பெண்கள்
மீதான துன்புருத்தல்கள், இந்துத் திருமணங்கள், சொத்து மற்றும் பணம் கொடுக்கல் - வாங்கல்
உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் இந்துக்களுக்கிடையில் ஏற்படும் சச்சரவுகளைத் தீர்த்து
வைக்க 15.08.2018 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் முதலாவது பார்ப்பன நீதி
மன்றம் ஒன்று அகில பாரதிய இந்து மகா சபாவினரால் தொடங்கப்பட்டுள்ளது. .
இந்து
மகா சபாவின் தேசிய உதவித் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா,
அதனுடைய தேசிய செயலாளர் பூஜா
ஷகுன் பாண்டே என்பவரை பார்ப்பன நீதி மன்றத்தின்
முதல் நீதிபதியாக நியமனம் செய்துள்ளார்.
பார்ப்பனர்களால்
தொடங்கப்பட்ட இந்த நீதிமன்றத்திற்கு இந்து நீதி மன்றம் (Hindu Court) என்று பெயராம்.
எல்லோருக்கும்
ஒரே அரசியல் சாசன சட்டம்தான் இருக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கான
தனி ஷரியத் சட்டம் மற்றும் ஷரியத் நீதி மன்றங்கள் இருக்கக்கூடாது என இவர்கள் அரசிடம்
கோரிக்கை வைத்தார்களாம். அரசிடமிருந்து தங்களுக்குச் சாதகமாக முடிவு எதுவும் வராததால்
இந்த பார்ப்பன நீதி மன்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார்களாம். அது சரி! இது ஏட்டிக்குப்
போட்டியானது எனில் இந்த பார்ப்பன நீதி மன்றங்களால் இஸ்லாமியர்களுக்கு ஒன்றும் ஆகப்
போவதில்லை. மாறாக அது இந்துக்களைத்தானே கடித்து குதரப் போகிறது.
இந்த
நீதி மன்றத்திற்கான விதிமுறைகளை வரும் அக்டோபர் 2 அன்று வெளியிட உள்ளார்களாம். நவம்பர்
15 ந் தேதி ஐந்து நீதிபதிகளை நியமிக்க போகிறார்களாம்.
தற்போது
இந்துக்களை சாதியின் அடிப்படையில் பிளவுபடுத்தி ஆட்சி நடக்கிறதாம். அதனால் பார்ப்பன
நீதி மன்றங்கள் மூலம் இந்துக்களை ஒன்றுபடுத்தப் போகிறார்களாம். இவர்கள் தனிச் சிறைச்
சாலைகளையும் உருவாக்கப் போகிறார்களாம். இவர்களது நீதி மன்றங்களில் அதிக பட்ச தண்டணை
மரண தண்டனையாக இருக்குமாம்.
இந்தியாவில்
உள்ள சிவில் நீதி மன்றங்களில் இலட்சக்கணக்கான வழக்குகள் நிலுலையில் உள்ளதால் ஏழைகளால்
நீதியைய் பெற முடியவில்லையாம். இந்த பார்ப்பன நீதி மன்றங்கள் விரைவாகவும் மலிவாகவும்
நீதியைப் பெற்றுத் தருமாம்.
ஷரியத்
சட்டம் குறித்து நமக்கு மாறுபட்ட கருத்து இருந்த போதிலும் இஸ்லாமியர்களுக்கு தனி ஷரியத்
சட்டம். இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர்கள் விசாரனை செய்து தீர்ப்பு வழங்குகிறார்கள்.
ஆனால்
இங்கு,
கோவில்கள்தானே
பார்ப்பனர்களின் உயர் நீதி மன்றங்கள். மனுவின் சாதிச் சட்டங்கள்தானே அங்கு கோலோச்சுகிறது.
தொடர்புடைய
பதிவு:
No comments:
Post a Comment