Wednesday, May 13, 2015

மாப்பிள்ளை குதிரையில் வந்தால் குற்றமா?


இது என்ன? மாப்பிள்ளை தலைக்கவசம் அணிந்து கொண்டு குதிரைமீது வருகிறார்? வடிவேலு தலைக்கவசம் அணிந்து கொண்டு ஆட்டோ ஓட்டும் நகைச்சுவை போன்றதல்ல இது. 

உயர்சாதி பயங்கரவாதத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள தனது திருமண நாளில் மாப்பிள்ளை அழைப்பின் போது ஒரு தாழ்த்தப்பட்ட மணமகனுக்கு நேர்ந்த கதி இது.

மாலை நேர மாப்பிள்ளை அழைப்பு என்றால் வசதியில்லாதவர்கள் நடையாகவே அழைத்து வருவார்கள். சற்றே வசதி இருந்தால் ஒரு திறந்தவெளிக்காரில் அழைத்து வருவார்கள். குதிரைகளையும் யானைகளையும்கூட பயன்படுத்துவார்கள். இது அவரவர் வசதியைப் பொருத்தது.

மத்தியப்பிரதேசத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட மணமகன் மாப்பிள்ளை அழைப்பின் போது குதிரை மீது அழைத்து வரப்படுகிறார். இவர் குதிரை மீது வந்தால் என்ன? யானை மீது வந்தால் என்ன? 

ஒரு தாழ்த்தப்பட்டவன் குதிரை மீது வருவதா? என கொக்கறிக்கின்றனர் உயர்சாதி வெறியர்கள். கற்களைக் கொண்டு தாக்குகின்றனர். பிறகு குதிரையையே அபகரித்துச் செல்கின்றனர்.

ஆனால் மணமகன் வீட்டார் மாப்பிள்ளைக்கு தலைக்கவசம் அணிவித்து மற்றொரு குதிரையைக் கொண்டு மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். அப்பொழுதும் உயர்சாதி வெறியர்கள் கற்களைக் கொண்டு தாக்கி உள்ளனர்.

இது ஏதோ உயர்சாதியைச் சேர்ந்த ஒரு சிலர் செய்தது என சாதாரணமாக கருதிவிடமுடியாது. இது தொடர்பாக 71 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதிலிருந்து அந்த ஊர் உயர்சாதியினரில் பெரும்பகுதியினர் இந்தத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உணர முடிகிறது.

இது அப்பட்டமான சாதி வெறி. இப்பவெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் என கேள்வி எழுப்பும் ”சாதி பாராட்டாத” ”சாதி வெறியற்ற” சாதி பற்றாளர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: Dalit groom attacked for riding a horse

4 comments:

  1. சாதி பாராட்டாத” ”சாதி வெறியற்ற” சாதி பற்றாளர்கள் எதற்குத்தான் பதில் சொல்லி இருக்கிறார்கள் இதற்கு பதில் சொல்ல ................!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. சமூக வலைதளங்களில்கூட இத்தகைய சாதி பற்றாளர்களைக் காணமுடியவில்லை.

      Delete
  2. இந்தச் சாதி வெறி
    எந்தக் காலத்தில ஓயப்போகுது?
    சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. சாதி வெறிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையும் போது.

      Delete