Saturday, August 27, 2011

'தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்!'


"கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில் இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.

பாதி ரஜினி முகத்தையும்,பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார். உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார். ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?

தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. 

பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.

இந்த நிகழ்ச்சிகளில் திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.

திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:

1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.

2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.

3.கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.

4.நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.

5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல்,வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள். 

இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.

இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்."

இந்த கட்டுரை இன்று எனக்கு மின்னஞ்சலில் வந்தது. வலைப்பக்கங்களில் ஏற்கனவே இது இருக்கலாம். இது குறித்து நான் அதிகம் விளக்க வேண்டியதில்லை. மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்திற்காக நடத்தப்படும் பல நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. எல்லாம் தெரிந்த பிறகும் மக்கள் இதற்கு பலியாவது ஏன்? தெரியப்படுத்தி இவர்களுக்கு புரிய வைப்பதற்காக நான் இதை வலைப்பூவில் பகிரவில்லை. 

பரிசுத் தொகை ரூ.55 000 தான் இவர்களை சுண்டி இழுப்பதற்குக் காரணம். ஒரு ஐந்து நிமிடங்கள் போனால்கூட ரூ.50 தானே போகும். ஆனால் கிடைப்பதோ ரூ.55 000 மாச்சே. ஆசை யாரைத்தான் விட்டது? உழைக்காமல், கஷ்டப்படாமல் திடீர் பணக்காரணாகத் துடிக்கும் மனப்போக்குதான் மக்கள் இதை நாடுவதற்குக் காரணம். இத்தகைய மனநிலை ஒரு கு மனநிலை. (this is criminal mind state). 

"குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்" என்பது சரியாகப் படவில்லை. மாறாக தமிழர்களே அதிகமாக கிரிமினல் மயமாகி வருகிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. பணத்தாசை வெறியைத் தூண்டும் இச்சமூகக் கட்டமைப்பு நீடிக்கும் வரை, பொருளாதார நெருக்கடிகள் தொடரும் வரை இத்தயை மோசடிகளும், மக்கள் கிரிமினல் மயமாவதும் தொடரத்தான் செய்யும். 

தொடர்புடைய பதிவுகள்:

6 comments:

  1. ஏமாந்து போனவன்Saturday, August 27, 2011 at 7:45:00 AM PDT

    எப்படி சார்? நீங்க மட்டும் இப்படி விழிப்புணர்ச்சி பதிவா போட்டு தள்ளறீங்க. சாமியார், அன்னா ஹசாரே, media இவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றும் உங்கள் தொண்டு சிறப்பானது. தமிழக மக்கள் உங்கள் ஒரு வரை தான் மலை/மழை போல நம்பி இருக்கிறார்கள். அடிக்கடி இது போல அறிவு பூர்வமான பதிவுகளை பொழிந்து மக்களின் நெஞ்சங்களை நனைத்து காத்தருளுங்கள் இறைவா!

    ReplyDelete
  2. "தமிழக மக்கள் உங்கள் ஒரு வரை தான் மலை/மழை போல நம்பி இருக்கிறார்கள்" இது என்ன வஞ்சப் புகழ்ச்சியா. பயமாய் இருக்கிறது ஏமாந்து போனவன் அவர்களே!

    நான் பார்க்கிற, படிக்கிற, கேட்கிற விசயங்களை நான் எப்படி உணர்கிறேனோ அப்படியே எழுதுகிறேன்.

    எனது உறவினர் ஒருவர் இந்தப்பதிவைப் படித்துவிட்டு அகமகிழ்ந்தார். காரணம், இவர் சொல்லியும் தனது தம்பி இத்தகைய மோசடியில் ரூபாய் 100 ஐ இழந்தாராம்.

    ஏமாறுவதும் ஏமாற்றுவதும் ஒரு சுழல் ஏணி போன்றது.அது மேலே மேலே சென்று கொண்டேதான் இருக்கும்.

    ReplyDelete
  3. ஒரு ஹிந்தி சேனலிலும் நான் இந்த நிகழ்ச்சியை பார்த்திருக்கேன். std code no கூட இல்லாமல் இருக்கேனு நினைச்சுகிட்டே நானும் முயற்சித்தேன்.என்கேஜ்ட் டோன் வந்தது.ஆனால் பைசா கட் ஆனுதா என்னனு கவனிக்கல.பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  4. உங்களின் வலைப்பூவை இன்று தான் கண்டேன் தொடர்கிறேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. எல்லா மொழிச் சேனல்களிலும் இது போன்று நடக்கும். பணம் பறிப்பவர்கள்தான் எங்கும் விரவி இருக்கிறார்களே. பகிர்ந்தமைக்கு நன்றி thirumathi bs sridhar அவர்களே.

    ReplyDelete
  6. ”....தொடர்கிறேன் வாழ்த்துக்கள்” தொடர்வதற்கும் வாழ்த்துக்கும் நன்றி ஹைதர் அலி அவர்களே.

    ReplyDelete