

“ஒரு நல்ல அரசு ஒரு திறமையான அரசைவிடச் சிறந்தது என்ற கருத்தைப் பிராமணர்கள் அல்லாதவர்கள் கட்சி கொண்டிருந்தது. இது சட்டமன்றத்துக்கும் ஆட்சித் துறைக்கும் மட்டுமல்லாது நிர்வாக விசயங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நிர்வாகத்தின் மூலமே, ஓர் அரசு மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்கிறது. எந்த ஒரு அரசும் அனுதாபத்துடன் செயல்படாவிட்டால் நன்மைகளைச் செய்யமுடியாது. பிராமணர்கள் மட்டுமே பொறுப்பில் இருந்தால் அந்த நிர்வாகம் அனைவரிடமும் அனுதாபத்துடன் செயல்பட முடியாது.”

“மற்ற பொதுமக்களைவிட தன்னை மேன்மையாகக் கருதுபவன் ஒரு பிராமணன். மற்றவர்களை தாழ்ந்த சாதியினர், சூத்திரர்கள் என இகழ்பவன். அவர்களுக்கு எதிராக செயல்பட்டு இயற்கையிலேயே தன் வகுப்பினர்களுக்குச் சாதகமாக செயல்படுபவன். மக்களின் மீது அக்கறையில்லாததால் ஊழலுக்கு பலியாகிறவனாக இருக்கும் இப்படிப்பட்ட ஒரு பிராமணன் எப்படிச் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்? மற்ற எந்த அன்னியர்களையும் போலவே அவனும் இந்தியப் பொதுமக்களுக்கு அன்னியனே!”

“இதற்கு மாறாக சுத்த சுயம்புவான திறமையே எல்லாம் என்ற நிலையைப் பிராமணர்கள் எடுக்கிறார்கள். கல்வியில் அவர்கள் முன்னணியில் இருப்பதன் காரணத்தால் இந்தத் துருப்புச் சீட்டைத்தான் வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். திறமை மட்டுமே அளவுகோலாக இருந்தால் அரசுப் பணிகளை இந்த அளவுக்கு ஏகபோகமாக வைத்திருக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.”

”திறமைதான் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானதென்றால் ஒரு ஆங்கிலேயரையோ, பிரெஞ்சு, ஜெர்மன் அல்லர் துருக்கி நாட்டவரையோ வேலைக்கு அமர்த்துவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.”

“நிர்வாகத்தில் எல்லா வகுப்பினரின், பிரிவினரின் கூட்டமைப்பும் இருந்தால்தான் அது ஒரு நல்ல நிர்வாகமாக அமையுமென்று பிராமணரல்லாத கட்சியினர் எண்ணினர். நிர்வாகத்தில் பிராமண ஆதிக்கத்தை நீக்கும் ஆர்வத்தில் இந்தக் கொள்கையை அமலுக்கு கொண்டுவருவதில் அரசுப்பணிகளில் பிராமணர்கள் மற்றும் பிராமணர் அல்லாதவர்களிடையே ஒரு சமநிலை ஏற்படுத்தும் முயற்சியில் குறைந்த அளவு திறமை என்ற வரையறைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர்.”

கல்வியாளரும், அரசியல்வாதியும், சமூகச்சீர்திருத்தவாதியுமான டாக்டா் ஆர்.பி.பரஞ்சிபே அவர்கள் பம்பாய், சென்னை ராஜதானி மற்றும் மத்திய மகாணங்களில் ஆட்சிபுரிந்து வந்த பிராமணரல்லாத கட்சிகள் பற்றி வெளியிட்டிருந்த ஒரு மிகச் சிறந்த நையாண்டிச் சித்திரத்தை மேற்கோள் காட்டி மனுதர்மத்தின் வெட்கங்கெட்ட தன்மையையும், இழிவையும் அம்பலப்படுத்தி அதைத் தலைகீழாக திருப்பிக் காட்டியிருக்கிறார் அம்பேத்கர்.

”பிராமணரல்லாதவர்கள் கட்சி புதிதாக ஒன்றையும் செய்து விடவில்லை. மனுஸ்மிருதியைத் தலைகீழாக மாற்றினர். அதைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள். மனு சூத்திரர்களுக்கு எந்த இடத்தைக் கொடுத்தாரோ அந்த இடத்தை பிராமணர்களுக்குக் கொடுத்தார்கள்.”

”ஒருவன் பிராமணன் என்பதற்காகவே மனு அவனுக்கு சலுகைகள் அளிக்கவில்லையா? சூத்திரர்கள் உரிமைகள் பெற தகுதி பெற்றிருந்தும் மனு அந்த உரிமைகளை மறுக்கவில்லையா? இப்பொழுது, சூத்திரர்கள் என்பதற்காகவே சில சலுகைகள் அளித்தால் அதைப் பற்றி குறைகூற முடியுமா? அது அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் இந்த விதிக்கு முன் உதாரணம் இல்லாமல் இல்லை. மனு ஸ்மிருதிதான் அந்த உதாரணம். பிராமணரல்லாதவர் கட்சி மீது யார் கல்லெறிய முடியும்? பிராமணர்கள் பாவம் செய்யாமலிருந்தால் அவர்களால் முடியும். ஆனால், மனு ஸ்மிருதியை உயர்த்திப் பிடிக்கும், வணங்கிப் போற்றும் அவர்கள் பாவிகள் இல்லை என்று சொல்ல முடியுமா? மனு தர்மத்தின் ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்கு ஒரு சிறந்த சவுக்கடிதான் டாக்டர் பரஞ்சிபேவின் கட்டுரை.”

”ஒரு சூத்திரனின் நிலையில் ஒரு பிராமணனை வைத்தால் அவன் எப்படி அதை எதிர் கொள்வான் என்பதை இதைவிட எதுவும் படம் பிடித்துக் காட்ட முடியாது.”

”இந்தக் கொள்கை பிராமணர்களைப் பெருங்கோபத்திற்குள்ளாக்கியது. அவர்கள் கோபத்தின் உச்சியில் இருந்தனர்.”

(ஆதாரம்: பாபசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

இந்த, பிராமணரல்லாதவர்களின் கட்சிதான் பிறகு நீதிக் கட்சியானது. அதன்பிறகு தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகமானது. அதன் நீட்சியாக திராவிட முன்னேற்றக் கழகமாக அண்ணா தலைமையில், பிறகு கருணாநிதி தலைமையில் ஆட்சிக் கட்டிலில் ஏறியது. இவர்கள் அனைவருமே – அதாவது திராவிடக் கட்சிகள் - பிராமணரல்லாதவர்களின் கட்சி முன்வைத்த அரசு வேலைகளில் வகுப்புவாரி விகிதாச்சார முறையை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்டி வந்தனர்.

அன்று தொடங்கிய கடுங்கோபம் இன்னமும் தொடர்கிறது. எச்.ராஜா உள்ளிட்ட பார்ப்பனர்கள் ஏன் பெரியாரை வன்மத்தோடு எதிர்க்கிறார்கள்? கருணாநிதியை ஏன் கரித்துக் கொட்டுகிறார்கள்? திராவிட அரசியலை ஒழித்துக் கட்ட வேண்டும் என ஏன் கூப்பாடு போடுகிறார்கள் என்று இப்பொழுது புரிகிறதா? திராவிடக் கட்சிகள் நாத்திகம் பேசுவதால்தான் – இந்து மதத்தைச் சாடுவதால்தான் - இவர்கள் மீது பார்ப்பனர்களுக்கு கோபம் என்பதெல்லாம் ஒரு முகமூடிதான். இந்து மதத்தைச் சாடுவதால்தான் கோபம் என்றால் புத்தர் மீதல்லவா பார்ப்பனர்கள் கடுங்கோபம் கொள்ள வேண்டும்.

அரசு வேலைகளில், பிராமணர்களிடத்தில் சூத்திரர்களை வைத்ததால்தான் அவர்களுக்கு பெரியார் மீதும், கருணாநிதி மீதும், திராவிடக் கட்சிகள் மீதும் கடுங்கோபம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தொடர்புடைய பதிவுகள்:
நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!


எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

Monday, August 17, 2015

எரிக்கப்பட்ட குடிசைகள்! மௌனம் காக்கும் இந்துத்துவாவாதிகள்!

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தையடுத்த, சேஷசமுத்திரம் கிராமத்தில் ஆதிக்கச் சாதிவெறியர்களால் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகள்.

வார்த்தைகளால் விளக்க முடியாத கொடூரம்!

இந்துக்களுக்காகவே அவதாரம் எடுத்துள்ளதாக கூப்பாடு போடும் இந்துத்துவாவாதிகள், இங்கே ஒரு இந்துக் கடவுளின் தேரையும் எரித்து மக்களின் குடிசைகள் தீக்கிரையாகிய பிறகும் எங்கெ ஓடி ஒளிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

இந்துத்துவாவாதிகள் சாதி இந்துக்களுக்கானவர்கள்தான்; அவர்கள் தீண்டப்படாதவர்களை இந்துக்களாக ஏற்பதில்லை என்பதை மீண்டு்ம் மீண்டும் நிடூபித்துவருகிறாாகள்.


புகைப்படம் உதவி: முகநூல் நண்பர்கள்.