தொடரும்
மின்வெட்டு, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு, தென்னகத்தில் சாதிக் கலவரம்,
தருமபுரியில் வன்னிய சாதி வெறி என நாடெங்கிலும் பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன. இது
குறித்து நமது கருத்துக்களை வலைப்பூக்களில் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலில்
சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிப் பதிவர்கள் தவித்து வருகிறார்கள்.
மின்வெட்டினால்
தொழில்கள் பாதிப்பு, அதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, மாணவர்களின் படிப்பு
பாதிப்பு, தூக்கம் கெடுதல் கொசுக்கடிக்கு ஆளாவதால் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுதல்,
மொத்தத்தில் அன்றாட வாழ்க்கையே சீர்குலைந்து சின்னாபின்னமாகி உள்ளது.
எப்பொழுது
மின்சாரம் வரும் எப்பொழுது போகும் என்று சொல்ல முடியாது. எனக்கு கிடைக்கிற நேரமோ
மாலை 6 மணி முதல் 9 மணி வரைதான். இதில் ஒரு மணி நேரம்தான் மின்சாரம் இருக்கும். இதற்குள்
நான் பிற வலைப்பூக்களை படித்துவிட்டு பின்னூட்டம் போடுவதா அல்லது சொந்த வலைப்பூவில்
பதிவிடுவதா; எதைச் செய்வது என்ற குழப்பத்திற்கு ஆட்படுவதால் ஒரு விதத்தில் எனது
சிந்தனை ஓட்டமே நின்று போனது என்றுதான் சொல்ல வேண்டும். மொத்தத்தில் மின்வெட்டு
நமது சிந்தனையை சிறையில் அடைத்துவிட்டது.
இந்தப்பதிவைக்கூட
ஆழமாக சிந்திக்க நேரமின்றி அவசர அவசரமாக பதிவிட்டுள்ளேன்.
இப்ப சிந்திக்கறதெல்லாம் குறிப்புகள சுருக்கமா எழுதி வச்சுடுங்க. பின்னாடி ஒரு நாள் தக்க சமயத்தில வலைப்பூவில் எழுதித் தீர்த்துக்க வேண்டியதுதான். நிறைய நூல்களைப் படிக்க தக்க சமயம் இது இணையத்தில் இருக்கும்போது நூல்களைப் படிக்கவே தோணாது. இப்ப வேற வழியில்லாம அதப் படிக்க வேண்டியதுதான்
ReplyDeleteநல்ல ஆலோசனை. ஆனால் ஏற்கனவே படித்துள்ளதைக்கூட பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்கிற ஆதங்கம் இருக்கத்தானே செய்கிறது.
Deleteஉண்மைதான் பதிவரே!
ReplyDeleteஉண்மைதான் பதிவரே!
ReplyDeleteஅருமை
ReplyDeleteசிந்தனைக்கல்ல
ReplyDeleteசிந்திப்பவர்கள்
சேராமல் இருக்க மின்தடை