பப்பாளிக் காயில் ஒரு கூர்முனைதான் இருக்கும். ஆனால் இந்தக் காயில் கூடுதலாக ஐந்து மூக்கு முனைகள் உள்ளன. ஒரு மரத்தில் மற்ற காய்கள் எல்லாம் இயல்பாய் இருக்கும் பொழுது, இது மட்டும் மாறுபட்டு இருப்பது ஏன்?
பப்பாளி
இது மரபினால் ஏற்பட்ட விளைவா அல்லது அது காய்க்கும் பொழுது உண்டான நீர் சத்து உள்ளிட்ட பிற சத்துக்களின் போதாமையால் ஏற்பட்ட விளைவா? தெரியவில்லை! இது பிறவி ஊனமா இல்லை ஈனமா? இங்கே அது எதுவாயினும் உண்ணத் தகுந்ததே, ஊட்டமுடையதே!
மனிதர்களிலும் சிலருக்கு பிறவியிலேயே ஆறு விரல் மற்றும் சில அங்க ஈனங்கள் தோன்றுவது ஏதோ ஒரு வகை குறைபாட்டினால்தானோ? 'உண்டாகும்' பொழுது ஊட்டக் குறைபாட்டாலோ, சூழல் மாறுபாட்டாலோ பிறவி ஊனமும் ஒட்டிக் கொள்ளுமோ? இங்கேயும், அது எதுவாயினும் மனிதர்கள் முடங்கி விடுவதில்லை. சமூகத்தில் இயங்கிக் கொண்டுதான் உள்ளனர்.
போதிய தரவுகள் (ஊட்டம்) இல்லை என்றால் அரசியலிலும் 'தற்குறிகள்' எனும் புதியவகையினர் தோன்றுவது இயல்புதானே? இது பிறவி ஊனம் அல்ல, இடையில் தோன்றி வளர்ந்து அழிவை உண்டாக்கும் புற்றைப் போன்றதொரு ஈனம்!
ஊனமோ, ஈனமோ அது அபூர்வமாய் இருந்தால் ஆபத்தில்லை. அதுவே முழுமையாய் வியாபித்துவிட்டால்...? இழிவும் அழிவும் மட்டுமே மிஞ்சும்!
ஊரான்

கவனித்து பார்த்தால் இரட்டை குழந்தைகள் பிறந்த வீட்டின் சந்ததிகளில் இரட்டை குழந்தைகள் பிறக்கும். அதுபோல இந்த பழத்தின் விதைகளால் இந்த மாதிரி பலன் தரும் மரங்களுக்கு வாய்ப்பு உண்டா?
ReplyDeleteஇரட்டைக் குழந்தை மரபணு மூலம் எடுத்துச் செல்லப்படலாம். பப்பாளியில்கூட அவ்வாறு நிகழலாம்.
Delete