Saturday, December 8, 2012

சாதிப் பெருமை பேசுவதே வன்கொடுமைதான்!

தருமபுரி நாயக்கன் கொட்டாய், கடலூர் பச்சாரப்பாளையத்தைத் தொடர்ந்து தற்போது தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், டி.கல்லுப்பட்டி என தொடர்கின்றன தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தீண்டாமைத் தாக்குதல்கள். டி.கல்லுப்பட்டி கைலாசநாதர் மலைக்கோவிலில் பூசாரியாக இருந்த எஸ்.நாகமுத்து என்கிற 22 வயதான தாழ்த்தப்பட்ட இளைஞர் ஆதிக்கச்சாதியினரால் தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டதால் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தற்கொலை என்று சொல்லக்கூடாது. இது ஒரு படுகொலை!

இப்படி நாடெங்கிலும் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத்தாக்குதல்கள் தொடர்கின்றன. இத்தகைய தாக்குதல்களில் யாரைக் குற்றவாளியாக்குவது? தாக்குதல்களைத் தூண்டுவோர், தாக்குதல்களில் நேரடியாக ஈடுபடுவோர், தாக்குதல்களுக்குத் துணைபோவோர் மட்டுமே குற்றவாளிகளா? இவர்கள் மட்டுமல்ல!தீண்டாமையை கடைபிடிக்கின்ற அனைவருமே குற்றவாளிகள்தான். அப்படியானால் தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் யார்? தான் இந்தச்சாதிக்காரன் என பெருமை பேசுவதும், தனது பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் போட்டுக்கொள்வதும் தீண்டாமையின் மற்றோரு வடிவமே. ஆம்! இவர்கள் அனைவருமே வன்கொடுமைக் குற்றவாளிகள்தான்!

சாதியம் குறித்து நான் ஏற்கனவே எழுதிய பதிவுகளை உங்களோடு பகிர்கிறேன்.சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?ஊரான்


8 comments:

 1. நல்ல பதிவு சகோ. சாதியப் பீற்றல்கள் அனைத்தும் வன்கொடுமையே, ஆனால் சட்டம் மட்டும் உறங்குநிலையிலேயே கிடக்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. ஆதிக்கச்சாதியினரே ஆகப்பெரும்பான்மையினர். சட்டத்தை நடைமுறைப்படுத்துவோரும் சாதி ஆதிக்கச் சிந்தனையில் இருப்பதே சட்டம் உறங்கு நிலையில் இருப்பதற்கு முக்கியக் காரணம்.

   வன்கொடுமை வழக்குகள் வந்தால் அதை வைத்து காசு பார்ப்பதில்தான் பெரும்பாலான தலித் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்கிற கசப்பான உண்மையும் சட்டம் உறங்கு நிலையில் இருப்பதற்கு மற்றுமொரு காரணம்.

   Delete
 2. Dhevar maganaiyum chinna kaundaraiyum makkal vaayai pilandhu paarthu kondirukkathane seigiraargal, thiraipadathuraiyum makkal manadhil vishathai vidhaikkiraargal enbadhil aiyamillai

  ReplyDelete
  Replies
  1. "தேவர் மகனையும் சின்ன கவுண்டரையும் மக்கள் வாயை பிளந்து பார்த்துகொண்டிருக்கத்தானே செய்கிறார்கள்,திரைப்படத்துறையும் மக்கள் மனதில் விசத்தை விதைக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை".

   உண்மைதான். மேற்கண்ட படங்கள் மட்டுமல்ல; தன்சாதிக்கார கதாநாயகன் நடித்த படமென்றால் அது படுமொக்கையாக இருந்தாலும் அப்படத்தைப் பார்க்க அலைமோதும் அச்சாதி மக்கள் கூட்டம் என இதன் தாக்கம் இன்னும் விரிந்து செல்கிறது. இயல்பாக வாழும் மக்களிடையே சாதித்தீயை பற்ற வைப்பதில் திரைப்படங்கள் பெரும்பங்காற்றுகின்றன. சாதிப்பெருமை பேசும் திரைப்படங்களைத் தயாரிப்போரும் இயக்குவோரும் நடிப்போரும் என இவர்களும் தீண்டாமையை கடைபிடிக்கும் வன்கொடுமையாளர்களே!

   Delete
 3. தம்மை கற்றோர் என மார்தடுவோர் மத்தியில் இவ்வியாதி அதிகமாக உண்டே!
  என்ன கற்றும், எத்தனை மொழி அறிந்து, பல நாடு சென்றும் ,நோய் முற்றுதே தவிரத் தீரவில்லையே!

  ReplyDelete
 4. மூச்சுக்கு மூச்சு " தலித்து ...தலித்து " என்று பேசுவதும் மிககொடுமையானது. அதற்கும் தண்டனை வழங்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. பட்டியலின மக்களை (SC & ST)தாழ்தப்பட்ட பழங்குடியின மக்கள் என்ற சொல்லாடலுக்குப் பதிலாக தலித் என்ற சொல் ஒரு அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. தலித் என்று கூறிக்கொள்வதில் தாங்கள் பிறரைவிட உயர்ந்தவர்கள் என்கிற பெருமிதம் ஏதம் இருப்பதில்லை. தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு பிறர் மீது தாக்குதல் எதையும் நடத்தவதில்லை. பிறகு எதற்காக அவர்களை தண்டிக்க வேண்டும்.

   நிலமை இப்படி இருக்க

   " தலித்து ...தலித்து " என்று பேசுவது எந்த வகையில் மிகக்கொடுமையானது? இதற்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதே சாதவெறியின்-வன்மத்தின் வெளிப்பாடே!

   Delete